சரியாக ஓராண்டாகிறது.
விஜய் தொலைக்காட்சியின் 'நீயா? நானா?' விவாதத்திற்கு வந்த அழைப்புக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். மாலை 6 மணிக்கு வந்துவிடுங்கள் என்ற அழைப்போடு, எங்கள் அணியில் பேசத் தோழர்களையும் அழைத்துவருமாறு சொல்லியிருந்தார்கள். உடன் தோன்றிய சிலரில் 'மிதக்கும் வெளி' சுகுணா திவாகரும் ஒருவர். (அப்போது எனக்கு மிதக்கும் வெளியாக அறிமுகம் ஆகியிருக்கவில்லை.) தகவலைச் சொல்லி அழைத்தேன். தன் நண்பர் செந்தில் வந்திருப்பதாகவும், இணையத்தில் ப்ளாக் எழுதுகிற திராவிடத் தமிழர்கள் இன்றைக்கு மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் சந்திக்கவிருப்பதால் தான் அங்கே செல்வதாகவும் தெரிவித்தார். உடன் செந்திலின் எண் வாங்கிக் கொண்டேன். அவரிடம் பேசியபோதுதான், "திராவிட ராஸ்கல்கள் முன்னணி" என்று தாங்கள் இயங்கப் போவாதாக தெரிவித்தார். இணைய ஊடகம் நம் கையை விட்டுப் போய்விடுமோ என்று எண்ணியிருந்தவனுக்கு இப்படி ஒரு சந்திப்பு என்றதும் ஆனந்தம். அதிலும் சென்னை மட்டுமல்லாமல், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தெல்லாம் வந்து சந்திக்கிறார்கள் என்றதும், பழைய பேனா நண்பர்கள் முறையின் நினைவு... முகம் தெரியாமல் பழகியவர்கள் நேரில் பார்க்கும்போது எப்படி இருக்கும்? என்ற கற்பனையே ஆனந்தத்தைத் தந்தது.
ஆர்வம் மேலிட விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேறு சிலரை அனுப்பிவிட்டு, அண்ணன் பெரியார் சாக்ரடீசுடன், நாகேஸ்வரராவ் பூங்கா நோக்கி கிளம்பினேன். நாங்கள் செல்வதற்குள் எல்லாம் ஒரு வழியாக செடிகளுக்கு மத்தியில் செட்டிலாகியிருந்தார்கள். இதுதான் வலைப்பதிவர் கூட்டம் என்பதறியாமல் கொஞ்சம் சுற்றினோம். (ஏனெனில் அங்கே அடிக்கடி பென்சனர் கூட்டம், நிதி நிறுவனத்தில் ஏமாந்தோர் கூட்டம் என ஏதாவது ஒன்று நடந்துகொண்டே இருக்கும்)
நேரடியாக அப்போது வலைப்பூகளில் எழுதாததால், நாங்கள் பார்வையாளராக அறிமுகப்படுத்திக் கொண்டு அமைதியாக உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தோம்(அந்த இருட்டில் கேட்கத் தான் முடிந்தது.). அடர்ந்த இருட்டுக்குள் 'அனல் பறக்கும் விவாத'மாக அப்போதுதான் போலி விவகாரம் சென்று கொண்டிருந்தது. (ஓராண்டு கழித்தும் அதே அ.ப.வி.- ஆனால் அப்போது அது ஏதோ புனைப்பெயர் விவகாரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனுடைய தீவிரமே அண்மையில்தான் தெரிந்தது.)
சிலரின் குரல் வேறுமாதிரி இருந்தபிறகுதான் அது அனைத்து வலைப்பதிவர்கள் சந்திப்பாக மாறிவிட்டிருந்தது தெரிந்தது. எனக்குத் தெரிந்து அதில் பாலபாரதி, (வரவனையான் என்று எனக்குத் தெரியாத) செந்தில், ஜி.கவுதம், பொன்ஸ் அக்கா ஆகியோர் இருந்தனர். சில முகங்கள் இன்று பார்க்கும்போது அடையாளம் தெரிகின்றன('வினையூக்கி'யும் தெரிகிறாரே). இப்போது வலைப்பதிவாளராகவும், அப்போது பார்வையாளராகவும் வந்த வளர்மதியும் என்னைப் போலவே திராவிடப் பதிவர் சந்திப்பு என்று நினைத்துக்கொண்டு பேசியதும், அவரை 'உண்மை'யின் செய்தியாளர் என்று அண்ணன் பாலபாரதி எழுதியதும் அதற்கு நான் தந்த மறுப்பும் இங்கே.
சிலரின் குரல் வேறுமாதிரி இருந்தபிறகுதான் அது அனைத்து வலைப்பதிவர்கள் சந்திப்பாக மாறிவிட்டிருந்தது தெரிந்தது. எனக்குத் தெரிந்து அதில் பாலபாரதி, (வரவனையான் என்று எனக்குத் தெரியாத) செந்தில், ஜி.கவுதம், பொன்ஸ் அக்கா ஆகியோர் இருந்தனர். சில முகங்கள் இன்று பார்க்கும்போது அடையாளம் தெரிகின்றன('வினையூக்கி'யும் தெரிகிறாரே). இப்போது வலைப்பதிவாளராகவும், அப்போது பார்வையாளராகவும் வந்த வளர்மதியும் என்னைப் போலவே திராவிடப் பதிவர் சந்திப்பு என்று நினைத்துக்கொண்டு பேசியதும், அவரை 'உண்மை'யின் செய்தியாளர் என்று அண்ணன் பாலபாரதி எழுதியதும் அதற்கு நான் தந்த மறுப்பும் இங்கே.
சந்திப்பு முடிந்து வெளியில் வந்தோர் 'டீ, போண்டா' சாப்பிடக் கிளம்பியதும், இன்னும் சிலர் அரசுக் கடைக்குச் செல்லக் கிளம்பியதும் நன்கு நினைவிருக்கிறது. வெளியே கிளம்பும்போது எனக்கு முகவரி அட்டை கொடுத்து, தான் வணிகம் குறித்து எழுதுவதாக அறிமுகப்படுத்திக்கொண்ட நண்பரும் நினைவிலிருக்கிறார். கையில் கொண்டுவந்திருந்த உண்மையின் சில பதிவுகளை வந்திருந்தவர்களுக்கு வழங்கிவிட்டு விடைபெற்றோம். அந்த இருட்டோடு பின்னர் வந்த பல இருட்டுகளை நான் இணையத்தின்முன் கழிக்க நேர்ந்ததும் நடந்தது...
இருட்டில் எடுத்த புகைப்படங்கள், முற்றிலும் சிறிய பிளாஷ் கொண்ட எனது கையடக்கக் கேமராவில் எடுக்கப்பட்டதால் ஓரளவு 'இவர்தான் இவர்' என்று அடையாளம் காணலாம். மற்றவை தெளிவில்லாததால் 'blur' செய்து வைத்திருக்கிறேன்.. அம்புட்டுதான்! ஓராண்டு கடந்து இந்தப் படங்களைப் பதிவிடுவதில் மகிழ்வடைகிறேன்.("அடப்பாவி, அப்போ நீ எடுத்த வீடியோவெல்லாம் இந்தக் காலத்தில கிடைக்காதா?"ன்னு கேக்குற பாலபாரதி அண்ணனில் குரல் மீண்டும் ஒருமுறை ஒலிக்கிறது.)
இதிலிருந்து பெறப்படும் செய்தி: நானும் வலைப்பதிவர் குடும்பத்துக்குள் வந்து ஓராண்டு நிறைவடைகிறது. இப்ப சொல்லுங்க நான் சின்ன பப்பாதானே! அந்த மகிழ்ச்சிக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்கு.. என்னன்னு பட்டியலோட திங்கள்கிழமை சொல்றேன்.
கருத்துகள்
அட.... எத்தனை பா...பா... பின்னிட்டடா பிரின்சு!