முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈழத்திற்கான தீர்வு 19-ஆம் வார்டிலா?


ஒரு வீடியோ கேம் விளையாடி, வெற்றி வாய்ப்பை நெருங்கிச் சென்று, பின் இழந்தால் கூட, மீண்டும் முதல் நிலையிலிருந்து தான் தொடங்க வேண்டும். விட்ட இடத்திலிருந்து தொடங்குவதற்கு வாய்ப்பில்லாத சூழலில் படிகளைக் கடந்து தான் ஏறமுடியும். ஒரே தாவலில் உயரத்தில் ஏறி நிற்க வாழ்க்கையும் போராட்டமும் சினிமா படமல்ல. 

ஈழப் போராட்டத்தை ஒரு ஹாலிவுட் சண்டைப் படத்துக்கு நிகராகப் பார்த்து, 'எப்படியும் இறுதியில் கதாநாயகன் வென்று விடுவான்'என்று நம்பிக்கொண்டிருந்துவிட்டு, முடிவு எதிர்மறையாகிவிட்ட பின்னும்....

இன்று மீண்டும் மெல்லத் துளிர் விடத் தொடங்கியிருக்கும் வாய்ப்பை, உடனடியாக உச்ச நிலைக்குக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவார்ந்த செயலா? 

உலகநாடுகள் மெதுமெதுவாகத் தான் நகரும்... நம் அவசரம் அவர்களுக்கில்லை; நம் வலி அவர்களுக்குத் தெரியாது. அய்.நா.வில் கடந்த முறை கொண்டுவரப்பட்ட தீர்மானத்தைக் காட்டிலும் இந்தத் தீர்மானம் பரவாயில்லை என்றால் இதை ஒரு நகர்வாகக் கருதித் தான் ஆதரிக்க வேண்டும். உலக நாடுகள் தங்களின் சொந்த நலனையும் கவனத்தில் கொண்டு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும். பொறுமை இல்லாத இனம் போராட்டத்தில் இறங்கக் கூடாது.


தனித் தமிழீழமே தீர்வு என்பதில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில் மனித உரிமைப் போராட்டமாக உலகம் முழுக்க இதை எடுத்துச் செல்வது எத்தனை முக்கியமானது என்பதை அறியாமலிருந்தால் என்ன செய்வது? உடனடியாக வாக்கெடுப்பை நடத்து என்று நாம் கோரிக்கை விடுக்கலாம். ஆனால் உலக நாடுகள் அவ்வளவு வேகமாக நம் திசையில் பயணிக்காது. 

பலமுறை தலைவர் பிரபாகரனே தெளிவுபடுத்தியதைப் போல, போராடுதல் நம் கடமை. ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு கால எல்லையும் வயது எல்லையும் கிடையாது. இன்றைய போராட்டத்துக்கு நாளை ஒரு நாள் பதில் கிடைக்கலாம். லட்சம் பேரோடு ஒருவனாக சுட்டுக்கொல்லப்பட்ட பாலச்சந்திரன் இன்று ஒரு பெரும் எழுச்சியை உலகெங்கும் ஊட்டுவதைப் போல!

அய்.நா. என்பது பான் கீமூனும், விஜய் நம்பியாரும் மட்டுமல்ல... நவநீதம் பிள்ளையும் சேர்த்து தான் அய்.நா! வல்லரசு நாடுகளின் உதவியுடன் இலங்கை போர் நடத்தியது என்று சொன்ன நாம், அதே வல்லரசு நாடுகளின் துணையோடு தான் இலங்கையை எதிர்க்கவும் முடியும். இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் அதற்கான ஒரு படி தான். அதை எதிர்ப்போம் என்று பேசுவது அறிவுடைமை ஆகாது! அய்.நா.வில் பேச, உலக நாடுகளை ஒன்றிணைக்காதது தான் நமக்கு ஏற்கெனவே ஏற்பட்ட பேரிழப்புகளுக்கான காரணம் என்ற அடிப்படை உண்மையை அடிபட்ட பின்னும் புரிந்துகொள்ள மறுப்பது அரசியலற்ற நடவடிக்கையாகும்.

அய்.நா.வை எதிர்க்க வேண்டும்; அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் பேசுவது ஒரு புறம் இருக்க, ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முக்கியமானது. உலகின் பார்வை ஈழப் பிரச்சினையில் பட வேண்டும் என்று தானே குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம். இன்று அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதில் தானே நம் கவனம் இருக்க வேண்டும். 

அமெரிக்கத் தீர்மானம் கொஞ்சமும் இலங்கையைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று இந்தியா கருதுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதே தீர்மானத்தைக் குறிவைத்து கொடிய விசம் ஒன்று சு.சாமி என்ற பெயரில் ராஜபக்சேவைப் பார்த்துவிட்டு மேலைநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறதே! வலிக்காது என்றால் தடுக்க ராஜபக்சே ஆள் அனுப்புவானா? அது குறித்தெல்லாம் ஏன் இங்குள்ளவர்கள் அதிகம் பேசுவதில்லை.

இந்தியாவில் காங்கிரஸ் செய்ய முடியாத ஒன்றைக்கூட சு.சாமி போன்ற மாமாக்கள் செய்துவிடுவார்கள் என்ற எச்சரிக்கை ஏன் இல்லை? காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றே ஈழ ஆதரவு என்பது தமிழகத்திலுள்ள சில சில்லறைக் கட்சிகளுக்குப் பலனாக இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அதனால் விளையப்போவது ஒன்றும் இல்லை. பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் போல, இந்திய அளவில் பலரின் கவனத்தையும் கொண்டுவரக்கூடிய வாய்ப்புள்ள டெசோ போன்ற அமைப்பை,  குறுகிய அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது - எதிர்ப்போரை, அவர்தம் சுயநலத்தையே அடையாளம் காட்டும். 

அமெரிக்கத் தீர்மானத்தை டெசோ ஆதரிக்கச் சொல்கிறது என்று ஒரு கும்பல்  அதனை எதிர்க்கத் தொடங்கியிருக்கிறது. 

ஈழப்பிரச்சினைக்கான தீர்வு திமுகவை - காங்கிரசை எதிர்ப்பதில் தான் இருக்கிறது என்போர் திமுக-காங்கிரஸ் எதிர்ப்பினால் பலன் அனுபவிக்க விரும்புவோரே அன்றி, ஈழப் பிரச்சினையில் அக்கறை கொண்டோர் அல்ல. நாளை 19-ஆம் வார்டு கவுன்சிலரைத் தோற்கடிப்பதில் தான் ஈழத்திற்கான தீர்வு இருக்கிறது என்று அந்த கவுன்சிலர் தேர்தலில் டெபாசிட் வாங்காத வேட்பாளர் யாராவது சொல்லக்கூடும்.

இன்று உலக அளவில் கொண்டு செல்லப்பட வேண்டிய ஒரு சிக்கலை உள்ளூருக்குள் வைத்துக் கொள்ள முயற்சிப்போர் அதைத் தாண்டி சிந்திக்காதோரேயாவர்.

ஒன்று மட்டும் தெரிகிறது... ஈழப் பிரச்சினை தங்கள் கையை விட்டுப் போய்விடக் கூடாது என்பதில் சிலருக்கு அக்கறை இருக்கிறது. அவர்கள் கையில் தான் இருக்கிறது என்று எவரும் நினைத்தால், நினைபோர் மீது நமக்கு அனுதாபம் இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...