முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'சிவாஜி' பேரைச் சொல்லி சிக்கன் நூடுல்ஸ்

ஜென்ம சாபம் அடைய.... சீ.... ஜென்ம சாபல்யம் அடைய சிவாஜி படத்தையும் ஸ்ரேயாவையும் பாருங்க-ன்னு ஒரு பக்கம் எல்லாரும் விளம்பரம் குடுக்க...
படத்தைப் பார்த்துட்டு வந்த மக்களெல்லாம் அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்-ங்கிற ரீதியில பதிவு போட்டு பயமுறுத்த...

இந்தக் கூட்டத்தில போயி சிவாஜியை பார்க்கிறதானு முடிவெடுக்குறதுக்குள்ள... படம் பாதியிலேயே படுத்துக்கிச்சு-ன்னு செய்தி வந்துடுச்சு...

சரி, ஒரு 50 நாள் அவங்க ஓட்டுனதுக்குப் பிறகு டிக்கெட் விலை குறையும் அப்புறம் பார்ப்போமுன்னு, நானும் தம்பியும் முடிவெடுத்துஆல்பர்ட் திரையரங்குக்கு கிளம்பினோம். அப்பவும் பார்க்கலை. அது ஏன்னு கடைசியில சொல்றேன்.

சரி. இந்த முறையாவது பார்ப்பதுன்னு முடிவெடுத்து ரெண்டாவது தடவையா மூனுபேரு கிளம்பினோம்.

நல்லா காத்தோட்டமா இருக்குதே டிக்கெட் விலை குறைவாத் தானே இருக்கும்-னு நினைச்சா குறைந்தபட்சம் ரூ.70/- பொட்டிக்குள்ள உட்கார்ந்து பார்க்க ரூ.85-ன்னு போட்டிருக்காங்க...

இந்தப் படத்தை காசு கொடுத்து பார்க்கக்கூடாதுன்னு ஏற்கனவே நினைச்சு வச்சிருந்தேன். சரி, தம்பி கூப்பிடுறானேன்னு போனா இன்னும் ரேட் கூடப் போட்டுக்கிட்டு இருக்காங்க (சரி, போட்ட முதலை எப்படித் தான் எடுக்குறது. படம் பார்க்க வந்தவன் கண்டிப்பா டிக்கெட் வாங்கிடுவான்-னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை.. அடியே இதெல்லாம் இங்க வேகாதுடீய்ய்ய்)

"இந்தப் படத்துக்கெல்லாம் இவ்வளவு கொடுக்கமுடியாது" னு சொல்லிட்டு எதிர்-ல இருந்த கடையில போயி சிக்கன் நூடுல்ஸ் ஒன்னும், கோமாதா நூடுல்ஸ் ஒன்னும் வாங்கி மூனுபேரும் ஒரு புடி புடிச்சுட்டு (நல்ல சுவை), 3 பாதாம் பாலையும் உள்ள தள்ளிட்டு பில்-லைப் பார்த்தா 66 ரூபாய்தான். ஒரு ஆள் டிக்கெட்டில 3 பேரு வயிறு நிறைய சாப்பிட்டாச்சே! சரி. மிச்ச 4 ரூபாயை பரிமாறினவருக்கு tips கொடுத்துட்டு... ரெண்டு டிக்கெட்டுக்கான 140 ரூபாயை மிச்சப் படுத்திட்டோம்.

பணம் கொடுத்துட்டு வெளியில வந்தா, தம்பி சொன்னான்:

"இனிமே அடிக்கடி சிவாஜி படம் பார்க்க வரணும்டா"

Thanks to Shankar, AVM & Sivaji Rao

"இனி சிக்கன் நூடுல்ஸ் என்று சொல்லாதீர்கள்; 'சிவாஜி' படம் என்று திட்டமிட்டு வாருங்கள்"

பின்குறிப்பு: படத்தில இருக்கிறது நாங்க இல்லைங்க.. மலேசியத் தமிழர்கள் யாரோ எடுத்த படம்.. சும்மா மேட்டருக்காக கூகிள்-ல கிடைச்சது.

முதல் தடவை ஏன் பார்க்கலைன்னு சொல்லலையே. அப்பவும் இதே மாதிரிதான் படம் பார்க்கப் போயி வேறொரு கடையில சிக்கனைப் பதம் பார்த்தோம். ஆனா அந்த கடையில நூடுல்ஸ் நல்லா இல்ல போங்க

கருத்துகள்

வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
இல்லையே அங்கே 40 மற்றும் 50 தானே கட்டணம் , படம் வந்த புதிதில் தான் அதிகம் , தற்போது இந்த கட்டணத்தில் தான் அங்கு நான் பார்த்தேன், அனேகமாக 50 நாள் சமயத்தில் என நினைக்கிறேன், ஆனாலும் மேலும் 200 ரூபாய் கூடுதல் செலவு ஆனது, பக்கத்தில் ஒரு அருமையான டாஸ்மக் பார் இருக்கே அங்கே போயிட்டு தான் படம் அதனால் தான் :-))

நீங்கள் அந்த எம்பீ ஹோட்டல்(ஆல்பர்ட் தியேட்டர் எதிரில்) கீழ இருக்கும் இடத்தில் தான் சிக்கன் நூடில்ஸ் சாப்பிட்டு இருக்கிங்க , நானும் அங்கே தான் சாப்பிட்டேன்.

ஆனால் அந்த பாரில் சில்லி சிக்கன் அனியாய விலை 40 ரூபாய் சொல்றான். வழக்கமாக 25 தான் மற்ற இடத்தில்!நீங்கள் அந்த பார் பக்கம் போனாலும் சில்லி சிக்கன் தவிர்க்கவும்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இல்லையப்பா! நிஜம்மாவே 70 ரூபாய்தான் இப்ப விக்கிறான். வேணுமின்னா ஒரு போட்டோ எடுத்துப் போடுறேன்.
அப்புறம், டாஸ்மாக் போற பழக்கம் கிடையாதுங்க...
சிக்கன் நூடுல்ஸ்-உம், பீப் நூடுல்ஸ்-உம் சேர்த்து அவ்வளவுதான் வந்தது.
ஜமாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
Excellant.

உருப்படியான காரியம் செய்தீர்கள். நானும் உங்கள் கொள்கைதான். காசு கொடுத்து பார்ப்பதில்லை அப்படத்தை. நெட்டில் (சவுதியல்) இங்கு போட்டு விட்டார்கள். பார்த்து தன்மானத் தமிழினத்தை நினைத்து ஒரு பாட்டம் அழுதுதான் தீர்க்க முடிந்தது. சிவாஜி என்ற பேயரைக் கேட்டாலே எங்கிருந்துதான் பறந்து வருவாரோ இந்த வவ்வால். ரஜனி காட்டும் இருட்டுலகில் முட்டி மோதி முகம் உடையாமல் இருந்தால் சரி.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
கல்க்குறீங்க சாமி.. கோபப்படாதீங்க நான் சொன்னது நீங்க நெனக்கற சாமிஇல்லங்கோய்...
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
இணையத்தில எங்க கிடைக்குதுன்னு கொஞ்சம் சொல்லிட்டிங்கன்னா நானும் பார்த்துக்குவேன். சிக்கன் நூடுல்ஸ் செலவு கூட இல்லை
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றிங்க அனானி! வாங்க சேர்ந்து கலக்குவோம்!
ஜோ/Joe இவ்வாறு கூறியுள்ளார்…
கருமம் .’சிவாஜி’ -ன்னா ஒரு படத்துக்கு பேருண்ணு ஆயிப்போச்சு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…