முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆயிற்று பத்தாண்டுகள் அருமைத் தோழர்களே!

(அழகப்பா அரசு கலைக் கல்லூரி - இளம் வணிகவியல் 1999-2002 (B.Com 99-02) மாணவ நாட்களின் நினைவாக...)

ஆயிற்று பத்தாண்டுகள்
அருமைத் தோழர்களே!

நம்ப முடிகிறதா
நம்மால்?
2002
ஏப்ரல் 25!

கடைசி நாள்
மாணவர்களாய்
கண்கலங்க
விடைபெற்று
ஆயிற்று பத்தாண்டுகள்!


கல்லூரி கலங்க
ஆடி மகிழ்ந்த நாட்கள்
அடங்கி
ஆயிற்று பத்தாண்டுகள்!

அடிதடி...
கும்மாளம்...
ஆர்ப்பாட்டம்...
அந்யோந்நியம்...
அத்தனையும் முடிந்ததாய்
மனம் நொறுங்கி
ஆயிற்று பத்தாண்டுகள்!


பவநகர் ஸ்டேடியம்...
அழகப்பர் நினைவிடம்...
அஞ்சல் நிலையம்...
வாசல் பெட்டிக் கடை...
தைல மரங்கள்...
சைக்கிள் ஸ்டாண்ட்...
ஸ்டோர் நோட்புக்கு...
நூலகத்தின் பின்னோடும்
ரயில்வே சிக்குபுக்கு...
கேண்டீன் கணக்கு...
ஆங்காங்கே மரத்தடியில்
’கடலை’ ஆமணக்கு!
மர பெஞ்ச் ஓவியம்...
கரும்பலகைக் கவிதை...
அன்பு, நட்பு, காதலென்று
அவரவர் நினைப்புக்கேற்ப
அழியாத
ஒரு விதை!

டுர்டுர் வண்டியில
ரெண்டு வருசம் டூரு!
மலை மலையாய் ஏறி,
கடல் கடலா குளிச்சு,
அருவி அருவியா நனைஞ்சு,
விடிய விடிய முழிச்சு
சீட் இல்லாட்டி
சூட்கேஸு...
அதுவும் இல்லைன்னா
தரையிருக்கு
விடுங்க பாஸு!
உலகம் சுற்றிய
வாலிபர்களாய்
இரு
மூன்று நாட்களில்
நாடளந்தோம்!

என்.எஸ்.எஸ். பாலுத்தம்பி...
ஆஞ்சநேயரின் ‘(வெளிய) பெய்டு தம்பி’...
டி.எஸ்.பி.யின் பிஸினஸ் ஸ்டாட்...
மதியின் என்பீல்டு புல்லட்...
ராதாகிருஷ்ணன் கிளாஸ்...
ராஜா முகமது போஸ்...
அழகர்சாமி...
சின்னையா...
அடுத்தடுத்து கிளாஸுய்யா!

குட்டை காமராஜராய்
நிர்மலானந்தன்...
கொசு கவிராயர்...
கிளார்க் கான்...
நேபாளி பியூன்...
கணபதி இங்கிலீசு...
தமிழுக்கு
மீசை முருகேசு!

எல்.எஸ்
விட்டுக் கொடுத்து
யு.எஸ்.,
யு.சி.!
தேர்தல் சண்டை
பி.காம்-க்குள்ளேயே
கோர்ட்டு
கேசு!

எடுத்துச் சொல்ல
ஒன்றா...
இரண்டா...
மூன்று ஆண்டுகளில்
முழுதாய் வாழ்ந்தோம்!
பழையவற்றை
பழகியவற்றை
எங்கே
மறந்தோம்?

ஆயிற்று பத்தாண்டுகள்
அருமைத் தோழர்களே!

பத்தாண்டு என்ன?
பத்துப் பத்தாய்
நூறாண்டு கடந்தாலும்
நெஞ்சில் இது
பசு மரத்து ஆணி!
நினைவு நதியில்
பயணிக்கும் தோணி!
-------------------------------------------------------------------------
* எல்.எஸ் - Ladies Secretary; யு.எஸ் - Union Secretary; யு.சி - Union Chairman

பி.கு: 2012 ஏப்ரல் 25-ல் எழுதி கல்லூரி நண்பர்களுக்கு மின்னஞ்சல் வழி அனுப்பிவிட்டேன். அன்று இரவு 1:30 மணிக்கும் முழுதாக படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்த நண்பன் விஜய்க்கும், பெற்ற மின்னஞ்சலுக்கும், குறுந்தகவலுக்கும் பதில் தந்த  நண்பன் சண்முகநாதன் உள்ளிட்ட சொற்ப நண்பர்களுக்கும் நன்றி!

வலைப்பதிவில் நமக்கு இது 200-ஆவது பதிவு என்று எண்ணிக்கை காட்டியபோது, சரி கொஞ்சம் (என்) நினைவில் நிற்கும்படி பதிவு போட வேண்டும் என்று தான் இந்தப் பதிவு! சம்பிரதாயப்படி போடவேண்டிய 200 தொட்டதற்கான இணையத்தில் கடந்து வந்த காட்டாறுகள் தொடர்பான (!) சுயசொறிதல் அல்லது சுய(காரணப்)புராணப் பதிவு 250-ஆவது பதிவாக...!

கருத்துகள்

ஆரோணன் இவ்வாறு கூறியுள்ளார்…

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…