முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பேராசிரியரின் இனமானப் பேருரை!

நேற்றுபிறந்தநாள் கண்ட பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் வண்ணமாக அவரது நெல்லை தி.மு.க. இளைஞரணி மாநாட்டு உரையை இங்கு வெளியிடுகிறோம்.
இளைஞர்களே, இளைஞர்களே! பகுத்தறிவுதான் நம் மூலக் கொள்கை!
வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம்தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படியுங்கள்!

நெல்லை மாநாட்டில் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் வழிகாட்டும் உரை


திருநெல்வேலி, டிச. 18- நமது இளைஞர்கள் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்களின் நூல்களைப் படிக்கவேண்டும் என்றார் தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள்.திருநெல்வேலியில் நடைபெற்ற தி.மு.க., இளைஞரணி முதல் மாநில மாநாட்டில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டதாவது:

இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்று எழுச்சிமிக்க உரைகளை இளைஞர்கள் பலபேர் இங்கே நிகழ்த்துவதை நான் கேட்டு உள்ளபடியே மிகுந்த பூரிப்பு அடைகிறேன். காலையில் இருந்து இந்த நேரம் வரையில் தொடர்ந்து இளைஞர்கள் முழங்கினார்கள். அந்த முழக்கம் இளைஞர்களுக்கு இயல்பான ஒரு முழக்கமாக அது அமைந்திருக்கிறது. நெல்லை மாநகரம், முழுவதும் கொடிக்காடு, நெல்லை மாநகரம் பாளையங் கோட்டை, மேலப்பாளையம் அது சுற்றியுள்ள வட்டாரங்களில் பேரணியிலே வந்தவர்கள் பெரும் பெரும் அணியாக வீதி வீதியாக வலம் வரும் காட்சி அவைகளெல்லாம் கடந்து இங்கே மாநாட்டு அரங்கில் உங்களையெல்லாம் பார்க்கிறபோது கலைஞர் அவர்கள் சொல்லக்கூடிய முறையிலே சொல்லக்கூடிய தாக இருந்தால் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது. இளைஞர்கள் நாட்டிற்கு பயன்படவேண்டும் என்ற தெளிவை ஏற்படுத்தும் மாநாடுஎன்னுடைய முறையிலே சொல்லவேண்டுமென்றால் இனி எப்பொழுது இப்படி பார்ப்போம் என்பது. ஸ்டாலின் முறையிலே சொல்லவேண்டுமேயானால் நான்தான் பார்த்துக் கொண்டு வந்தேன். எப்படி இருந்தாலும் இந்தக் கூட்டம் மகத் தான கூட்டம், எழுச்சி மிக்க கூட்டம், உணர்ச்சி உள்ள தோழர் கள் உடைய படையைப்போல அமைந்திருக்கின்ற கூட்டம். அந்த வகையிலே இளைஞரணியினுடைய மாநில மாநாடு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு மாற்றத்திற்கு அடிப்படையாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய மாநாடுகள், கலைஞர் தலைமையில் நடைபெற்ற மாநாடுகள் அவைகளிலே பல மாநாடுகள் திருப்புமுனைகள். இந்த மாநாடு ஒரு வகையிலே திருப்புமுனை. தமிழ்நாட்டிலே உள்ள இளம் வயதினர் பலபேருக்கு கண் திறக்கிற மாநாடு இந்த மாநாடு. கருத்தே இல்லாதவர் களிடத்திலே கருத்தை உண்டாக்குவதற்கு ஏதுவாக இருக்கும் மாநாடு இந்த மாநாடு. கொள்கை அடிப்படையில் இல்லாமல் பல கட்சியிலே உள்ளவர்களுக்கு கொள்கை அடிப்படையில் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிற மாநாடு. இளம் வயது வீணாகக் கூடாது, இந்த இளம் வயது நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்ற தெளிவை ஏற்படுத்துவதற்கு ஏதுவான மாநாடு இந்த மாநாடு. எனவே அப்படிப்பட்ட ஒரு மகத்தான மாநாட்டை இங்கே நம்முடைய இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்று நடத்துகிற தம்பி ஸ்டாலின் இந்த மாநாட்டை இவ்வளவு சிறப்பாக இங்கே நடத்தி அதிலே அவர் பேசுகிற பொழுது குறிப்பிட்டார். இளைஞர்களின் மாநில மாநாட்டை நடத்துவதற்கு என்னிடத்திலே ஒப்படைத்தார்கள். அதை நான் நடத்தியிருக்கிறேன் என்றார். மாநாட்டை மட்டுமா நடத்துமாறு ஒப்படைக்கப் போகிறோம்? (கைதட்டல்) மாநாட்டை நடத்துமாறு நாங்கள் ஆலோசனைதான் சொன்னோம். நீங்கள் இப்படியொரு மாநாட்டை நடத்த வேண்டும் என்று இளைஞர் களுக்கெல்லாம் ஏற்கெனவே நம்பிக்கை ஊட்டியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையினுடைய பிரதிபலிப்புதான் இந்த மாநாட் டிலே கட்டுக்கோப்பாக தமிழ்நாட்டிலே எந்த மாவட்டமும் விட்டுப்போகாமல் அத்தனை மாவட்டத்தினுடைய இளைஞர் களும் இங்கே இருக்கிறார்கள். மாவட்ட அணி மட்டும் இங்கு இல்லை, மாவட்டத்திற்கு அப்பால் வெளிமாநிலங்களில் இருந்து மும்பையில் இருந்து, அந்தமானிலே இருந்து, ஆந்திராவிலே இருந்து, கர்நாடகத்திலே இருந்து புதுவையில் இருந்து இளை ஞர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கியபோது இளைஞர்களி டத்திலே எப்படி ஓர் எழுச்சி புத்தெழுச்சி பிறந்ததோ அதைப்போல இன்றைக்கு மறுபடியும் இளைஞர்களிடத்திலே ஓர் எழுச்சி பிறக்கிறது என்று நான் நம்புகிறேன். ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று அந்த மாவட்டத் திலும் ஒரு சிறிய மாநாடு போல நடத்தி அவர்களிடத்தில் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி அவருடைய கடமையை உணர்த்தி அவர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கி றார்கள்.வரலாற்று உண்மைகளை கலைஞர்மடல்களாக எழுதியிருக்கிறார்அதேநேரத்தில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்னால் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஒரு மாநாட்டையொட்டி என்னென்ன எழுத முடியுமோ அவ்வளவு கருத்துக்களை - அவ்வளவு செய்திகளை- அவ்வளவு விளக்கங் களை இளைஞர்களுக்கு ஆர்வம் ஊட்டுகிற வரலாற்று உண்மை களை கலைஞர் அவர்கள் மடல்களாக எழுதியிருக்கிறார்கள். தமிழ்நாடு ஏதோ ஒருவகையில் இடையிடையிலே சோர்வடை கிறது, வீழ்ச்சி அடைகிறது, மறுபடியும் எழுச்சி ஊட்ட வேண்டியிருக்கிறது விழிப்புற்ற மக்கள் மறுபடியும்கூட ஏமாந்துவிடுகிறார்கள். நம்மை புரிந்து கொண்டவர்கள்கூட மறு படியும் நாட்டு நடப்பை புரிந்து கொள்ளாதவர்களாக மாறுகிறார்கள், தடுமாறுகிறார்கள், அவர்களையெல்லாம் மாற்றி நம்முடைய நாட்டு மக்கள் என்றைக்கும் தங்களை காப்பாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல்மிக்க ஒரு சமுதாயமாக மாற்றிக் கொள்ள வேண்டுமேயானால் இந்த இளைஞரணி இன்னும் பெரியதாக வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இந்த இளைஞரணி இதைவிட பெரியதாக வளர வேண்டும் என்று நான் விரும்புவதற்கு காரணம் இளம் வயதினர் வேறு வேறு அரசியல் கட்சியிலேயே தவறான கொள்கையுள்ள கட்சிகளிலே கொள்கை இல்லாத கட்சிகளிலே, லட்சியம் இல்லாத கட்சிகளில் முதலமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிற கொள்கையுடைய கட்சிகளில் இன்னொரு வகையிலே சொல்லப் போனால் கேளிக்கைகளில், வேடிக்கைகளில், சனி ஞாயிறு என்று இரு நாள்களில் நடைபெறுகின்றன ஆட்டங்களில், பாட்டங் களில் அதில் ஈடுபடக்கூடியவர்களாக தங்களை மாற்றிக் கொண்டவர்களாக வளர்க்கிறார்கள். ஒரு பக்கத்திலே வறுமை இருப்பது உண்மைதான், இன்னொரு பக்கத்திலே பொருளா தாரத்திலே வளர்ச்சியும் இருக்கிறது. அந்த வளர்ச்சியினுடைய விளைவால் இளைஞர் பல பேர் தடுமாறக் கூடிய நிலை ஏற்படுகிறது. அவர்களுக்கெல்லாம்கூட ஒரு லட்சிய உணர்வு அவர்களுடைய மனதிலே உருவாவதற்கு இந்த மாநாட்டிலே பேசக்கூடிய கருத்துக்கள் நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மாநாட்டைக் கூட்டுவதற்கு பெரிய முயற்சி எடுத்துக் கொண்டு பல பேர் பல நாட்களாக தொடர்ந்து பாடுபட்டு இந்த மாநாட்டை அமைத்து இருக்கிறார்கள். நேற்று மாலை இந்த மாநாட்டு பந்தலை பார்ப்பதற்காக வந்தேன். பார்த்தேன், வியந்தேன். இப்படி ஒரு மாநாட்டு பந்தல், தமிழ்நாட்டு வரலாற்றிலும் இல்லை. அகில இந்திய வரலாற்றிலும் இல்லை. இந்தியாவிலே எவ்வளவு பெரிய கட்சியாக இருந்தாலும் எந்த கட்சிக்கும் இப்படி ஒரு மாநாடு நடந்ததில்லை. இவ்வளவு பேர் ஒன்றாக சேர்ந்து அமர்ந் திருக்கக்கூடிய ஒரு மாநாடு இந்தியாவில் நடந்ததில்லை. காந்தியடிகள் பார்த்ததில்லை, நேரு பார்த்த தில்லை. அவர்களை நான் சொன்னால் வேறு கட்சித்தலைவர் களை சொல்வதாக எண்ணுவீர்கள். பெரியாருக்கே புரியாது, அறிஞர் அண்ணாவிற்கே தெரியாது. எனவே அவ்வளவு பெரிய ஒரு மாநாட்டை கூட்டுவதற்கு எவ்வளவோ செலவழித்துதான் செய்ய வேண்டும். அப்படி செய்கிறபோது இவ்வளவு செல வழித்து ஒரு மாநாடா? ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒரு மாநாட்டை நடத்துவதா? இவ்வளவு வெளிச்சம் போடுவதா? இவ்வளவு பெரிய பந்தல் போடுவதா? இவ்வளவு பெரிய கொடி மரத்தில் கொடி உயர்த்துவதா? என்று இதைப்பார்த்து கொக் கரிப்பது மட்டும் மல்ல, கடந்த காலத்தில் நடைபெற்ற ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஒருவர் தன்னுடைய வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்வதாகச் சொல்லி ஆடம் பரமாக செய்தார் என்று அதே குற்றம் சொன்ன மக்கள் இன்றைக்கு இதைமட்டும் பொறுத்துக் கொள்வார்களா என்று வயிற்றெரிச்சலோடு ஆத்திரத்தோடு, வெறுப்போடு ஒரு பத்திரிகையும் எழுதுகிறது. அந்த பத்திரிகையில் அப்படி எழுதியபோது நான் நினைத்தேன். மாமாங்கம் நடைபெறு கிறது, கும்பகோணம் மாமாங்கம், அதைப்போல மதுரையிலே சித்திரை திருவிழா. அதைப்பற்றி அந்த பத்திரிகையில் எழுதுமா? தமிழன் தலைநிமிர்ந்தால்அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதுநம்முடைய இயக்கத்தினுடைய மாநாடு, இது ஒரு கொள்கையுடைய மாநாடு. அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. தமிழன் தலை நிமிர்ந்தால் அது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு இனம் விடுதலை உணர்ச்சியோடு மெல்ல வளர்ந்தால் அதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. நம்முடைய சுயமரியாதைக்காக நாம் நடத்துகிற செயல்களை அவர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள் என்று நான் அந்த பத்திரிகையை பார்த்தபொழுது எண்ணினேன். எவ்வளவு செலவானாலும், இவ்வளவு பேருக்கு அறிவு ஊட்டுகிற வாய்ப்பு, இவ்வளவு செலவழித்தாலும் நாம் பெற்றோமே. வெறும் அறிவூட்டுகிற வாய்ப்பல்ல, ஓர் இளைஞர்களுக்கு எழுச்சி உண் டாக்குகின்ற வாய்ப்பு. தமிழ்நாட்டிலே ஒவ்வொரு மாவட்டத்தி லிருந்து வரக்கூடிய இளைஞர்கள் இன்னொரு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களெல்லாம் சந்தித்து பழகுகிறார்கள். அந்த வாய்ப்பு நானோ, கலைஞரோ இளைஞர்களாக இருந்தபொழுது எங்களுக்கு ஏற்பட்ட எழுச்சி என்ன தெரியுமா? நம்முடைய கொள்கையைச் சொன்னால் மேடை ஏறி பேசினால், நூறு பேர் கேட்கிறார்கள். ஐம்பது பேர் நம்மோடு வருகிறார்கள். நம்மை வரவேற்க இரண்டு தோழர்கள் வருகிறார்கள். அதுவே எங்களுக்கு எழுச்சி. ஆக இப்படிப்பட்ட எழுச்சி ஒரு இனத்திற்காக மொழிக்காக, ஒரு கலாச்சாரத்திற்காக, ஒரு பண்பாட்டிற் காக, அகில இந்தியாவை வழி நடத்துகிற ஆற்றல்மிக்க தலைவருடைய படை வளர்ப்பதற்காக என்ற உணர்வோடு நாம் செய்கிறோம். ஆனால் அவர்கள் இதற்கெல்லாம் இவ்வளவு செலவழிக்கி றார்களே எவ்வளவோ பணம் செலவிட்டார்களே என்று கேட்கிறார், ஒரு முதலமைச் சராக இருந்தவர், முதலமைச்சராக இருக்கிறபோது தன்னுடைய வளர்ப்பு மகன் பெயரால் 100கோடி ரூபாய் செலவில் வீண் செய்கின்ற அந்த காரியத்தையும், வரவு செலவை காட்டக்கூடிய முறையில் பொறுப்பாளர்கள் இருந்து நடத்தக்கூடிய மாநாட்டையும் ஒப்பிட்டு பேசுகிற அந்த மனப்பான்மை-நம்முடைய நாட்டிலே நீண்ட காலமாக ஊறிப்போன வைதீகத்தின் விளைவு. அதிலே இருந்து நாம் மீளவேண்டும். அந்த எண்ணத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.நேற்றைய தினம். காவியக் கலைஞர் என்ற அருமையான ஒலி-ஒளிக் காட்சி நடைபெற்றது. நம்முடைய பாதிரியார் நண்பர் வின்சென்ட் சின்னதுரை அவர்கள் மிகச் சிறப்பாக அமைந் திருந்தார்கள். அந்த ஒலி-ஒளி காட்சியிலே மிக முக்கியம் நம் முடைய கலைஞர் காவியத் தலைவன், காவிய நாயகன் என்பதை போல காவியக் கலைஞர் என்ற பெயரிலே கலைஞருடைய வரலாற்று குறிப்பு-அவர் பிறந்தது முதல் அவரது சாதனைகளை எந்த அளவுக்கு முடியுமே அந்த அளவிற்கு, அந்த ஒலி-ஒளிக் காட்சியிலே சொன்னார்கள். அவர் காவியத் தலைவர். தமிழ் நாட்டு வரலாற்று காவியத் தலைவர். அவர் காவியத் தலைவராக இருக்கிறார் என்றால் அது இயல்பாகவே அமைந்துவிட்டது. அறிஞர் அண்ணா ஓர் காவியம், அந்தக் காவியத்தினுடைய பிரதிபலிப்பு இவர் காவியத் தலைவன், அறிஞர் அண்ணா ஓர் காவியம் என்று சொல்கிறபோது அது கலைஞருடைய மொழி - கலைஞரே காவியத் தலைவராக இருக்கிறார் என்பது ஒலி-ஒளி இந்த கண்காட்சியிலே நாமெல்லாம் பார்த்தது.கடமை கண்ணியம் கட்டுப்பாடுகுறித்து தந்தை பெரியார் கருத்துஅதே ஓர் இடத்திலே ஒரு கருத்து. நம்முடைய திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி அவர்கள் பேசும்பொழுது குறிப்பிட்டார்கள். அறிஞர் அண்ணா சொன்ன அடிப்படை கோட்பாடு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றைப் பற்றியும் தந்தை பெரியார் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். கடமை என்பது அதை சொல்லுகிறவர்கள் எதை கடமை என்று உணர்த்துகிறார்களோ அதைப் பொறுத்தது. கண்ணியம் என்பது ஒருவருக்கொருவர் வேறுபட்டு இதுதான் கண்ணியம் என்று வேறுபட சொல்ல முடியும். கட்டுப்பாடு என்று இருக்கிறதே அதற்கு இரண்டு விதமான கருத்து சொல்ல முடியாது. அந்தக் கட்டுப்பாடு ஒன்றே ஒரு பொருளைத்தான் தரும். அந்தக் கட்டுப்பாடு தான் நம்முடைய இனத்திற்குத் தேவை, அந்தக் கட்டுப்பாடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேவை என்று தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் முதலமைச்சர் பொறுப் பேற்கிற காலத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்பா டோடு கலைஞர் அவர்கள் தலைமையிலே செயலாற்ற வேண்டும் என்றும், அந்தக் கட்டுப்பாடு தான் நம்முடைய இனத்தை காப்பாற்றும் என்றும் பெரியார் அவர்கள் சொன்ன கருத்தை அவர்கள் மிக நல்ல முறையிலே ஒலி - ஒளிக் கண்காட்சியிலே விளக்கினார்கள்.இதை நான் இங்கே சொல்லுவதற்குக் காரணம் இந்த மாநாட்டினுடைய வெற்றிக்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகக் கட்டுப்பாடு இன்று இவ்வளவு பேர் அமர்ந்திருக்கிறீர்கள் என்னுடைய பேச்சிலே மயங்கி இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எத்தனையோ பேர் பேசும்பொழுது கேட்டுக் கொண்டி ருந்தீர்கள். என்ன காரணம்? ஒரு கட்டுப்பாடு. நாம் ஓர் இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் உள்ள நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. நான் இங்கே எப்படி நடந்து கொள்கிறேனோ அப்படி நடப்பதன் மூலமாகத்தான் நாட்டுக்கு நல்ல வழிகாட்ட முடியும். சமுதாயத்திற்கு நன்மை செய்ய முடியும் என்ற உணர்வு உங்களிடத்திலே ஏற்பட்டதின் விளைவுதான் இந்த அருமையான கட்டுப்பாடு. இந்தக் கட்டுப்பாட்டை நிலை நாட்டியிருக்கிற நம்முடைய இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள். ஏனென் றால், இந்தக் கட்டுப்பாடுதான் எதிர்காலத்திலே நமக்குத் தேவை.இன்று காலையில்கூட இந்த மாநாட்டில் நம்முடைய ஒப்பற்றத் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைய நேரிட்ட அந்தத் துயரமான நேரத்தில் கலைஞர் அவர்கள் - வேறு யாராலும் அழ முடியுமே தவிர அழுகிறபோதே சிந்திக்க முடியாது. கலைஞர்தான் அழுகிறபோதே சிந்திப்பார். சிந்திக்கிற போதே அழுவார், அது ஒரு பேராற்றல். சிந்தனை ஆற்றல். அவர் எழுதிய அந்த இரங்கற்பாவை அவர்கள் இங்கே பேசுகிறபோது எல்லோரும் நாம் கேட்டுக் கொண்டிருந்தோம்.அந்த இரங்கற்பா வரலாறு படைத்த இரங்கற்பா. அதை படிக்கிறபோது - சில வார்த்தைகளை அவர் சொல்லுகிறபோது அங்கே அவருடைய உச்சரிப்பு ஒரு வார்த்தையை சொல்லுகிற போதே அவருடைய கண்கள் கலங்குகிற காட்சியை தொலைக் காட்சியிலே பார்த்தோம். அவர் அமர்ந்திருக்கிற இடத்தில் பக்கத்தில் இருந்து பார்த்தபோதும் அவருடைய கண்கள் அவரே மெதுவாக துடைத்துக் கொண்டதையும் நான் பார்த்தேன். அந்த இரங்கற்பா இருக்கிறதே கலைஞருடைய இலக்கியத்திலே மிகச் சிறந்த இலக்கியம். ஒரு மனிதனுடைய உணர்வை வெளிப்படுத் துவதிலே அவ்வளவு அழகாக தன்னுடைய உணர்வை வெளிப் படுத்தி இன்னொரு மனிதன், வேறு எந்த ஒரு தலைவரைப் பற்றியும் உலகத்தில் எந்த இடத்திலேயும் பாடவில்லை.தமிழில் இருந்ததை ஆங்கிலத்திலே ஒரு நண்பர் மொழி பெயர்த்து இதை வெளியிட்டிருக்கிறார். அந்த அளவு ஆழமான உணர்வு. அண்ணாவைப்பற்றி எவரும் புரிந்துகொள்ளச் செய்யக்கூடிய ஆற்றல் மிக்க ஓர் இரங்கற்பா கலைஞர் அவர்கள் இயற்றினார்கள். அது பதிக்கப்பட்டு அதுவும் விற்பனைக்குக்கூட இருக்கிறது. நண்பர்கள், கழகத் தோழர்கள் அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நம்முடைய தோழர்கள், நாம் அரசியலிலே அதிக அளவிற்கு ஈடுபடக் கூடிய சூழ்நிலை தாக்கத்தில் இருப்பதால் நம்முடைய அடிப்படை உணர்வுகளை பல நேரத்திலே நாம் மறந்துவிடுகிறோம் என்று நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.திராவிடர் கழகம் தனி அமைப்புதிராவிடர் கழகம் தனி அமைப்பாக இருக்கிறது, நமக்கு நட்பாக இருக்கிறார்கள், அது வேறு. நம்முடைய அமைப்பிலே யும் நம்முடைய அரசியல் என்பது சமுதாயத்திற்காகத்தான். இந்தச் சமுதாயத்தை வாழ வைப்பது என்பது சுயமரியாதை கொள்கை, பகுத்தறிவுக் கொள்கைதான். இந்த அடிப்படை உணர்வு அண்ணா அவர்களிடத்திலே இருந்த காரணத்தினால் தான் தந்தை பெரியார் அவர்களை விட்டு அவர் வெளியே வர நேரிட்டபோதுகூட, கட்சிகள் பிரிகிறபோதுகூட அறிஞர் அண்ணா அவர்கள் நடந்துகொண்டதைப் போல அவ்வளவு கண்ணியமாக வேறு எந்தத் தலைவரும் இந்த நாட்டு அரசிய லிலே நடந்துகொண்டதாக நான் அறியவில்லை.பகுத்தறிவுதான் நம் மூலக் கொள்கைஅறிஞர் அண்ணா அவர்கள் பெரியாரை விட்டுதான் விலகுகிறோம். ஆனால், பெரியாரை மதிக்கிற உணர்வை விட்டு நாம் விலகவில்லை. அவர் சொன்ன கொள்கையை விட்டு நாம் மாறவில்லை. அதே கொள்கை, அதே கோட்பாடு அதற்காகத் தான் தி.மு. கழகம் என்று சொன்னது மட்டுமல்ல, கடைசிவரை பெரியாரை கண்ணியமாகவே அறிஞர் அண்ணா அவர்கள் பெருமைப்படுத்தியே பேசி வந்த அந்த அடிப்படை இருக்கிறதே அது நம்முடைய இயக்கத்திலே உள்ள தோழர்கள் இன்றைக் கும்கூட நம்முடைய இயக்கத்திற்கு அது தாய்க்கழகம் என்ற அமைப்பு மட்டுமல்ல, அரசியலிலே நாம் ஈடுபடுகிற ஒரு கட்சியாக இருந்தாலும்கூட அந்த சுயமரியாதை கொள்கையும், பகுத்தறிவும்தான் நம்முடைய மூலக்கொள்கை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.இந்த உணர்வு பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு இருந்த காரணத்தினாலேதான் தி.மு. கழகத்திற்கும், திராவிடர் கழகத் திற்கும் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக வரக்கூடிய அளவிற்கு ஏற்பட்டாலும்கூட உள்ளார்ந்த மாறுபாடு ஒருவரை யொருவர் ஒழித்துக் கட்டுகிற அந்த நோக்கம் என்றைக்கும் ஏற்பட்டதில்லை. பகை உணர்வுகூட எதிர்ப்பாக இருந்ததைத் தவிர ஒருவர் அழியவேண்டும் என்று மற்றொருவர் திட்டமிடு கின்ற அளவிற்கு என்றைக்கும் இருந்ததில்லை. வேறு கட்சிகளில் இப்படி பிரிந்து செல்கிறபோது அவர்களால் அம்மாதிரி ஒத்துப் போக முடியாது.அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன ஒரு வார்த்தைதான் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது. கட்சிகள் வேறு, அமைப்பு வேறு, ஆனால், நோக்கம் ஒன்று. நாங்கள் அரசியலோடு கலந்து இந்தப் பணியைச் செய்வோம் என்று அறிஞர் அண்ணா சொன்னார். நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பெரியாருக்கு நாம் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள், இந்த அமைச்சரவையே பெரியார் அவர்களுக்குக் காணிக்கை என்று அமைச்சரவையை அமைத் ததற்குப் பிறகு சொன்னார் என்பதை நான் நினைவூட்டுகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் தி.மு. கழகத்தினுடைய கொள்கை களுக்கான வலிமை எதிலே இருக்கிறது என்று அவர் கருதினார் என்றால், ஜனநாயக முறையை, ஜனநாயக எண்ணத்தை, ஜனநாயக மனப்பான்மையை நாம் பின்பற்றுவதிலேதான் இருக்கிறது என்று மனதாரக் கருதினார்.அமெரிக்க நாட்டில் வெள்ளையர்களுக்கு நீக்ரோக்கள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். நீக்ரோ வெள்ளைக்காரனைவிட தாழ்ந்தவன் இல்லை என்ற உணர்வை அவன் பெற முடியும். ஆனால், நம்முடைய நாட்டில் அப்படி இல்லை. வருணாசிரம தர்மம், சாதி அடிப்படையில் மனுநீதி, இதனுடைய விளைவால் ஏற்பட்ட தாக்கத்தால் நான் அறிவிலே குறைந்தவன், நான் பிறப்பிலே இழிவுற்றவன், என்னுடைய முன்னோர்கள் இழிந்த பிறப்பாகக் கருதி அந்த நிலையில் இருந்து வந்தவன். உயர்ந்த பிறப்பில் உள்ளவர்களுக்கு நான் என்றும் தொண்டு செய்ய கடமைப்பட்டவன் என்ற உணர்வு நம்முடைய ரத்தத்திலே ஊறுகிற அளவிற்கு ஆரிய கலாச்சாரம் வைதீக வர்ணாசிரம தர்மம் நம்மிடத்திலே புகுத்தப்பட்டது.நான் இவையெல்லாம் சொல்லுகிறபோது, நான் வெறும் சொற்பொழிவு போல என்னுடைய பேச்சு அமைந்துவிடுகிற காரணத்தால் என்னுடைய உள்ளத்திலே உள்ள உணர்வை என்னால் பிரதிபலிக்க முடியவில்லை. அதற்காக நான் தந்தை பெரியாருடைய ஓர் எழுத்து, ஒரு பகுதி சில நாள்களுக்கு என்னுடைய கைக்குக் கிடைத்த காரணத்தால், வாய்ப்பு உள்ள இடத்தில் இதையும் சொல்லிப் பார்க்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டு வந்தேன்.1929 - அப்போது எனக்கு வயது ஆறரை. கலைஞருக்கு வயது 5. அப்போது தந்தை பெரியார் குடியரசு பத்திரிகையில் சுய மரியாதை இயக்கம் என்ற தலைப்பு போட்டு அந்த தலைப்பிலே அவர் பேசுகிறார். அவருடைய நடை நான் பேசுகிற அந்த நடை யோடு ஒத்து வராது. ஆனால், நம்முடைய வாழ்க்கையின் அடிப் படையை உணர்த்துகிற நடை. நம்மை ஏமாற்றி, இழிவுபடுத்தி, தாழ்த்தி, கேவலப்படுத்தி, அவர்கள் உயர் வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள் என்ற அடிப்படையிலேதான் என்னுடைய சுயமரியாதை இயக்கத்தையே தோற்றுவித்தேன். இந்த உணர்ச்சி மற்றவர்களுக்கும் சமீப காலமாய் பரவி வருகிறது என்று சொல் லப்பட்டாலும் சுயமரியாதைக் கொள்கை, அது சாதாரணமாய் நமது நாட்டில் சிறப்பாக தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இருந்து ஏற்பட்டு வந்திருப்பதாக ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட சரித்திரங்களில் இருந்து காணக் கிடைக்கிறது.ஆனால், அவைகள் சுயமரியாதை என்கிற உணர்ச்சியின் பெயரால் ஏற்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாததாக இருந்தது. ஜீவ காருண்யம், ஆன்ம நேயம், இரக்கம் என்ற பெயரால் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதற்கு ஆதாரங்கள் அவ்வை, கபிலர், திருவள்ளுவர், புத்தர், இராமானுஜர் முதலானோர் வாக்குகளும், செய்கைகளும் ஒருவாறு போதுமானது என்றே சொல்லலாம் என்றெல்லாம் பெரியார் குறிப்பிடுகிறார்.சித்தர்கள் எல்லாம் எதிர்த்து பாடியிருக்கிறார்கள். மற்றவர் களுடைய போராட்டங்களையும், ஒழிக்க ஒரு சுயநல வகுப்பால் தங்களை உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு சூழ்ச்சிகள் செய்து அவ்வுணர்ச்சிகளையே அடியோடு அடக்கி வந்ததற்காக ஆதாரங்கள் வேண்டுமானால், நமது மத சம்பந்தமாக வணங்கத் தகுந்த, பக்தி செலுத்தத் தகுந்த என்று சொல்லப்படுகின்ற சாஸ்தி ரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்பதின் மூலமாகவே உணர்ந்து கொள்ளலாம். ஞானிகளுடைய கருத்துகளும் உணர்ச்சிகளும் மதிக்கக் கூடியதாக என்று நமது மக்களால் கருதப்பட்ட போதிலும், மேற்கண்ட சுயநல சூழ்ச்சியாளர்களால் அவைகள் அவ்வளவும் எழுத்தளவிலும், ஏட்டளவிலும் நிறுத்தப்பட்டு எழுதி வைத்தார்களோ தவிர, பின்பற்றவில்லை.பெரியார் கருத்துகளைப் படிக்கவேண்டும்வைதீகத்தினுடைய சாஸ்திரங்கள் நம்மை இழிவு படுத்தி வைத்திருக்கின்றன என்பதை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சுயமரியாதைக்காக நாம் போராடக்கூடிய பிரச்சினைகளுக்காக மக்கள் போராட தயாராக இல்லை. மக்கள் போராடக்கூடிய தகுதி பெறவே இல்லை. இதை பெரியார் அவர்கள் விளக்கமாக எழுதுகிறார், நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் பெரியார்ரு டைய நூல்களை படித்துப் பாருங்கள். இளைஞர்கள் கட்டாயம் அதை படிக்க வேண்டும். அண்ணா அவர்கள் எழுதிய நூல்களை கலைஞர் அவர்கள் எழுதிய நூல்களை படிப்பதைப்போல பெரியாருடைய நூல்களையும் படிக்க வேண்டும். பெரியா ருடைய கருத்துக்களை நீங்கள் படிக்கிறபோது அது நமக்கு தெளிவை ஏற்படுத்தும். அது இளைஞர்களுக்கு தேவை, கட்டாயம் தேவை என்று நான் உணர்ந்தேன். அறிஞர் அண்ணா அவர்கள், சிவாஜி கண்ட இந்து இராஜ்ஜியம் என்ற நாடகத்திலே அவர் எழுதிய பல செய்திகளை நீங்கள் பார்த்தால் சில உண்மைகள் தெரியும். பெரியாரும் பாடுபட்டு மறைந்து விட்டார், அறிஞர் அண்ணாவும் வழிகாட்டிவிட்டு மறைந்து விட்டார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் போன்றவர்கள், பாடித் தந்திருக்கிறார்கள் அதற்குத் தகுந்த இளைஞரணி பட்டாளம், இந்த நாட்டிற்கு பயன்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு முதலமைச்சராக இருந்து கலைஞரைப் போன்ற ஆற்றல் பெற்றவர்களுக்கு அது எளிய காரியம். ஆனால் அவர் முதலமைச்சராக இருப்பதைவிட தமிழனாக இருப்பது தான் தமிழ்நாட்டிற்கு பெருமை. கலைஞர் முதலமைச்சராக இருப்பதால் நமக்கு பாதுகாப்பு. அவர் தமிழன் என்ற எண்ணத் தோடு இருக்கிறாரே, சுயமரியாதை உணர்வோடு இருக்கிறாரே, பகுத்தறிவுக்கு ஆதரவாக இருக்கிறாரே, வைதீகத்தை ஏற்காத வராக இருக்கிறாரே அதுதான் இந்த இனத்திற்குப் பாதுகாப்பு. இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று, பட்டம் பெற்ற காரணத் தால் சமுதாயத்திற்கு ஒரு மதிப்பைப் பெற்றுத் தருகிறார்களே அதைப்போன்ற மதிப்புதான், சுயமரியாதைக் காரன் என்று சொல்லிக் கொள்வதில் பெரிய மதிப்பு இருப்பதாக நீங்கள் உணரவேண்டும். நான் சுயமரியாதைக்காரன் என்றால் நான் யாருக்கும் எதிரியல்ல. ஆனால் நான் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. நான் யாரையும் தாழ்த்தமாட்டேன், நான் ஒரு மதத்திற்கு அடிமை அல்ல, என் தாய்மொழி தமிழ். சமஸ்கிருதம், என் தாய்மொழி தமிழை விட உயர்ந்தது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஆண்ட வனுக்கு என் தாய்மொழி தமிழே போதும். எனவே சமஸ்கிருத ஆதிக்கம், தமிழுக்கு பெருமை சேர்ப்பதற்கு மறுக்கிற சமஸ்கிருத ஆதிக்கம் தமிழை நீச மொழி; தமிழ் மொழி இறைவனுடைய திருக்கோயில்களில் ஆண்டவனுக்கு அர்ச்சனை நடைபெறுகிற இடத்தில் தமிழிலே உள்ள தேவாரம் படித்து அந்த ஓசை அர்ச்சகர் காதுகளில் விழக்கூடாது என்ற நிலை இருக்கிறது. தமிழுக்கு தரவேண்டிய பெருமை தராத காரணத் தால் தமிழன் எவ்வளவுதாழ்ந்து போகிறான்? எந்த அளவிற்கு அடிமையாகின்றான்? எவ்வளவு வீழ்ச்சி பெறுகிறான்? அந்த நிலையை மாற்றுவதற்குதான் பெரியார், அண்ணா பாடுபட் டார்கள்.ஜாதியை ஒழிக்க உழைத்திடுக!ஆகவே இந்த இளைஞரணியை பார்த்து வேண்டிக் கேட்டுக் கொள்வேன். உங்களுடைய பேராற்றல் தி.மு.கழகத்தை ஆதரிப்பதாக கலைஞர் தலைமையில் செயல்படுகிற அதே நேரத்தில் ஜாதியை ஒழிப்பதற்கு, ஜாதியின் பிடியில் இருந்து விடுபடுவதற்கு ஜாதி எண்ணம் நம்மை தாழ்த்தாமல் அதில் இருந்து விலகுவதற்கு நம்மால் முடியுமானால் நாம் மகத்தான வெற்றியை பெற்றவர்களாக இருக்க வேண்டுமென நான் இளைஞரணி தம்பிமார்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். முதல்வர் கலைஞரைப் போன்ற ஓர் அரசியல்வாதி வேறெங்கும் இல்லையென்றாலும்கூட அவரை மதிக்க ஒரு சிலர் இங்கே தயாராக இல்லை. டெல்லியில் உள்ளவர் களுக்குகூட அவரை மதிக்கத் தெரிந்திருக்கிறது. ஆனால் இங்கு உள்ளவர் களுக்கு அவரை மதிக்கத் தெரியவில்லை. நான் உண்மையை உணர்த்துவதற்காகச் சொல்லுகிறேன். அவர் அளவிற்கு படித்த இன்னொரு அரசியல் அறிஞர் தமிழ்நாட்டிலும் இல்லை, அகில இந்தியாவிலும் இல்லை. அவருடைய தமிழ் எழுத்துக்கு ஈடாக எழுதக்கூடிய மாபெரும் புலவர்கள்கூட இல்லை. அவர் எழுதிய குறளோவியத்திற்கு பொருள் சொல்வார்களே தவிர குறளோ வியம் போல ஒரு காப்பியம் அவர்களால் எழுத முடியாது. அவர்களெல்லாம் கலைஞரை பாராட்டினார்கள். ஆனால் அவருடைய அறிவு, திறமை, தொண்டு, தியாகம் அத்தனைக்கும் தரப்படவேண்டிய மதிப்பு கலைஞர் அவர்களுக்கு கிடைத் திருக்கிறதா? அவருடைய குடும்பத்திலே உள்ளவர்கள் தொண்டர்களாக பணியாற்றுகின்ற நிலைமை. தொண்டர்களாக பணியாற்றுகின்றார்கள். அவருடைய குடும்பத்தார்களால் சேர்ந்து பத்திரிகை நடத்தி சில கருத்துக்களைச் சொல்லி பெரியார் வழியில், அண்ணா வழியில், இன்றைக்கு அவர் இருக்கிறார் என்பதைத்தவிர, அவர் ஒரு வேளை கலைஞராக இல்லாமல் அவருடைய பெயர் மட்டும் வேறொன்றாக இருந்திருக்குமேயானால் அவர் எங்கே போயிருப்பார் தெரியுமா, அவர் டெல்லியிலே பிரதமராக இருப்பார், இல்லையானால் டெல்லியிலே அரசுக்கு ஆலோசனை சொல்லுபவராக இருப்பார். நான் பிரதமர் பதவியை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் பதவிகூட கலைஞருக்கு எளிது, தமிழ்நாட்டில் அவர் முதல மைச்சராக இருப்பதைக்கூட சிலரால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. அதைத்தான் தி.மு.கழக இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.எல்லாவற்றையும்விட பெரியாரும், அண்ணாவும் பாடுபட்டு உருவாக்கிய அந்த உணர்வு சிதைந்து போகாமல் இருக்க வேண்டுமானால் - காப்பாற்றப்பட வேண்டு மென்றால் வேறு பல கட்சிகளிலே இளைஞர்களெல்லாம் தி.மு.கழகத் திலே வந்து சேர வேண்டும். எங்களுடைய சுயநலத்திற்காக அல்ல, முதல மைச்சராக இருந்தும் கலைஞர் அவர்கள் இவ்வளவு பாடுபட வேண்டுமா? இவ்வளவு உழைக்க வேண்டுமா? என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால் தி.மு.கழக உணர்வு மக்களிடத்திலே நிலை பெற்றால்தான் இந்த மக்களை காப்பாற்ற முடியும் என்பதற்காக இந்த நாட்டிலே உள்ள இளைஞர்கள் வேறு சிலர் கட்சி நடத்துகிறபோது அங்கே போய் கொள்கை யில்லாமல் லட்சியம் இல்லாமல் ஒரு தேர்தலை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொண்டு அந்தத் தேர்தலில் நமக்கு ஓர் இடம் கிடைக்கும் என்று கருதிக் கொண்டு இடம் கிடைத்தால் ஆட்சி கிடைக்காதா என்று ஆசை கொண்டு ஆட்சி கிடைத்தால் நம்மை சார்ந்தவர் முதலமைச்சர் ஆவார் என்று கருதிக் கொண்டு, அதனால் என்ன லாபம் கிடைக்கும் என்று கணக்குப்போட்டு சில அரசியல் கட்சிகளிலே சேருகிற இளைஞர்களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்வேன்.எதிர்காலம் நல்லபடியே அமையஇளைஞர்கள் தி.மு.க.வில் சேர வேண்டும்உங்களுக்காக, உங்கள் எதிர்காலம் நல்லபடியாக அமை வதற்காக நீங்கள் இந்த நாட்டிலே மதிப்போடு வாழ்வதற்காக ஒரு சிறந்த தலைமையுள்ள, வழிகாட்டுதல் உடைய கலைஞருடைய தலைமையிலே நாம் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கு ஏற்ப இந்த இளைஞரணியிலே நாமெல்லாம் இடம் பெற வேண்டும் என்று விரும்பி அந்த இளைஞர்களெல்லாம் இங்கு வந்து சேரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.அகில இந்தியாவிலுள்ள கட்சிகளைப்போல மூத்த கட்சியாக உள்ளது, திராவிட இயக்கம் என்று மத்திய அமைச்சர் இராசா பேசினார். நம்முடைய திராவிட இயக்கம் மூத்த இயக்கம் என்பதிலே அய்யமில்லை. தமிழ் இருக்கும் வரையில் இருந்த வரையில் திராவிட இயக்க உணர்வு இருந்தது என்றுதான் நான் கருதுவேன். அந்த திராவிட இயக்கம்தான் ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடியது. சம தர்மத்திற்கு வழிவகுக்கக்கூடியது சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இது மூன்றுக்கும் அடிப்படையாகக் கொண்டது திராவிட இயக்கம். அந்த இயக்கத்தை இன்றைக்கு பெரும் பொறுப்போடு ஏற்று நடத்துகிறவர், நடத்தக்கூடிய தகுதி உடையவர் நம்முடைய கலைஞர் அவர்கள்தான். அது மட்டுமல்ல சேது சமுத்திரத் திட்டம் போன்ற திட்டத்தை மத்திய அரசு ஏற்று செயல்படக் கூடிய ஆற்றல் கலைஞருக்குதான் உண்டு. அதை நிறைவேற் றக்கூடிய இடத்திலே கலைஞர் இருக்கிறார். அதைப்போன்ற பல கடமைகளை நிறைவேற்றுகின்ற வாய்ப்புள்ள தலைவர் கலைஞர்தான் திராவிட இனத்தினுடைய ஒரே பாதுகாவலர் என்று நான் இந்த நாட்டிலே உள்ள அத்தனைபேருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.பல்வேறு கட்சிகளில் இருந்து குறிப்பாக அ.தி.மு.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகளில் இருந்தவர்கள் அங்கே மதிக்கப் படாமல் தங்களுடைய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டு மானால் கலைஞரோடு இருந்தால்தான் மரியாதை என்ற உணர்வோடு இங்கே வந்து சேர்ந்து எங்களால் வரவேற்கப்பட்டு அமைச்சர்களாக, மத்திய அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்புகள் பெற்று இங்கே தி.மு.கழகத்தில் இணைந்த பிறகு மதிக்கத்தக்க அளவிற்கு எப்படி அவர்கள் பழகு கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். தி.மு.கழகத்தில்தான் ஜனநாயகம் இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.கலைஞர் அவர்கள், தான் சொல்வதை கட்டளை என்றோ, தாம் சொல்வதை எல்லோரும் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டுமென்றோ, அவர் விரும்புவதில்லை. மற்றவர்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்கிற ஒரு கட்சி தி.மு.கழகம். ஜனநாயகத்திற்கு வித்தூன்றுகின்ற கட்சி தி.மு.கழகம். அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு பிரிவினை கைவிடுகிற போதுகூட சொன்னார். நான் திராவிட நாடு பிரிவினையைத் தான் கைவிட்டிருக்கிறேனே தவிர, அதற்கான அடிப்படை காரணங் கள் அப்படியே இருக்கின்றன என்று சொன்னார். அந்த காரணங் களை காப்பாற்றுகின்ற தலைவர் கலைஞர்தான் என்பதை உணர்ந்து நாட்டுக்காக இளைஞர்களே வரவேண்டிய இடத்திலே வந்து சேருங்கள் என்று அவர்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். - இவ்வாறு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் உரையாற்றினார்.
(நன்றி: விடுதலை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…