முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெரிஞ்சா சொல்லுங்க

1. ப்ளாக்கரில் பின்னூட்டம் போடப் போனா அந்த சாளரம்(window) திறப்பதற்குள் பத்து பதிவுகள் படித்துவிடலாம் போலிருக்கிறது. அவ்வளவு மெதுவாக window open ஆகிறது. அது ஏன்? எப்படித் தவிர்ப்பது? எனது கணினியில் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. நல்ல வேகமான கணினிதான்.

2. ப்ளாக்கரில் youtube வீடியோ போட்டாலும், அவர்கள் கொடுக்கும் code-அய் copy செய்து போடும்போது பாதிதான் paste ஆகிறது. மீதி வருவதில்லை ஏன்? இன்னொரு notepad-ல் paste செய்து அதிலிருந்து எடுத்துப் போட்டாலும் வீடியோ வரவில்லை ஏன்?

3. ஒரு முறை ஏற்றப்பட்ட பதிவை/ draft-ல் உள்ள பதிவை மீண்டும் திருத்த edit post கொடுத்து திருத்தி publish செய்தாலும், பழைய வடிவம் தான் மீண்டும் வருகிறது. திருத்த வழியில்லையா?
4. இ-கலப்பை கொண்டு உழுதாலும் மன்னிக்கவும்... எழுதினாலும் எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு கணினியில் (windows xp-ல்) ஆங்கிலத்திலும், தமிழிலும் சேர்ந்தே வருகிறது.
எடுத்துக்காட்டுக்கு அந்த கணினியில் தட்டச்சு செய்தவற்றைப் பாருங்கள்.

''tட்hஹ்aஅmம்iஇzழ்''


ie-ல் தட்டச்சும் போதுதான் இப்படி.... தனியாக notepad/wordpad-ல் சரியாக இருக்கிறது.


5..புதிய பதிவு எழுத நுழையும் போது முதலில் இப்படித்தான் வருகிறது.((வடிவமைப்பு செய்யவோ, படங்கள், இணைப்புகள் கொடுக்கவோ வாய்ப்பில்லாமல் இருக்கிறது. அதன்பிறகு refresh கொடுத்தால் மனதுவைத்தால் வருகிறது. இல்லையென்றால் இல்லை.) இதனால் ஆர்வத்தோடு அமரும் பல நேரங்களில் சோர்ந்துபோகச் செய்கிறது.
சரி பிறகாவது படங்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டுவிட்டால், பிறகு edit post செய்யும்போது வெகு எளிதாகத் திருத்தும் படி இல்லாமல் வெறும் code-களாக வருகிறது. இதனால் படங்களை இணைக்கவோ வடிவமைக்கவோ, வண்ணம் கொடுக்கவோ முடியவில்லை. அது ஏன்?
(இடையிடையே அதிக இங்கிலீஷ் கலந்து எழுதியுள்ளேன். இன்னும் கணினி கலைச் சொற்களில் நான் தேறவில்லை. முடிந்தால் அவற்றுக்கும் நல்ல தமிழ் சொற்களை சொல்லிக் கொடுங்களேன்.)
இன்னும் நிறைய இருக்கு... தெரியாதவற்றை கேட்டுத் தெரிந்துகொள்வதில் எனக்கு வெட்கமில்லை. ஏனெனில் அடுத்த முறை இன்னும் பலருக்கு நான் சொல்லிக் கொடுப்பேன். அதனால் அப்பப்ப கேட்பேன். சுட்டிகளை அனுப்புங்க! இல்லை தெரிஞ்சா சொல்லுங்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…