தமிழ்மண நட்சத்திர நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்த நாட்களில் பணி இருந்ததால், வேறு நாட்களை ஒதுக்குமாறு வேண்டிக் கொண்டேன். மீண்டும் வழங்கப்பட்ட நாட்கள் நவம்பர் 5-இல் தொடங்கும் வாரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
'ஆஹா! நொடிக்கொரு முறை இணையத்தை நோண்டும் வாய்ப்பு சென்னையில் எனக்கிருக்க, சரியாக ஊருக்குச் செல்ல முடிவு செய்திருந்த வாரத்தில் நட்சத்திர வாய்ப்புக் கிடைத்துள்ளதே! இம்முறையும் நாள் மாற்றிக் கேட்பது சரியில்லை. சரி, நட்சத்திர வாரத்தை என் ஊரில் காரைக்குடியிலிருந்தபடி கொண்டடுவதும் மகிழ்ச்சிதானே; இன்னும் ஊரைப் பற்றிய செய்திகளியும் கூட பகிரலாமே' என்று அதை ஒப்புக் கொண்டேன்.
'அட, தீபாவளி கொண்டாடாத பகுத்தறிவாளனான எனக்கு அதே வாரத்தில் நட்சத்திர அந்தஸ்து. சரி, இதையும் நம் மக்கள் அனுபவிக்கட்டுமே! பெரியாரின் குரல் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒலிக்கட்டுமே!' என்று அதையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.
தமிழ்மணம் குறிப்பிடும் நாட்களுக்குள் பெரும்பாலான பதிவுகளை வலையேற்றிவிட்டு, பின் அந்தந்த நாட்களில் 'publish' மட்டும் கொடுத்துவிட்டு வேலையைப் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால், கடந்த இரண்டு வாரமாக இடது கரத்தில் ஏற்பட்ட வலியும், அதனால் செய்யப்பட்ட சிறிய அறுவை சிகிச்சையும் தட்டச்சு செய்வதை அடியோடு நிறுத்தி, என் நினைப்பின் மேல் கல், மண் எல்லாவற்ரையும் டிப்பர் கொண்டு வாரி இரைத்துவிட்டன.
எனவேதான் அதிகம் வலையில் (வெளியில்) தலை, கை உள்ளிட்ட எதையும் காட்டாமல் 'ஒரு கை ஓசை'யாக சுட்டியால் செய்ய முடிந்ததை மட்டும் செய்துகொண்டிருந்தேன். இப்படி உளரீதியாக தயாரானாலும், மற்றபடி எந்த முன் தயாரிப்பும் இன்றி களத்தில் இறங்கியிருக்கிறேன்.
அதற்காக உப்புச் சப்பில்லாமல் போய்விடும் என்று நினைக்காதீர்கள். இவன் தீபாவளி கொண்டாட மாட்டான் எனவே சிறப்பு நிகழ்ச்சி கிடையாது என்றும் நினைக்காதீர்கள். இந்த வாரம் பெரியார் வாரம்தான்! ஆனாலும் நாங்கள் கொண்டாடிய உண்மையான தீபாவளி பற்றிய செய்திகள், தீபாவளி சிறப்பு மலர், சிறப்பு நிகழ்ச்சிகள், வாசகர் பங்கேற்பு, பேட்டிகள், முடிந்தால் போட்டிகள் எல்லாம் உண்டு. எதிர்பாருங்கள்.
அதனால் அன்பார்ந்த தமிழ்மண வாசகர்களே,
எந்தக் கருத்தையும் முழு மனதோடு கேட்டு, பின் தங்கள் அறிவுக்கும், சூழலுக்கும் ஏற்ப முடிவு செய்யும் தெளிவு படைத்தவர்கள் நம் வாசகர்கள் என்ற நம்பிக்கையில் இந்த வாரத்தைத் தொடங்குகிறேன்.
நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்கள்:
1. இவ்வாரம் பெரும்பாலான நாட்கள் விடுமுறைக் காலமாகி விடுவதால் அலுவலக இணையம் பயன்படுத்தவோ, இதற்காக நேரம் ஒதுக்கவோ பலருக்கு நேரம் கிடைக்காது. எனவே ஊருக்குப் போய் வந்த பிறகாவது நட்சத்திரப் பதிவுகள் பக்கம் கொஞ்சம் பார்வைட்டு, கருத்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.
2. ஒவ்வொரு பின்னூட்டத்தையும் படித்து ஒப்புக் கொள்ளும் வாய்ப்புக்கிடைப்ப்பது கடினம் என்பதால், அனானி வாய்ப்பைத் தவிர்க்க முடிவெடுத்திருக்கிறேன். பெயரோடு வைக்கும் விமர்சனம், மூன்றாந்தர, நாலாந்தரமாக இருந்தாலும் இடம்பெறும். அதற்கு துணிவிருப்போர் மட்டும் பின்னூட்டமிடவும். மற்றவர்களுக்கு அடுத்த வாரம் களத்திலிருப்பேன் அப்போது சந்திப்போம்.
3. "நான் சொல்லுகிறேன் என்று எதையும் ஏற்காமல், உங்கள் புத்திக்கும், அறிவுக்கும் ஏற்ப சிந்தித்து முடிவெடுத்து ஏற்க முடிந்ததை ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாததை தள்ளிவிடுங்கள்" என்று தான் பேசிய கூட்டங்களிலெல்லாம் கருத்துரிமையை வலியுறுத்தி, சிந்திக்கத் தூண்டிய பெரியாரின் அதே வேண்டுகோளைத் தான் நானும் உங்களிடம் வைக்கிறேன்.
ஏனென்றால்,
"சிந்திக்காதவன் முட்டாள்;
சிந்திக்க மறுப்பவன் கோழை;
சிந்திப்பவனே முழுப் பகுத்தறிவுவாதி"
என்ற சிந்தனையாளர் பெரியாரின் வார்த்தைகள் மனித குலம் அனைத்துக்கும் பொதுவானதல்லவா?

கருத்துகள்
நட்சத்திர வாழ்த்துக்கள் !
:)
வழக்கத்திற்கு மாறாக விரிவான சீரியஸ் பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.
தீபத் திருநாளை பகுத்தறிவு தீபம் ஏற்றி கொண்டாடுவோம்.
நல்ல படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
:)
அஞ்சா நெஞ்சம் படைத்த போர்குணம் படைத்த தந்தை பெரியார் தோன்றிய இந்திய மண்ணில் மதங்களின் பெயரில் இன்னும் இலவச கொலைகள் ஓய்ந்த பாடில்லாமலே இருக்கின்றன.
தந்தை வழி வந்த தமிழர்களான நாம்தான் கொலைபாதகர்களின் அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். இது நம் கடமை.
கயவர்களின் பகல் கனவுகளுக்கு சாவு மணியடிப்போம்!
ஆரம்பமாகட்டும் போர் சூழலுடனான இந்த பயங்கர நட்சத்திர வாரம்.
தந்தை பெரியார் புகழ் ஓங்கட்டும்!
வழிமொழிகிறேன்
இரண்ணியாக்கதனுடன் பாதாள லோகத்தில் போரிட்ட வீர காவிய நாள்
"தீபாவளி".
இதை இந்தியா மட்டு மன்றி வெளி நாட்டினர்க்கும்,ஆம் போப்பாண்டவருக்குமே காது குத்திவிட்டனர்!
சரியான சமயத்தில் உங்கள் பெரியார் வாதம் தொடங்கட்டும்,சிந்திக்க வைக்கட்டும்!வாழ்த்துக்கள்!
இந்த வாரம் மட்டுமல்ல, எல்லாம் வாரமும் , பெரியார் வாரம் தான்...
சிந்திப்போம், சீர்பெறுவோம்...(யோவ் தீபாவளி சீருன்னு நினைக்காதீங்க...)
//ஆனால், கடந்த இரண்டு வாரமாக இடது கரத்தில் ஏற்பட்ட வலியும், அதனால் செய்யப்பட்ட சிறிய அறுவை சிகிச்சையும் தட்டச்சு செய்வதை அடியோடு நிறுத்தி, என் நினைப்பின் மேல் கல், மண் எல்லாவற்ரையும் டிப்பர் கொண்டு வாரி இரைத்துவிட்டன.//
உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தீபா 'வலி' வாழ்த்து(க்)கள்.
நட்சத்திர வாழ்த்துக்கள்!
ரெகுலரா நம்ம செட்டே நட்சத்திரமாகுதே? ஏதாவது கோல்மால் நடக்குதா? :-)))))))
நட்சத்திர வாழ்த்துக்கள்.
சிந்திக்க மறுப்பவன் கோழை;
சிந்திப்பவனே முழுப் பகுத்தறிவுவாதி"
என்ற சிந்தனையாளர் பெரியாரின் வார்த்தைகள் மனித குலம் அனைத்துக்கும் பொதுவானதல்லவா?"
திக்கெட்டும் பரவட்டும் பெரியாரிய கருத்துக்கள்....
வாழ்த்துக்கள்..........
பிரின்சு என் ஆர் சமா அய்யா,
அட, நம்ம குழந்தை லக்கிக்கு கூட இது புரிந்து விட்டதே.பிரமிக்கவைக்கும் மூளை வளர்ச்சி இந்த குழந்தைக்கு.
பாலா
பட்டய கெளப்புடா
-மணிமகன்
சூப்பர் சித்தப்பு
-பாப்பாக்குட்டி