திரைப்படக் கல்லூரியின் பயிற்சித் தேர்வுக்காக பாடல் ஒன்றைப் படமாக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே இருக்கும் திரைப்படப் பாடலை வேறுவடிவத்தில் படமாக்கலாம் என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டேன். என்னை வெகுவாக பாடலாக பாதித்த, காட்சியாக கவரத் தவறிய "விடைகொடு எங்கள் நாடே" பாடலைத் தேர்ந்தெடுத்தேன்.
நேரடியாக சிங்களக் கொடியைப் பயன்படுத்த முடியாத சூழல்- அரசுக் கல்லூரி என்பதால்!
எனவே முந்தைய அ.தி.மு.க அரசு காலகட்டத்தில் மாணவன் ஒருவனால் படமாக்கப்பட்ட பாடல் என்பதைக் கருத்தில்கொண்டு பார்க்க வேண்டுகிறேன்.
கூகிளாண்டவர் என் தளத்தில் காட்சி தர மறுத்தால் கீழ்க்காணும் சுட்டியைக் கொண்டு ஆண்டவரைத் தட்டுங்கள்!
http://video.google.com/videoplay?docid=-8652878290372582009&hl=en

கருத்துகள்
நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து செல்கின்றோம்!//
காசி ஆனந்தனின் வரிகளில் கரைகிறது மனம்!
நிழலாக...
வாழ்த்துக்கள்.
நம்பிக்கைகள் சிறிதேனும் மிச்சமிருந்த பொழுதில் நாம் கொண்டிருந்தவை முற்றிலும் சிதையுண்டுபோயிருக்கும் காலகட்டத்திலும் வலிக்க வைக்கிறது உங்கள் படைப்பு . நெட்டை பனை மரங்களாய் நிற்கும் வாழ்க்கை, வரலாற்றின் புனைவாகிவிடக் கூடாதா என குழந்தை கனா காண்கிறது மனம். சம கால வரலாற்றின் கொடூரத்தை சமரசமற்று பதிவு செய்த படைப்பாளியின் குரல் விடை பெறாதுஒலித்துக் கொண்டிருக்கிறது மானுடத்தின் செவிப்பறைகளில்.
எனது பேரன்புகள் தோழருக்கு!