முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது. ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையி

தொடரும் திரிபுகள்! - தப்பிக்குமா விக்கிபீடியா?

ஊடகங்களை ஆக்கிரமத்திருந்த பார்ப்பன சக்திகள் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மட்டுமின்றி, அதன் தலைவர்களது வாழ்க்கை வரலாற்றையும் திரித்து, மறைத்து வெளியிடுவதில் செவ்வனே செயலாற்றி வந்தன. அத்தகைய ஊடகங்களை நம்பிப் படித்துவந்த நம் மக்களும் இதூதான் உண்மை என்றெண்ணி தவறான செய்திகளை மேலும் பரப்பினர். அப்படி, தந்தை பெரியாரின் கருத்துகளை வெட்டி, ஒட்டி, முன் பின் சேர்த்து, அவர் சொன்ன கருத்தை அந்தக் காலத்தோடு பொருத்திப் பார்க்கவிடாமல் தவறான பொருள்படும்படி வெளியிடுவதில் தினமலர், துக்ளக் உள்ளிட்டவற்றிற்கு பெரும்பங்கு உண்டு. அவ்வப்போது சில்லறைப் பொய்களைக் கசியவிட்டு, அதன் மூலமும் சுகம் காணும் அவர்களின் வாடிக்கை. பூணூலைக் கொண்டு முதுகு சொறிவதைவிட அண்மைக் காலமாக இதுதான் அவர்களுக்கு மிகவும் பிடித்தது. இத்தகைய கும்பல் தான் முதலில் இனையத்தைக் கைப்பற்றி, தவறான செய்திகளை வெளியிட்டுவந்தது. விக்கிபீடியா தளம் பொதுவானதும், ஒப்பன் சோர்ஸ் தன்மையிலானதும் என்பதால், அதில் புகுந்து கொண்டு தந்தை பெரியார் வரலாற்றில் கை வைக்கும் வேலையையும் அவர்கள் மிக்க சிரத்தையுடன் செய்து வருகிறார்கள். 2004-இல் ஒரு ச

தினமலர் - கருமாதிப் பத்திரிகை- பெயர்க்காரணம்

தினமலர் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் கூடவே கருமாதிப் பத்திரிகை என்று தமிழுணர்வாளர்கள் பயன்படுத்தும் சொல்லும் வரும். அதென்ன கருமாதிப் பத்திரிகை என்று கேட்கிறார்கள் நண்பர்கள். எண்பதின் இறுதிகளில் ஈழப்பிரச்சினை, யுத்தம் என தீப்பிடித்துக்கொண்டு இருந்த நேரம். தமிழர்க்கு கிடைத்த அரும்பெரும் தலைவனாக, தமிழர் வீர வரலாற்றின் மீள்வடிவமாக எழுந்த தலைவர் பிரபாகரனின் வளர்ச்சியைப் பொறுக்கமுடியாமல் அன்றுமுதல் இன்று வரை ஈழப்போராட்டத்தில் தமிழர் விரோத தகவல்களைப் பரப்பிவரும் தினமலர் அன்றைக்கும் தன் பணியை செவ்வனே செய்து வந்தது. தமிழர்க்கென்று ஒரு நாடு அமைவதையும், தமிழரின் கொடி உலக அரங்கில் பறப்பதையும், நாடோடிக் கூட்டமான பார்ப்பனர்களால் பொறுத்துக் கொள்ளமுடியுமா? தமிழக இளைஞர்களும் ஈழப்போராட்டத்தின் காரணமாக எழுச்சியோடு இருந்த நேரமல்லவா? அப்போது, யுத்தம் ஒன்றில் தலைவர் 'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று செய்தி வெளியிட்டது. கடும் எதிர்ப்புக் கிளம்பியது. பார்ப்பனர்கள் பூணூல் சொறிந்து சுகம் காண பிரபாகரனையா இழுப்பது? என்று தமிழர்கள் கொந்தளித்தனர். தமிழர் தலைவர் கி.வீரமணி, மாவீரன் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி!

தினமலர் குறித்து நான் எழுதியிருந்த பதிவுக்கு அண்மையில் நண்பர் 'நாட்டு நடப்பு' அவர்கள் பின்னூட்டமிட்டிருந்தார்கள்! //NAATTU_NADAPPU said... வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது?ஒரு பத்திரிகையின் வாசகர் என்பவர் தனது கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவிக்க பத்திரிகையின் உதவியை நாடுகிறார். அதை வெளியிடுவது அந்த பத்திரிகையின் தர்மம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையின் வாசகராக இருக்கலாம். ஒரே கருத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளுக்கு அவர் அனுப்பி இருக்கலாம். உடனே அதை பத்திரிகையின் இட்டுக்கட்டிய கடிதம் என்று முத்திரை குத்துவது சரியாகுமா? உங்களுக்கு குறிப்பிட்ட பத்திரிகை பிடிக்கவில்øயென்றால் அதன் வாசகர்களை இப்படியா கொச்சைப்படுத்துவது// என்று கருத்தூத் தெரிவித்திருந்தார். அவரது தளத்திலும் தனது ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் தனது முந்தைய பதிவில்... // "சொந்தச் செலவில் சூனியம்" பத்திரிகையாளர்கள் தங்கள் சகப்போட்டியாளர்களை இதுபோல சந்தி சிரிக்க வைப்பதென்பது "சொந்தச் செலவில் சூனியம்" வைத்துக் கொள்வதைப் போன்றதே. பத்திரிகையாளர்களுக்கு என்று மக்கள் மத்தியில்

'பொன்விழா' -பதிவு!

தந்தை பெரியாரின் போராட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜாதி ஒழிப்புப் போராட்டம்' எனப்படும் ஜாதியைப் பாதுகாக்கும் 'அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம்' நிகழ்ந்து வரும் 2007 - நவம்பர் 26- ஆம் தேதி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. திராவிடர் கழகத்தின் போராட்ட வரலாற்றில், பெரியார் தொண்டர்களின் மனோதிடம் என்னவென்பதை வரலாறு கண்டுகொண்ட போராட்டம்! 'போராட்டத்திற்கான தண்டனை என்னவென்பதை முடிவு செய்து சட்டமியற்றிக் கொள்ளுங்கள், அதன் பிறகு என் போராட்டத்தை வைத்துக் கொள்கிறேன்' என்று வரலாறு காணாத வகையில் அறிவிப்புச் செய்து, தலைவர் பெரியார் நடத்திய போராட்டம்! போராட்ட வீரர் ஒருவருக்கு இரண்டாண்டுகள் தண்டனை அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதற்கு அந்த போராளி, "சட்ட எரிப்பு போராளிகளுக்கு கடுமையான த்ண்டனை வழ்ங்கு' என்று நேரு மாமா சொன்னபின், ஏன் இவ்வளவு குறைந்த தண்டனை தருகிறீர்கள் மாமா!" என்று கேட்ட வரலாறு - வரலாற்றுக்கே புதிது! போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவன் ஒருவன் மேல் இரக்கப்பட்ட நீதிபதி, " நீ (அரசியல் சட்டம் என்று எழுதப்பட்ட) வெறும் தாளைத் தானே கொளுத்தினாய்?&quo