முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அவலை நினைத்து உரலை இடிக்காதீர்! ஆத்திரப்பட்டு அறிவை இழக்காதீர்!

கோபம் அறிவை மறைக்கும் என்ற அரிச்சுவடி தெரியாதா உங்களுக்கு?


’ஈழத்தை அழித்த காங்கிரசை ஒழிக்கிறேன்’ பேர்வழி என்று சொல்லிக் கொண்டு அதனினும் கொடிய விசத்தை, தமிழகத்தை அழிக்கும் பார்ப்பனிய பார்த்தீனியத்தைக் கொண்டு வந்து அமர்த்தத் துடிக்கிறீர்களே! கொஞ்சம் உளச் சுத்தியோடும், அறிவு நாணயத்தோடு சொல்லுங்கள்! ஈழத்தை காங்கிரசு மட்டும் அழித்ததா? அல்லது இவர்களைப் பயன்படுத்தி பார்ப்பனியம் அழித்ததா? தனித் தமிழீழம் அமையக் கூடாது என்று துடிப்பவர்கள் யார்? ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் உணர்வு என்ன இவ்விசயத்தில்! தமிழர்களுக்கென்று நாடு அமைவதை விரும்பாதவர்கள் பார்ப்பன நலம் காக்கத் துடிப்போர் அல்லவா?

63 சீட்டுக்காகக் கூட்டணியை விட்டு வெளியில் வரத் தயாரான கலைஞர், ஈழத் தமிழர் அழிவின் போது காங்கிரசு கூட்டணியை விட்டு வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கேட்கிறார் அண்ணன் சீமான்!
எப்படி இருந்திருக்கும்? 
வெளியில் வந்து பினாத்த முடியாமல் உள்ளே முடங்கியிருப்பார் சீமான்! 
67-இல் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்ட காங்கிரஸ் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்திருக்கும். அ.தி.மு.க.வின் ஆதரவோடு ஆட்சியில் காங்கிரஸ் அமர்ந்திருந்தால் அழக்கூட உரிமையில்லாமல் அடக்கப்பட்டிருப்போம்! வெளியில் உலாத்தி, மூச்சைப் பிடித்து கையை உயர்த்தி கலைஞரைத் திட்ட முடியாது. 

இன்று நீங்கள் மலர வைக்கத் துடிக்கும் இலைக்கார அம்மா வந்தால் முதல் இடுப்பொடிப்பு உங்களுக்குத் தான் என்பதை மறந்துவிடாதீர்கள். வெற்று முழக்கங்களும், அரசியல் தெளிவற்ற தன்மையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் தமிழின உணர்வை இல்லாது அழித்தொழித்துவிடும்..
ஆரியத்தின் பகடைக் காய்களே! முதலில் வெட்டுப் படப்போவது நீங்கள் தான் என்பது புரிகிறதா? 
உடனிருந்து உற்றுளி உதவியோருக்கே உட்கார இடம் கிடைக்கவில்லை. 

சொன்ன சொல்லுக்கும், விட்ட காற்றுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற உணர்வோடு திரியும் அம்மையாரின் கொடுக்கு  பிடித்து அலைகின்றீர்களே! உங்கள் பணிக்கும், தீட்டிய மரத்தில் கூர் பார்க்கத் துடிக்கும் கோடரிக் காம்பின் நுனிக்கும் என்ன வேறுபாடு? 

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தோற்றால், மீண்டும் அவரது அரசியல் வாழ்க்கை எழுச்சி பெறுதல் என்பது இயலாத காரியம். அப்படி ஜெயலலிதா தமிழக அரசியலை விட்டு வெளியேறினால், மீண்டும் ஒரு பார்ப்பனத் தலைமையைக் கொண்டு வந்து அதிகாரப் பீடத்தில் அமர்த்துவது கடினம் என்ற உண்மையை உணர்ந்த காரணத்தால் எப்படியாவது ஜெயலலிதாவைக் கரை சேர்த்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தன்னாலான அனைத்து உபாயங்களையும் செய்து பார்க்கிறது ஆரியம்.

அத்தனை பார்ப்பன ஊடகங்களும் கோவணத்தையும் அவிழ்த்துவிட்டு அம்மண ஆட்டம் போடுகின்றன. ஆனந்த விகடனும் தன்னுடைய நடுநிலை வேடத்தையெல்லாம் உரித்து எறிந்துவிட்டு, பார்ப்பனக் கோர முகம் காட்டி நிற்கிறது.

தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் என்று உணர்வாளர்களெல்லாம் ஓரணி! எதிரணியில் சொல்லிக் கொள்வதற்கென இருந்த ஒரே இயக்கமான ம.தி.மு.கவும் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்பட்டுவிட்டது. போராடிக் கட்சியை நடத்தக் காரணம் கிடைக்காத பொதுவுடைமை இயக்கங்கள் ஈழத் தமிழர் பிரச்சினையாவது மோட்சம் கிடைக்குமாவெனப் பார்த்து நிற்கின்றனவே தவிர வேறில்லை.. 

என்றைக்கும் தமிழின உணர்வுக்கு எதிர் நிலை எடுக்கும் அத்தனை பார்ப்பனர்களும் ஓரணியில் - கலைஞரை வீழ்த்தத் துடிக்கின்றனர். கலைஞர் வெளிப்படையாக பார்ப்பன எதிர்ப்பை பேசத் தொடங்கிய பின், சு.சாமி தன்னை எதிர்க்கும் ஓட்டுகளும் ஜெயலலிதாவிற்குக் கிடைக்க வேண்டுமென நினைக்கிறார்.

அத்தனைப் பார்ப்பானுக்கும் உச்சத்தில், அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்த சங்கராச்சாரியைக் கைது செய்து சிறையில் அடைத்தவரே ஆயினும், தங்கள் பார்ப்பனத் தலைமையை பலி கொடுக்க விரும்பாமல், பார்ப்பன சங்கம் உள்ளிட்ட அனைத்தும் அணிவகுக்கின்றன ஜெயாவின் பின்னால்..!

தமிழர்களே உங்கள் நிலை என்ன? பார்ப்பனர்கள் மூட்டிவிடும் ஊடக நெருப்புக்குள் குளிர் காயப் போகிறீர்களா? அது உங்களை எரித்துவிடும். எச்சரிக்கிறோம்.

மக்கள் நல அரசு என்கிற மாபெரும் வெற்றிச் சரிதத்தை இதுவரை தமிழகத்தில் இல்லை என்னும் அளவுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, இடஒதுக்கீடு, சமூகநீதி,  
காங்கிரஸ் என்ற ஒற்றைக்காரணத்தைச் சொல்லி தி.மு.க அணியை நிராகரிப்பது மாபெரும் வரலாற்றுத்தவறுக்கு வழிவகுக்கும்.

காங்கிரசின் அழிவை நீங்கள் தரத்தேவையில்லை. அது தன்னைத் தானே அழித்துக் கொள்ளும். அதற்கென்று அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இருக்கிறார். காங்கிரசு பற்றியா அமைகிறது உங்கள் பேச்சு... இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை வைகோ பேசியதைப் போல, காங்கிரசை விட, அதிகமாக தி.மு.க.வைத் தாக்குகிற உங்களை’ மவுத் பீஸ்’ஆக மட்டுமே பார்க்கிறது ஆரியம். காங்கிரசோ, பி.ஜெ.பியோ மத்தியில் இருக்கும் யாரையும் ஆள்வதும், வழிநடத்துவதும் பார்ப்பனியம் என்கிற கொடும் கூட்டணி என்பதை மறந்துவிட்டு, மேம்போகக் காங்கிரசை அழித்தால் தீர்வு கிடைக்கும் என்று திமிறாதீர்!

காங்கிரஸ் எதிர்ப்பு என்பதைவிட தி.மு.க எதிர்ப்பு என்பதில் முன்னணியில் நிற்கும் உங்களைக் கொம்பு சீவிவிட்டு நம் இனத்தையே நோக்கித் திருப்புகின்றது ஆரியம். புகழ் வெறி கொண்டு அலையும் சிலரின் பிழைப்பு வாதத்திற்குப் பலியாகாதீர்! எந்தக் காலத்திலும் தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி அமைக்க முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரசு செத்த பாம்பு... அதை அடித்து வெற்றி பெற்றவராக உங்களைக் காட்டிக்கொள்வதைவிட, சீறிக்கொண்டிருக்கும் பார்ப்பன நச்சரவைப் பிடியுங்கள்.

2006 தேர்தலில் சில இடங்களுக்காக அணிமாறி, தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பையும் குறைத்து, தன் இடத்தையும் இழந்து நின்று, பின்னாளில் காங்கிரசின் ஆதரவை அவசியம் பெற்றாக வேண்டிய சூழலில் தி.மு.க.வைத் தள்ளி அதைத் தொடர்ந்து ஈழத்தமிழர் பிரச்சினையிலும் தமிழர்களை ஓரணியில் நிற்கவிடாமல், குறுக்குச் சால் ஓட்டி, வரலாற்றுப் பழிக்கு இலக்காகிவிட்ட ம.தி.மு.க-வைப் போன்ற அழிவு முடிவைத் தேடாதீர்கள்!

நலத்திட்டங்களுடன் சமூக நீதிக்கு உழைக்கும் அரசை ஒழித்துவிட்டு, அப்படியே தலைகீழ்த் தனமாக, தானடித்த மூப்பாகக் காட்டாட்சி நடத்தும் ஜெயாவுக்கான உங்கள் ஆதரவு என்பது தமிழன் தலையில், தமிழ் உணர்வுப் பேரைச் சொல்லி, நெருப்பள்ளிக் கொட்டுதற்குச் சமமாகும்.

சிந்திப்பீர்! வெற்று உணர்ச்சியும், பழிவாங்கும் வெறியும் தேக்கி, மீண்டும் ஒரு அவலத்தை விலைக்கு வாங்காதீர்கள்! நட்பு முரணுக்கும், பகை முரணுக்குமான வேறுபாட்டை உணராமல் முடிவெடுக்காதீர்! நாம் ஒன்றிணைந்து எதிரியை வீழ்த்துவது முறையா? எதிரியைக் கோட்டைக்குள் அனுமதித்து, நம்மவரைச் சாய்த்தல் முறையா?

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!” என்று பகைவரை விரட்டத் திரளுங்கள்! ஓரணியில் நின்று ஒன்றாய் வென்றால் எந்த எதிரியும் நம்மை வெல்ல முடியாது. இதுநாள்வரை இழைத்த தவறை இனியும் தொடராதீர்!

திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்திருக்கும் அணிக்கு வாக்குத் தாருங்கள்! உலைக்குப் பயந்து நரகலில் விழுந்த கதையாக, செத்தபாம்பு காங்கிரசை அடிக்கிறேன் என்று அதிமுக பார்ப்பனத் தலைமைக்கு பல்லவி பாடாதீர்! அல்லல் படாதீர்!

கருத்துகள்

VJR இவ்வாறு கூறியுள்ளார்…
என் எண்ணங்கள் அப்படியே. வாழ்த்துக்கள்.

புரியாத பதிவர்கள் ஒன்றிரண்டு புரியாமலேப் போகட்டும்.
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
துரோகியை விட எதிரி எவ்வளவோ மேல்...

கருணா(நிதி)யை நம்பி இத்தனை உயிர் போயுமா புத்தி வரவிலை? வராது. காரணம் உங்களுக்கு தான் ஆத்திரம் அறிவை மறைக்கிறது.
தமிழ் ஓவியா இவ்வாறு கூறியுள்ளார்…
காலத்தின் தேவை கருதிய அவசியமான பதிவு
vasanthan, erode இவ்வாறு கூறியுள்ளார்…
Good Padhivu
கக்கு - மாணிக்கம் இவ்வாறு கூறியுள்ளார்…
இவ்வளவு கேவலமும் யாரால் வந்தது? துரோகியாக இன்று நம் முன்னே நிற்கும் கருணாநிதியால் அன்றோ? உச்ச காட்டத்தில் ஆட்சியை விட்டு வெளியே நேர்மையடன் வந்திருந்தால் இன்று தமிழகமே தி.மு.க.வை கொண்டாடுமே.தமிழர்களின் எதிரி பார்பனர்கள் அல்ல. அது கருணாநிதி என்ற ஒரு சுய நல நச்சுப்பாம்பே அன்றி ஆரியர்களோ, காங்கிரசோ, ஜெயலலிதாவோ , பார்பனர்களோ அல்ல. இது உண்மை இல்லையா? இன்று மட்டும் ஏன் தமிழர்களை ஒன்று பட அழைக்கவேண்டும்?? இருந்தாலும் உங்கள் பதிவினை நான் வரவேற்கிறேன். நான் தமிழன்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
//உச்ச காட்டத்தில் ஆட்சியை விட்டு வெளியே நேர்மையடன் வந்திருந்தால் இன்று தமிழகமே தி.மு.க.வை கொண்டாடுமே.//
தி.மு.கவைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவோ, தியாகி பிம்பத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவோ மடத்தனமாக அப்படியொரு முடிவெடுத்திருந்தால், காங்கிரஸ்- அதிமுக, இன்னபிற உதிரிகளின் துணையோடு ஆட்சியில் அமர்ந்திருக்கும்.. தமிழகம் கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
//தமிழர்களின் எதிரி பார்பனர்கள் அல்ல.// அடடா... உங்களின் இந்தப் பார்வை கண்டு பெரிதும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் அழிவுக்கு வெறுமனே காங்கிரசோ, அதன் கூட்டுக் கட்சிகளோ காரணம் என்று கருதினீர்களானால், உங்களைக் கண்டு பரிதாபப்படுகிறேன். யார் எப்படி ஆடவேண்டுமென்பதை முன்கூட்டியே திட்டமிட்டு வழிநடத்திய பார்ப்பனியத்தின் விளைவை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எச்சரிக்கிறான் சரவணன்!

எச்சரிக்கிறான்
சரவணன்!
இது செய்யத்
துணிந்தவர்கள்...
எதுவும் செய்யத்
துணிவார்கள்!

உயர்கல்விக்கு
நுழையும் போதே
மருத்துவரின்
உயிரை உறிஞ்சுகின்றன
ஊசிகள்!எச்சரிக்கிறான்
சரவணன்!
இந்தியாவெங்கும்
சென்று பிணமாகத்
தயாரானால்
எழுதுங்கள்
நீட் தேர்வு!

முனைவராகும் முன்னே
முறிக்கப்படும்
ஆய்வு இறக்கைகள்!
கேட்காமலே இட ஒதுக்கீடு
வேமுலாவுக்கு அடுத்து
இடுகாட்டில்!

'என் சாவுக்கு யாரும் காரணமில்லை'
என்ற கடைசி வரிகளோடு
'யுவர்ஸ் சின்சியர்லி'க்குப் பிறகு
பெயர் சேர்க்க வசதியாய்
அய்.அய்.டி.களில் கிடைக்கின்றன
கடித நகல்கள்!

இழுத்தடிக்கும் பூணூல்களிடமிருந்து
விடுபட
சென்ட்ரல் யுனிவர்சிட்டி
கேம்பஸ் ஸ்டோர்களில்
குறைந்த விலையில்
தூக்குக் கயிறுகள்!

உயர்குடிக்கே
உயர்கல்வி !
பிறர் நுழைந்தால்
'உயிர்' குடிக்கும்
என்பதறிக!

பனியன் தைக்க
ஊசியெடுப்பவன் பிள்ளைக்கு
உயர் மருத்துவனாகி
ஊசியெடுக்க
ஆசையா?

தூண்டியது
நடக்காவிட்டால்
தூண்டியவர்களே
ஆயுதம்
தூக்குவார்கள்!
நூலிய சிந்தனை
தூக்கத் தொடங்கியிருக்கிறது
ஊசிகளை!

நூலியம்
பதறுகிறது...
கடிதத்தில்
கையெழுத்திடவும்
கணம் தரமுடியாது.

எச்சரிக்கிறான்
சரவணன்!
நூல்கள்
அ…

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ஜெயா தொலைக்காட்சிக்கு என் இரங்கல்!

ஜெயா தொலைக்காட்சியில் மூடிக் கிடக்கும் போயஸ் தோட்டத்தின் கதவுகளைக் காட்டியபடி, முதலமைச்சரின் மறைவுச் செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆம்... ஜெயா தொலைக்காட்சிக்கு இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவர் தான் முதலமைச்சர்.


அது காலம் முழுக்க ஜெயலலிதா அம்மையாரின் சிறப்புகளைச் சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் தொலைக்காட்சி. தேர்தல் தோல்வி என்றால் கூட அடுத்த சில நிமிடங்களில் தேர்தல் செய்திகள் கூட அதில் வராது. முதலமைச்சர் பதவி இல்லையென்றாலும் அதற்கு ஜெயலலிதா தான் முதல்வர். "மக்கள் முதல்வர்" என்ற பெயரை உருவாக்கிக் கொடுத்ததும் அதுதான்.

ஜெயலலிதா மீண்டும் ஜெயித்த போது இரட்டிப்பு போனசெல்லாம் வழங்கி மகிழ்ந்திருக்கிறார். பணியாற்றிய அனைவருக்கும், பதவி வேறுபாடற்று ஒரு லட்சம் ரூபாய் போனஸ் வழங்கியெல்லாம் கூட கொண்டாடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிமுக என்ற கட்சியினுடையது என்றெல்லாம் அந்தத் தொலைக்காட்சியைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பிற கட்சி ஊடகங்களைப் போல, அதன் இரண்டாம் கட்ட, வருங்காலத் தலைவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தராதது. அது முற்றும் முழுதாக ஜெயலலிதா அவர்களின…