முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகத்தில் கவுந்த க....மலம்!

தமிழ்நாட்டில் கணக்குத் திறந்துவிடடோம் என்று மகிழ்ந்து திராவிடக் கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்துவந்த பதவிப் பசிக்கு இரையான பா.ஜ.க, இரண்டு கட்சிகளும் தூக்கி எறிந்தவுடன் காணாமல் போனதுபோல் தான் நடந்திருக்கிறது கர்நாடகத்தில்!

13 நாள் இந்தியாவை ஆண்டு சாதனை செய்த பா.ஜ.க. தனது சாதனையை தானே முறியடித்துக் கொண்டுள்ளது.

எட்டு நாளில் கவிழ்ந்து விட்டார் எடியூரப்பா!

எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் ஏறிவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில் ஆரம்பம் முதலே இந்த வெட்கங்கெட்ட கூத்துகளை நடத்தி வந்தது பா.ஜ.க..

இதில் முதல்முறையாக தென்னகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்டோம் என்ற பூரிப்பில் அத்துவானி முதல் அத்தனைப் பேரும் ஆஜராகி ஆசிவேறு.

வாழும் கலையை சொல்லித்தரும் (சாமியார்) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்பவரிடம் ஆசி பெற்று பதவியேற்றவர் வாழ்வை வெறுத்துவிடுவார் போலிருக்கிறது!!

முதலில் ஆதரவு மறுத்து, வெறுத்து... அப்புறம் துரத்தி.... மீண்டும் ஆதரவு தந்து... பிறகு நிபந்தனைகள்...

ஏற்கனவே தேசிய அரசியலில் நுழைந்து பிரதமராகி, பின்பு மீண்டும் முதல்வர் பதவிக்குத் தயாரன தந்தையைப் போலவே, முதல்வர் பதவி வகித்து ஆண்டுவிட்டு, அடுத்த சில நாட்களில் துணைமுதல்வர் பதவிக்கான போட்டியிலும் நிற்கும் அளவுக்கு இருக்கிறார் தேவகவுடாவின் மகன் குமாரசாமி. ஏதாவது ஒரு பதவியில் ஒட்டிக் கொண்டிருந்துவிட வேண்டும்..

சீ.. தூ... போங்கடா... நீங்களும் உங்க ...

அப்புறம் முக்கியமான சேதியை விட்டுட்டேனே! எப்படியோ பா.ஜ.க. கன்னட மண்ணைக் கவ்வியிருக்கிறது... இன்னும் குஜராத் மண், ராஜஸ்தான் மண் இப்படி நிறைய பாக்கியிருக்கிறது.. ஊரூராய் ரதம் விட்டதைப்போல போய் அத்வானி மண்ணைக் கவ்வி வரட்டும்!

குறிப்பு: கர்நாடகத்தில் மலர்ந்த கமலம் என்று தலைப்பிட்ட ஜடாயுக் காவிக்கும், தாமரை கவிழ்ந்து எடியூரப்பா தலையில் சூலமாய் இறங்கியதைப்போல படம் போட்ட முத்துக் குமரனுக்கும் நன்றி!

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
This only shows your ignorance and vengence.....Nothing else...

I wish your dreams comes true.....

If it didnot comes true you can say those are my drams.If it comes true those are my judgements....

But what happend in Nandhigram....Any news from you....
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆப்புன்னா இதுதாம்பா ஆப்பு!

காவி பசங்கள இருந்த இடந்தெறியாம தென்னிந்தியாவ விட்டே ஒழிச்சி கட்டனும்க!
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
சார்,

//சீ.. தூ... போங்கடா... நீங்களும் உங்க ...//

அதுக்குள்ள அவசரப் படாதீங்க. அப்பா மீது கோவித்துக் கொண்டு (எப்பேர்ப்பட்ட கொள்கைச் சிங்கம்!) தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் குமாரசாமி. . அப்போ துப்பிக்கலாம்.
முத்துகுமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி!
வைத்தி இவ்வாறு கூறியுள்ளார்…
தி.மு.க அந்த க ...... மலத்தோட கூட்டணி வைக்கும் போது மட்டும் மணந்ததா ?
பழநி இவ்வாறு கூறியுள்ளார்…
கர்நாடகத்தில் கவுந்த க....மலம்! .
மிக அருமை. இந்த பண்டார பிண்டங்கள் பாஜக வை எதிர்ப்பவர்கள் எல்லாம் திமுகவினர் என்று நினைப்பதைப்பார்த்தால் அய்யோ அய்யோ.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…