முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - வரலாற்றுத் தேவை

"இந்தியாவில இருந்து வரும்போது எல்லா மூடப் பழக்கத்தையும்
வச்சுட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன். எல்லாத்தையும் மூட்டை கட்டி கூடவே
எடுத்துட்டு வந்திருக்கீங்களே!"

மலேசியாவில் தமிழர்களை சந்தித்த தந்தை பெரியார் அங்கும் கோயில்களும் மூடப் பழக்க வழக்கங்களும் மிகுந்திருப்பதைப் பார்த்து மனம் நொந்து சொன்ன வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனைத் தமிழர்களுக்கும் பொதுவாகிறது இன்று!
எனது அண்ணன் பெரியார் சாக்ரடீசின் மகளுக்கு தமிழீழம் என்று பெயர் வைத்தோம்.'தமிழீழம் மலர்ந்தது' என்று விடுதலைக்கு நன்கொடையும் கொடுத்தோம்.சொல்வதற்குக் கடினப்பட்டும், பல முறை பிழையாக உச்சரிக்கப்பட்டு, எழுதப்பட்டும் இருந்தாலும், சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு முறையும் பள்ளியில் தன் ஆசிரியைகளுக்கு விளக்கம் சொல்லி "எங்கள் பிரபாகரன் மாமா போராடி வெல்லப் போகும் தமிழர்களின் நாட்டுக்குப் பெயர் தமிழீழம். அது தான் என் பெயர்" என்று வியக்கவைப்பாள் தமிழீழம். இப்போது அவளுக்கு பத்து வயது ஆகிறது.
ஒருமுறை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் இவளது பெயரைக் கேட்டு ஆனந்தத்தில் அழுதுவிட்டார். ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் இவளது பெயரை பிறரிடம் சொல்லச் சொல்லி மகிழ்வார் அண்ணன் அறிவுமதி. தமிழ்நாட்டில் இப்படி எத்தனையோ தமிழீழம், பிரபாகரன், திலீபன், கிட்டு, முல்லைவீரன், யாழ் - போன்ற பெயர்கள் உண்டு.
திராவிடர் கழக மாநாட்டில் பெயர் வைப்பதற்காக தமிழர் தலைவர் அய்யா வீரமணியிடம் ஒரு குழந்தை கொடுக்கப்பட்டபோது, 'பிரபாகரன்' என்று பெயர் சூட்டினார். "அய்யா, கடந்த வருடம் இவனது அண்ணனுக்கும் இதே பெயரைத்தான் சூட்டினீர்கள்" என்றார் குழந்தையின் தந்தை. பிறகு அப்போதைய தளபதி மாத்தையாவின் பெயரோ, கிட்டுவின் பெயரோ சூட்டியதாக நினைவு. அந்தளவுக்கு தமிழீழத்தை நேசிக்கக்கூடியவர்கள் இருக்கிறோம். ஆனால் புலம்பெயர் தமிழர்களில் பலர் வீட்டில் இன்னும் 'வர்ஷினி'களும், 'தர்ஷினி'களுமாக வடமொழிப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. சாய்பாபாவின் பக்தர்களில் பலர் யாரென்றால் ஈழத் தமிழர்களாகத் தான் இருக்கிறார்கள். அவரது கையசைவில் தங்கள் விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களோ என்னவோ? (இந்த லட்சணத்தில் பிரேமானந்தா வேறு புலிகளுக்கும், மகிந்த அரசுக்கும் இடையே பேசி சமாதானத்தைக் கொண்டு வருவார் என பிரேமானந்தா மடத்திலிருந்து சொல்வதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. என்ன நடக்குது இங்க?)
காலமெல்லாம் வழிபட்டும் தங்களைக் காக்காத முருகப் பெருமானையோ, அவரது உறவுக்கார இந்துக் கடவுள்களையோ தமிழர்கள் புறக்கணித்ததாகத் தெரியவில்லை. மாறாக ஈழத்திலிருந்து புலம்பெயரும் போதே முருகப்பெருமானை மூட்டைகட்டி எடுத்துச் சென்று விடுகிறார்கள்.உருவாகப் போகும் தமிழீழம் மூட நம்பிக்கைகளற்ற பகுத்தறிவு தேசமாகத் திகழ வேண்டும்; எனவே சிறப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என தலைவர் பிரபாகரன் விரும்புவதாகவும் தெரிகிறது. ஏனெனில் பகுத்தறிவற்ற தேசம் சிங்களர்களின் கையிலிருந்து விடுதலை பெற்றாலும், மதப் பிடியிலிருந்து மீள்வது கடினம் என்பதை அவர் புரிந்து வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் நம் தமிழர்கள்(தமிழ்) நாடெங்கும் கோயில்கள் கட்டுதல், அங்கேயும் "ஏக மாதா பகுபிதா சற்சூத்திராய நமஹ" 'ஒரு தாய்க்கும் பல தகப்பன்களுக்கும் பிறந்த சூத்திரப் பயலே' என்று மந்திரம் ஓதஇங்கிருந்து பார்ப்பனர்களை இறக்குமதி செய்துகொள்ளுதல் என்று இருக்கிறார்களே என்று வருந்தவேண்டியதாய் இருக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் பார்ப்பனர்களை நேரடியாக ஏற்றுக் கொள்ளவில்லைஎன்று கருதுகிறேன். ஆயினும் பார்ப்பனீயக் கூறுகளாக இந்துமதச் சடங்குகள் அவர்களிடம் மிகுந்திருக்கின்றன.
"நாங்களே சிக்கலில் இருக்கிறோம். எங்களிடம் வந்து கலைநிகழ்ச்சி காட்டி பிச்சையெடுக்க வருகிறாயா?" என்று 1990-களில் ரஜினியின் அய்ரோபிய சுற்றுப்பயணத்தின்போது துண்டறிக்கை விநியோகித்து புறக்கணித்த அய்ரோப்பியத் தமிழர்கள், எந்தக் காலத்திலும் கோயில்களுக்குக் கொட்டி அழுவதை நிறுத்தியபாடில்லை. எனவே அய்ரோப்பாவெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துச் செல்ல உருவாகியிருக்கும் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் வரலாற்றுத் தேவையாகும். அதன் முதல் செயல்பாடாக தெருவில் இறங்கி பணியைத் தொடங்கியிருக்கும் தோழர்கள் தமிழச்சி, மாசிலா ஆகியோருக்கு நம் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.தொடரட்டும் தங்கள் பணி!அழியட்டும் ஆரியப் பிணி!!

கருத்துகள்

TBCD இவ்வாறு கூறியுள்ளார்…
வெளிநாட்டிற்கெல்லாம் சரி..உள்நாட்டுக்கு என்ன செய்யுறது..
இத்தனைக் காலம் வாழ்ந்திருக்கிறேன்...பதிவுலகிற்கு வரும் முன்னால் பெரியார் கருத்துக்களோ, சுய மரியாதை இயக்கம் மக்களிடையே ஊடுருவி இருப்பதைப் பார்த்ததில்லை...( நான் பிறந்து வளர்ந்தது மதுரையிலே.ஒரு ரெபன்ரன்சுக்காக)
வி.சபேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் தேவையான நல்ல கட்டுரை. ஈழத்தில் பெரியார் தேவையோ இல்லையோ, ஆனால் ஐரோப்பாவில் கட்டாயம் பெரியார் இயக்கம் தேவை. தமிழ்நாட்டை விட மிக மோசமான முறையில் ஐரோப்பியத் தமிழர்களிடம் மூடநம்பிக்கைகள் வளர்ந்து போய் உள்ளன. மூடத் தனமும், காட்டுமிராண்டித்தனமும் வளர்கிறதே தவிர குறையவில்லை. இங்கே ஆயிரம் பெரியார் இயக்கங்கள் தேவை
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி tbcd மற்றும் சபேசன்.
மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நீங்கள்! தமிழக எண்ணெய்ப் பலகாரத்தின் நிறுவனர் தேவசகாயம் அவர்களின் முயற்சியால் சுவரெல்லாம் பகுத்தறிவுக் கருத்துகளை எழுதி வைத்த மதுரை ராதாவின் எழுத்துகளைக் கூடவா பார்த்ததில்லை. ஆச்சரியம்..
ஒரு நாத்திக இயக்கமாக எத்தனை மாநடுகள் பொதுக்கூட்டங்கள் மதுரையில் நடந்திருக்கின்றன. எனது 5 வயதிலிருந்து மதுரைக்கு பல முறை கூட்டங்களுக்காக வந்திருக்கிறேன் நான். என்னய்யா இப்படி சொல்லுகிறீர்கள்?

ஜெர்மனியில் உங்கள் பணிகளை அவசியம் எதிர்பார்க்கிறோம் சபேசன். உங்களின் வெப் ஈழம்.காம் ஆற்றிவரும் பணிகள் நாங்கள் அறிந்ததல்லவா?
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
பால் அபிஷேகம்,சந்தண அபிஷேகம்
என்று பல.தேங்காய் உடைப்பது,தீர்த்தம் இதெல்லாம் உடல் நலத்திற்கு உகந்ததல்ல என்று சில நாடுகளில் தடை.
சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.அதற்கு வரிசையில் நின்று கையேந்தி கொஞ்சம் எண்ணெய் வாங்கி அதை வீட்டு எண்ணெயுடன் சேர்த்துத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் பற்பலக் கோவில்கள்.அதிலுள்ள பார்ப்பனர்கள் பயன் ரோல்ஸ் ராய்சு கார்,பங்களா ,உடலெங்கும் தங்கம் இது கானடா நாட்டு வேடிக்கை.டொராண்டோ ஒரு நகரில் மட்டும் 45கோவில்களாம்
அமெரிக்கா,இங்கிலாந்து மற்ற பல நாடுகளில் தமிழர்கள்,இந்தியர்கள் கோவில்கள் எங்கெங்கும்.

குழந்தைகள் கேள்விகள் கேட்கின்றனர்.எப்படி ரெண்டு Girl Friends?Why weapons?Stories don't make sense.
பணம் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.கோவிலுக்கு மட்டும் சென்று காணிக்கை செலுத்தினால் போதும்.

பல கோவில்கள் நீதி மன்றத்தில் வழக்குகளில் யார் பெரியவர் என்ற சண்டைகளில்.

மனித நேயம் வேண்டுமா?மனு நீதி வேண்டுமா?

மனிதநேயப் பற்றாளர் பெரியார் விழிப்புணர்வு மத வெறிகள் இருக்குமிடமெல்லாம் கட்டாயம் வேண்டும்.
ஆங்காங்கே உள்ள விழிப்புணர்வாளர்கள் சேர்ந்து உழைப்போம்.
periyarinternational@yahoo.com
Yogi இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ் நலமா? தங்கள் பதிவினை இங்கு மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
:)

http://netrikan.blogspot.com/2007/09/blog-post.html
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி தோழர் PRINCENRSAMA.
kiddy ppl இவ்வாறு கூறியுள்ளார்…
காலதாமதமாக
பார்த்திருக்கின்றேன்.

நன்றி தோழர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam