முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராஜீவ் கொலையும், முள்ளிவாய்க்கால் படுகொலையும் ஆரிய சூழ்ச்சியே!

ஆதரவாக இருந்தவர்களையும் கொட்டிக் கொட்டி எதிர் நிலையில் வைத்திருக்கும் கைக்கூலி தமிழ்த் தேசியங்கள் வாழ்க! என்ன செய்ய வசவாளர்களையும் வாழ்த்தச் சொன்ன அண்ணா எங்கள் முன்னால்!


ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் அனைவர் மீதும்! ஒருபோதும் புலிகளை எதிர்நிலையில் நிறுத்தி விமர்சிக்க முடியாது.
திராவிடப் பேரினத்தின் உரிமைக் குரலின் இன்னொரு வடிவம் அவர்கள் ஏந்திய ஆயுதங்கள்!

அரசியலுக்கு பதிலாயுதம் அரசியல் - இந்தியாவில்!
ஆயுதத்திற்கு பதிலரசியல் ஆயுதம் - ஈழத்தில்!
மாவோவின் கூற்றை மறுபடியும் வாசித்துப் பாருங்கள்!

இங்கு திமுக-வையும், திராவிட இயக்கங்களையும், தலைவர் கலைஞரையும், தமிழர் உரிமையையும் வீழ்த்தத் துடிக்கும் அதே ஆரியம் தான், அங்கே தமிழீழ விடுதலைப் புலிகளையும், மேதகு பிரபாகரனையும், தமிழர் உரிமைப்போராட்டத்தையும் வீழ்த்தத் துடித்தது- துடிக்கிறது.

இங்கு இந்தியா என்னும் பெயரில் நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும், நாடு கடந்தும் ஆரியம் நிகழ்த்தியிருக்கிறது.
புலிகளின் நிலைப்பாட்டில், செயல்பாட்டில், உடனிருப்பதாக அவர்கள் நம்பிய நயவஞ்சகர்களின் சொல்லால் விளைந்த பேரழிவில் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்! அவற்றை எடுத்து வைக்கலாம். விமர்சிக்கலாம். விவாதிக்கலாம்; விவாதிக்கவே கூடாது என்பது பாடம் கற்பதற்குப் பயன்படாது.

ஆனால், இத்துப்போன சில்லுண்டிகளின் செயலுக்கு பதிலடி என்றெல்லாம் கருதி, துச்சமென உயிரை எண்ணி களத்தில் செத்துப் போன ஈழத்துப் போராளிகளைக் கொச்சைப்படுத்த முடியாது.
கலைஞரை மிஞ்சிய அரசியல் அறிவாளிகள், தமிழின - திராவிட இயக்க, திமுக பற்றாளர்கள் விடுதலைப் புலிகளை விமர்சித்துக் கொள்ளுங்கள்.

களத்தில் இருந்த போராளிகளுக்குத் தன்னாலானதை எப்போதும் செய்துவந்தவரும், தானும், இயக்கமும் நேரடியாகத் தொடர்ந்து பாதிக்கப்பட்டபின்னும், ஆட்சியிழந்த பின்னும், அதற்காக ஒருபோதும் தன் தமிழினப் பாசத்தைப் பணயம் வைக்காத தலைவர் கலைஞர் எங்களுக்கு வழிகாட்டுகிறார்.

முடியாத விசயத்துக்குப் பழியேற்கச் சொல்லி கலைஞருக்கும், திராவிட இயக்கத்துக்கும் அவப் பெயர் சூட்டும் அரைவேக்காடுகளையும், புதிய காளான்களையும் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியாதோ, அப்படியே அதற்குப் பதிலடி என்று விடுதலைப் புலிகளையும்,
அதன் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்துவதையும் ஏற்க முடியாது. நம்மை இழிவுபடுத்த நம்மவர்களையே ஏவிவிடும் பார்ப்பன சூழ்ச்சி தான், நம்மையும் கோபமூட்டி எதிர்நிலையெடுக்கச் செய்கிறது.

துரோகம், பதவிவெறி, வந்தேறி என்று நம்மைத் தூற்ற அவர்களுக்கு வார்த்தைகளை வழங்கிய ஆரியம் தான், பயங்கரவாதிகள், கொலைகாரர்கள், மனிதக் கேடயம் என்றெல்லாம் நமக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க முனைகிறது.

இந்தச் சண்டையில் இந்திய தேசியத்தையும், சிங்களக் கொடுங்கோலர்களையும், இவர்களை வழிநடத்தும் ஆரிய சூழ்ச்சி நரிகளையும் கோட்டைவிட்டுவிட்டு நமக்குள் மோதச் செய்யும் போதே, நடப்பது என்னவென்று நமக்குப் புரியாவிட்டால், நாம் பெரியாரை, அண்ணாவை திராவிட இயக்கச் சிந்தனையாளர்களை என்ன படித்தோம்... புரிந்துகொண்டோம்?

அமைதிப் படையை அனுப்பி தமிழர்களைக் கொன்றதும் ஆரியம் தான்! அதிலிருந்து மாறிவிட்டேன், வேறு பாதை தேர்ந்தெடுப்போமென்று மாற்றம் காட்டிய இராஜீவைக் கொன்றதும் ஆரியம் தான்!

கொலைப் பழியை திமுகவை சுமக்கச் செய்ததும் ஆரியம் தான்! ராஜீவ் கொலையைக் காட்டியே தமிழர் உரிமை பேசுவதைத் தடுத்ததும் ஆரியம் தான்!

நளினிக்கு தூக்கை நிறுத்தியபோது திமுகவை பயங்கரவாதத்திற்குத் துணைபோகிறவர் என்றும், சோனியாவை பதிவிரதையற்றவர் என்றும் சொன்னது ஆரியம் தான்! மூவருக்குத் தண்டனையைக் குறைக்கக் கிடைத்த வாய்ப்பை சட்டரீதியாக சிக்கலுக்குள்ளாக்கி, அதிலும் தன்னைக் கெஞ்சச் செய்ததும் ஆரியம் தான்!

தமிழ்ச் செல்வனுக்கு இரங்கற்பா பாடியதற்கு ரத்தம் கொதித்ததும் ஆரியம் தான்! எல்லோர் ரத்தமும் வடிந்தது என்ற பின் ஈழத் தமிழர் ஆதரவு என்று வேடம் போட்டதும் ஆரியம் தான்!

ஒன்றான தமிழரைத் துண்டாடியதும் ஆரியம் தான்! அதற்குத் துரோகத் திரிகளைத் தூண்டியதும் ஆரியம் தான்!

கோபம் கண்களை மறைக்கும்; பழிச்சொல் பதற்றத்திற்குள்ளாக்கும் - மறுக்கவில்லை. அதனினும் நிதானம் நம் உண்மை எதிரிகளை அடையாளம் காட்டும். புரியாதவர்களுக்குப் புரியச் செய்து, எதிரிகளை நோக்கிய போராட்டத்தில் அவர்களையும் இட்டுச் செல்லவே நாம் விரும்புகிறோம். எதிரெதிராய் நம்மையே நிறுத்தி மடிய அல்ல!

https://www.facebook.com/princenrsama/posts/10156246353654625

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…