முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித் தொகைக்கு நிபந்தனை ரத்து

மத்திய அரசு சார்பில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் பெற குறைந்தபட்சம் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை வித்ஹிக்க இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் மாணவர்களும் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களும் குரலெழுப்பினார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
தமிழ்க முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் மத்திய அரசின் இந்த நிபந்தனையாஅல் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் தமிழக அரசே அந்த நிதிஉதவியினை செய்யும் என்று அறிவித்தார். அத்தோடு மட்டுமல்லாமல் மற்ற மாநில மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
திராவிடர் கழகம் கடந்த 16-ஆம் தேதி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முதல் தலைமுறையாக, மிகவும் பிந்தங்கிய பகுதிகளில் இருந்தும், தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து படிக்க வருவோரின் வாய்ப்பை இந்த நிபந்தனை மூலம் கெடுத்துவிடக்கூடாது என்று குரலெழுப்பினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலைஞரின் கடிதம் பற்றி விவாதிக்கப்ப்பட்டு, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாகவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உதவித்தொகைக்கு விதிக்கப்படவிருந்த நிபந்தனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும் இது. உடனடிக் குரல் எழுப்பி உதவிய கலைஞர் தமிழர் தலைவர் கி.வீரமணி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும், போராட்டக் களத்தில் குதித்த மாணவர்களுக்கும் இவ்வெற்றி உரித்தாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…