ஜென்ம சாபம் அடைய.... சீ.... ஜென்ம சாபல்யம் அடைய சிவாஜி படத்தையும் ஸ்ரேயாவையும் பாருங்க-ன்னு ஒரு பக்கம் எல்லாரும் விளம்பரம் குடுக்க...
படத்தைப் பார்த்துட்டு வந்த மக்களெல்லாம் அந்தக் கருமத்தை நானும் பார்த்தேன்-ங்கிற ரீதியில பதிவு போட்டு பயமுறுத்த...
இந்தக் கூட்டத்தில போயி சிவாஜியை பார்க்கிறதானு முடிவெடுக்குறதுக்குள்ள... படம் பாதியிலேயே படுத்துக்கிச்சு-ன்னு செய்தி வந்துடுச்சு...
சரி, ஒரு 50 நாள் அவங்க ஓட்டுனதுக்குப் பிறகு டிக்கெட் விலை குறையும் அப்புறம் பார்ப்போமுன்னு, நானும் தம்பியும் முடிவெடுத்துஆல்பர்ட் திரையரங்குக்கு கிளம்பினோம். அப்பவும் பார்க்கலை. அது ஏன்னு கடைசியில சொல்றேன்.
சரி. இந்த முறையாவது பார்ப்பதுன்னு முடிவெடுத்து ரெண்டாவது தடவையா மூனுபேரு கிளம்பினோம்.
நல்லா காத்தோட்டமா இருக்குதே டிக்கெட் விலை குறைவாத் தானே இருக்கும்-னு நினைச்சா குறைந்தபட்சம் ரூ.70/- பொட்டிக்குள்ள உட்கார்ந்து பார்க்க ரூ.85-ன்னு போட்டிருக்காங்க...
இந்தப் படத்தை காசு கொடுத்து பார்க்கக்கூடாதுன்னு ஏற்கனவே நினைச்சு வச்சிருந்தேன். சரி, தம்பி கூப்பிடுறானேன்னு போனா இன்னும் ரேட் கூடப் போட்டுக்கிட்டு இருக்காங்க (சரி, போட்ட முதலை எப்படித் தான் எடுக்குறது. படம் பார்க்க வந்தவன் கண்டிப்பா டிக்கெட் வாங்கிடுவான்-னு அவங்களுக்கு ஒரு நம்பிக்கை.. அடியே இதெல்லாம் இங்க வேகாதுடீய்ய்ய்)
"இந்தப் படத்துக்கெல்லாம் இவ்வளவு கொடுக்கமுடியாது" னு சொல்லிட்டு எதிர்-ல இருந்த கடையில போயி சிக்கன் நூடுல்ஸ் ஒன்னும், கோமாதா நூடுல்ஸ் ஒன்னும் வாங்கி மூனுபேரும் ஒரு புடி புடிச்சுட்டு (நல்ல சுவை), 3 பாதாம் பாலையும் உள்ள தள்ளிட்டு பில்-லைப் பார்த்தா 66 ரூபாய்தான். ஒரு ஆள் டிக்கெட்டில 3 பேரு வயிறு நிறைய சாப்பிட்டாச்சே! சரி. மிச்ச 4 ரூபாயை பரிமாறினவருக்கு tips கொடுத்துட்டு... ரெண்டு டிக்கெட்டுக்கான 140 ரூபாயை மிச்சப் படுத்திட்டோம்.
பணம் கொடுத்துட்டு வெளியில வந்தா, தம்பி சொன்னான்:
"இனிமே அடிக்கடி சிவாஜி படம் பார்க்க வரணும்டா"
Thanks to Shankar, AVM & Sivaji Rao
"இனி சிக்கன் நூடுல்ஸ் என்று சொல்லாதீர்கள்; 'சிவாஜி' படம் என்று திட்டமிட்டு வாருங்கள்"
பின்குறிப்பு: படத்தில இருக்கிறது நாங்க இல்லைங்க.. மலேசியத் தமிழர்கள் யாரோ எடுத்த படம்.. சும்மா மேட்டருக்காக கூகிள்-ல கிடைச்சது.
முதல் தடவை ஏன் பார்க்கலைன்னு சொல்லலையே. அப்பவும் இதே மாதிரிதான் படம் பார்க்கப் போயி வேறொரு கடையில சிக்கனைப் பதம் பார்த்தோம். ஆனா அந்த கடையில நூடுல்ஸ் நல்லா இல்ல போங்க
கருத்துகள்
நீங்கள் அந்த எம்பீ ஹோட்டல்(ஆல்பர்ட் தியேட்டர் எதிரில்) கீழ இருக்கும் இடத்தில் தான் சிக்கன் நூடில்ஸ் சாப்பிட்டு இருக்கிங்க , நானும் அங்கே தான் சாப்பிட்டேன்.
ஆனால் அந்த பாரில் சில்லி சிக்கன் அனியாய விலை 40 ரூபாய் சொல்றான். வழக்கமாக 25 தான் மற்ற இடத்தில்!நீங்கள் அந்த பார் பக்கம் போனாலும் சில்லி சிக்கன் தவிர்க்கவும்!
அப்புறம், டாஸ்மாக் போற பழக்கம் கிடையாதுங்க...
சிக்கன் நூடுல்ஸ்-உம், பீப் நூடுல்ஸ்-உம் சேர்த்து அவ்வளவுதான் வந்தது.
உருப்படியான காரியம் செய்தீர்கள். நானும் உங்கள் கொள்கைதான். காசு கொடுத்து பார்ப்பதில்லை அப்படத்தை. நெட்டில் (சவுதியல்) இங்கு போட்டு விட்டார்கள். பார்த்து தன்மானத் தமிழினத்தை நினைத்து ஒரு பாட்டம் அழுதுதான் தீர்க்க முடிந்தது. சிவாஜி என்ற பேயரைக் கேட்டாலே எங்கிருந்துதான் பறந்து வருவாரோ இந்த வவ்வால். ரஜனி காட்டும் இருட்டுலகில் முட்டி மோதி முகம் உடையாமல் இருந்தால் சரி.