முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடஒதுக்கீடு இடைக்காலத் தடை: நம் கடமை

உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து(stay) தீர்ப்பு அளித்துள்ளது. இந்த அரசியல் சட்டத்திற்கு விரோதமான தீர்ப்பு ஒடுக்கப்பட்டோரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"1931-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் இதை ஏற்க முடியாது. அதன்பின் சூழல்கள் மாறியுள்ளது. இப்போது சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்கள் யார் என்பதை மத்திய அரசு தெளிவாகக் கூற வேண்டும். இது வாக்குவங்கியைக் கணக்கில் கொண்டு இயற்றப்பட்ட சட்டம்" என்றெல்லாம் தன் போக்கில் உளறியிருக்கிறார்கள் உச்சிக்குடுமி உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
"வாக்குவங்கியைக் குறிவைத்துத் தான் இடஒதுக்கீடு" என்பது அப்பட்டமான இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் வெற்றுக்கூச்சலாகும். அதையே நீதிபதிகள் பயன்படுத்தியிருப்பது அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுகிறது.சரி, "1931-ன் படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை இல்லை; எனவே இப்போது ஜாதி வாரியாக கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும்" என்கிறது தீர்ப்பு! அதாவது பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற கருத்தில்தான் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் சொற்படியே வருவோம். வாக்குவங்கியைக் குறிவைத்துத் தான் இடஒதுக்கீடு என்றால் இடஒதுக்கீட்டால் பலன் பெறுவோர் அதிகம் என்றுதானே பொருள். அப்படி இருக்க, பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறைந்திருப்பது போன்ற தோற்றத்தை அடுத்தடுத்த வரிகளிலேயே போட்டு, தங்கள் அவசர ஆத்திரப் புத்தியைக் காட்டிக்கொண்டுள்ளனர் இரண்டு பார்ப்பனரல்லாதாத உயர் ஜாதி நீதிபதிகள்.
ஜாதி வாரியாக எடுக்கப்பட்ட பழைய கணக்கெடுப்புகளைக் காட்டக்கூடாது; சமூக அளவில் பிந்தங்கியவர்களை அடையாளம் காட்டவேண்டும் என்று சொல்லும் நீதிமன்றம்தான் - இடஒதுக்கீட்டின் மூலம் நாட்டைத் துண்டாடப் பார்ப்பதாகத் தாவிக் குதிக்கிறது. எத்தனை முரண்பாடுகள்.
சரி, சந்தடி சாக்கில் சிந்து பாடுவதைப் போல "சமுதாயத்தில் பிந்தங்கியவர் களோடு,'பொருளாதாரத்தில்' பிந்தங்கியவர்கள்" என்றும் ஒட்டுப் போடுகிறது உயர்ஜாதி ஊசி!
உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் முக்கியத்துவம் இப்போது இன்னும் நன்றாகத் தெரிகிறது.இதற்கு நமது எதிர்ப்பையும், தமிழர்களின் உணர்வையும் காட்டும் விதத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் 31.3.2007 அன்று தமிழகம் தழுவிய அளவில் முழு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இதில் அனைத்துத் தரப்பாரும் கலந்து கொண்டு நம் உணர்வைக் காட்ட வேண்டியது அவசர, அவசியமாகும்.
மாணவர்களின் பங்கெடுப்பும் இதில் மிகவும் அதிகமானதாக இருக்கவேண்டியது அவசியமாகும். மாணவர் போராட்டத்தத் தவிர்க்கத் தான் தேர்வு அதற்கான தயாரிப்புகள் என்று மாணவர்கள் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில் தீர்ப்பு வருகிறது. ஆனாலும் நாங்கள் விழிப்போடிருக்கிறோம் என்பதை சமூகத்திற்குக் காட்டவேண்டிய தருணத்திலிருக்கிறோம்.

கருத்துகள்

சிவபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்தில் முழுமையாக உடன் படுகிறேன்.

வேலை நிறுத்ததால் இழக்கப் போவைதைவிட இந்த தடை உத்தரவால் நாம் இழந்த்தது ஏராளம். இரு கோடுகள் தத்துவம் தான்..

தமிழக அரசின் கரங்களை வழுப்படுத்துவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இல்லை நம் அனைவருக்கும் இழப்பே!!
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான அலசல்.

//வேலை நிறுத்ததால் இழக்கப் போவைதைவிட இந்த தடை உத்தரவால் நாம் இழந்த்தது ஏராளம்.//

வழிமொழிகிறேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
பந்தில் சன் டிவியும் கலந்து கொள்ளுமா? இல்லை மசாலா படம் போட்டு, அதிக டிஆர்பி பெற்று காசு பார்ப்பார்களா?
கூலிவேலை செய்யும் அன்றாடங்காய்ச்சிகள் மட்டும் ஒரு நாள்பட்டினி கிடக்க வேண்டும்
சன் டிவி நிர்வாகம் மட்டும் கூடுதல் விளம்பரம் பெற்று அதிக லாபம் சம்பாதிக்கும் ,
சூப்பர் சமுக நீதி
BadNewsIndia இவ்வாறு கூறியுள்ளார்…
Prince,

உங்க‌ள் கோப‌ம் புரிந்தாலும், இந்த‌ இட‌ ஓதுக்கீட்டை ஒரு விளையாட்டாக‌ விளையாடும் அர‌சிய‌ல் தொட‌ருவ‌தில் என‌க்கு சிரிதும் உட‌ன்பாடில்லை.

உச்ச‌ நீதிம‌ன்ற‌ம் கேட்க்கும் புள்ளிவிவ‌ர‌ங்க‌ளை ச‌ம‌ர்ப்பித்துவிட்டு அடுத்த‌ கட்ட‌ம் என்ன‌வென்று பார்ப்ப‌தே ச‌ரி.

உங்கள் பார்வைக்கு
சோத்துக்கட்சி இவ்வாறு கூறியுள்ளார்…
SC/ST-க்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த வித மாற்றமும் இல்லையே.

OBC மக்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும், ஓபிசி பிரிவுகளில் உள்ள சாதி மக்கள் இன்னமும் நசுக்கப் படுகிறார்களென்று.

எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று சொன்னபோது கிளம்பிய எதிர்ப்பு அறியாததா? குறிப்பாக ஓபிசி சாதியினர் இன்னமும் பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஏமாற்றுத்தனம்

இந்த பந்த், வோட்டு வங்கிக்காக கருணாநிதி ஆடும் நாடகம்.

இப்போது விதித்திருப்பது, வெறும் இடைக்காலத் தடை மட்டுமே, காசுகள் பரிமாறப்படலாம், நீதிபதிகள் விலை பேசப் படலாம், அல்லது மிரட்டப்படலாம், ம்ம்...நம் இந்தியநாடு..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…