களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!
"பெரும் புலித் தலைவன் அருகிருந்து எங்கள் விடுதலைப்
பெருங் கனவை வென்றெடுக்க, பாரில் தமிழீழப் புலிக் கொடி
சிறகடிக்க, எதிரி கோட்டையை தூள்தூளாய் சிதறடிப்போம்!
அதில் வெடிகுண்டாய் மாறி எம் உயிர் கொடுப்போம்! - பின்னர்
மாவீரர் தோட்டத்தில் ஓய்வெடுப்போம்" என்று நாட்டுக்காகக்
களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!
போருக்கனுப்பும் தாய் போல தலைவன் முகத்தில் கடமையுணர்வு!
"பாரெங்கள் தலைவனுடன் நாங்கள்" -இது கரும்புலிக் கூட்டத்தின் பெருமையுணர்வு!
தலைவருக்கருகில் அமர்ந்திருக்கும் அந்த இளம்பெண்ணின் பூரிப்பு!
தமிழ் விடுதலையைக் கண்டுவிட்ட பெருஞ்சிரிப்பு! -வீரக்
களப்பலி ஆகப் போகிறோம் என்று தெரிந்தும் - அந்தக்
கரும்புலிகள் முகத்தில் தோன்றும் பெருமிதம் பார்!
தலைவர் பிரபாகரனுடன் நிழற்படத்தில்...
வவுனியா தாக்குதலில் உயிர் விதைத்த கரும்புலிகள்:
கரும்புலி லெப்டினன்ட் கர்னல் மதியழகன்
கரும்புலி மேஜர் ஆனந்த்
கரும்புலி கேப்டன் கனிமத்
கரும்புலி கேப்டன் முத்து நகன்
கரும்புலி கேப்டன் அறிவுத் தமிழ்
கரும்புலி லெப்டினன்ட் கர்னல் வினோதன்
கரும்புலி மேஜர் நிலாகரன்
கரும்புலி கேப்டன் எழிலகன்
கரும்புலி கேப்டன் அகிலன்
கரும்புலி கேப்டன் நிமலன்
கருத்துகள்
இப்போது அவர்கள் உயிருடன் இல்லை என்பதும் உறுத்துகிறது. வீர வணக்கங்கள்.
உதாரணம் யானயுரவு முகாம் தாக்குதலுக்கு பின் பல மணி நேர இடைவெளிக்கு பின் தான் சிங்கள இராணுவம் போக முடிந்தது
Sorry for posting a irrelevant comment over here.
Wanted to know about the cornucopia of Tamil Comics World?
Kindly visit the new Kid in the Comics Blog Field. www.tamilcomicsulagam.blogspot.com
This is a Palce where you will find Comics Scans, Celebrity Postings, News On Comics, Comics Reviews, Availablity of Comics on Many Places, Interview with Some of the People involved in Making Comics (National / International), Star Bloggers, Comics Experts, Hardcore Comic Fans, etc.
Keep involved with www.tamilcomicsulagam.blogspot.com.
its your place to become what you always wanted to be = Youthfulness.
Thanks & Regards,
King Viswa.