குறும்படங்களின் வருகை தமிழில் அதிகரித்திருக்கிறது. பலருக்கு அது திரைப்படத்துறையில் நுழைவதற்கான அடையாள அட்டை. காட்சி தொடர்பியல் மாணவர்களுக்கு அது மதிப்பெண். ஆனால் அவ்வடிவம் தமிழில் கவனம் பெற்றிருக்கிறது என்பது உண்மை. அதற்கு வணிக ரீதியான வரவேற்பு வரும் நாளும் எதிர்காலத்தில் வரக்கூடும். சரி, இப்போது நம் செய்திக்கு வருவோம். முதன்முதலில் கதை எழுதுவோருக்கு என்று பொதுவாக சில கருக்கள் இருக்கும். ஏழைத் தாய், அநாதைச் சிறுவன்... இப்படி.. அதேபோல், நாடகம், குறுநாடகம், பள்ளி, கல்லூரி கலைநிகழ்ச்சிகளில் செய்வதற்கென்று தயாராக எய்ட்ஸ், தேசீய ஒருமைப்பாடு ... இப்படி சிலதுகள் இருக்கும். அதேபோல குறும்படம் எடுக்க நினைப்போருக்கும் சில பொதுவானவை உண்டு... ரொம்ப சீரியஸான சிலரின் முதல் ஸ்கிரிப்ட் கண்டிப்பாக பாலியல் தொழிலாளிகள் பற்றியதாக இருக்கும். அவை போக இன்னும் புகைப்பிடித்தல், எய்ட்ஸ், சாலைவிதிகள் இப்படி சில.... அந்த வகையில் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்த பிறகுநான் எடுத்த முதல் குறும்படமும் சம்பிரதாயத்தை மீறாமல்(இதில் மட்டும்) புகை பற்றியதே. ஏதோ கொஞ்சம் நக்கல் தொணியில் சிந்தித்தேன். மற்றபடி, என்னுடைய முதல் குற...