புதிய தலைமுறையின் முகநூல் பக்கத்தில் கீழ்க்காணும் ”விளம்பரம்” ஒன்று வெளியாகிருந்தது. (இது பெய்டு நியூசா? இல்லை கூட்டணி நியூசா?ன்னு தெரியல)
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது,
தமிழக மீனவர்கள் மீது,
இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு
நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார்.
உடனே, அன்றைய இலங்கை பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கேயை,
வாஜ்பாய் தொலைபேசியில்
அழைத்தார்.
“இனி ஒரு துப்பாக்கி தோட்டா,
இந்திய மீனவர்கள் மீது பாயுமானால்,
இலங்கைக்கான
அனைத்து பொருளாதார
உதவிகளையும் உடனடியாக
நிறுத்துவோம்’ என எச்சரித்தார்.
விளைவு, வாஜ்பாய் பிரதமராக
இருந்த வரை, தமிழக
மீனவர்களை தொட்டு பார்க்கும்
தைரியம்,
இலங்கை கடற்படைக்கு இல்லாமல்
இருந்தது.
(https://www.facebook.com/Puthiyathalaimurai.tv/posts/620858547975925:0)
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது,
தமிழக மீனவர்கள் மீது,
இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு
நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார்.
உடனே, அன்றைய இலங்கை பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கேயை,
வாஜ்பாய் தொலைபேசியில்
அழைத்தார்.
“இனி ஒரு துப்பாக்கி தோட்டா,
இந்திய மீனவர்கள் மீது பாயுமானால்,
இலங்கைக்கான
அனைத்து பொருளாதார
உதவிகளையும் உடனடியாக
நிறுத்துவோம்’ என எச்சரித்தார்.
விளைவு, வாஜ்பாய் பிரதமராக
இருந்த வரை, தமிழக
மீனவர்களை தொட்டு பார்க்கும்
தைரியம்,
இலங்கை கடற்படைக்கு இல்லாமல்
இருந்தது.
(https://www.facebook.com/Puthiyathalaimurai.tv/posts/620858547975925:0)
வாஜ்பாய் போன் பண்ணி ரனிலை மிரட்டினாராம். ரனில் சொல்லி, உடனே இலங்கை கடற்படைக்காரனுகள்லாம் துப்பாக்கியைத் தூக்கி பேண்டுக்குள்ள சொருகிக்கிட்டாய்ங்களாம்... என்னங்கப்பா... APCO worldwide கம்பெனியோட கூட்டு எதுவும் வச்சுக்கிட்டிங்களா? அள்ளிவிடுறதில உங்களுக்கு அளவேயில்லையா?
சரி, அன்னாருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு எதிர்த் திசையில் தான் இலங்கை கடற்படை துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டிருந்ததா?
13 நாள், 13 மாதம், அப்புறம் 1999-2004 ல ஒரு 5 ஆண்டுகள் ஆட்சி செய்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் (ரனிலும் இலங்கையில் ஆட்சியிலிருந்த 2001-2004 காலத்தில்) நடந்தவற்றில் எடுத்துக்காட்டுக்கு சில சூடுகள்:
2001 மே 24 - துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் காயம்
2002 ஜனவரி 24 - வேதரண்யம் மீனவர்கள் மீது ஹெலிகாப்டரில் வந்த இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
2002 மே 1 - 30 படகுகளில் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்
2003 ஏப்ரல் 3 - நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
இப்ப எல்லாம் வாஜ்பாய் போன் என்ன அவுட் ஆஃப் ஆர்டர்-ல இருந்ததா? இல்லை... ஒரு வேளை 2004-ல ரெண்டு பேரும் தேர்தல் ல தோற்றதும் போன் பண்ணி மிர(ண்)ட்டியிருப்பாங்களோ?
இந்த வாஜ்பாய் ஆட்சி நடந்தப்போ தான், வெற்றியின் விளிம்பில் நின்ற விடுதலைப் புலிகள் பிடித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரை விடுவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்தியா களத்தில் இறங்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. சிங்களப் படையின் மிகப்பெரிய அழிவைத் தடுத்து, புலிகளின் வெற்றியில் பின்னடைவை ஏற்படுத்தியதும் இந்த உத்தமத் திலகம் வாஜ்பாய் காலத்தில் தான்.
என்னவோ, பா.ஜ.க. வந்தால் தமிழீழத்தை கேக் மாதிரி வெட்டி கையில கொடுத்துருவாய்ங்கன்னு கிளப்புற புரளிக்கு இப்போ புதிய தலைமுறை புதுசா ஒரு கதை கட்டுது... அவ்ளோதான்!
கருத்துகள்