முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரியாரின் மயிரைப் பிடுங்கி...

தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

வான் தவழும் வெண்மேகத் தாடியாடும்
வளையாத சிந்தனைக்கோர் ஆட்டம் இல்லை
- கவியரசு கண்ணதாசன்

வெண்தாடி வெளிச்சம்
- கவிஞர் கலி.பூங்குன்றன்

நின் அடையாளம்
தாடியும் தடியும்
நீதான் எங்கள்
அடியும் முடியும்
- கவிப்பேரரசு வைரமுத்து

உன் முகத்தில்
படர்ந்திருக்கும்
நரைமுடிகள்
போதிமர வேர்கள்!
- கவிஞர் பழநிபாரதி

சவரம் செய்யும் நேரம் கூட என் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்த தங்கள் தலைவனின் அடையாளத்தை பாடி மகிழ்ந்தனர் கவிஞர்கள். சுருக்கமாகச் சொன்னால் தந்தை பெரியாரின் தடிக்கு நிகராய் பாடல் பெற்ற தலம்தான் தாடி.

சிங்கமாய்ச் சிலிர்க்கும் அந்த முகத்துக்கு வனப்பு சேர்த்தது அவரது தாடி! பார்ப்போரை கவர்ந்திழுத்த அந்தத் தாடியைக் கவர்திழுத்த கதை தெரியுமா? இதோ கேளுங்கள்!

06.03.1973 - காரைக்குடி பகுதிக்கு எப்போது வந்தாலும், கல்லுக்கட்டியில் இருக்கும் என்.ஆர்.சாமியின் கடைக்கும், வீட்டுக்கும் வராமல் இருக்கமாட்டார் தந்தை பெரியார். அப்படி ஒரு முறை என்.ஆர்.சாமி ஸ்டோர்ஸ்-இல் அமர்ந்திருக்கிறார் பெரியார். உடன் புகைப்படம் எடுக்க என்.ஆர்.எஸ்-இன் பேரன், பேத்திகளை வீட்டிலிருந்து அழைத்து வந்தார்கள். மற்றவர்கள் பெரியாரின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள, கைக்குழந்தையாக இருந்த என்னாரெசு பிராட்லாவைக் (என்.ஆர்.எஸ்-இன் இரண்டாம் மகன் சாமி திராவிடமணியின் இரண்டாம் மகன்) கையில் தூக்கி வைத்துக் கொண்டு புகைப்படம் எடுக்கச் சொல்கிறார்.

படம் எடுத்த பின் சாமிசமதர்மம் கையில் குழந்தையைத் தரும்போது 'ஆ..' என்று துடிக்கிறார் பெரியார். பிறகு தாடியைத் தடவிக் கொள்கிறார்.
என்னவென்று பார்த்த சமதர்மம் குழந்தையின் பிஞ்சு விரல்களின் நடுவில் தாடி முடி இரண்டு ஒட்டி வந்திருப்பதைக் கவனிக்கிறார்.
"அய்யா.. தாடிங்கய்யா.." என்கிறார் சமதர்மம்.
"ம்..ம்.. " என்று தாடியைத் தடவியபடி சிரிக்கிறார் பெரியார்.

அந்த இரண்டு முடிகளையும் பத்திரப்படுத்துகிறார் சமதர்மம். உடனிருந்த மாவட்டப் பொருளாளர் இரா.சுப்பிரமணியம் தனக்கு ஒன்று தருமாறு நீண்ட நாட்களாகக் கேட்க, ஒன்றை தந்துவிட்டார். (பின்னர் அது தொலைந்துபோனது)
மற்றொன்றை தன் சொத்தாகப் பாதுகாக்கும் சாமி.சமதர்மம் சொல்கிறார்,
"ஸ்பிரிங் கம்பி மாதிரி இருக்கு அய்யா முடி. அத்தனை உறுதி. நான் என் மகனுக்குத் தரும் உயரிய பொருள்.. சொத்து.. எல்லாம் இந்த மயிர்தான். " என்று சொல்லிச் சிரிக்கிறார். (எனக்குத்தான் ... எனக்குத்தான்)

புத்தரின் பல் பாதுகாக்கப்படுகிறதாம் இலங்கையில்.
அப்படி தந்தை பெரியாரின் உயிர்ப்பொருள் ஒன்று இன்னும் பாதுகாக்கப்படுகிறது எனில், அது தாடிமுடியாகத் தான் இருக்கும். அன்று
பெரியாரின் தாடி மயிரைப் பிடுங்கிய தி.என்னாரெசு பிராட்லா இன்றைய காரைக்குடி நகர தி.க. செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

குறிப்பு: இந்தச் செய்தி கவிஞர் பழநிபாரதியின் தந்தையார் சாமிபழனியப்பன் எழுதிய 'நினைவு மலர்கள்' நூலிலும் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள்

kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
ஆ! பெரியாரின் மயிறா?

(ப்ளீஸ் அதை வைத்திருப்பவரின் அட்ரஸ் சொல்லமுடியுமா?)
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன தோழர் நீங்க.. முழுதும் படிங்க...

இப்போது வைத்திருப்பவர் என் தந்தை சாமி.சமதர்மம் அவர்கள் தான்.
குழலி / Kuzhali இவ்வாறு கூறியுள்ளார்…
ஸ்ரீ ஸ்ரீ எக்ஸ் எக்ஸ் சுவாமிகளின் பாதகையை பாதுகாப்பவர்களுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை எமக்கு.... பெரியாரின் கொள்கைகள், எழுத்து, பேச்சை சேகரித்து அதை பெருமையாக சொல்வதற்கும் மயிரை சேகரித்து பெருமையாக சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது, இது ஒரு சாதாரண சினிமா ரசிகன் அவன் சினிமா கதாநாயகனின் போட்ட தொப்பியில் ஆரம்பித்து எக்செட்ரா எக்செட்ரா சேமிப்பதற்கும் இதற்கும் வித்தியாசமில்லை....

சொல்லவேண்டுமென தோன்றியது சொல்லிவிட்டேன் அவ்வளவே....

நன்றி
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
//என்ன தோழர் நீங்க.. முழுதும் படிங்க...

இப்போது வைத்திருப்பவர் என் தந்தை சாமி.சமதர்மம் அவர்கள் தான்.//

உண்மைத்தான் தோழர் நான் பெரியாரின் மயிரைப் பார்த்ததும் உடனே பின்னூட்டம் போட்டு விட்டு போய்தான் படித்தேன். உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது.

அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் தமிழன் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் பெரியாரிடம் வைத்திருக்கும் ஈடுபாட்டைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்.

நீங்கள் மயிரெல்லாம் புடுங்கியிருக்கிறீர்களா? சரி! சரி! உங்களுடைய அண்ணன் தானே
பெரியார் சாக்ரடீஸ் உங்களுக்குள் இந்த மயிறு எனக்குத்தான் என்று பிரச்சனை வந்துவிடக் கூடாது. ஆகையால் அதை எனக்கு கொடுத்து விடுங்கள்.

இல்லாவிட்டால் எடுக்கப்பட வேண்டிய விதத்தில் எடுக்கப்படும். இது என்னுடைய சீரியசான எச்சரிக்கை.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
RATHNESH இவ்வாறு கூறியுள்ளார்…
இது போன்ற செயல்களை / சிலிர்ப்புகளைப் பெரியாரே வரவேற்க மாட்டார் என்றாலும் கூட சாமியார்களின் கையால் தரப்பட்ட விபூதிப் பொட்டலத்தை வைத்துச் சிலிர்க்கும் பக்தனுக்குத் தான் தெரியும் அது தரும் சந்தோஷம் குறித்து என்று எழுதத் தோன்றவில்லை. அது குருட்டுத் தனமான பக்தி. இது, காந்தியின் கைத்தடியை மூக்குக் கண்ணாடியை இடுப்புக் கடிகாரத்தை ரத்தம் தோய்ந்த உடையை மியூசியத்தில் காணும் போது ஏற்படும் உணர்ச்சிக்குக் கொஞ்சம் மேம்பட்டது எனலாம். ஏனென்றால் காட்சிப் பொருளாக அன்றி ஒருவருடைய கஸ்டடியில் சொத்தாக மதிக்கப்படும் விஷயமாச்சே. உங்கள் பதிவுகளுக்கே புதிய கனம் வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
மர்ம வீரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆ...! பெரியாரின் மயிர் என் கிட்ட மட்டும் தான் இருக்குன்னு நினச்சிக்கிட்டு இருந்தேன். நீங்களும் வச்சிருக்கீங்களா?
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பகுத்தறிவு இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ் முதன் முதலில் உங்களை திடலில் ஆசிரியருடனான சந்திப்பில் சந்தித்த போது உங்கள் குடும்பத்தைப் பற்றி எனக்கு தெரியாது. அய்யாவுடன் இவ்வளவு தொடர்பு கொண்ட குடும்பத்தினர் ஒருவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
bala இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
comment modderation pottachu... ini un aattam sellathadi bala pannadai!
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
//comment modderation pottachu... ini un aattam sellathadi bala pannadai!//


super!!
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
//சிலிர்ப்புகளைப் பெரியாரே வரவேற்க மாட்டார் என்றாலும் கூட சாமியார்களின் கையால் தரப்பட்ட விபூதிப் பொட்டலத்தை வைத்துச் சிலிர்க்கும் பக்தனுக்குத் தான் தெரியும் அது தரும் சந்தோஷம் குறித்து என்று எழுதத் தோன்றவில்லை. அது குருட்டுத் தனமான பக்தி. இது, காந்தியின் கைத்தடியை மூக்குக் கண்ணாடியை இடுப்புக் கடிகாரத்தை ரத்தம் தோய்ந்த உடையை மியூசியத்தில் காணும் போது ஏற்படும் உணர்ச்சிக்குக் கொஞ்சம் மேம்பட்டது எனலாம். ஏனென்றால் காட்சிப் பொருளாக அன்றி ஒருவருடைய கஸ்டடியில் சொத்தாக மதிக்கப்படும் விஷயமாச்சே. உங்கள் பதிவுகளுக்கே புதிய கனம் வந்து விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்.//

சத்தியமான வார்த்தைகள் தோழர்
Bharathi இவ்வாறு கூறியுள்ளார்…
இதுதான் பகுத்தைறிவா? வெங்காயம்.
இந்த ரேஞ்சில் இதை பறிக்க மிரட்டல் வேறு. கழுதை கெட்டு குட்டிச்சுவரான கதை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கருத்து கூற ஓன்றும் இல்லை
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
//இதுதான் பகுத்தைறிவா? வெங்காயம்.
இந்த ரேஞ்சில் இதை பறிக்க மிரட்டல் வேறு. கழுதை கெட்டு குட்டிச்சுவரான கதை.//


பிரின்ஸ் என்னுடைய நண்பர்.எங்களுக்குள் பேசிக் கொள்வதையெல்லாம்
பகுத்தறிவுடன் சம்பந்தப்படுத்தி
பேசிக் கொண்டிருக்காதீர்கள் பாரதி!!!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழர்கள் தமிழச்சி, குழலி, ரத்னேஷ்,மர்ம வீரன், பகுத்தறிவு, பாரதி, பழநி ஆகியோருக்கு.

உரிமையோடு தோழர் குழலி சொன்னாலும், இதை சாக்காகக் கொண்டு எமதும் தோழர் தமிழச்சி உள்ளிட்டோரின் பகுத்தறிவு பற்றிக் கேள்வி எழுப்புவோரானாலும் அவர்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எமக்கிருக்கிறது.

தந்தை பெரியாரை படமாக மட்டுமல்ல, வாழ்க்கைப் பாடமாகக் கொண்ட வாழ்க்கை எம்முடையதும், எம் குடும்பத்தாருடையதும்.
பெரியாரின் தாடி மயிருக்கு மகத்துவம் இருக்கிறது என்றெல்லாம் அதை நாங்கள் பாதுகாக்கவில்லை. எம்மினத் தந்தையின் அடையாளங்களுள் ஒன்று! கடைசிக் காலமெல்லாம் அவரோடு எம்மக்கள் தூக்கிச் சுமந்த மூத்திரச் சட்டியும், ரப்பர் குழாயும் என்றென்றைக்கும் அந்தத் தலைவனின் ஒப்புயர்வற்ற தொண்டறத்தை நினைவுபடுத்துவதைப்போலத் தான் இதுவும்.
அவரைத் தாங்கிப் பிடித்த அந்தத் தடி எப்படி ஆதிக்கக்காரர்களுக்கான எச்சரிக்கைக்கு அடையாளமாக இருக்கிறதோ அதைப் போலத் தான் இதுவும். என் தாத்தாவின் உயிர்ப்பொருள் ஒன்று எம்மிடம் இருக்கிறது என்பது அவரை நினைவுபடுத்தவும், அப்படிப்பட்ட தலைவனோடு ஒட்டி உறவாடுகிற வாய்ப்பு கிடைத்திருந்ததை நினைத்து பெருமை கொள்ளவுமே தவிர வேறெதற்குமில்லை.

எம்வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், துளியிலும் பெரியார் எவ்வாறு கலந்திருக்கிறார் என்பதை எம்முடன் பழகுபவர்கள் அறிவார்கள். இந்தப்பதிவு முயற்சி வெறுமனே அவரது தாடி முடியைப் பாதுகாப்பதோடு முடியவில்லை. தந்தை பெரியாரின் குரலாக இன்று உலகம் முழுதும் ஒலிக்கும் காரைக்குடி உரை, இன்னும் வெளிவரவிருக்கும் உரைகள் உள்ளிட்ட கொள்கைமுழக்கப் பதிவுகளைச் செய்ததும் இதே சாமி. சமதர்மம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam