முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் சங்க உண்ணாவிரதம்: குழப்பவாதிகளுக்கு திருமா உடனடி பதில்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றுவரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திவிட்டு வந்து பேசுங்க:ள் என்றெல்லாம் நீட்டி முழக்கினர் அதன் பொத்க்குழுவினர். ஆமால் அதையெல்லாம் மீறி இயக்குநர் பாரதிராஜா அவர்களை விமர்சித்தார் நடிகர் ராதாரவி.
அதையெல்லாம் விடக் கொடுமை... குழப்பத்தின் உச்சம்....
"இலங்கைத் தமிழர்களை, இலங்கை வாழ் இந்தியர்கள் என்று அழைக்க வேண்டும்; அப்படி அழைத்தால் இந்தியா உதவும்" என்று ஏதோ ஒரு கூமுட்டை கூறியதை வழிமொழிந்து உணர்ச்சிகரமாக அந்தக் கருத்தை ஆதரித்து. ராதாரவி பேசிக் கொண்டிருந்தார் அப்போது போராட்டத்தை வாழ்த்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அரங்கத்தில் நுழைந்துகொண்டிருந்தார். ராதாரவி பேசியதும், அடுத்து திருமா அவர்களை வருங்கால நடிகர்சங்க உறுப்பினர் என்று வரவேற்று எங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வாழ்த்திப்பேச அழைத்தார்கள். வந்தார்... "உங்கள் கட்டுப்பாட்டை மதிக்கிறேன் அதே நேரத்தில், ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்றழைத்தால் தான் இந்திய அரசு உதவும் என்றொரு கருத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்லர்; பூர்வகுடித் தமிழர்கள்" என்ற உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் குழப்ப வாதிகளுக்கு பதில் சொல்லிவிட்டு ரூ.50000 நன்கொடையும் வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.
நடிகர்கள் தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்

கருத்துகள்

இளைய கரிகாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
//அவர்கள் இந்தியர்கள் அல்லர்; பூர்வகுடித் தமிழர்கள்" என்ற உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் குழப்ப வாதிகளுக்கு பதில் சொல்லிவிட்டு ரூ.50000 நன்கொடையும் வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.//

ஒண்ணுமே புரியலையே! :(

அப்ப தமிழ்நாட்டில் வசிக்கும் இந்தியத் தமிழர்கள் பூர்வக் குடி தமிழர்கள் இல்லையா? இனக்கலப்பில் வந்தவர்களா விளக்கம் தேவை.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அவர்கள் தான் பூர்வகுடித் தமிழர்கள்-னு சொல்லலையே தோழா! இதில் புரியாமல் என்ன இருக்கிறது.

அப்புறம் இன்னொன்னு நாமும் 'இந்தியத் தமிழர்கள்' அல்லவென்பதும் என் கருத்து. நாம் தமிழகத் தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டுத் தமிழர்கள்.. இல்லையெனில் தாயகத் தமிழர்கள்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
வழக்கம் போல் அனானி ஒன்று மருது என்ற பெயரில் கழிய முயற்சிக்கிறது...

அதை விடுவோம். தமிழகம், தமிழ்நாடு என்பதாக ஒன்று இருந்ததில்லை... சேர, சோழ, பாண்டியர் என்றுதான் பிரிந்து இருந்ததாக அரிய கண்டுபிடீபை சொல்லிவிட்டு போயிருக்கிறது.

தமிழகம் என்று ஒன்று முழுமையாக இருந்ததில்லை என்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம்.. ஆனால் தமிழர் என்றொரு இனம் மொழிவழியில் இருக்கிறது...என்பதை அறியுமா அந்த தண்டம்! பிரிந்து கிடந்த தமிழர்கள் தான் இன்று ஒன்றிணைகிறோம்... எங்கள் ரத்த உறவுகளுக்கு குரல் கொடுக்கிறோம் என்று உணருமா?


அதெல்லாம் இருக்கட்டும்... இந்தியா என்றொரு நாடோ? இனமோ? குழுவோ? மொழிவழி அமைப்போ? எந்த உறவும் தொடர்பும் வெள்ளைக்காரன் ஏற்படுத்தும் முன்பு இல்லையென்பதாவது தெரியுமா?
பிருந்தன் இவ்வாறு கூறியுள்ளார்…
//இளைய கரிகாலன் said...
//அவர்கள் இந்தியர்கள் அல்லர்; பூர்வகுடித் தமிழர்கள்" என்ற உண்மையை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் குழப்ப வாதிகளுக்கு பதில் சொல்லிவிட்டு ரூ.50000 நன்கொடையும் வழங்கிவிட்டு விடைபெற்றுச் சென்றார்கள்.//

ஒண்ணுமே புரியலையே! :(

அப்ப தமிழ்நாட்டில் வசிக்கும் இந்தியத் தமிழர்கள் பூர்வக் குடி தமிழர்கள் இல்லையா? இனக்கலப்பில் வந்தவர்களா விளக்கம் தேவை.//

பூர்வீக குடிகள் அங்கேயே பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்தவர்கள், தமிழ்நாட்டு தமிழர் தமிழகத்தில் பிறந்து வளர்தவர்கள். லெமூரிய கண்டம் பிரிந்த போது பிரிந்து போனவர்கள், அல்லது பழையமதுரை நகரை கடல் கொண்டபோது(buumbukaar) பிரிந்த நாடுகள். சிங்களத்தின் வருகையின் போது இயக்கர் நாகர் என இரு திரவிட இனம் இலங்கையில் இருந்து, இயக்கற் இயற்கையையும்,நகர் நாகத்தையும் வழிபடும் முறையை கொண்டவர்கள், இயக்கருடன் வந்தேறுகுடிகளான விஜயனின் இனம் கலந்தமையே சிங்கள இனமாக பின்னாளில் உருவானது, இவர்கள் வங்காளி, ஒரிசாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், இந்தலூசுகள் சொல்லி கொள்வது சிங்கத்துக்கும் ஒரு பெண்ணுக்கும் பிறந்த இனம் தாம் என்று.
இளைய கரிகாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
//Blogger பிருந்தன் said...பூர்வீக குடிகள் அங்கேயே பரம்பரை பரம்பரையாக பிறந்து வளர்தவர்கள், தமிழ்நாட்டு தமிழர் தமிழகத்தில் பிறந்து வளர்தவர்கள். லெமூரிய கண்டம் பிரிந்த போது பிரிந்து போனவர்கள், அல்லது பழையமதுரை நகரை கடல் கொண்டபோது(buumbukaar) பிரிந்த நாடுகள். சிங்களத்தின் வருகையின் போது இயக்கர் நாகர் என இரு திரவிட இனம் இலங்கையில் இருந்து, இயக்கற் இயற்கையையும்,நகர் நாகத்தையும் வழிபடும் முறையை கொண்டவர்கள், இயக்கருடன் வந்தேறுகுடிகளான விஜயனின் இனம் கலந்தமையே சிங்கள இனமாக பின்னாளில் உருவானது, இவர்கள் வங்காளி, ஒரிசாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், இந்தலூசுகள் சொல்லி கொள்வது சிங்கத்துக்கும் ஒரு பெண்ணுக்கும் பிறந்த இனம் தாம் என்று.//

விளக்கத்திற்கு நன்றி பிருந்தன்.

//இயக்கருடன் வந்தேறுகுடிகளான விஜயனின் இனம் கலந்தமையே சிங்கள இனமாக பின்னாளில் உருவானது,//

அப்படியானால் சிங்களவர்களும் திராவிடர்கள் தானா????????
நான் அவர்களை ஆரியர்களென்றே நினைத்திருந்தேன்.

நன்றி மீண்டும்!
suttapalam இவ்வாறு கூறியுள்ளார்…
//சேர, சோழ, பாண்டியர் என்றுதான் பிரிந்து இருந்ததாக அரிய கண்டுபிடீபை சொல்லிவிட்டு போயிருக்கிறது.

அதே சோழ மன்னர்கள் இலங்கையை ஆண்டனர் என்று அவருக்கு உரக்க சொல்லுங்கள்!! சிங்கள அரசர்களும் தமிழ் அரசர்களும் ஒரே சமயத்தில் அங்கே தனி தனி மாகணத்தை ஆண்டார்கள் என்று அந்த உள்ளத்திற்கு புரிய வையுங்கள்!!
நாம் குடிபெயர்ந்த தமிழன் என்றே ஒரு வாதத்திற்கு வைத்து கொள்வோம்!! சோழ சாம்ராஜியத்துக்கு பிறகு (அல்லது முடியும் தருவாயில்) இந்தியாவில் கால் பதித்த அரபு இனத்தவர்கள் (முஸ்லீம்) இங்கே நாடாள முடியும்!! நான் இதை என் முஸ்லீம் சகோதரர்கள் மனம் புண்பட சொல்லவில்லை! அதை தவறு என்றும சொல்லவில்லை!! இந்த நிலை ஏன் இலங்கையில் இல்லை? இதை தட்டி கேட்டால்
தீவிரவாதமா?

ஆனால் எனக்கு இப்போது நடக்கும் இலங்கை பிரச்சனயில் புரியாத சில சந்தேகங்கள் உண்டு சார்!!
இத்தனை நாள் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் எல்லா அரசியல் கட்சிகளும் இப்போது இதை பேசுகின்றது?
அப்பாவி தமிழர் படுகொலையை கண்டித்து முதலில் களம் இறங்கிய கம்யுனிஸ்ட்களை ஏன் யாரும் போற்றாமல் கலைனரையும் வைகோவையும் திருமாவளவனையும் போற்றுகிறார்கள் ?
இலங்கை ராணுவத்திற்கு இன்னும் ஏன் விடுதலை புலிகள் முழு பதில் தாக்குதல் செய்யவில்லை? (ஆதாரம்: இந்த வார குமுதம்.)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…