முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் சின்னப் பப்பா!

சரியாக ஓராண்டாகிறது.

விஜய் தொலைக்காட்சியின் 'நீயா? நானா?' விவாதத்திற்கு வந்த அழைப்புக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு வந்துவிடுங்கள் என்ற அழைப்போடு, எங்கள் அணியில் பேசத் தோழர்களையும் அழைத்துவருமாறு சொல்லியிருந்தார்கள். உடன் தோன்றிய சிலரில் 'மிதக்கும் வெளி' சுகுணா திவாகரும் ஒருவர். (அப்போது எனக்கு மிதக்கும் வெளியாக அறிமுகம் ஆகியிருக்கவில்லை.) தகவலைச் சொல்லி அழைத்தேன். தன் நண்பர் செந்தில் வந்திருப்பதாகவும், இணையத்தில் ப்ளாக் எழுதுகிற திராவிடத் தமிழர்கள் இன்றைக்கு மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சந்திக்கவிருப்பதால் தான் அங்கே செல்வதாகவும் தெரிவித்தார். உடன் செந்திலின் எண் வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேசியபோதுதான், "திராவிட ராஸ்கல்கள் முன்னணி" என்று தாங்கள் இயங்கப் போவாதாக தெரிவித்தார். இணைய ஊடகம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்று எண்ணியிருந்தவனுக்கு இப்படி ஒரு சந்திப்பு என்றதும் ஆனந்தம். அதிலும் சென்னை மட்டுமல்லாமல், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் வந்து சந்திக்கிறார்கள் என்றதும், பழைய பேனா நண்பர்கள் முறையின் நினைவு... முகம் தெரியாமல் பழகியவர்கள் நேரில் பார்க்கும்போது எப்படி இருக்கும்? என்ற கற்பனையே ஆனந்தத்தைத் தந்தது.

ஆர்வம் மேலிட விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேறு சிலரை அனுப்பிவிட்டு, அண்ணன் பெரியார் சாக்ரடீசுடன், நாகேஸ்வரராவ் பூங்கா நோக்கி கிளம்பினேன். நாங்கள் செல்வதற்குள் எல்லாம் ஒரு வழியாக செடிகளுக்கு மத்தியில் செட்டிலாகியிருந்தார்கள். இதுதான் வலைப்பதிவர் கூட்டம் என்பதறியாமல் கொஞ்சம் சுற்றினோம். (ஏனெனில் அங்கே அடிக்கடி பென்சனர் கூட்டம், நிதி நிறுவனத்தில் ஏமாந்தோர் கூட்டம் என ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும்)

நேரடியாக அப்போது வலைப்பூகளில் எழுதாததால், நாங்கள் பார்வையாளராக அறிமுகப்படுத்திக் கொண்டு அமைதியாக உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தோம்(அந்த இருட்டில் கேட்கத் தான் முடிந்தது.). அடர்ந்த இருட்டுக்குள் 'னல் றக்கும் விவாத'மாக அப்போதுதான் போலி விவகாரம் சென்று கொண்டிருந்தது. (ஓராண்டு கழித்தும் அதே அ.ப.வி.- ஆனால் அப்போது அது ஏதோ புனைப்பெயர் விவகாரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனுடைய தீவிரமே அண்மையில்தான் தெரிந்தது.)
சிலரின் குரல் வேறுமாதிரி இருந்தபிறகுதான் அது அனைத்து வலைப்பதிவர்கள் சந்திப்பாக மாறிவிட்டிருந்தது தெரிந்தது. எனக்குத் தெரிந்து அதில் பாலபாரதி, (வரவனையான் என்று எனக்குத் தெரியாத) செந்தில், ஜி.கவுதம், பொன்ஸ் அக்கா ஆகியோர் இருந்தனர். சில முகங்கள் இன்று பார்க்கும்போது அடையாளம் தெரிகின்றன('வினையூக்கி'யும் தெரிகிறாரே). இப்போது வலைப்பதிவாளராகவும், அப்போது பார்வையாளராகவும் வந்த வளர்மதியும் என்னைப் போலவே திராவிடப் பதிவர் சந்திப்பு என்று நினைத்துக்கொண்டு பேசியதும், அவரை 'உண்மை'யின் செய்தியாளர் என்று அண்ணன் பாலபாரதி எழுதியதும் அதற்கு நான் தந்த மறுப்பும் இங்கே.

சந்திப்பு முடிந்து வெளியில் வந்தோர் 'டீ, போண்டா' சாப்பிடக் கிளம்பியதும், இன்னும் சிலர் அரசுக் கடைக்குச் செல்லக் கிளம்பியதும் நன்கு நினைவிருக்கிறது. வெளியே கிளம்பும்போது எனக்கு முகவரி அட்டை கொடுத்து, தான் வணிகம் குறித்து எழுதுவதாக அறிமுகப்படுத்திக்கொண்ட நண்பரும் நினைவிலிருக்கிறார். கையில் கொண்டுவந்திருந்த உண்மையின் சில பதிவுகளை வந்திருந்தவர்களுக்கு வழங்கிவிட்டு விடைபெற்றோம். அந்த இருட்டோடு பின்னர் வந்த பல இருட்டுகளை நான் இணையத்தின்முன் கழிக்க நேர்ந்ததும் நடந்தது...

இருட்டில் எடுத்த புகைப்படங்கள், முற்றிலும் சிறிய பிளாஷ் கொண்ட எனது கையடக்கக் கேமராவில் எடுக்கப்பட்டதால் ஓரளவு 'இவர்தான் இவர்' என்று அடையாளம் காணலாம். மற்றவை தெளிவில்லாததால் 'blur' செய்து வைத்திருக்கிறேன்.. அம்புட்டுதான்! ஓராண்டு கடந்து இந்தப் படங்களைப் பதிவிடுவதில் மகிழ்வடைகிறேன்.

("அடப்பாவி, அப்போ நீ எடுத்த வீடியோவெல்லாம் இந்தக் காலத்தில கிடைக்காதா?"ன்னு கேக்குற பாலபாரதி அண்ணனில் குரல் மீண்டும் ஒருமுறை ஒலிக்கிறது.)

இதிலிருந்து பெறப்படும் செய்தி: நானும் வலைப்பதிவர் குடும்பத்துக்குள் வந்து ஓராண்டு நிறைவடைகிறது. இப்ப சொல்லுங்க நான் சின்ன பப்பாதானே! அந்த மகிழ்ச்சிக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.. என்னன்னு பட்டியலோட திங்கள்கிழமை சொல்றேன்.

கருத்துகள்

பொன்வண்டு இவ்வாறு கூறியுள்ளார்…
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் பிரின்ஸ் :)
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
பாப்பாவோட சந்தோசம் பாப்பாவுக்குத் தான் தெரியும். பொன்வண்டோட விளையாடத் தெரியாத பாப்பாக்கள் நிறஞ்ச இந்த ஊரில, பாப்பா படத்தோட வந்து வாழ்த்திட்டு போற உங்களுக்கு நன்றி பொன்வண்டு!
அட.... எத்தனை பா...பா... பின்னிட்டடா பிரின்சு!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…