முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருத்தடை டாட்காம் - பாமரன்


"பொதுவாக புளுகுகளைப் பொறுத்தவரை இப்படிப் பிரிக்கலாம். ஒன்று: அண்டப்புளுகு. அடுத்து: ஆகாசப்புளுகு. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது. அதுதான் புள்ளி விவரப் புளுகு"- காட்கோ வாலிஸ்
மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா அல்லது காணாமல் போயிற்றா என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு `புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது "தேசிய மாதிரி கணக் கெடுப்புக் கழகம் அதாவது N.S.S.O (National Sample Survey Organisation).இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் என நீட்டி முழக்க இயலாது. ஆகையால் இனி அது தே.மா.க.க. என்று அழைக்கக் கடவதாக. அப்படி என்னதான் புள்ளி விவரத்தைச் சொல்லித் தொலைத்தது அது? என நீங்கள் அவசரப்படுவது புரிகிறது. ஆனால் தே.மா.க.க. கணக்குப்படி ஒன்று நீங்கள் சொந்த செலவில் செத்துப் போனவராக இருக்க வேண்டும் அல்லது எங்காவது தொலைந்து போயிருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் பிற்படுத்தப்பட்டவர் என்றால்...

ஆம் இந்த `ஒரு மாதிரியான கணக்கெடுப்பின் மூலம் அப்புள்ளி விவரம் சொல்வது இதுதான்:

``இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 41 சதவீதம்தான்.`

`இதிலென்ன சிக்கல்? 41 சதவீதமோ 31 சதவீதமோ எதுவா யிருந்தால் என்ன? கிடைப்பது கிடைத்தால் சரி என எவராவது `தேமே என்று இருந்தால் வந்தது வம்பு என்று அர்த்தம்.

ஏனென்றால் இந்தப் புள்ளி விவரம் வெளிவந்திருக்கும் நேரம் அப்படி. நேரம் என்றதும் எந்த ஜோசியக்காரனையும் தேடிக் கொண்டு ஓட வேண்டியதில்லை. சமீப காலமாக உச்சநீதிமன்றம் உதிர்த்து வரும் முத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

தே.மா.க.க. வின் இந்தக் `கண்டுபிடிப்பு வெளிவந்திருக்கும் நேரம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதா கூடாதா?அளிப்பதாக இருந்தால் அந்த 27 அய்யும் 9+9+9 என்று மூன்றாண்டுகளுக்கு பிரித்து அளிக்கலாமா?அல்லது3+3+3+3+3+3+3+3+3 என்று ஒன்பதாண்டுகளுக்கு ஜவ்வாய் இழுத்து பிரித்துக் கொடுக்கலாமா?

பிரித்துக் கொடுப்பதற்குள் இருக்கின்ற அரசின் ஆயுள் காலம் முடிந்து விடாதா?

ஒரு வேளை முடிந்து தொலைத்தால் வருகின்ற அரசாவது பிற்படுத்தப்பட்டோருக்கு சரியான விதத்தில் ஆப்பு வைக்கும் அரசாக அமையுமா? என்று உச்சநீதிமன்றம் தன் உச்சிக் குடுமியை உசுப்பிக் கொண்டிருக்கிற நேரம் இது.1931 கணக்கெடுப்புப்படி பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52 சதவீதம். ஆக இந்தக் கணக்கை முன் வைத்தே 70 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்கலாம் என்றது காகா காலேல்கர் கமிட்டி. 52 சதவீத மக்கள் தொகைக்கு 70 சதவீதம் கிடைக்காவிட்டால் போகிறது. ஆனால் கிடைப்பதே 27 சதவீதம்தானே என்று எவரும் அங்கலாய்த்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தே.மா.க.க.வின் இந்தப் புதிய 'கணக் கெடுப்பு'.

இதன்படி பார்த்தால் இருப்பதற்கும் வந்திருக்கிறது ஆப்பு என்பதுதான் உள்ளார்த்தம். 52க்கு 27சதவீதம் ஒதுக்கீடு என்றால்... இப்புதிய கண்டுபிடிப்பின்படி 41 சதவீதம்தான் பிற்படுத்தபட்டவர்கள் என்கிறபோது கிடைக்கவேண்டியது கூடுமா? குறையுமா? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

கடைசியாகக் கணக்கெடுத்தது 1931இல் அதுவும் வெள்ளையர்களது ஆட்சிக் காலத்தில். நல்ல வேளையாக 'சுதந்திர இந்தியாவில் கணக்கெடுப்பு நடக்காதது ஒரு விதத்தில் நல்லதுதான்'.

ஆக நமது கேள்விகளெல்லாம் இதுதான்:

1931இல் 52 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் 2005இல் 41 சதவீதமாகக் குறைந்தது எப்படி...?

விவசாயிகளின் ஒட்டு மொத்தத் தற்கொலைகள் மாதிரி பிற் படுத்தப்பட்டோர் எங்காவது கூட்டம் கூட்டமாகத் தற் கொலை செய்து கொண்டார்களா?

(52-41 = 11) இந்த 11 சதவீத மக்கள் எங்காவது ஒட்டு மொத்தமாகத் தொலைந்து போனார்களா...?

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுகிறதே என்கிற விரக்தியில் அவர்கள் வந்த கைபர் போலன் கணவாய் வழியாக இவர்கள் என்னாவது வெளியேறி விட்டார்களா..?

சரி இந்த சர்வே - சப்வே எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும்தானா...?

பிற சாதியினரின் கணக்கை யார் முஷாரப்பா வந்து எடுப்பார்...?

கணிப்பொறியின் ஒரு சுவிட்சைத் தட்டினாலேயே கண்ணிமைக்கும் நேரத்தில் கடலில் விழக் கூடிய ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் இந்தியர்களுக்கு இதில் மட்டும் என்ன சிக்கல்...?

ஆனால் அப்படியும் எடுத்தார்கள் ஒரு கணக்கை. இன்றல்ல 1961இல் தலித் மக்களது கணக்கை. அந்தக் கணக்கும் 45 ஆண்டுகளுக்கு முன்னமே 25 சதம் என்று காட்டியது. ஆனால் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்துவரும் ஒதுக்கீடோ வெறும் 22.5 சதவீதம்.இந்த 22.5 சதவீதத்தையும் எந்த லட்சணத்தில் நிரப்புகிறார்கள் என்பது தெரிந்தவர்கள் 'இந்த நாடு கடலில் மூழ்கட்டும்' என்று மனதார வாழ்த்துவார்கள்.

ஆக இன்று வரை இந்த `சுதந்திர இந்தியாவில் `ஆகா ஓகோ என்று `ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான். அதனால் அவர்களுக்கு மட்டும் இந்தக் `கணக்கெடுப்பு மற்றவர்களெல்லாம் பாவம் மடிப்பிச்சை ஏந்தித்தான் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்த்து ஏதாவது அவர்களுக்குக் கூட்டி கொடுத்தால்தான் அவர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும். என்ன செய்ய...?இதே தே.ம.க.க.வின் 1999 கணக்கெடுப்பு பிற்படுத்தப்பட்டோர் 35.8 சதவீதம் என்கிறது. 1999இல் இந்தக் கணக்கெடுப்பைக் கண்டுணர்ந்த பிற்படுத்தப்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்யாமல் பெற்றெடுத்ததன் விளைவு 41 சதவீதமாக எண்ணிக்கை உயர்ந்ததுதான்.

ஆக அய்ந்து வருடத்தில் அய்ந்து சதவீத வளர்ச்சியைக் காட் டிய இம்மக்கள் 1931லிருந்து 1999 வரை இப்படி ஏடாகூடமான கருத்தடையைக் கடைப்பிடித்திருக்கக் கூடாதுதான்.சரி எப்படித்தான் கண்டெடுத்தார்கள் இந்தப் புள்ளி விவரங்களை என்று கேட்டால் குழப்பத்தில் தே.மு.தி.க.வையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த தே.மா.க.க.

"79306 நகர்ப்புற வீடுகளிலும்,

45377 கிராமப்புற வீடுகளிலும்

இந்த சர்வேநடத்தினோம் என்பவர்களிடம்

சர்வே சரி...எந்த நாட்டில்...

எந்த மாநிலத்தில்..

எந்த நகரத்தில்...

எந்த கிராமத்தில்...

நடத்தினீர்கள்? என்றால் பதிலாக வெறும் காத்துதாங்க வருது.

தங்களது 'அகண்ட பாரதக் கனவில்' பிரிக்கப்படாததற்கு முன்பிருந்த இந்தியப் பகுதிகளில் ஏதேனும் நடத்தியிருப் பார்களோ இந்தக் கணக்கெடுப்பை? வாய்ப்பில்லை.

ஒரு வேளை இந்தக் கணக்கெடுத்த மகான்கள் முன்னொரு காலத்தில் ஆடு மாடு மேய்த்துத் திரிந்த தங்களது பூர்வீக மத்திய ஆசியாவின் கணக்கைத்தான் தவறுதலாக மாற்றிச் சொல்லி விட்டார்களோ என்னவோ..?யாமறியோம் பராபரமே.


காட்கோ வாலிஸ்: பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பெயின் தேசத்தில் வாழ்ந்த புள்ளியில் நிபுணர் என்று சொன்னால் நீங்களும் நம்பத்தான் போகிறீர்கள். ஆனால் உண்மையில் இந்த காட்கோ வாலிஸ் யாரென்பது எனக்கும் தெரியாது என்பதுதான் உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…