ஸ்ரீ ராமர் மனித உருவில் மண்ணில் அவதரித்த நாளை அறிவியலின் துணைகொண்டு ஆய்ந்தறிந்து அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். ராமர் பிறந்த இடத்தில் கோயிலைக் கட்ட வேண்டும் கட்ட வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (பிறந்த இடத்தில கோயில் கட்டுறதா? தாங்காதுய்யா) இந்நிலையில் தசரதன் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ராமரின் birth certificate கிடைத்துள்ளது. சமஸ்கிருத மொழியில் உள்ள இந்த சான்றிதழில் பிறந்தநாள் கி.மு.5114 ஜனவரி 10 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 17.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்தார் என்று நமது புராணத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் கி.பி 2007க்கும் கி.மு.5114-க்கும் இடையில் 7121 ஆண்டுகள் மட்டுமே கணக்கில் வருகிறது. மீதம் 17,42,879 ஆண்டுகள் கி.மு.வுக்கும், கி.பி.க்கும் இடையில் விடுபட்டுப் போயிருப்பதாகவும், இடைப்பட்ட அந்தக் காலத்தை ராம சூன்யம் என்றழைக்கலாம் என்றும் அவ்வாராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். மேலும் கிடைத்திருக்கும் சான்றிதழில், தாயார் என்ற இடத்தில் கோசலையின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தந்தையார் என்ற இடத்தில் ஏ...
சிரமப்படாதீங்க... பதம் பிரிச்சு சொல்றேன். "பிரின்சு என் ஆர் சமா". இப்படித்தான் படிக்கணும்.