முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புது போர்டு! அதே வீடு!!

"கமெண்ட் போடுங்க பரிசை வெல்லுங்க" அப்பாவியார் அறிவிச்ச போட்டியில லக்கியின் பதிவைப் பார்த்துத் தான் கலந்துகொண்டேன்.

சரி, நாமளும் ஒரு கமெண்ட் போட்டுவைப்போமேனு போனா, அங்க ஒரு பதிவும் போடச் சொல்லிட்டாங்க.

சரின்னு வழக்கம்போல "செல்லாத்தா... செல்ல மெயிலாத்தா..." தளத்தில் ஒரு பதிவும் போட்டுட்டு வலைச்சரத்தைத் தொகுக்கப் போயிட்டேன். சனிக்கிழமை வந்தா அப்பாவியோட மெயில்!

'பிரின்சு நீங்க ஜெயிச்சுட்டீங்க... இப்போதைக்கு யார்க்கிட்டேயும் சொல்லாதீங்க... உங்களுக்கான தளத்தை பதிவு பண்ணிட்டு அறிவிப்போம்'னு சொல்றார். நெசம்மா எனக்கு நம்புவதா இல்லையான்னு தெரியல... சரின்னு உறுதிப்படுத்திக்கிட்டு என்ன பெயருன்னு முடிவு செய்ய அய்யாகிட்டயும் தங்கைகிட்டயும் கேட்டேன்.

முந்தைய ஒருங்கிணைந்த முகவை (ராமநாதபுரம்) மாவட்டத்தில் இயக்கம் வளர்த்ததோடு, எங்கள் குடும்பத்தையே பெரியார் கொள்கையில் உருவாக்கிய, நூற்றாண்டு காணப்போகும் என் தாத்தா என்.ஆர்.சாமி (NRS) அவர்களின் பெயரால் அமைய வேண்டும் என்று கேட்டதும் ஒப்புக்கொண்டு ennares.info பதிந்தும் விட்டார் அப்பாவி!

அதன் பின்னர் நான் கேட்ட '.info' '.net'ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்... நீங்க தர்ற இந்த சைட்டை நான் எப்ப னும் போனற பல்லைப் பிடித்துப் பார்க்கும் கேள்விகளுக்கும் கூட பொறுமையாக பதில் தந்தார். அறிவிப்பும் வெளியிட்டுவிட்டார். அவருக்கும், அவரது நிறுவனத்துக்கும், தகவல் தந்த லக்கிக்கும் நன்றிகள்!

இந்தப் பதிவு எழுதத் தொடங்கி பாதியில் விட்டுவிட்டு, ஊருக்குக் கிளம்பிவிட்டதால் மிகத் தாமதமாக 23.09.07 அன்று வெளியிடப்படுகிறது.

மன்னிக்கவும்..


பதிவுலகினரை சந்தித்து ஓராண்டு ஆனதென்று மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே பரிசாக வலைச்சரம் தொகுக்கும் பணி, சொந்த பெயரில் வலைதளம் என வழங்கி ஊக்குவிக்கும் என் வலைச் சொந்தங்களுக்கு நன்றிகள்! நன்றிகள்!


இனி சிரமப்பட்டு 'princenrsama.blogspot.com' னு அடிக்க வேண்டாம் மக்களே!

'ennares.info'ன்னு சுருக்கமா அடிங்க போதும். புது போர்டு போட்டுவிட்டாலும் தனியிடம் வாங்கததால் அதே வீட்டில் இருக்கிறேன். அடுத்த ஆண்டுக்குள் இந்தத் தளம் விரிவுபடுத்தப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

Appaavi இவ்வாறு கூறியுள்ளார்…
மறுபடியும் வாழ்த்துக்கள் பிரின்சு! :-)
கார்த்திக் பிரபு இவ்வாறு கூறியுள்ளார்…
hi add me my page link in ur blog

its a googlepage for tamil free e books

http://gkpstar.googlepages.com/

thanks for adding my page

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…