வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் போலவே, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் இன்றைய பேசு பொருளாக டில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பே இருந்தது!
நீதி கிடைக்குமென நம்பி சாதாரண மக்களும், நீதியை ’வாங்கு’வதற்கென சிலருமாகப் பொதுமக்கள் குழுமியிருக்கும் இடத்தில் நடத்தப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு கடுமையான கண்டனத்திற்குரியது தான். நீதிமன்றத்திற்குள் குத்து, வெட்டு, கொலை நடப்பதை நம்மூரில் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தியாவின் தலைநகரல்லவா? குண்டு வெடித்திருக்கிறது. கடும் கண்டனத்திற்குரிய இந்நிகழ்வை யாரும், எக்காரணத்தைக் கொண்டும் ஆதரிக்க முடியாது.

இதற்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமா? அலட்சியம் காரணமா? CCTV கேமராக்கள் இல்லாத்தற்குக் காரணம் யார்? சகல திறமையும் பொருந்திய நமது இராணுவம், காவல்துறை இவற்றைவிட தீவிரவாதிகள் பெரியவர்களா? உளவுத்துறை என்ன செய்கிறது? இப்படி எண்ணற்ற கேள்விகள் எல்லா ஊடகங்களாலும் கேட்கப்பட்டன. புதிய தலைமுறை நிகழ்ச்சியிலும் கேட்கப்பட்டது.
இந்த விவாதத்தில் கலந்துகொள்ள ஓய்வுபெற்ற இந்திய இராணுவ உளவுப்பிரிவைச் சேர்ந்த கர்னல் ஹரிஹரன் என்பவரும், இதழாளர் பகவான் சிங்-கும் கலந்து கொண்டனர். அக்மார்க் தினமலர் வாசகர் போல, ’அந்நியன்’ பேசும் டயலாக்குகளைக் கொட்டிக் கொண்டிருந்தார் ஹரிஹரன். அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்குதான் காரணம் என்றார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல் பணி பார்ப்பதும், உளவுப் பிரிவில் வேலை பார்ப்பதும் அரசியல்வாதிகள் தான் என்ற உண்மை(!) நமக்குத் தான் தெரியவில்லை போலும்.
பகவான் சிங்கோ, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதான் முக்கியக் காரணம். அவ்ளோ தூரத்தில் இருக்கும் அமெரிக்கா பறந்துவந்து பிற அரபு நாடுகளோடு சண்டை போடுகிற போது, ’பாகிஸ்தானிலிருந்து குண்டு வருகிறது என்று தெரிந்தபின்னும் இந்தியா ஏன் இன்னும் போய் சண்டை பிடிக்கவில்லை’ என்றார்.
மீண்டும் பேசிய ஹரிஹரன், ’கடும் நடவடிக்கை மூலம் அல் கொயிதாவின் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் லஷ்கர் இ தொய்பா, இந்தியன் முஜாஹிதீன் போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளும் ஒழிக்கப்பட வேண்டும். இனிமேல் தீவிரவாதம் செய்தாலும் நாம் நினைத்தது நடக்காது என்று எண்ணும் அளவிற்கு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்” என்று கலர்ச் சட்டையில் வந்திருந்தாலும், கழற்றாத இராணுவப் பச்சையின் முறுக்கோடு பேசினார்.
அதெல்லாம் சரிதான். ரொம்பத் தெளிவா சில இஸ்லாமிய அமைப்புகளின் பெயரை மட்டும் சொன்ன ஹரிஹரன், கடந்த 5 ஆண்டுகளில் இஸ்லாமிய அமைப்புகளால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்துவ அமைப்புகளே காரணம்; ஆர்.எஸ்.எஸ்-சின் பின்னணி தான் இவற்றில் எல்லாம் இருந்திருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் வாய் திறக்கவில்லை.
டில்லி உயர்நீதி மன்றத்தில் குண்டு வெடித்த அந்தப் பகுதியில் CCTV கேமராக்கள் இல்லை என்பதற்காக கவலைப்பட்ட எந்த ஊடகமும், 2008 மும்பைத் தாக்குதல்களின் போது CCTV கேமராக்கள் இருந்தும் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் எதுவுமே வேலை செய்யவில்லையே ஏன்? என்பதையும், அந்த குறிப்பிட்ட நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட ஹேமந்த் கர்க்கரே குறித்தும் மறந்தும் வாய்திறக்கவில்லை.
எஸ்.எம்.எஸ் அனுப்பினார்கள்; பேக்ஸ் அனுப்பினார்கள்; இ-மெயில் அனுப்பினார்கள்; எனவே அவர்கள் தான் குண்டு வைத்தார்கள் என்று பலமுறை முஸ்லீம் தீவிரவாதிகள் ஏற்றுக் கொண்டதாகச் சொல்லப்பட்ட எண்ணற்ற வழக்குகளின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-சின் பயங்கரவாதச் செயல்கள் இருந்திருக்கின்றன என்று அம்பலப்படுத்தியதால் கொல்லப்பட்டவர் தான் ஹேமந்த் கர்க்கரே என்பதையும், இந்த பயங்கரவாதச் செயல்களுக்கெல்லாம் இந்திய உளவுத்துறையின் வழிகாட்டுதலும், தூண்டுதலும் எவ்வளவு இருக்கிறது; அதற்குக் காரணம் இந்திய உளவுத்துறையைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பார்ப்பனியமே என்பதையும் பற்றி எந்த ஊடகமும் கிஞ்சிற்றும் அலட்டிக் கொள்ளவில்லை.
இந்திய உளவுத்துறைக்கு இதிலென்ன பங்கு? ஆர்.எஸ்.எஸ். - இதை செய்ய வேண்டிய அவசியமென்ன? என்று யோசிக்கத் தோன்றுகிறதா? தீவிரவாதிகள் என்றால் முஸ்லீம்கள், முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று பொதுமக்களின் மனதில் பதிய வைக்கவும், அதனூடாக இந்துத்துவ மனப்போக்கை வெகுமக்களிடம் விதைக்கவும் இதை விட சரியான யோசனை உண்டா? இன்னும் நிறைய விவரங்களுக்கு “Who killed Karkare?” நூலைப் படியுங்கள்.
சரி, இப்போ எதற்கு டெல்லியில் குண்டு என்று யோசித்தால், நமக்குக் கிடைக்கும் விடை ஒன்றுதான். அதை அவர்களே (குண்டு வைத்தவர்களே விடுத்திருக்கும் கோரிக்கையின்) சொல்லியிருக்கிறார்கள். அப்சல் குருவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்று ஹர்கதுல் ஜிகாதியிடமிருந்து மின்னஞ்சல் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். மூவர் தூக்குக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், உடன் மற்றவர்கள் எழுப்பும் கேள்வி, ”அப்படியென்றால் அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் இதே நிலைப்பாடுதானா?” என்பது!
மரண தண்டனை வேண்டாமென்றால் எல்லோருக்கும் தான் என்று ஒன்றாய்க் குரல் எழும்பும் வேளையில், மக்களின் நினைவுகளில் இருந்து மங்கிக் கொண்டிருந்த முஸ்லீம் தீவிரவாதிகள் என்ற வெறுப்புணர்வை மீண்டும் விசிறிவிடவும், ”இவய்ங்க எப்பவும் திருந்த மாட்டய்ங்க; இவய்ங்களையெல்லாம் தூக்கில போடணும் சார்” என்று மக்கள் வாயாலேயே மீண்டும் சொல்ல வைக்கவும் தான் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். இதற்குப் பின்னணியில் இருப்போர் யார்? இந்திய உளவுத்துறையின் பங்கு என்ன? என்பது நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும்.
குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படாத நிலையிலும், இந்தியாவின் ஒட்டுமொத்த மனசாட்சியைக் கருத்தில் கொண்டு தூக்குதண்டனை வழங்கப்பட்டிருக்கும் அப்சல் குருவுக்கும் சேர்த்து குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவருக்கு ஆதரவான தீவிரவாதிகள் என்று இருந்தால் அவர்கள் குண்டு வைப்பார்களா?
தீவிரவாதிகளைத் தூக்கு மேடைக்கு அனுப்பிய பின்னும் தொடர்ந்து தீவிரவாதம் நடக்கிறது என்று சொல்வார்களேயானால், நாங்கள் கேட்கிறோம்... “அப்போ, தூக்கு தண்டனையால் குற்றம் குறையும் என்பது பீலா தானே!”
’தீவிரவாதிகள் நினைப்பது நடக்கக்கூடாது; அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடாது’ என்று பேசும் கர்னல்களின் குரலில் ஒளிந்திருக்கும் மரணதண்டனைகளுக்கு ஆதரவான தொனியை கண்டுகொள்ள வேண்டும். ’கசாப்பையும், அப்சல் குருவையும் தூக்கில போடணும்’ என்று இந்திய ஊடகங்கள் மீண்டும் மீண்டும் அலறி கருத்துருவாக்கம் செய்வதற்குத் தான் இந்தக் குண்டுவெடிப்பு என்ற திசையில் ஏன் விசாரிக்கக் கூடாது? இந்திய உளவுத்துறை இத்தகைய செயல்களை செய்யக் கூடியது தான் என்பது அரசுக்கும் தெரியும்.
இன்று கடைசியாய் வந்த செய்தி இந்தியன் முஜாகிதீன் அமைப்பும் குண்டு வெடிப்புக்கு உரிமை கோரியிருக்கிறது என்பது! அதெப்படி, ஒரு குண்டு வெடிப்புக்கு இரண்டு அமைப்புகள் உரிமை கோரும். இந்தியன் முஜாகிதீன் என்றாலேயே அதில் உளவுத்துறையின் பங்கு இருக்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஹர்கதுல் ஜிகாதியா? இந்தியன் முஜாகிதீனா? இந்திய உளவுத்துறையா? அல்லது இ.மு-வைப் போல ஹர்கதுல் ஜிகாதி என்பது இந்திய உளவுத்துறையின் உருவாக்கம் தானா? ஹேமந்த் கர்க்கரே இல்லையே என்று இப்போது தோன்றுகிறது!

கருத்துகள்
மிக ஆழமாக கருத்துக்களை முன்வைக்கும் பதிவு.
இன்னும் கேள்விகளும்,சந்தேகங்களும் வரும்.
இந்த டெல்லி குண்டு வெடிப்புக்கும் என் வன்மையான கண்டனங்கள்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கும் மற்றும் காயமடைந்தோருக்கும் முறையே என் வருத்தம் மிகுந்த ஆழ்ந்த இரங்கல்கள் & அனுதாபங்கள்.
//’கசாப்பையும், அப்சல் குருவையும் தூக்கில போடணும்’ என்று இந்திய ஊடகங்கள் மீண்டும் மீண்டும் அலறி கருத்துருவாக்கம் செய்வதற்குத் தான் இந்தக் குண்டுவெடிப்பு என்ற திசையில் ஏன் விசாரிக்கக் கூடாது?//
---விழிப்புணர்வூட்டும் நேர்மையான கருத்துக்களுடன் மிக தைரியமாக இடப்பட்ட பதிவு சகோ.பிரின்ஸ்.
நன்றி சகோ.
அதற்காக குண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொல்ல வேண்டாம்"
----என்று இந்த "ஈ மெயில் பயங்கரவாதிகளை" நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.
"கசாப்புக்கு தூக்கு தண்டனை வேண்டும்" என்று இதேபோல இன்னுமொரு குண்டு வெடிப்பு நிகழ்த்தும் முன்னரே...
இப்படி குண்டுகள் வைத்து அப்பாவி பொதுமக்களை சாகடிக்கும் இவர்களையும்...
ஏற்கனவே கடந்த பதினைந்தாண்டுகளில் நடந்த ஏகப்பட்ட குண்டுவெடிப்புகளில் ஆதாரங்கள் சாட்சிகளுடன் கைதாகி ஒப்புதல் வாக்குமூலம் தந்து சிறையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை "பெருவாரியான இந்திய மக்கள் விருப்பத்திற்கிணங்க"...
தூக்கில் போட வேண்டும் என்று அன்போடு அரசுக்கும் நீதி மன்றத்துக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்து தீவிரவாதிகள் தான் செய்தார்கள் என்றும்
முஸ்லிம் தீவிர வாதிகள் தான் செய்தார்கள் என்றும்
புறப்பட்டு விட்டார்கள்...
ஏன்யா தீவிரவாதியில கூடவா சாதி மதம் லாம் பார்ப்பீங்க..
மிருகத்தில என்னய்யா மதம் வேண்டி கிடக்குது..
அவனவன் எத்தனை பேரு செத்து போங்களோ உறவினர் யாராச்சுக்கும் என்ன ஆச்சோன்னு பதற்கொண்டு இருக்க..இவரு பாலிடிக்ஸ் பேசறாராம்.