முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகளிர் நாள் சிந்தனை

*இந்து சமூகம் என்று சொல்லப்படும் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம சொத்துரிமை வேண்டும்.
(26 27.5.1928-இல் மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத இளைஞர் மாநாட்டுத் தீர்மானம்).

*பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலையில் பெண்களையே அதிகமாக நியமிக்கவேண்டும். ஆரம்பப்பள்ளிக் கூட உபாத்தியாயர்கள் வேலைக்குப் பெண்களையே நியமிக்கவேண்டும்.
*ஆண்கள் தங்கள் மனைவிகள் காலம் சென்று விட்டால் மறு விவாகம் செய்துகொள்ள உரிமை இருப்பதுபோலவே எல்லாப் பெண்களுக்கும் புருஷன் இறந்துபோனால் மறு விவாகம் செய்துகொள்ள உரிமை வேண்டும்.
*ஒவ்வொரு வாலிபர்களும் கூடுமானவரை தங்களுக்கு ஏற்ற விதவைகளையே விவாகம் செய்துகொள்ள வேண்டும்.
(1718.2.1929-இல் செங்கற்பட்டில் நடைபெற்றமுதல் சுயமரியாதை மாநில மாநாட்டுத் தீர்மானம்)

*சொத்தில் உரிமைப் பாத்தியம் குழந்தைகளுக்குக் கார்டியன் பாத்தியம் சுவீகாரம் எடுத்துக்கொள்ளல் இவற்றில் ஆண் பெண் இருபாலருக்கும் சம உரிமை தேவை.
*மணமக்களுக்குள் வாழ்க்கை நடத்துவதில் கசப்புணர்வுகள் வந்தால் அவர்கள் விவாகத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றவேண்டும்.
*பெண்களுக்கு விலை கொடுக்கும் வழக்கம் ஒழியவேண்டும்.
(7 8.4.1931-இல் செட்டிமார் நாட்டு முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம்)

*பெண்கள் உண்மையான விடுதலையும் சுதந்திரமும் சமதர்ம ஒழுக்கமும் பெறவேண்டுமானால் அதற்கு இடையூறாய் உள்ள பிள்ளைகளைப் பெறுதல் என்னும் கர்ப்பத்தை அடக்கி ஆளவேண்டும்.
(8 9.8.1931-இல் விருதுநகரில் நடந்த இரண்டாவது சுயமரியாதைப் பெண்கள் மாநாட்டுத் தீர்மானம்)

*விவாகங்களைப் பதிவு செய்யவேண்டும்.
*சென்னையில் உள்ள விதவைகள் விடுதியில் பார்ப்பனப் பெண்களுக்கு மட்டும் தனிச்சலுகை இருப்பதை மாற்றவேண்டும்.
*பெண்களுக்கு அரசியலில் ஆண்களைப் போல் எல்லா உத்தியோகங்களையும் அடைய சுதந்திரமும் கவுரவ ஸ்தாபனங்களில் சரிசமமான பிரதிநிதித்துவமும் கிடைக்கும்படி செய்யவேண்டும்.
(3031.3.1935-இல் விருதுநகரில் முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டுத் தீர்மானம்)

*சர் ஹரி சிங்கோர் அவர்கள் விவாகரத்துச் சம்பந்தமாய் இந்திய சட்டசபையில் கொண்டுவர இருக்கும் சட்டத்தை ஆதரிக்கிறோம். பொது ஜனங்களும் இந்தச் சட்டத்தை வெகுவாக ஆதரிக்கவேண்டும்.
(2.12.1933 இல் சிவகங்கை சுயமரியாதை மாநாடு)

*பெண்களின் திருமண வயது 16-க்குமேல் இருக்கவேண்டும்.
(20.11.1943-இல் செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு).


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதே மாதிரிதான் இவை எல்லாம்.ஒரு சொட்டு ரத்தத்தில் உடலின் ஆரோக்கியத்தைக் கண்டு பிடிப்பதுபோல ஒரு சில தீர்மானங்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.உலகம் முழுவதும் மகளிர் நாள் இன்று கொண்டாடப்படுகிறதே - அத்தகைய அமைப்புகளுக்கு திராவிடர் கழகத்திற்கென்று உள்ள இத்தகைய பின்பலமும் வரலாற்றுப் பெருமையும் சாதனைகளும் இருக்க முடியுமா? கண்டிப்பாக இல்லை - இல்லவே இல்லை. கற்பனை செய்துகூடப் பார்க்கப்பட முடியாத காலங்களில் பகுத்தறிவுப் பகலவனின் ஒளியில் பூத்த கருத்து மின்னல் பூக்கள் இவை.இந்தத் தீர்மானங்கள் சிலவற்றை இன்றைக்குக் கூட சீரணிக்க முடியாத அளவுக்கு ரத்தக் குழாய் வெடிப்புக்கு ஆளாவோர் உண்டு. தொலைநோக்காளர் தந்தை பெரியார் அவர்களோ அவரின் காலத்தை வெல்லும் வேக ஓட்டத்தில் போகிற போக்கில் உதிர்ந்துவிட்டுச் சென்றவை இவை!உலக மகளிர் நாள் கொண்டாடும் அன்பர்கள் அமைப்புகள் அரசுகள் இந்த இயக்கத்தின் சீர்மையை உள்வாங்கிக் கொண்டு உரத்த பார்வையோடு மக்களிடம் இச் சிந்தனைகளை கொண்டு செல்ல ஒத்துழைப்பார்களா? உலக மகளிர் நாளில் கழகம் வைக்கும் வேண்டுகோள் இதுதான்.

மீதி - வரும் சனியன்று திருவொற்றியூரில் நடக்க இருக்கும் பெண்கள் விடுதலை மாநாட்டில்!திருவொற்றியூர் - நீதிக்கட்சி தன்மான இயக்க வரலாற்றில் வரலாற்று முத்துகளைத் தூவி நிற்கும் பேரூர்!திருவொற்றியூர் சண்முகனார் பற்றி `குடியரசு மிக விரிவாகவே பேசுகிறது.அத்தகு ஊரில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒப்பரிய மாநாடு இது. பெண்களால் என்ன செய்ய முடியும் - என்ன சாதிக்க முடியும் என்று கேட்கிறீர்களா - சனியன்று திருவொற்றியூருக்கு வந்து பாருங்கள் - புரியும்!

நன்றி - விடுதலை(08-03-07)
www.viduthalai.com

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…