முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடைத்தாள் பிடுங்கப்பட்ட பின்னும்....(வலைச்சரம் தொடர்கிறது)

வலைச்சர ஒருங்கிணைப்பாளர்கள் கோவிக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். நன்றி கூட சொல்ல முடியலை... இன்னும் ரெண்டு பதிவு இங்கனேயே போட்டுட்டு நன்றி சொல்லிடுறேன்.

வலைப் பதிவுகள் பற்றித் தெரியாத எனக்குத் காலத்திலேயே மின்னஞ்சல்களில் வரும் இவரது கவிதை எனக்குப் பிடிக்கும். நல்லதொரு புகைப்படம் அல்லது ஓவியத்தின் மேல் எழுத்தோவியமாக அனுப்பப்படும் நிலாரசிகன் கவிதைகளின் ரசிகன் நான். அண்மையில் பதிவர் சந்திப்பில் சந்தித்து மகிழ்ந்தேன்.

"திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பார்கள்; தபூசங்கரைப் போல் காதலில் உருக முடியுமா என்பேன் நான். அப்படி உருகி, ஒற்றை முத்தம் தந்து ஏகப்பட்டோரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நந்தாபாய்.
“சந்தைக்கடைத் தெருவில் சத்தம் என்ன புதுசா?நந்தாவோட ப்ளாக்கில் முத்தம் என்ன புதுசா? - அடமுத்தம் என்றால் உதடுகள் குவியும். -ஆனால்உள்ளே உள்ள இதயமும் விரியும்.”
நந்தாபாய் MBBS (MBBS- Muththa Blog; Blog of S….)
சாரிப்பா என்ன போடுறதுன்னு தெரியல.." என்று நான் பின்னூட்டம் போட்டேன்ஒற்றை முத்தம் கவிதையாய் இருந்தாலென்ன... கதையாய் இருந்தாலென்ன... காதல் அவ்வளவுதான்... என்ன நந்தாபாய்!

எனக்கு forward செய்யப்பட்ட ஒரு கவிதையை கூகிளில் தேடிப்பார்த்த்போது அட, இவர் எழுதியது அது... நட்புநாள் ஸ்பெசல்!

படைப்புலகத்துக்கு அல்ல; இவர்களுக்கு வலைப்பூவுலகை அறிமுகம் செய்து வைத்தேன் என்று நான் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
எனது அன்பு நண்பர்கள்; பள்ளிக்காலம் தொட்டுப் பிரியாதவர்கள் இருவர்:

அய்யனாரால் ஏற்கனவே வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். பின்னிரவு அபிமன்யூ கொஞ்சமாய்த்தான் எழுதியிருக்கிறார்கள் அதனால் அனைத்தையும் படித்துவிடலாம்.

இன்னொருவர் நெய்தல் சந்திரசேகர் - பறவைகளைத் தொலைத்துவிட்ட வானத்திற்காக வருத்தப்படுபவர்.

மின்னஞ்சல்களில் அதிகம் அனுப்பப்பட்ட வெட்டிப்பயலின் 'தூறல்' சிறுகதை. கொஞ்சம் தமிழ் சினிமா பாணியில் இருந்தாலும் ரசிக்கத்த க்கது.
இன்னும் நான் அவ்வப்போது வாசித்து ரசித்த கவிதைத் தளங்கள் பெரும்பாலும் அனைவராலும் படிக்கப்படுபவைதான் (மன்னிகணும் மக்கா... சுட்டி கைவசம் இல்லை.)

கருத்துகள்

வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
தொகுப்புக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றிகள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ப்ரின்ஸ்.

இந்த ரணகளத்திலயும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குது போங்க.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டாரா பெரியார்? உண்மை என்ன?

இதைத் தான் அயோக்கியத்தனம் என்கிறோம். எதை? குறளை பெரியார் மலத்துடன் ஒப்பிட்டார்... இதோ ஆதாரம் என்றார்கள்.  எது? இது தான் அது!  "வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது; அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா என்று பதில் கூறுவேன்."  பார்த்தியா... பார்த்தியா... இதைத்தான் சொன்னோம்னு குதிச்ச கூமுட்டைகள், கூமுட்டைகள் சொல்லுக்குக் குட்டிக்கரணம் போட்ட கூறுகெட்டதுகள் எல்லோரையும் நாம் கேட்டுக் கொள்வது, அந்தக் கட்டுரையை முழுமையாகப் படியுங்கள் என்பது தான். அவ்வளவு வேண்டாம்... அதற்கு முன்னேபின்னே என்ன சொல்லியிருக்கிறார்.. அதைப் படித்தாலே புரியும் அவரது நேர்மைத் திறம்கொண்ட பார்வை!  பெரியாருக்குப் பொழிப்புரை, தெளிவுரையெல்லாம் தேவையில்லை. இதோ பெரியார் பேசுகிறார்... கேளுங்கள்! "மக்களுக்கும் நான் குறள் பற்றி பேசுவது மிகுந்த ஆச்சரியமாய் இருக்க...