முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீசன் பிசினசில் ஏசு பெருமான்!

தீபாவளிக்கு வெடிக்கடை, பொங்கலுக்கு கரும்புக் கடை, வெயிலுக்கு இளநீர்க்கடை என்று சீசனுக்கு சீசன் தொழில் மாற்றுபவர்களைப் பார்த்திருப்போம்.

அதேபோல, எப்போதும் E.N.T. Specialist (காது, மூக்கு, தொண்டை நிபுணர்) மாதிரி செவிடர் காது கேட்க வைக்கும், குருடர் கண் பார்க்க வைக்கும், முடவர் கால்களை இயங்க வைக்கும் சர்வ வல்லமை படைத்த எல்லாம் வல்லவராகிய 'ஏசு'வும், அவரை சந்தைப்பபடுத்தும் சீடர்களும் சீசன் பிஸினசில் இறங்கியிருக்கிறார்கள்.

இது தேர்வுக் காலமல்லவா? அதனால் பள்ளிகளின் தேர்வு எண்ணிகைய உயர்த்த ஜெபக்கூட்டங்களை நடத்தி வருகிறார்களாம் தினகரன், பால் தினகரன் குடும்பத்தினர். ஒட்டுமொத்தமாய் 100% தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் கிடைக்கட்டும் நாமும் நம்புவோம். மானவர், மாணவியர் படித்து நல்ல மதிப்பெண் எடுத்தால், திறமையைத் திருடி பலன் அனுபவிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சரி! சரி! பிசினஸ்-னு இறங்கியாச்சு! அப்புறம் எதையும் விட்டு வைக்கக் கூடாது! இது கிரிக்கெட் சீசன் ... வாங்க பால் தினகரன் தலைமையில் ஜெபம் பண்ணுவோம்!
(எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ' தினகரன் & கோ போல் நடியுங்கள்... சாரி... ஜெபம் பண்ணுங்கள்.)

"பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே! தங்கள் பரிசுத்த ஆவியின் பெயராலே howzzatt!! howzzatt!!. நீங்கள் உலகையே ரட்சிப்பவர். உங்கள் பிள்ளைகள் விளையாடும் இந்திய அணி ரன் எடுக்க ரட்சிப்பீரா....க!"

"அப்பம் தந்து அதிசயம் அருளிய ஆண்டவரே! - world
கப்-பையும் சுட்டுத்தந்து அருள்வீராக!"

"உங்கள் பிள்ளைகள் மன்றாடிக் கேட்கிறோமைய்யா!!
கர்த்தரே! நாங்கள் நம்புவது ஒருத்தரே!
அருள்வீராக!!!
howzzatt!! howzzatt!!"

கருத்துகள்

அ.மு.க. இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பிடிப் போடு சபாஷு!
ஆமா! அனானியெல்லாம் போட்டீல கலந்துகிறதுன்னா எந்த வாய்ஸ்-ல பேசுறது?
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
voice recorder-ல துணியைப் போட்டுட்டு பேசுங்க! தெரியவா போகுது....
அ.மு.க-வின் முதல் மறுமொழி!
அடியேனை வாழ்த்துங்க! உங்களைமாதிரி அனானிகளெல்லாம் வந்து அடிக்கடி படியுங்க!
சிறில் அலெக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
:)
ம.அ.மு.க இவ்வாறு கூறியுள்ளார்…
என்ன போட்டி? அது என்ன அ.மு.க. வுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது...
இதை மறுமலர்ச்சி அ.மு.க. கண்டிக்கிறது.
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி அலெக்ஸ்!
அய்யய்யோ! இது என்ன வம்பாப் போச்சு!
போட்டி அறிவிப்பு முதல் நாள் போட்டது... காலம் கடந்ததே என்று நிறுத்திவிட்டென். கல்ல்ந்து கொள்ள விரும்பினால் மீண்டும் அறிவிக்கிறேனுங்க!

திரும்ப சேர்த்துடறேன். பார்த்துக்குங்க அனானி... மன்னிக்கணும். மற்மலர்ச்சி அனானி
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
போட்டி அறிவிப்பு:
மேலே காணும் சுவிசேஷ வசனத்தை தினகரன்& கோ போன்ற மயக்கும் குரலில் பேசி அதை உங்கள் பதிவில் இட்டு பின்னூட்டமிடுங்கள்.

பரிசு: தினகரன்& கோ போன்ற வேலை வய்ப்பு பெற சுவிசேஷ நடிப்புக் கல்லூரியில் படிக்க சீட்டு வாங்கித் தரப்படும்.
சிறில் அலெக்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
தினகரன் & கோ வால் ரெம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போலிருக்கு?
:)
டானியல் பிரதீப் சேகர் இவ்வாறு கூறியுள்ளார்…
சகோதரர் பிரின்சு என் ஆர் சாமா,
உங்கள் வேண்டுதலை நம் ஆண்டவராகிய இயேசு கிருஸ்து கேட்டதின் பலன் இந்தியா உலககோப்பையை வென்றது.
முதலில் நமக்கு நாவு உண்டென்று மனதில் தோண்டுவதை எல்லாம் எழுதுவதை விடுங்கள்.
உலகில் அதிகம் பேர் நேசிக்கும் இயேசு கிருஸ்வை உங்கள் பதிவு இம்மியும் பாதிக்காது. கிருஷ்துவத்தையும் கிருஷ்துவையும் பற்றியும் விவாதித்து தெளிவு பெற என்னை நீங்கள் எப்போதும் அணுகலாம்.
Daniel
pdps@ymail.com
9994568435
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நீண்ட நாள் கழித்து இப்பதிவை நினைவூட்டிய தங்களுக்கு நன்றி டேனியல்! உங்கள் கேள்விக்கு எப்போதோ பதில் சொல்லியாகிவிட்டது... அது சரி, 2007-ல கேட்டதுக்கு 2011-ல தான் தருவாரா? அவருக்கு என்ன ent-ல கோளாறா?

//திறமையைத் திருடி பலன் அனுபவிக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். சரி! சரி! பிசினஸ்-னு இறங்கியாச்சு! அப்புறம் எதையும் விட்டு வைக்கக் கூடாது!//

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…