முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்புடன் - அடுத்த காப்பி (வித் அனு)

அடுத்தடுத்து காப்பிக் கடை நடத்திக் கொண்டிருக்கும் சன் தொலைக்காட்சியின் அடுத்த கடை!

சன் -னில் வெளிவந்த விளம்பரத்தைப் பற்றியும், கவுதமி நிகழ்ச்சியை நடத்துவது பற்றியும் என் தங்கை சொன்னதுமே "காப்பி வித் அனு"வா என்று கேட்டேன். நிகழ்ச்சியின் முதல் விருந்தினர் யாராக இருக்கும் சொல்லு என்று கேட்கும்போது அது பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களாகத் தானிருக்கும் என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே 'ஆமாம்' என்றாள் தங்கை.

"எப்படிண்ணா கண்டுபிடிச்ச?"
"இதைக் கண்டுபிடிக்கிறதுக்கு C.B.I-யில இருந்து ஆபீசரா வருவாங்க" என்ரு விவேக் பாணியில் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியை எதிர்பார்த்துப் பார்த்தேன்.

கமல் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அல்லவா... நன்றாகத் தானிருந்தது.
சுஜாதா பாணியில் சொல்லவேண்டுமானால் "இடையிடையே அந்த 'லாப்டாப்'பை எடுத்துக் கொடுப்பதும், அதை இயக்க சொல்லித் தருவதும், அதற்கும் ஒரே முறை எடுத்த காட்சியையே திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதும் ஈராக்-கை விட பெரும் போராக இருக்கிறது " என்று சொல்லலாம்.

அது போகக் கடைசியில் கையெழுத்து வாங்கும் அனுவுக்கும், கைரேகை பதிக்கச்சொல்லும் கவுதமிக்கும் எவ்வளவு ஒற்றுமை என்பதற்கு இது ஒன்றே போதுமானது.

கமல் பேட்டியைப் பொறுத்தவரை, சித்தப்பா என்ற முறையில் அனு தவறவிட்ட வாய்ப்பை நண்பர் என்ற முறையில் கவுதமி பயன்படுத்திவிட்டார்.

கமல் அவர்களை கவுதமி, 'சார்' என்றழைப்பதை என் நண்பர்கள் பலர் செயற்கையாக இருக்கிறது என்று சொன்னாலும், இப்படித் தான் அழைத்துக்கொள்வார்கள் என்ற நமது எதிர்பார்ப்பே அதற்கு காரணமாக இருக்கும்.

மற்றபடி, நிகழ்ச்சி வழக்கம் போல் நன்றாகவே இருந்தது. இன்னும் விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளையும் நாம் சன்னில் எதிர்பார்க்கலாம்.

கொசுறு -1:
கடந்த 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியில் 'சத்யராஜ்' அடித்த ஒரு காமெண்ட் நிகழ்ச்சியை கு(உ)றித்தது: "நான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பல வாரங்களாக பார்த்து வருகிறேன்" என்றார்.
பின்குறிப்பு:
'அசத்தப்போவது யாரு'வின் இரண்டாவது நிகழ்ச்சி அது! ஒருவேளை தன் பாணியில் கிண்டலடித்துவிட்டுப்போனாரோ என்னவோ?1


கொசுறு -2:
அண்மைக்காலத்தில் சன் குழுமத்தில் தமிழ்சொற்கள் இடம்பெறுவதாக நண்பர்கள் சொன்னார்கள். குங்குமம் "பெஸ்ட் கண்ணா பெஸ்ட்"டிலிருந்து, "உசத்தி கண்ணா உசத்தி"க்கு வந்திருக்கிறதாமே! அதைப்போலத் தான் 'அன்புடன்' தலைப்புமாக இருக்கலாம். இல்லாவிட்டால், என்ன தலைப்பு வைத்திருப்பார்கள்?

"டீ வித் திருவாளர்"
"கோக் வித் கவுதமி"
இன்னும் வேறு என்னவெல்லாம் இருக்கலாம் என்பதை பின்னூட்டுங்களேன்.


முந்தைய 'அசத்தப்போவது யாரு' பற்றிய பதிவுக்கு.....

கருத்துகள்

Vasantham இவ்வாறு கூறியுள்ளார்…
கமல் interview -ஆ?
என்ன சொன்னார்-னு சொல்லி இருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.

பதிவு-க்கு நன்றி!
-L-L-D-a-s-u இவ்வாறு கூறியுள்ளார்…
விஜய்க்கு ஆப்பு வைக்காமல், சன்னும் தொடர்களை விட்டொழித்து , நல்ல நிகழ்ச்சிகள் வழங்கினால் நல்லது.. புதுமையான நிகழ்ச்சிகளை வழங்காமல், காப்பி அடிப்பது ஏன்?


இதையும் பாருங்கள் .. முக்கியமாக பெணாத்தல் சுரேஷ் பின்னூட்டம் .
Vasantham இவ்வாறு கூறியுள்ளார்…
சன் tv-ல ஒரு Creative team -கூட கிடையாதா? கேவலம்....

என்னமோ போங்க...
கார்த்திக் பிரபு இவ்வாறு கூறியுள்ளார்…
eppo indha program tele cast aguthu?
ச.சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
"கடந்த 'அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சியில் 'சத்யராஜ்' அடித்த ஒரு காமெண்ட் நிகழ்ச்சியை கு(உ)றித்தது: "நான் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பல வாரங்களாக பார்த்து வருகிறேன்" என்றார்.""

விஜய்ல கலக்கப்போவது யாரு பார்த்திருப்பாரு...அந்த ஞாபகத்துல சொன்னாரோ..இல்லை இது cut & paste programme என்று தனது பாணியில் சொன்னாரோ என்னமோ :))
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி வசந்தம், தாஸ்,
கார்த்திக் பிரபு

ஒளிபரப்பு:
ஞாயிறு இரவு 9 மணிக்கு சன் தொலைக்காட்சியில்...
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
பெணாத்தலை முன்னமே படித்துவிட்டேன். நன்றி தாஸ்!
SK இவ்வாறு கூறியுள்ளார்…
இன்னொன்றையும் கவனித்தீர்களா?

ஸன் டிவியுடன் மோத விஜய் தயாராகி விட்டது போலத் தோன்றுகிறது!

கடந்த இரு நாட்களாக இரண்டு விளம்பரங்கள் விஜய்யில் வருகின்றன.

ஒன்றில் ஒரு கிராமஃபோன் 'திருடாதே' பாடலை ஒலிபரப்ப, பூர்ணம் விஸ்வநாதன் குரலில் ஒரு குரல், "மூனுக்கு போலாம் வாங்க" என மறைமுகமாக "சன்னுக்குப் போகாதீங்க எனச் சொல்லுகிறது.

இரண்டாவதில், ரஜினி வாய்ஸில் இன்னொன்றும், என்னதான் குரைச்சாலும் கோழி நாய் மாரி குரைக்க முடியாது கண்ணா எனக் கிண்டல் செய்கிறது!

என்ன நடக்கிறது பார்க்கலாம்!

Weldone Vijay TV!
:))

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…