முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆயித்தில் ஒருவன்!

பழைய திரைப்படங்களை எனக்கு நிறைய போட்டுக்காட்டி, திரைப்படங்களின் மீதான ஆர்வத்தை எனக்கு வளர்த்தது என் அய்யாதான்!(அய்யா என்று குறிப்பிடுவது என் தந்தையை!) வீடியோ வந்த புதிதில் எங்கள் இல்லத்தில் மூன்று, நான்கு வீடியோ டெக்குகள் வாடகைக்கு விடுவதற்காக வைத்திருப்போம். வாடகைக்கு டெக் எடுத்து படம் பார்த்த காலம்.. ஆதலால் அன்றைக்கு(1980-ன் இறுதிப்பகுதிகளில்) அது நல்ல தொழில்!

தனக்குப் பிடித்த தமிழ் திரைப்படங்கள், தன்னை வியக்கவைத்த ஆங்கிலத் திரைப்படங்கள் என தொடர்ந்து தேடி எடுத்து, படங்களை (வீடியோ கேசட்டுகளை) வாங்கிவருவார் என் தந்தை. எனவே தினம் ஒரு திரைப்படம் எங்கள் இல்லத்தில் நிச்சயம். அப்படித்தான் பீம்சிங் படங்கள், நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படங்கள், பழம்பெரும் திரைப்படங்கள்(சகஸ்ரநாமம் நடித்த 'போலீஸ்காரன் மகள்' போன்றவை), தேர்ந்தெடுத்த எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் என நிறைய பார்த்துக் குவித்திருக்கிறேன்.

அதிலும் ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களை பின்னாட்களில் சன் தொலைக்காட்சியின் துணைகொண்டு நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த எம்.ஜி.ஆர். படங்களில் 'ஆயிரத்தில் ஒருவன்' தலையாயது. எம்.ஜிஆரின் துள்ளல் பாவனைகளாலும், அவரது படங்களில் வரும் தத்துவப் பாடல்களாலும் எம்.ஜி.ஆர். படங்கள் பார்ப்பது என்றால் எனக்கு தனிப்பிரியம். என்னோடு அமர்ந்து ரசித்து, எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் இன்னொரு ரசிகை யாரென்றால், எம்.ஜி.ஆர். இறந்து சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த என் இரண்டாம் தங்கை. அதிலும் இந்தப்படம் அவளுக்கு நிறைய பிடித்த ஒன்று. இன்னும் எம்.ஜி.ஆரின் ஈர்ப்பு நிலைத்திருக்கிறது என்பதற்கு அவளொரு சான்று. அதற்கு அவரது துள்ளல் நடிப்பு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன். படத்தில் சொன்னதை எல்லாம் நிஜத்தில் செய்தாரா என்ற கேள்வி, அவரது அரசியல் பற்றிப் பேசும் போது எழுப்பப்பட வேண்டியது.

இருக்கட்டும். என்னதான் பலமுறை தொலைக்காட்சியில் பார்த்த படமாக இருந்தாலும், திரையரங்கில் வெளியாகியிருக்கிறது என்றால் பிரம்மாண்டமான ஆயிரத்தில் ஒருவனை பார்க்க மனம் விரும்புவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

முதன்முறையாக எம்.ஜிஆர் படத்தை திரையில் பார்க்கும் வாய்ப்பு கடந்தாண்டு 'நாடோடி மன்னன்' மூலம் கிடைத்தது. இம்சை அரசனின் வெற்றியைத் தொடர்ந்து, நாடோடி மன்னனும், உத்தம புத்திரனும் மீண்டும் திரையப்பட்டன. அதில் நாடோடி மன்னன் படம் வெளியாகி இரண்டு வாரம் முடியப்போன நிலையில், நானும் எனது நண்பர்கள் நால்வரும் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்த்தோம். 'தூங்காதே' பாடலுக்காகவும், எம்.ஜி.ஆர். வெளியிடும் 'உழுபவருக்கே நிலம் சொந்தம்; பிச்சை தடை செய்யப்படுகிறது' உள்ளிட்ட அறிவிப்புகளுக்காகவுமே படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. (அப்போது தான் கலைஞர் அரசு நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தது.) சிரிப்பு சத்தங்களும், கரவொலிகளும் 'நாடோடி மன்னன்' பழைய படம் என்பதை மறக்கடித்தன.

இந்நிலையில் இவ்வாண்டு வெளியீடாக 'ஆயிரத்தில் ஒருவன்'... 'Pirates of Caribbean' வெளியாகியிருக்கும் சமயத்தில்...

இன்றைய இளம் நாயகன், நாயகி நடித்து வெளிவரும் படங்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்றிருக்கிறது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம்! இரண்டு முன்னாள் முதல்வர்கள் நடித்த படமல்லவா?

அதிலும் 'இந்தப் படத்தில் சிறப்பு என்ன தெரியுமா? புர்ச்சித் தலைவரும், தலைவியும் சேர்ந்து நடித்த முதல் படம்' என்றார் ஒரு பெரிசு!

அமைந்தகரையில் அமைந்துள்ள முரளிகிருஷ்ணா திரையரங்கில் சென்று அமர்ந்தோம் ஒரு இரண்டு வாரங்களுக்கு முன்பு! 35 mm படத்தை முழுத்திரையில் திரையிடுவதற்காக பெரிதாக்கியிருக்கிறார்கள். அதை சினிமாஸ்கோப் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதனால் படத்தில் மேலும் கீழும் கொஞ்சம் கட் ஆகியிருந்தது. நாங்கள் போனது செவ்வாய்க்கிழமை; அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர் சென்றிருந்தபோது, மலர் அர்ச்சனை நடந்திருக்கிறது திரைக்கு! (இன்னும் திருந்தலையாடா நீங்க!)

படத்தின் கதையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை; 'கடற்கொள்ளைக்காரன்' என்ற தலைப்பில் சிவாஜிக்குத் தயாரான படம்தான் பின்னாளில் ஆயிரத்தில் ஒருவனாக எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்ததாகப் படித்த நினைவு!

படத்திற்கு என்ன கைதட்டல்! அதுவும் ஜெயலலிதா- எம். ஜி.ஆர். முதல் டூயட் பாட்டுக்கு, நம்பியாரின் அறிமுகத்த்துக்கு, எம்.ஜி.ஆர்-நம்பியார் கத்தி சண்டைக்கு என்று கைதட்டல் விழுந்து கொண்டேயிருக்கிறது என்னுடையதையும் சேர்த்து! எனக்குப் பிடித்த 'ஏனென்ற கேள்வி?' பாடல், 'அதோ அந்த பறவைபோல...'' பாடல் என குதூகல மனப்பான்மையோடு இருந்தேன்.

"நம்பியார்: மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர்: சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்!"
இந்த வசனத்திற்கெல்லாம் கைதட்டல் பின்னுகிறது.

"என்னம்மா! மருத்துவர்அய்யா நம்ம எண்ணத்தைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்குறார்!" என்றெல்லாம் ஜெயலலிதாவிடம் அவரது தோழி (சேடிப்பெண்) கேட்கும்போது, நிகழ்கால அரசியல் நினைவுக்கு வந்து நகைப்பைத் தோற்றுவித்தது.

எம்.ஜி.ஆரின் காதலுக்காகவும், அவருடனான மணவாழ்க்கைக்கும் ஜெயலலிதா ஏங்கும் காட்சிகளைப் பார்க்கும்போது, ஏனோ ஜெயலலிதாவின் தனி வாழ்க்கையும் நினைவுக்கு வந்து கழிவிரக்கத்தைத் தோற்றுவித்தது. விருப்பமில்லாமல் திரைத்துறையில் நுழைந்து, பல சமயங்களில் தன் விருப்பத்திற்கு விரோதமான வாழ்க்கையில் தள்ளப்பட்ட ஜெயலலிதாவிற்கு இல்வாழ்க்கை அமைந்து மற்ற நடிகைகளைப் போல அமைந்திருந்தால் அவரது வாழ்க்கை வேறு வேறு திசைகளில் திரும்பி இருக்கக்கூடும்! அது சற்றே மனச் சங்கடத்தையும் தந்தது! மக்ழ்ச்சியாய் படம்பார்க்கப் போய் ஆழ்ந்த சிந்தனையுடன் வெளியில் வந்தேன். இந்த முறை படம்பார்த்துவிட்டு வழக்கமான துள்ளல் மனநிலை இல்லை - பூங்கொடியின் முடிவு 'ஜெ'க்கு நடக்காததை நினைத்து!

இணையத்தில் ஆயிரத்தில் ஒருவன் பார்க்க விரும்புவோருக்கு..............................
http://video.google.com/googleplayer.swf?docid=-3470680456641617534
http://video.google.com/googleplayer.swf?docid=-3576299070757933895

கருத்துகள்

PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
naanee.. naaneee.. intha vidumuraiyila vidu pattu pokaama irukka
oru ninaivuuttal!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…