முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமா @ 70

எம் பாதை... 
எம் பயணம்... 
அத்தனையும் 
நீ விட்ட வழி!

எம் பார்வை...
எம் நோக்கு...
அத்தனையும் 
நீ தந்த விழி!

எம் வாழ்வின்
பக்கங்களை
நாங்களே செதுக்க...
உளி செய்து தந்தது நீ!

எமைத் தூக்கிச் சீராட்டி
நீ ரசித்ததைப் போல,
உன் பார்வை முதல்
பல்லால் மேலுதடு கடிக்கும்
உன் பழக்கம் வரை 
ரசித்தபடியே வளர்ந்தோம்!

உலகை ரசிக்க
நீதான் கற்றுத் தந்தாய்!
உலகை ரசித்துக் கொண்டுமட்டும் 
இராதே என்று நீயே சொன்னாய்!

கண்டதையும் படிக்காதே
என்று கண்டித்தாய்!
கடல்புறா படித்த போது
சாண்டில்யனிடம் 
வர்ணனைகள் அதிகம்
என்று சலித்துக் கொள்வதுபோல்
பெய்து கொண்டிருந்த
மழையை 
வாசலில் நின்று
ரசித்தபடி
நான் வாசிப்பதை 
அங்கீகரித்தாய்!

அதே மழையில்... 
கண்மாய் மீன்கள் 
எதிர்த்து வரும் 
என்று குடையில் 
மீன்பிடிக்கக் 
கற்றுக் கொடுத்தாய்!
பிடித்த மீன்களை
’பாவம்...’ என்று
மீண்டும் தண்ணீரில் விட்டு
பின்... மழையில் 
ஏன் நனைந்தாய்
என்று நீயே வந்து
மருந்து கொடுத்தாய்!

கிறுக்கன் மாதிரி
பாடிக் கொண்டே
இருக்காதே என்பாய்!
பாடலை ரசித்துப் பாட
எங்களுக்குத் தெரியாமல்
பாடமெடுப்பாய்!

முரண்பாடாய் சிலருக்குத்
தெரிவாய் நீ!
எமக்கும் கூட சில நேரம்...!
உற்று நோக்கினாலோ
முற்றும் உணர்ந்தாலோ தான்
உணர முடியும்
உன்னையும்
உண்மையையும்.

’எதையும் திணிக்காமல்
ஆர்வம் விதைக்க...
எதிர்ப்பது போல்
நடிப்பது
நீ 
கைக்கொண்ட
வித்தை’
என்பது தான்
என் ஆய்வின் துணிபு!

பட்டதைப் பட்டென்று
பேசும் உன் பழக்கத்தால்
நீ செய்த உதவிகளும்
பலருக்கு மறந்து போகும்!
அதில் உன் நற்குணம்
அவர்கள் பார்வையினின்று
மறைந்து போகும்!

நன்றியை எதிர்நோக்கி
நயந்து சிரிப்பதை விட,
உண்மையை வெளிக்காட்டுவதில்
ஒரு நட்டமுமில்லை என்பதை
உணர்த்துபவன் நீ!

’5 வயதில் வியந்து பார்த்தவன்
20 வயது எரிந்து பார்ப்பான்
40 வயதில் தான் மீண்டும் உணர்வான் தந்தையை!’
என்று பொது்வாய்ச் சொல்வார்கள்.

எம் 5 வயதிலிருந்து
ஒருநாளும்
வியப்பு அகலவில்லை...
நொடிப் பொழுதும்
உன் உழைப்பு நீங்கவில்லை...


மாசிலா மனிதநேயத்தை
மாறா கொள்கை உறுதியை
உருக்காய் எம்மில் 
ஊற்றினாய்!
மனிதத்தை விட
மாபெரும் சொத்தில்லை என
மனதில் நாட்டினாய்!

எமைத் தந்தாய்...
எம் அருமைத் தந்தாய்...
வாழ்க சிறந்து..!
வாழ்க.. வாழ்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

மாநாட்டுத் தீர்மானங்களின் தொடக்கத்தில் களத்தில் நின்று போராடி மடிந்த கொள்கை மறவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்கும் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கும் வழக்கம் உண்டு. முற்றிலும் எதிர்பார்க்காத வண்ணம், நம் அனைவரையும் துயரக் கடலில் ஆழ்த்தியதோடு நாம் இன்னும் முனைப்பாக செயலாற்றி, நம் உரிமையை வென்றெடுக்க நம்மைத் தூண்டியுள்ள வீரத் தளபதிகளின் மறைவுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். வீரவணக்கம் செலுத்துவதோடு, தமிழீழத் தாயகத்தில் எழுச்சி ஏற்கும் நாளாக அமைந்துவிட்ட மாவீரர்களின் இறுதி நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். (நன்றி: த.அருள்எழிலன்) வீரவணக்கம்; வீரவணக்கம்! வென்றெடுக்கப் போகும் எங்கள் நாட்டின் வீரவித்துக்கள் நீவீரே! மண்கொள்வதில்லை உங்கள் உடல்கள்...எங்கள் மனங்கொண்டு சினம் வளர்த்து ஈழம் படைக்க உரமாகின்றன! வீரவணக்கம்; வீரவணக்கம்! உம்மைக் கொன்றதும் எங்கள் அமைதி முகத்தைச் சிதைத்ததும் ஒன்றே! பேச்சு தேவையில்லை இனியென சிங்களம் சொல்கிறது! இனி அவர்கள் பேசவேகூடாது என்கின்றன உம்முடல்கள்... செய்து முடிப்போம்! பகையைக் கொய்து முடிப்போம்! வீரவணக்கம்; வீரவணக்கம்!