முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சா சொல்லுங்க

1. ப்ளாக்கரில் பின்னூட்டம் போடப் போனா அந்த சாளரம்(window) திறப்பதற்குள் பத்து பதிவுகள் படித்துவிடலாம் போலிருக்கிறது. அவ்வளவு மெதுவாக window open ஆகிறது. அது ஏன்? எப்படித் தவிர்ப்பது? எனது கணினியில் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. நல்ல வேகமான கணினிதான். 2. ப்ளாக்கரில் youtube வீடியோ போட்டாலும், அவர்கள் கொடுக்கும் code-அய் copy செய்து போடும்போது பாதிதான் paste ஆகிறது. மீதி வருவதில்லை ஏன்? இன்னொரு notepad-ல் paste செய்து அதிலிருந்து எடுத்துப் போட்டாலும் வீடியோ வரவில்லை ஏன்? 3. ஒரு முறை ஏற்றப்பட்ட பதிவை/ draft-ல் உள்ள பதிவை மீண்டும் திருத்த edit post கொடுத்து திருத்தி publish செய்தாலும், பழைய வடிவம் தான் மீண்டும் வருகிறது. திருத்த வழியில்லையா? 4. இ-கலப்பை கொண்டு உழுதாலும் மன்னிக்கவும்... எழுதினாலும் எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு கணினியில் (windows xp-ல்) ஆங்கிலத்திலும், தமிழிலும் சேர்ந்தே வருகிறது. எடுத்துக்காட்டுக்கு அந்த கணினியில் தட்டச்சு செய்தவற்றைப் பாருங்கள். ''tட்hஹ்aஅmம்iஇzழ்'' ie-ல் தட்டச்சும் போதுதான் இப்படி.... தனியாக notepad/wordpad-ல் சரியாக இருக்கிறது. 5..பு

இடஒதுக்கீடு இடைக்காலத் தடை: நம் கடமை

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து(stay) தீர்ப்பு அளித்துள்ளது. இந்த அரசியல் சட்டத்திற்கு விரோதமான தீர்ப்பு ஒடுக்கப்பட்டோரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "1931-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் இதை ஏற்க முடியாது. அதன்பின் சூழல்கள் மாறியுள்ளது. இப்போது சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள் யார் என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூற வேண்டும். இது வாக்குவங்கியைக் கணக்கில் கொண்டு இயற்றப்பட்ட சட்டம்" என்றெல்லாம் தன் போக்கில் உளறியிருக்கிறார்கள் உச்சிக்குடுமி உச்சநீதிமன்ற நீதிபதிகள். "வாக்குவங்கியைக் குறிவைத்துத் தான் இடஒதுக்கீடு" என்பது அப்பட்டமான இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் வெற்றுக்கூச்சலாகும். அதையே நீதிபதிகள் பயன்படுத்தியிருப்பது அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுகிறது.சரி, "1931-ன் படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை இல்லை; எனவே இப்போது ஜாதி வார

கருத்தடை டாட்காம் - பாமரன்

"பொதுவாக புளுகுகளைப் பொறுத்தவரை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று: அண்டப்புளுகு. அடுத்து: ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளி விவரப் புளுகு"- காட்கோ வாலிஸ் மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா அல்லது காணாமல் போயிற்றா என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு `புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது "தேசிய மாதிரி கணக் கெடுப்புக் கழகம் அதாவது N.S.S.O (National Sample Survey Organisation).இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது தே.மா.க.க. என்று அழைக்கக் கடவதாக. அப்படி என்னதான் புள்ளி விவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது. ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும். அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்... ஆம் இந்த `ஒரு மாதிரியான கணக்கெடுப்பின் மூல

தாஜ்மஹால் இடம் மாறுது...!

தினமும் வரும் பல மின்னஞ்சல்களிலும், செல்குறுஞ்செய்திகளிலும் நான் ரசிக்கும் வெகு சிலவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள ஆசை. வழக்கமாக மின்னஞ்சல்களை கணினியிலும், செ.கு.செ.க்களை எழுதி அனுப்பியவர் பெயரோடு தொகுப்பாகவும் சேமித்து வைத்துக்கொள்வது எனது பழக்கம். இனி நல்ல செ.கு.செ.க்களை தொகுத்து இந்த வலைத்தளத்திலும் பதிந்து, யாம் பெற்ற இன்பத்தை இவ்வுலகுக்கு பகிர்ந்திட விரும்புகிறேன். இதில் இன்னொரு வாய்ப்பும் என்னவென்றால், காலத்துக்கும் அவை நிற்கும். என்னிடமும் சேரும் துண்டுச்சீட்டுகளின்/ கோப்புகளின் எண்ணிக்கை குறையும். செ.கு.செ: என்னதான் பெரிய பக்திமானா இருந்தாலும், அவரால கப்பல் கிளம்புறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் வைக்க முடியாது. -பகுத்தறிவோடு யோசிப்போர் சங்கம் அனுப்பியவர்: காமராசு (பச்சையப்பன் கல்லூரி மாணவர்) மின்னஞ்சல்: தாஜ்மஹால் ஆக்ரா-வில இருந்து பூனேவுக்கு மாறுதுன்னா உங்களால நம்ப முடியுமா? கொஞ்சம் சிரமம் தான் இல்லையா? இங்க பாருங்க. . . . . . . அனுப்பியது: சக்தி சரவணன் (பொறியியல் மற்றும் திரைப்பட வல்லுனர்)

சீசன் பிசினசில் ஏசு பெருமான்!

தீபாவளிக்கு வெடிக்கடை, பொங்கலுக்கு கரும்புக் கடை, வெயிலுக்கு இளநீர்க்கடை என்று சீசனுக்கு சீசன் தொழில் மாற்றுபவர்களைப் பார்த்திருப்போம். அதேபோல, எப்போதும் E.N.T. Specialist (காது, மூக்கு, தொண்டை நிபுணர்) மாதிரி செவிடர் காது கேட்க வைக்கும், குருடர் கண் பார்க்க வைக்கும், முடவர் கால்களை இயங்க வைக்கும் சர்வ வல்லமை படைத்த எல்லாம் வல்லவராகிய 'ஏசு'வும், அவரை சந்தைப்பபடுத்தும் சீடர்களும் சீசன் பிஸினசில் இறங்கியிருக்கிறார்கள். இது தேர்வுக் காலமல்லவா? அதனால் பள்ளிகளின் தேர்வு எண்ணிகைய உயர்த்த ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்களாம் தினகரன், பால் தினகரன் குடும்பத்தினர். ஒட்டுமொத்தமாய் 100% தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் கிடைக்கட்டும் நாமும் நம்புவோம். மானவர், மாணவியர் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால், திறமையைத் திருடி பலன் அனுபவிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சரி! சரி! பிசினஸ்-னு இறங்கியாச்சு! அப்புறம் எதையும் விட்டு வைக்கக் கூடாது! இது கிரிக்கெட் சீசன் ... வாங்க பால் தினகரன் தலைமையில் ஜெபம் பண்ணுவோம்! (எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ' தினகரன் & கோ போல் நடியுங்கள்... சாரி... ஜெபம்

மகளிர் நாள் சிந்தனை

*இந்து சமூகம் என்று சொல்லப்படும் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம சொத்துரிமை வேண்டும். (26 27.5.1928-இல் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத இளைஞர் மாநாட்டுத் தீர்மானம்). *பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலையில் பெண்களையே அதிகமாக நியமிக்கவேண்டும். ஆரம்பப்பள்ளிக் கூட உபாத்தியாயர்கள் வேலைக்குப் பெண்களையே நியமிக்கவேண்டும். *ஆண்கள் தங்கள் மனைவிகள் காலம் சென்று விட்டால் மறு விவாகம் செய்துகொள்ள உரிமை இருப்பதுபோலவே எல்லாப் பெண்களுக்கும் புருஷன் இறந்துபோனால் மறு விவாகம் செய்துகொள்ள உரிமை வேண்டும். *ஒவ்வொரு வாலிபர்களும் கூடுமானவரை தங்களுக்கு ஏற்ற விதவைகளையே விவாகம் செய்துகொள்ள வேண்டும். (1718.2.1929-இல் செங்கற்பட்டில் நடைபெற்றமுதல் சுயமரியாதை மாநில மாநாட்டுத் தீர்மானம்) *சொத்தில் உரிமைப் பாத்தியம் குழந்தைகளுக்குக் கார்டியன் பாத்தியம் சுவீகாரம் எடுத்துக்கொள்ளல் இவற்றில் ஆண் பெண் இருபாலருக்கும் சம உரிமை தேவை. *மணமக்களுக்குள் வாழ்க்கை நடத்துவதில் கசப்புணர்வுகள் வந்தால் அவர்கள் விவாகத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றவேண்டும். *பெண்களுக்கு விலை கொடுக்கும் வழக்கம் ஒழியவேண்டும். (7 8.4.1931-இல் செட்டிமார் நாட

ஈழத்தில் நடைபெறுவது என்ன? - கி.வீரமணி

ஈழத்தில் நடைபெறுவது என்ன? - சென்னையில் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கவுரை .

ஈழத்தில் இன்று நிலை என்ன?

சென்னை பெரியார் திடலில் நேற்று(6-3-07) ஈழத்தில் இன்று நிலை என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற உண்மை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரை .

அன்புடன் - அடுத்த காப்பி (வித் அனு)

அடுத்தடுத்து காப்பிக் கடை நடத்திக் கொண்டிருக்கும் சன் தொலைக்காட்சியின் அடுத்த கடை! சன் -னில் வெளிவந்த விளம்பரத்தைப் பற்றியும், கவுதமி நிகழ்ச்சியை நடத்துவது பற்றியும் என் தங்கை சொன்னதுமே "காப்பி வித் அனு"வா என்று கேட்டேன். நிகழ்ச்சியின் முதல் விருந்தினர் யாராக இருக்கும் சொல்லு என்று கேட்கும்போது அது பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களாகத் தானிருக்கும் என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே 'ஆமாம்' என்றாள் தங்கை. "எப்படிண்ணா கண்டுபிடிச்ச?" "இதைக் கண்டுபிடிக்கிறதுக்கு C.B.I-யில இருந்து ஆபீசரா வருவாங்க" என்ரு விவேக் பாணியில் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியை எதிர்பார்த்துப் பார்த்தேன். கமல் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அல்லவா... நன்றாகத் தானிருந்தது. சுஜாதா பாணியில் சொல்லவேண்டுமானால் "இடையிடையே அந்த 'லாப்டாப்'பை எடுத்துக் கொடுப்பதும், அதை இயக்க சொல்லித் தருவதும், அதற்கும் ஒரே முறை எடுத்த காட்சியையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதும் ஈராக்-கை விட பெரும் போராக இருக்கிறது " என்று சொல்லலாம். அது போகக் கடைசியில் கையெழுத்து வாங்கும் அனுவுக்கும், கைரேகை பதிக்கச்ச

ஈழத்தில் நடைபெறுவது என்ன?

ஈழத்தில் நடைபெறுவது என்ன? சென்னையில் சிறப்புப் பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் விளக்கவுரையாற்றுகிறார் (உண்மை விளக்கப் பொதுக் கூட்டம்) நாள்: 6.3.2007 செவ்வாய் இரவு 7 மணி முதல் 9 மணி வரை; இடம்: சென்னை - பெரியார் திடல். பொருள் ஈழத்தில் இன்று நடைபெறுவது என்ன? பேசுவோர்: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) பேராசிரியர் சுப. வீரபாண்டியன் (அமைப்பாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை) ஏற்பாடு: திராவிடர் கழகம்

பட்ஜெட் - அவரவர் கவலை அவரவர்க்கு!

மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் ப.சிதம்பரம்.. இது பணக்காரர்களுக்கான பட்ஜெட் என்று பரவலான கருத்து இருக்கிறது. இந்நிலையில் 'தினமலர்' பட்ஜெட் குறித்து தலைப்பு வெளியிட்டிருக்கிறது. அவரவர் கவலை அவரவர்க்கு! நாய் பிஸ்கட் கவலை தினமலர்க்கு!