தினமும் வரும் பல மின்னஞ்சல்களிலும், செல்குறுஞ்செய்திகளிலும் நான் ரசிக்கும் வெகு சிலவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள ஆசை. வழக்கமாக மின்னஞ்சல்களை கணினியிலும், செ.கு.செ.க்களை எழுதி அனுப்பியவர் பெயரோடு தொகுப்பாகவும் சேமித்து வைத்துக்கொள்வது எனது பழக்கம்.
அனுப்பியது: சக்தி சரவணன் (பொறியியல் மற்றும் திரைப்பட வல்லுனர்)
இனி நல்ல செ.கு.செ.க்களை தொகுத்து இந்த வலைத்தளத்திலும் பதிந்து, யாம் பெற்ற இன்பத்தை இவ்வுலகுக்கு பகிர்ந்திட விரும்புகிறேன். இதில் இன்னொரு வாய்ப்பும் என்னவென்றால், காலத்துக்கும் அவை நிற்கும். என்னிடமும் சேரும் துண்டுச்சீட்டுகளின்/ கோப்புகளின் எண்ணிக்கை குறையும்.
செ.கு.செ:
என்னதான் பெரிய பக்திமானா இருந்தாலும், அவரால கப்பல் கிளம்புறதுக்கு முன்னாடி எலுமிச்சைபழம் வைக்க முடியாது.
-பகுத்தறிவோடு யோசிப்போர் சங்கம்
அனுப்பியவர்: காமராசு (பச்சையப்பன் கல்லூரி மாணவர்)
மின்னஞ்சல்:
தாஜ்மஹால் ஆக்ரா-வில இருந்து பூனேவுக்கு மாறுதுன்னா உங்களால நம்ப முடியுமா? கொஞ்சம் சிரமம் தான் இல்லையா?
இங்க பாருங்க.
.
.
.
.
.
.
அனுப்பியது: சக்தி சரவணன் (பொறியியல் மற்றும் திரைப்பட வல்லுனர்)
கருத்துகள்
-"பகுத்தறிவோடு யோசிப்போர் சங்கம்"//
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர்கள் அல்லவா நாம்.. பகுத்தறிவோடு யோசிப்போர் சங்கம் மாதிரி தினம் ஒரு சங்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது.. “ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?”