முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு.

முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.


(நன்றி: த.அருள்எழிலன்)

வீரவணக்கம்; வீரவணக்கம்!

வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின்
வீரவித்துக்கள் நீவீரே!
மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள்
மனங்கொண்டு சினம் வளர்த்து
ஈழம் படைக்க உரமாகின்றன!
வீரவணக்கம்; வீரவணக்கம்!

உம்மைக் கொன்றதும்
எங்கள் அமைதி முகத்தைச்
சிதைத்ததும் ஒன்றே!
பேச்சு தேவையில்லை
இனியென சிங்களம்
சொல்கிறது!
இனி அவர்கள்
பேசவேகூடாது என்கின்றன
உம்முடல்கள்...
செய்து முடிப்போம்!
பகையைக் கொய்து முடிப்போம்!
வீரவணக்கம்; வீரவணக்கம்!

கருத்துகள்

கானா பிரபா இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி, உம்போன்ற உறவுகளை எம் நெஞ்சினில் இருத்தி வைப்போம்.
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
புன் சிரிப்பில் எதிரியையும்
வர வேற்றப் போர்மறவா!
உன் மறைவில் சிரிக்கின்றார்
வீணர் விரைவினிலே
விடிந்திடுமே தமிழீழம்!
தமிழீழ மலர் படைப்போம்
தமிழன் உன் புகழ் பாடி!
VSK இவ்வாறு கூறியுள்ளார்…
இலங்கை விமானப்படை தாக்குதலில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், நேற்று பலியானார். அவரது மறைவை ஒட்டி முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்ட இரங்கல் கவிதை:

எப்போதும் சிரித்திடும் முகம்-
எதிர்ப்புகளை எதிர்த்திடும் நெஞ்சம்!

இளமை; இளமை; இதயமோ;
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச் சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன்- உயிரனையான்-
உடன்பிறப்பனையான்;
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் உளமெலாம்
தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?

"இதற்கு என் பதில் கவிதை!"

எங்கு சென்றாய் எனக் கேட்கும் தலைவா
அங்கு நீயின்னும் செல்லாததாலன்றோ
பொங்குதமிழ்க் கவி புனைந்து
விஞ்சு புகழ் பாடுகின்றாய்!

நாற்பது எம்ப்பீக்கள் உன்கையில்
நாநிலம் நடப்பதுமோ உன் தயவில்
என்ன செய்தாய் இதுவரையில்
தமிழீழம் கிடைப்பதற்கு

போக்குவரத்துத்துறை கிடைக்க
போர்க்கொடி நீ பிடித்தாய்
தனியறையில் மறைந்துகொண்டு
தனித்துவம் நீ பெற்றாய்!

தமிழீழம் பற்றியொரு
தனிக்குரல் கொடுத்ததுண்டா
இதுவரையில் சொல்லப்பா
சொல்லின் செல்வனே!

தமிழ்ச்செல்வன் போனாலென்ன
செல்வங்கள் பலவற்றை
விதித்துத்தான் சென்றிட்டான்
அதுபற்றிக் கவலை வேண்டா!

முகஸ்துதியாய் வார்த்தைகளை
கொட்டுவதை விடுத்திட்டு
தனியீழம் பற்றியொரு
மசோதாவைக் கொண்டுவந்து

அதுதோற்கினும் உன்புகழை
தமிழனுக்குக் குரல் கொடுத்த
தனிப்பெரும் தலைவனெனும்
பெயரினை நீ பெற்றிட்டால்

அதுவே நீ வாழ்ந்த
எண்பதாண்டுக்குப் பெருமை
இதை நீ உணரமாட்டாய்
உன் கவலை இதுவல்ல

எம்தமிழர் ஒவ்வொன்றாய்
செத்தாலும் உனக்கிங்கு
கவலையில்லை ஏனென்றால்
உன்கையில்தான் தமிழிருக்கே

பாடிடு இன்னொரு இரங்கல் கவிதை
மூடிடு உன் இதயக் கதவை
தொடர்ந்திடும் எம்தமிழர் போராட்டம்
விடிந்திடும் ஓர்நாள் தமிழீழம்
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
//தமிழீழம் பற்றியொரு
தனிக்குரல் கொடுத்ததுண்டா//

வீ.எஸ்.கே. கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழீழம் குறித்த பார்ப்பனர்களின் நிலை என்ன?
VSK இவ்வாறு கூறியுள்ளார்…
//வீ.எஸ்.கே. கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தமிழீழம் குறித்த பார்ப்பனர்களின் நிலை என்ன?//

இப்படி ஒரு கேள்வி என்னைப் பார்த்து கேட்பதற்கு நீங்கள் வெட்கித் தலை குனிய வேண்டும் திரு. லக்கி லுக்!

எனக்கு பார்ப்பனர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிக் கவலை இல்லை. அவர்களுக்கென ஒரு ஒட்டு மொத்தக் குரல் இருக்கிறதா எனவும் நானறியேன்.

தமிழனுக்கு ஒரு கேடு என வரும் போது ஜாதி பார்க்கும் உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

இதே மடலை உங்கள் பதிவிற்கும் அனுப்பியிருக்கிறேன்.

நான் ஒரு தமிழன் என்ற முறையில் என் கருத்தைப் பதிகிறேன்.

இதில் ஜாதி பார்த்து கேட்பது கேவலமாகப் படுகிறது.

கட்சி அபிமானம் எப்படியெல்லாம் கண்ணை மறைக்கிறது....உண்மையையும் ஒதுக்கி.... என நினைக்கையில் வேதனையாய் இருக்கிறது.

நடப்பது நம் தமிழர் கொடுமை.

அதைப் பற்றிப் பேசுங்களேன்!
நன்றி.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
வீ.எஸ்.கே. அய்யா! வெட்கித் தலைகுனிய வேண்டியது நானல்ல. நீங்கள் தான். உங்கள் சாதிப்பற்று வெளிப்படையாக தெரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு நடந்துகொள்கிறீர்கள்!

நம்ம விவாதம் இங்கே பின்னூட்டங்களில் நடக்குது அய்யா. இங்கே டிஸ்டர்ப் பண்ண வேணாமே?
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கானாபிரபா, தமிழன், வி.எஸ்.கே மற்றும் லக்கிலுக்..
baasha இவ்வாறு கூறியுள்ளார்…
அ.உங்களின் வணக்கத்திற்கு நன்றி். உங்களைப்போன்ற இந்திய தமிழர்களின் ஆதரவு எமக்கு மிகத் தேவை. நன்றி
குசும்பன் இவ்வாறு கூறியுள்ளார்…
"வீணர் விரைவினிலே
விடிந்திடுமே தமிழீழம்!
தமிழீழ மலர் படைப்போம்
தமிழன் உன் புகழ் பாடி!"

நம்பிக்கை என்றுமே வீண்போவது இல்லை! சீக்கிரம் நடக்கவேண்டும் என்பதே ஆசை!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குசும்பன், & பாஷா!
ஒரு சின்ன திருத்தம்
"இந்தியத் தமிழன் அல்ல; தமிழ்நாட்டுத் தமிழன்"
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//தமிழ்நாட்டுத் தமிழன்//

ஆ தமிழ் நாட்டுத் தமிழனா,
நம்பவே முடியலயே.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…