முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை!

கொம்பு முளைத்த உச்சநீதிமன்றம், மக்கள் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழினத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நூற்றண்டு கால தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை, பாதி பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மத நம்பிக்கை என்னும் புரட்டைச் சொல்லி தடுக்க நினைப்பவர்களுக்கு உச்சநீதிமன்றம் அடைக்கலம் கொடுக்குமாம்; இதைப் பார்த்துக் கொண்டு இன உணர்வாளர்கள் சும்மா இருக்க வேண்டுமாம். உச்சிக்குடுமி நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தலையாட்டிக் கொண்டிருக்க வேண்டுமாம்.

அப்படி இல்லாமல், சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி அமைதியான வழியில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழியில் பந்த் அறிவித்தால் அதை இரவுக்கிரவே கூடித் தடுக்குமாம் உச்ச நீதிமன்றம்.
சரி, உச்சநீதிமன்றத்திற்கு மதிப்புக் கொடுத்து உண்ணாநிலைப் போராட்டம் என்று அதை மாற்றிக் கொண்டு, உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு சென்று கையொப்பமிட்டு பணியை மேற்கொண்டார் கலைஞர்.
பார்த்துக்கொண்டிருந்த தமிழக மக்கள் தன்னெழுச்சியாக 'பந்த்' நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் கரியைப் பூசினர். அதைத் துடைத்துக் கொண்டு, தனது அவமானத்திற்கு பழிவாங்கத் துடிக்கிறது உச்சிக் குடுமி நீதிமன்றம்.

இதோ இன்று கலைஞருக்கு அது விடுத்துள்ள எச்சரிக்கையில் "தலைமைச் செயலரின் அறிக்கையைத் தனது அறிக்கையாக ஏற்றுக்கொள்ள முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், விரைவில் முதல்வர் பதிலளிக்காவிட்டால் அவருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

பிறப்பிக்கட்டும்! பிறப்பிக்கட்டும்!! அப்போது தான் கனன்று கொண்டிருக்கும் தமிழின உணர்வு கொழுந்துவிட்டெரியும்!
இந்தியா என்னும் மாயையில் சிக்கித் தவிக்கும் எம் தமிழினம் மீண்டு வரும்! உச்சிக் குடுமி நீதிமன்றமே உன் ஆணவ ஆணையை அனுப்பு!
தமிழினத்திடமிருந்து மீண்டும் கிடைக்கும் உனக்கு ஆப்பு!

முந்தைய பதிவுகள்:
உச்சநீதி மன்றத்திற்கு மக்கள் தந்த செருப்படி!
எவன் மசுர புடுங்கப் போனீங்க!
பெஞ்சுகளைச் சுத்தப்படுத்துவோம் வாருங்கள்!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....
கலைக்கட்டும் கலைஞர் அரசை!

கருத்துகள்

ஜோ / Joe இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் ! நீதி மன்ற உத்தரவுகளை குப்பைத் தொட்டியில் போட்ட மற்ற மாநில அரசுகளை தட்டிக்கேட்க வக்கில்லாத நீதித் துறை இதற்கு மட்டும் வரம்பு மீறி வார்த்தைகளை விடுவது ஏன் ?
jackiesekar இவ்வாறு கூறியுள்ளார்…
nice post, keep it up
ஜோசப் பால்ராஜ் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிட எண்ணி எழுதியதே ஒரு பதிவானது.

http://maraneri.blogspot.com/2008/08/blog-post_04.html

படித்துவிட்டு சொல்லுங்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழம் அழிந்தாலும் பரவாய் இல்லை ஆனால் உன் தலைவனுக்கு உச்ச நீதிமன்றம் கைது ஆணை பிறபித்தால் தமிழர்கள் கொந்தளிப்பார்களா ?? உன்ன மாதிரி தமிழ் உணர்வு இருந்தா போதும் உருபட்டடும் இந்த இனம் இதுக்கு மேல சொல்ல விரும்பல .........................................
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழம் அழிந்தாலும் பரவாய் இல்லை ஆனால் உன் தலைவனுக்கு உச்ச நீதிமன்றம் கைது ஆணை பிறபித்தால் தமிழர்கள் கொந்தளிப்பார்களா ?? உன்ன மாதிரி தமிழ் உணர்வு இருந்தா போதும் உருபட்டடும் இந்த இனம் இதுக்கு மேல சொல்ல விரும்பல .........................................
சுமைதாங்கி ... இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழம் அழிந்தாலும் பரவாய் இல்லை ஆனால் உன் தலைவனுக்கு உச்ச நீதிமன்றம் கைது ஆணை பிறபித்தால் தமிழர்கள் கொந்தளிப்பார்களா ?? உன்ன மாதிரி தமிழ் உணர்வு இருந்தா போதும் உருபட்டடும் இந்த இனம் இதுக்கு மேல சொல்ல விரும்பல .........................................

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…