முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமிதாப்-பிடம் பாடம் கற்க வேண்டிய ரஜினி!

"அமிதாப்-பை விஞ்சிவிட்டார் ரஜினி...!"

"ரஜினிக்குத் தான் இந்தியாவில் அதிக ஆதரவு"

என்றெல்லாம் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருந்த வேளையில் வெளிவந்தது அமிதாப் நடித்த 'சீனி கம்' திரைப்படம். வழக்கமாக இந்திப் படங்கள் அதிகம் பார்க்காத நானும் இளையராஜாவின் இசை.. அதுவும்.. ராஜா இசையமைத்த பழைய தமிழ்ப் பாடல்களின் 'ரீமிக்ஸ்' பாடல்களை ராஜாவே செய்திருக்கிறார் என்றதும் ஆர்வம் பொங்கியது...

"விழியிலே..." பாடலையும், "மன்றம் வந்த தென்றலுக்கு..." பாடலையும் திரும்பக் கேட்கப் போகிறோம் என்று ஒரு ஆர்வம் வேறு..ராஜா தனது பழைய பாடல்களையே இன்றைய ஸ்டீரியோ மற்றும் துல்லிய இசையில் கேட்கவேண்டும்; அதையும் ராஜாவே செய்ய வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்லிக் கொண்டிருப்பேன். என் ஆசை நிறைவேறியது என்ற மகிழ்ச்சி வேறு.

மொழி புரிகிறதோ இல்லையோ இசையை திரையரங்கில் கேட்டுவிட வேண்டுமென்று ஆவல் ஒருபக்கம் என்றால் 'Sugar Free Romance' என்ற அழகான சொல்லாடல் ஏற்படுத்திய ஆர்வம் ஒருபக்கம்.

ஒரு வழியாக ஈகாவுக்கு படம் பார்க்கக் கிளம்பினோம்... நான், தம்பி புருனோ, தோழன் வெற்றிமணி (கொஞ்சம் ஹிந்தி புரியக் கூடியவர்) மூவரும்!படம் இயக்கிய பால்கி, ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராம், இசையமைப்பாளர் மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இங்கிலாந்தில் ரெஸ்டோரெண்ட் நடத்தி வரும் தலைமை chef (பழைய கபில்தேவ் குடுமி வைத்த)அமிதாப் திருமணமாகாத அறுபதின்மர். அவரது தாய், பக்கத்து வீட்டில் அமிதாப்-ன் செல்லமாக கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுமி, கடையில் பணியாற்றும் நபர்களிடம் கறாராக நடந்துகொள்ளும் தலைவர் என்று போகிறது அமிதாப்-ன் வாழ்க்கை.
'புலாவ்' சாப்பிட வந்து சுவை பற்றி இங்கிலாந்துக்கு வந்திருக்கும் தபு அடிக்கும் கமெண்ட்-ல் கடுப்பாகிப் பேசும் மோதலில் தொடங்குகிறது 65 வயது அமிதாப், 35 வயது தபு நட்பு. அது கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறி, மெல்ல அதை அமிதாப்பின் அம்மாவிடமும் சொல்லிவிட்டு திருமணம் செய்ய உறுதி எடுக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் தன் தந்தையிடம் அனுமதி வாங்க அமிதாப்பை இந்தியா அழைக்கிறார் தபு! அமிதாப்-பை அவர் ஒரு ரிட்டையர்டு ஆளாகவே பார்ப்பதும், குடும்பம் குழந்தைகள் பற்றி விசாரிப்பதும் நெளிய வைக்கிறது இருவரையும்! தன்னை விட மூத்தவரான அமிதாப்பை தனது மகளுக்கு மணம் முடிக்க ஒப்புவாரா தந்தை.. அவர் காந்தீய வழியில் முரண்டு பிடிக்க... பதிலுக்கு தபு முரண்டுபிடித்து ஒருவழியாக ஒப்புக் கொள்கிறார் திருமணத்திற்கு..

இந்த வேளையில் வழக்கம்போல் இங்கிலாந்தில் சிறுமி இறந்துவிடுகிறார். இணைகிறார்கள் இருவரும். ஆங்காங்கே பழைய காட்சிகளை நினைவுபடுத்தினாலும் சில காட்சிகள் சுவையானவை. வேலை நேரத்தில் செல்போன் அடித்தால் பிறரைத் திட்டும் அமிதாப்-புக்கு தபு போன் செய்து விட, அலறும் செல்பேசியை எடுக்கத் தேடும் காட்சி, தடுமாறித் தடுமாறி ஆணுறை கேட்கும் காட்சி, தபு சொல்லியதற்காக மூச்சுப் பிடித்து ஓடும் காட்சி என ரசிக்க வைக்கிறார் அமிதாப். படத்தையும் நன்கு ரசிக்கலாம்.

சரி, அமிதாப்பிடம் பாடம் கற்க வேண்டும் ரஜினி-னு சொன்னேனே... வேறென்ன வயதுக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது எப்படி என்பதைத் தான்!

பின் குறிப்பு: சன் தொலைக்காட்சியில், "பாரதிராஆஆஜா வாஆஆரம்" வந்தபோது அறிவிப்பாளர் 'தூரன்கந்தசாமி' அறிவித்தார் முதுமைக் காதலை அழகாய்ச் சொன்ன 'முதல் மரியாதை' என்று! அதுமாதிரி இந்தப் படமும் ஒரு முதுமைக் காதல்னு எடுத்துக்கிட்டாலும், பெண்களின் முதுமைக்காதல் இங்கே இவ்வளவு அழகாக சொல்லப்படவில்லை. அப்படி நான் திரைப்படவிழாவில் பார்த்த திரைப்படம் ஒன்று இருக்கிறது. குறிப்புகளோடு விரைவில் எழுதுகிறேன்.
அதுவரை சீனிகம்-இல் இளையராஜாவின் இனிய இசையைக் கேட்க.
பதிவிறக்கம் செய்ய....
Baatein Hawaa (குழலூதும் கண்ணனுக்கு)
Baatein Hawaa (குழலூதும் கண்ணனுக்கு)
Cheenikum (மன்றம் வந்த...)
Jaane Do Na (விழியிலே...)
Sooni sooni (மன்றம் வந்த...)

கருத்துகள்

வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
எப்படிங்க இப்படிலாம் ஒப்பீடு செய்ரிங்க,

அமிதாப் ரஜினியை விட மூத்தவர், மேலும் அமிதாப் ரீ எண்ட்ரி செய்த பிறகு தான் வயதுக்கு ஏற்ற வேடம் என மாறினார்(வேற எதுவும் தறலை) ரஜினி நடித்த பாஷா படத்தை இந்தியில் லால் பாஷா என்று அதே போல இளம் ஹீரோ போலத்தான் நடித்தார் அமிதாப்.

இன்னும் சில வருடங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவார் ரஜினி, தற்போது கூட அதிக இடைவேளை விடக்காரணமே இதோடு போதும் என்று அவர் நினைப்பதால் தான், ஆனால் அவர் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்து விடுகிறார்கள்.

ஒரு வேளை அமிதாப் எந்த வயதில் அப்படி மாறினாரோ அதே வயதில் இவரும் அப்படி மாறிக்கொள்வாரோ என்னமோ!

அமிதாப்பிற்கு அப்படி பட்ட வாய்ப்பு இல்லை, ரஜினிக்கு வாய்ப்பு உள்ளது என்பதையு கவனத்தில் கொள்ளவேண்டும்!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ரஜினி என்கிற நடிக்க்த் தெரிந்த நடிகனை சூப்பர் ஸ்டார் பட்டம்கட்டி வீணடிக்கிறோம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள் வவ்வால்!
பொன்வண்டு இவ்வாறு கூறியுள்ளார்…
பிரின்ஸ், சீனி கம் பாடல்கள் குறித்து நான் ஏற்கனவே ஒரு பதிவிட்டிருக்கிறேன். இன்னும் படம் பார்க்கவில்லை.

http://ponvandu.blogspot.com/2007/06/cheeni-kum.html
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Nanbar Vavval,

Rajini's Basha is the remake of Amithab's HUM and NOT otherwise. Infact, rajini played the inspector brother role in the Hindi version.

Amithab handled aging very decently after the arrival of his son. Our heroes after becoming grandparents, still continue to expose and exploit teen age heroines.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…