முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

March, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக ஜெயலலிதா உண்ணாவிரதம்!

கடந்த சில காலமாகவே கடுமையான செரிமானக் கோளாறு காரணமாக உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகியிருந்தார் செல்வி ஜெயலலிதா. இந்நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில நாட்கள் பத்தியம் இருக்கக் கோரப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் வேறு தாக்கியிருப்பதால், திடீரென உண்ணாவிரத அறிவிப்பு வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 10-ஆம் தேதி இந்த சிகிச்சை நடைபெறும் என்றும், அதன் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏதாகினும் காணப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் தெரிகிறது. இதற்கான ஆலோசனையை வழங்கிய ஜோதிடர்கள், மாசி மகத்தின் அடுத்தநாளாகவும், செவ்வாய்க்கிழமையாகவும் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு ஏற்ற நாளாகவும் இருக்கும் என்று தெரிவித்தனராம்..
இதற்கான ஏற்பாடுகளை, மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள திரு.கோபால்சாமி, பாண்டியன் ஆகியோர் செய்து வருவதாக ராயப்பேட்டை அ.தி.மு.க மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசிக் குறிப்பு: எதையொட்டி என்ற அறிவிப்பு வெளிவிடுவது பற்றி யோசிக்கப்பட்டபோது, கரண்ட் பிரச்சினையான ஈழத் தமிழர் பிரச்சினையையொட்டி என்று சொல்லிக் கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதாம்…