கணிதத்தின் அடிப்படையைப் புரிய வைக்க முயலாமல் கணக்கு போடுவதற்கு எளிய முறை என்று பல வழிமுறைகளை பயிற்றுவிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?
எங்கள் சிறு வயதில்... பள்ளிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் வருவார்கள். அவரவர் முயற்சியில் பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட அறிமுகங்கள் ஆர்வத்தை விதைத்தன என்பதை மறுப்பதற்கில்லை. மேஜிக் செய்பவர், அறிவியல் விளக்கங்கள் சொல்பவர், எளியமுறை கணிதம் என்று கணித விளக்கம் சொல்பவர், தாளை நறுக்கி அதில் பல்வேறு வேலைப்பாடுகள் செய்பவர், ஓவியத்தில் பூ வேலைப்பாடுகள் கற்றுத் தருபவர், குட்டிக் குட்டித் தையல்கள், பந்து-கூடைகள் நெய்யக் கற்றுத் தருபவர், விதவிதமான பேனா பென்சிகள் விற்பவர், பெட்ரோலைச் சேமிக்கும் புதிய வகை கார்ப்பரேட்டர் விற்பவர் என்று ஏராளமாக வருவார்கள்.
அவர்களில் சிலர் தங்கள் திறமைக்கு டிக்கெட் பணம் போல இரண்டு ரூபாய், அய்ந்து ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். சிலர் 8 பக்கத்திலோ, 16 பக்கத்திலோ ஏறத்தாழ சாம்பலைத் தாண்டி கருப்புக்கு நெருக்கமான நிறத்திலான சாணித் தாளிலும், அதே தரத்தில் மிக மெல்லிய காகிதக் கொடி தடிமனிலான வண்ண மேல்தாளிலும் தாங்கள் போட்ட புத்தகங்களுக்கு 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் வாங்கிக் கொள்வார்கள். அதை விற்கவரும் நபரின் முகமும், பேப்பரையொத்த கனத்தில் அவர் உருவமும் இன்னும் நினைவிருக்கிறது.
அவர்களின் வரவு இன்னொரு மகிழ்ச்சி. கடைசி இரண்டு வகுப்புகள் இருக்காது. வாய்ப்பு இருந்தால் இன்னொரு கிளாசும் சுவாஹா. ஒட்டுமொத்த பள்ளி மாணவர்களும் கூட்டமாக அமர்ந்து களிக்க... திருவிழா மனநிலைதான்.
எதுவாக இருந்தாலும், மறுநாள் பணம் கொடுத்துவிடுவதாகச் சொல்லி பசங்கள் வாங்கிக் கொள்வார்கள். டீச்சர்களிடம் பணம் கட்டுவதற்கு மறுநாள் போவதற்கு முன்னால், அந்த 5ரூபாய்க்கோ, 10 ரூபாய்க்கோ பல பாட்டுகள் வாங்கிவிட்டு பள்ளிக்குச் செல்ல வேண்டும். எனக்கும் தங்கைக்கும் அந்தப் பிரச்சினை இல்லை. மாலையில் அழைக்க வரும் அய்யாவிடம் என்ன வேண்டுமோ கைகாட்டினால் பணம் வந்துவிடும். என்ன அடுத்த ஆண்டும் அதே போல் ஒரு சில பக்கங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வேறு வண்ண மேல்தாள் கொண்ட புத்தகத்தைக் கேட்கும்போது தான், “அதுதான் வீட்டிலேயே இருக்கேய்யா... ம்ம்ம் சரி!” என்ற மெலிதான குரல் வரும். (இதெல்லாம் எழுதும்போது ஒரு துளி கண்ணீர் துளிர்த்து, ‘லவ் யூ அய்யா’ போட்டுக் கொள்ளத் தோன்றுகிறது இப்போது!)
இரவு விளக்குக்கான கூண்டு, நெட்டிலிங்க மரம், பாவாடை அணிந்து கைதூக்கியபடி நிற்கும் பெண் பொம்மைகள் என்று எளிமையாகக் கைகூடும் வடிவங்களோடு, ’இதெல்லாம் அவங்களுக்குத்தான் வரும்!’ என்று சொல்லி கைவிட்டுச் செல்லும் அளவிலான சில அரிய வடிவங்களுடன் இருக்கும் அந்தப் புத்தகம்.
அப்புறம் என்ன, வீட்டில் ஒரே குப்பை தான் பிறகு! கத்திரிக்கோலும் கையுமாக கண்ணில் படும் பேப்பர்களையெல்லாம் பொளந்துகட்ட வேண்டியது தான். அந்த பழைய பேப்பர் கிராப்ட் புத்தகங்கள் யார் கண்ணிலாவது பட்டால் பதிவிடுங்கள். என் பழைய தொகுப்புகளில் நான் தேடிப் பார்க்க வேண்டும். ஒன்றிரண்டு நாள்களில் ஹோம்வொர்க் மிகுந்ததும், அவை விளையாட்டுக் கட்டுகளின் அடியில் போய்விடும். மீண்டும் அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் சில நாட்கள் உயிர்பெற்றிருக்கும். அதிலும் அந்த நெட்டிலிங்க மரம் வெட்டுவதற்கு முயன்றால் கத்திரிக்கோலின் அழுத்தத்தில் கையெல்லாம் வலிக்கும்.
இன்று அவைதான் ஆரிகமி, கிரிகமி, பேப்பர் கிராப்ட் என்று பல்வேறு பெயர்களால் நம் பிள்ளைகள் கைகளில் இருக்கின்றன.
அதே போல், பல ஓட்டைகள் கொண்ட வட்டவடிவ கண்ணாடித் துண்டுகளும் அவற்றை நடுவில் வைத்து வரைவதற்கேற்ற ஒரு பெரிய வட்டவடிவ பட்டையும் கொண்ட பூவேலைப்பாடு தரும்... தொட்டால் ஒடிந்துவிடும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருளும் (அதற்குப் பெயர் Spirograph-ஆம்... இப்போதுதான் பார்த்தேன்) பழைய ரஃப் நோட்டுகளையெல்லாம் பதம் பார்த்திருக்கின்றன. அடடா... நான் எழுத வந்தது என்ன? வேறு எதை எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். அதிலும் பல சிறுகதை, கவிதைக்கான ’நாட்’டுகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்.
விடுங்க... அடுத்த பதிவில் அந்தக் கணக்கு மேட்டரைப் பார்ப்போம்.
#Nostalgia #SchoolDays #PaperCraft #EasyMaths #SpiroGraph #SVNS #SMSVHSS #Karaikudi

கருத்துகள்