முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஈழம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராஜீவ் கொலையும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஆரிய சூழ்ச்சியே!

ஆதரவாக இருந்தவர்களையும் கொட்டிக் கொட்டி எதிர் நிலையில் வைத்திருக்கும் கைக்கூலி தமிழ்த் தேசியங்கள் வாழ்க! என்ன செய்ய வசவாளர்களையும் வாழ்த்தச் சொன்ன அண்ணா எங்கள் முன்னால்! ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அனைவர் மீதும்! ஒருபோதும் புலிகளை எதிர்நிலையில் நிறுத்தி விமர்சிக்க முடியாது. திராவிடப் பேரினத்தின் உரிமைக் குரலின் இன்னொரு வடிவம் அவர்கள் ஏந்திய ஆயுதங்கள்! அரசியலுக்கு பதிலாயுதம் அரசியல் - இந்தியாவில்! ஆயுதத்திற்கு பதிலரசியல் ஆயுதம் - ஈழத்தில்! மாவோவின் கூற்றை மறுபடியும் வாசித்துப் பாருங்கள்! இங்கு திமுக-வையும், திராவிட இயக்கங்களையும், தலைவர் கலைஞரையும், தமிழர் உரிமையையும் வீழ்த்தத் துடிக்கும் அதே ஆரியம் தான், அங்கே தமிழீழ விடுதலைப் புலிகளையும், மேதகு பிரபாகரனையும், தமிழர் உரிமைப்போராட்டத்தையும் வீழ்த்தத் துடித்தது- துடிக்கிறது. இங்கு இந்தியா என்னும் பெயரில் நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும், நாடு கடந்தும் ஆரியம் நிகழ்த்தியிருக்கிறது. புலிகளின் நிலைப்பாட்டில், செயல்பாட்டில், உடனிருப்பதாக அவர்கள் நம்பிய நயவஞ்சகர்களின் சொல்லால் விளைந்த பேரழிவில் மாற்றுக் கருத்துகள் ...

கொடித் திருடர்களை வேரறுப்போம்! தமிழீழ இலச்சினைகளை மீட்டெடுப்போம்!

தமிழீழம் என்னும் கனவைச் சுமந்தும், புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் நேசித்தும் வருவோர்க்கு தமிழீழக் கொடி தரும் உணர்வு எத்தகையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஈழத் தமிழர்க்கென்றொரு நாடு அமைவதை, நாடு கடந்தும் தன் நாடாகப் பார்க்கும் மனம் அது. துப்பாக்கித் தோட்டாக்கள் தெறிக்க, முன்னங்கால் பறக்க கூண்டை விட்டுப் பாயும் புலியின் உருவம் தரும் சிலிர்ப்பும், எழுப்பும் உணர்வலையும் நம் உயிர் அடங்கும் வரை ஓயாதது. அத்தகைய உயர் சின்னத்தை, உயிர்க் கொடியை, உலுத்தர் கூட்டம் பயன்படுத்துவதையும், அதனால் அது கீழ்மையுறுவதையும் காணச் சகிக்கவில்லை. சிந்தை பொறுக்கவில்லை. புலிகள் தங்களை மௌனித்துக் கொண்டபிறகு முளைத்த காளான்களெல்லாம் புதிது புதிதாய் கதையளந்துகொண்டும், புலி வேஷம் கட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பதும் காலத்தின் கொடுமை. எத்தனையோ ஈகியர்கள் தங்கள் உயிர் தந்து காத்த சின்னங்கள் இவை. ஆனால், இன்று பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும் பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச் சலியாத வருவாயும் உடைய தாகத் தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம் எலியாக முயலாக இருக்கின் றார்கள்! ஏமாந்த காலத்தில் ஏற்றங்...

எழுத்தாளர் பைரவன் alias வாஞ்சி அய்யர்!

தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்பு விழாவிலிருந்து, அதன் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி அரசால் இடிக்கப்பட்டது வரை எல்லாமே விவாதப்பொருளாகிக் கொண்டிருந்தது ஒரு புறம். அதே வேளையில், தோழர்கள் சிலர் அதில் பெரியார் படம் இல்லையென்றும் வருத்தப்பட்டார்கள். அது தொடர்பான பல பதிவுகளும், அதற்கு நெடுமாறன் தரப்பிலிருந்தும், மணியரசன் போன்றோர் தரப்பிலிருந்தும் சாக்குகளும், சால்ஜாப்புகளும், ஜெயமோகன் செய்ததற்கிணையான ’யார் இலக்கியவாதி’ போன்ற ஆராய்ச்சி முடிவுகளுமாக போய்க் கொண்டிருந்தது. நேரிலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சென்று பார்த்து தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்தவர்களிடமும், “பாருங்கள்... இங்கே வெறும் இலக்கியவாதிகள் கவிஞர்கள், படைப்பாளிகள் படம் தான் இருக்கிறது. இதில் பெரியார் படம் வைக்கமுடியுமா?” என ரொம்பவே இலக்கிய அணிவகுப்பின் மீது அக்கறையோடு ’அங்கே’ இருந்தவர்கள் பதில் சொன்னார்களாம். முள்ளிவாய்க்கால் முற்றம்கிறது போராட்டத்தின் நினைவுகூரல் தானே, இதென்ன இலக்கியவாதிகள் கண்காட்சியான்னெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. தமிழ்த் தேசியமாச்சே! சொன்னது சொன்னது தான் மாத்த முடியாத...

புதிய தலைமுறையா? பா.ஜ.க. விளம்பரப் படையா?

புதிய தலைமுறையின் முகநூல் பக்கத்தில் கீழ்க்காணும் ”விளம்பரம்” ஒன்று வெளியாகிருந்தது. (இது பெய்டு நியூசா? இல்லை கூட்டணி நியூசா?ன்னு தெரியல) வா ஜ்பாய் பிரதமராக இருந்தபோது,  தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார். உடனே, அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை, வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்தார். “இனி ஒரு துப்பாக்கி தோட்டா, இந்திய மீனவர்கள் மீது பாயுமானால், இலங்கைக்கான அனைத்து பொருளாதார உதவிகளையும் உடனடியாக நிறுத்துவோம்’ என எச்சரித்தார். விளைவு, வாஜ்பாய் பிரதமராக இருந்த வரை, தமிழக மீனவர்களை தொட்டு பார்க்கும் தைரியம், இலங்கை கடற்படைக்கு இல்லாமல் இருந்த து. (https://www.facebook.com/Puthiyathalaimurai.tv/posts/620858547975925:0) வா ஜ்பாய் போன் பண்ணி ரனிலை மிரட்டினாராம். ரனில் சொல்லி, உடனே இலங்கை கடற்படைக்காரனுகள்லாம் துப்பாக்கியைத் தூக்கி பேண்டுக்குள்ள சொருகிக்கிட்டாய்ங்களாம்... என்னங்கப்பா... APCO worldwide கம்பெனியோட கூட்டு எதுவும் வச்சுக்கிட்டிங்களா? அள்ளிவிடுறதில உங்களுக்கு அளவேயில்லையா? சரி, அன்ன...

கலைஞரின் உண்ணாவிரதம் - நாடகமா? (ஒரு மீள் பார்வை)

2009 ஏப்ரல்: ஈழப் போர் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த நேரம். ஒரு தலையாக புலிகள் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். மறு புறம் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். இலங்கை சர்வதேச அளவில் பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. முழுவீச்சில் புலிகளை அழிக்கவும், அதனையே சாக்காக வைத்து தமிழர்களை அழிக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு - காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியில்! அதுவரை போரென்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொல்லிவந்த ஜெயலலிதா (அதிமுக), டபுள் சிறீ ரவிசங்கர் காட்டிய படங்களைப் பார்த்ததும், ஈழத்தில்... சாரி... சாரி... இலங்கையில் நடந்து வந்த கொடுமைகளை அப்போது தான் உணர்ந்துகொண்டதாகக் கூறி, தனது ஈழ முகமூடியை அணியத் தொடங்குகிறார். அதுவரை கூடவே சுத்திக் கொண்டிருந்த செவ்வாழைகளும், புதிதாகப் போய்ச் சேர்ந்தவர்களும் சொல்லிப் புரியாததை டபுள் சிறீ ரவிசங்கர் சொல்லித் தான் தெரிந்துகொண்டாராம். சரி, போய்த் தொலைகிற...

ஈழத்திற்கான தீர்வு 19-ஆம் வார்டிலா?

ஒரு வீடியோ கேம் விளையாடி, வெற்றி வாய்ப்பை நெருங்கிச் சென்று, பின் இழந்தால் கூட, மீண்டும் முதல் நிலையிலிருந்து தான் தொடங்க வேண்டும். விட்ட இடத்திலிருந்து தொடங்குவதற்கு வாய்ப்பில்லாத சூழலில் படிகளைக் கடந்து தான் ஏறமுடியும். ஒரே தாவலில் உயரத்தில் ஏறி நிற்க வாழ்க்கையும் போராட்டமும் சினிமா படமல்ல.  ஈழப் போராட்டத்தை ஒரு ஹாலிவுட் சண்டைப் படத்துக்கு நிகராகப் பார்த்து, 'எப்படியும் இறுதியில் கதாநாயகன் வென்று விடுவான்'என்று நம்பிக்கொண்டிருந்துவிட்டு, முடிவு எதிர்மறையாகிவிட்ட பின்னும்.... இன்று மீண்டும் மெல்லத் துளிர் விடத் தொடங்கியிருக்கும் வாய்ப்பை, உடனடியாக உச்ச நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவார்ந்த செயலா?  உலகநாடுகள் மெதுமெதுவாகத் தான் நகரும்... நம் அவசரம் அவர்களுக்கில்லை; நம் வலி அவர்களுக்குத் தெரியாது. அய்.நா.வில் கடந்த முறை கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைக் காட்டிலும் இந்தத் தீர்மானம் பரவாயில்லை என்றால் இதை ஒரு நகர்வாகக் கருதித் தான் ஆதரிக்க வேண்டும். உலக நாடுகள் தங்களின் சொந்த நலனையும் கவனத்தில் கொண்டு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்....

எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்...

எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்... உலக அற மன்றமே! கேள்!! துப்பாக்கிக் குண்டுகளுக்கு திறந்த மார்பு காட்டிய எங்கள் வீரப்புதல்வன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்! உன் கேளாக் காதுகளுக்கு இப்படி உரத்துச் சொல்ல இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டுமுனக்கு? எங்கள் குலக் கொழுந்தின் குரல் ஒலிக்கிறது கேள்... உலக அற மன்றமே! கேள்!!

மணிகண்டன் ஜாதித் திமிரும் சுப.வீ. மீசை மயிரும்

ஜாதியை ஒழிக்க விடமாட்டோம். கட்டிப்பிடித்துக் காப்பாற்றுவோம். அது எங்கள் பண்பாடு, ஆச்சா... போச்சா என்று கத்தியிருக்கிறார் பொங்கலூர் மணிகண்டன்! எப்போ பார்த்தாலும் தப்புத் தப்பா செய்தியை எழுதுறதே பொழப்பு மணிகண்டன் அவர்களுக்கு! கலப்புத் திருமணச் சட்டத்தைத் தடை செய்ய வேண்டுமாம். கலப்புத் திருமணச் சட்டம்னு ஒண்ணு இருக்கா என்ன?  ”தமிழன் - கன்னடன், தமிழன் - சிங்களன், தமிழன் - மலையாளி என்றெல்லாம் பேசுகிறீர்களே! நாங்கள் ஜாதி பேசக் கூடாதா?” என்கிறார். காவிரி நீர் உரிமையைத் தர மறுக்கும்போதுதான் தமிழன் - கன்னடன் பிரச்சினை எழுகிறது. முல்லைப் பெரியாறுக்கு பிரச்சினை வரும்போது தான் தமிழன் - மலையாளி பிரச்சினை வருகிறது. மனித உரிமை மறுக்கப்படும்போது தான் தமிழன் - சிங்களன் பிரிவினை வந்தது. உலகில் எங்கும் பாதிக்கப்படும்போது, அடையாளங்களுடன் திரள்வதை பிரிவினையாக யாரும் பார்க்கவில்லை. ஆனால், என் ஜாதித் திமிர் பாதிக்கப்படுகிறது என்று கொழுப்பு வாதம் பேசுவதை உரிமைப் பிரச்சினைகளோடு இணைத்துப் பார்க்க முடியுமா? ”சிங்களன் தமிழச்சியைக் கட்டிக் கொண்டால் சும்மா இருப்பீர்களா? நீங்கள் மட்டும் தமிழன் - சிங்கள...

எதற்காக டெல்லியில் குண்டுவெடித்தது?

வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் போலவே, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இன்றைய பேசு பொருளாக டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பே இருந்தது! நீதி கிடைக்குமென நம்பி சாதாரண மக்களும், நீதியை ’வாங்கு’வதற்கென சிலருமாகப் பொதுமக்கள் குழுமியிருக்கும் இடத்தில் நடத்தப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு கடுமையான கண்டனத்திற்குரியது தான். நீதிமன்றத்திற்குள்  குத்து, வெட்டு, கொலை நடப்பதை நம்மூரில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவின் தலைநகரல்லவா? குண்டு வெடித்திருக்கிறது. கடும் கண்டனத்திற்குரிய இந்நிகழ்வை யாரும், எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்க முடியாது. இதற்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா? அலட்சியம் காரணமா? CCTV கேமராக்கள் இல்லாத்தற்குக் காரணம் யார்? சகல திறமையும் பொருந்திய நமது இராணுவம், காவல்துறை இவற்றைவிட தீவிரவாதிகள் பெரியவர்களா? உளவுத்துறை என்ன செய்கிறது? இப்படி எண்ணற்ற கேள்விகள் எல்லா ஊடகங்களாலும் கேட்கப்பட்டன. புதிய தலைமுறை நிகழ்ச்சியிலும் கேட்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொள்ள ஓய்வுபெற்ற இந்திய இராணுவ உளவுப்பிரிவைச் சேர்ந்த கர்னல் ஹரிஹரன் என்பவரும், இதழாளர் பகவான...

கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும்...

எனதருமை தமிழீழச் சொந்தங்களே! கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும் உங்களிடம் இதனைப் பேசத் துணிகிறோம். இதைப் பேசுகிற உரிமை எமக்கிருக்கிறதென்றும் கருதுகிறோம். இதனால் எம்மீது உங்களில் சிலருக்கும், எம்மில் சிலருக்கும் கூட வருத்தம் உண்டாகலாம். ஆயினும் யாரேனும் ஒருவர் இது குறித்துப் பேசியே ஆகவேண்டும். தமிழக அரசியலில் யார் யார் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி அருள்கூர்ந்து நீங்கள் கருத்து தெரிவிக்காதீர்கள். இனப்பாசத்தின் அடிப்படையில், எம் உறவுகள் என்ற அடிப்படையில், தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற ஆசையில் தமிழீழத்துக்கான எங்கள் ஆதரவு அமைகிறது. அதே வேளையில் எம் தமிழ்நாட்டின் நிலைக்கேற்ப, எங்களின் தேவைகளுக்கேற்ப, இங்குள்ள சூழல்களைப் பொறுத்து யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது எங்கள் விருப்பம். அதை விடுத்து, உங்கள் விருப்பத்திற்கு செயல்படவில்லை என்பதற்காக கலைஞரைத் திட்டுவது, ஆசிரியர் வீரமணியைத் திட்டுவது, திருமாவை, சுப.வீ-யைத் திட்டுவது, தரக்குறைவாகப் பேசுவது என்று நீண்ட உங்கள் பட்டியல், இப்போது வைகோ வரை வந்திருக்கிறது. தெளிவாகச் சொல்கிறோம்... உங்களுக்காக நாங்க...

ஈழப் பற்றாளர்களே! இவருக்கா உங்கள் ஆதரவு?

மாவீரன் பிரபாகரன்பற்றி சட்டமன்றத்திலேயே ஜெ கூறியது என்ன? 16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானம் வருமாறு: நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான LTTE.-யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். 20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும், பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந் தேன். அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது பாரதப் ...

அவலை நினைத்து உரலை இடிக்காதீர்! ஆத்திரப்பட்டு அறிவை இழக்காதீர்!

கோபம் அறிவை மறைக்கும் என்ற அரிச்சுவடி தெரியாதா உங்களுக்கு? ’ஈழத்தை அழித்த காங்கிரசை ஒழிக்கிறேன்’ பேர்வழி என்று சொல்லிக் கொண்டு அதனினும் கொடிய விசத்தை, தமிழகத்தை அழிக்கும் பார்ப்பனிய பார்த்தீனியத்தைக் கொண்டு வந்து அமர்த்தத் துடிக்கிறீர்களே! கொஞ்சம் உளச் சுத்தியோடும், அறிவு நாணயத்தோடு சொல்லுங்கள்! ஈழத்தை காங்கிரசு மட்டும் அழித்ததா? அல்லது இவர்களைப் பயன்படுத்தி பார்ப்பனியம் அழித்ததா? தனித் தமிழீழம் அமையக் கூடாது என்று துடிப்பவர்கள் யார்? ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் உணர்வு என்ன இவ்விசயத்தில்! தமிழர்களுக்கென்று நாடு அமைவதை விரும்பாதவர்கள் பார்ப்பன நலம் காக்கத் துடிப்போர் அல்லவா? 63 சீட்டுக்காகக் கூட்டணியை விட்டு வெளியில் வரத் தயாரான கலைஞர், ஈழத் தமிழர் அழிவின் போது காங்கிரசு கூட்டணியை விட்டு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்கிறார் அண்ணன் சீமான்! எப்படி இருந்திருக்கும்?  வெளியில் வந்து பினாத்த முடியாமல் உள்ளே முடங்கியிருப்பார் சீமான்!  67-இல் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்ட காங்கிரஸ் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்திருக்கும். அ.தி.மு.க.வின் ஆதரவோடு ஆட்சியில் காங்க...

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!

சிப்பிகள் பொறுக்க வந்தோம் சிதைகள் தந்தாய் - எங்கள் கடல் தமிழர் வாழ்க்கை இன்று புதை குழி மண்ணாய்! கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் கிடைப்பது கடினம்; கடல்நீர் நாட்டுள் பயணம் வந்தது வடிந்தது எங்கள் உதிரம்! நாட்டுக்குள் பூகம்பம் வந்தது மக்கள் கடற்கரை சென்றனர். கடலுக்குள் பூகம்பம் வந்தது கடற்கரையே காணாமல் போனது! உயிரைப் பணயம் வைத்தோர் உயிருடன் வந்தனர் - தங்கள் உறவுகள் காவு போனதைக் கண்டதும் வெந்தனர்! கடல் என்னும் கந்துவட்டிக்காரன் பணயப் பொருளை மாற்றி கைக்கொண்டான்! தடைச் சட்டம் போட ஆளில்லை - கடல் தடைக்கெல்லாம் தயங்குகிற ஆளில்லை! இது மனித குலத்தின் மீது எல்லை தாண்டிய பயங்கரவாதம்! இயற்கை என்ன செய்யும் பாவம்? ஆழ்துளை போட்டான் அணுகுண்டு வீசினான் கடற்கரைக் காடுகள் அழித்து களியாட்ட விடுதிகள் கட்டினான் நீரை உறிஞ்சினான் நிலத்தடியில் வறட்சி.. கோலா பாட்டில் குளிர்ச்சி! சுற்றுச்சூழலின் சூத்திரம் மாற்றினான்.. தற்கொலைத் தூதனைத் தானே தேடினான்! தன்னை கவனிக்காத மனிதனைத் தானும் கவனிக்கவில்லை இயற்கை! பயங்கரவாதி இயற்கையா? இல்லை மனிதன்! கொலை செய்தவன...

விதையாக விழுந்தவர்கள் உரமாக மாறுவர்!

எவன் சொன்னான் தமிழீழம் மண்ணில் புதைந்ததென? மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டதென? துயிலும் இல்லங்களைத் துடைத்தெறிந்தோம்.. துகிலுரிக்கப்பட்ட உன் தமிழச்சி போலென‌ கொக்கரிக்கட்டும் சிங்களம் செருக்குடன்! கல்லறைகளில் மட்டுமா வீரர்கள் உறைந்தனர்! தமிழீழ மண்ணெங்கும் காற்றாய் நிறைந்தனர்! இன்று அவ்வில்லங்கள் இணையத்தில்.. என்றும் அவ்வில்லங்கள் இதயத்தில்...! புரட்டிப் போடட்டும் வீரம் விதைத்த மண்ணை! வரலாறு மறக்காது விதைகளின் எண்ணை! போயிற்று களம் என‌ அழுவது வீணடா! ஒரு போகம் விளைந்ததும் உழுவது ஏனடா? உனக்குமா தெரியாது உழவின் அரிச்சுவடி? நல்லேரைக் கொண்டுழுது அடிமண்ணை மேலெழுப்பி சத்தாக்குவோம்! நெல் வேரை உரமாக்கி விளைச்சலுக்கு அதனையே சொத்தாக்குவோம்! அன்று நாம் விதைத்தோம்! அவன் அறுத்தான்!! முதல் போகம் முடிந்தது! இன்று.. அறுத்தவன் உழுகிறான் இனி... நாம் விதைப்போம்.. நாம் அறுப்போம்! விதையாக விழுந்தவர்கள் உரமாக மாறுவர்! உறுதியாய் நம் தமிழர் தமிழீழம் காணுவர்!

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...) -2

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...) - முதல் பகுதி 5. இன்று தமிழ், தமிழர் என்றெல்லாம் புதிதாய்ப் புறப்பட்டிருப்போரே, கொஞ்சம் யோசியுங்கள். உங்களுக்கு, உங்கள் தந்தைக்கு, உங்கள் பாட்டனுக்கு ’நான் தமிழன்’ என்று உணர்த்தியது எது - திராவிட இயக்ககள் மேடையல்லவா? ’வந்தே மாதரம்’ என்று சொன்ன வாய்களை ’வாழ்க தமிழ்’ என்று சொல்ல வைத்தது யார்? திராவிட இயக்கம் தானே தமிழுணர்வை, தமிழன் என்ற சிந்தனையை, இன்றும் பலர் சொல்வது போல் தமிழனின் பழம் பெருமையை தமிழருக்கு உணர்த்தியது யார்? ஊர்தோறும் மாநாடுகளை, வீதிதோறும் விளக்கக் கூட்டங்களை, கலை நிகழ்ச்சிகளை, நாடகத்தை, திரைப்படத்தை, நாளிதழ்களை,  ஏடுகளைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தது யார்? 6. தமிழ்ச்செல்வி, தமிழ்ச் செல்வன், தமிழ்மொழி, அமுதத் தமிழ், செந்தமிழ்... இப்படி ஒரு மொழியின் பெயரையே தங்கள் பெயராகச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு தமிழ் உணர்வை ஊட்டியது திராவிட இயக்கம் என்பதை மறுக்க முடியுமா? நாடெங்கும் நல்ல தமிழைப் பேசு மொழியாக்கியது யார்? 7. ”’வணக்கம் தோழரே’ என்று சொல்லாதீர்கள்; ’வணக்கம் தமிழரே!’ என்று சொல்லுங்கள்” என்று தோழமை உ...