முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...) -2

திராவிடத்தால் கேடா? பாரதிராஜாவின் சிந்தனைக்கு! (மட்டுமல்ல...) - முதல் பகுதி

5. இன்று தமிழ், தமிழர் என்றெல்லாம் புதிதாய்ப் புறப்பட்டிருப்போரே, கொஞ்சம் யோசியுங்கள். உங்களுக்கு, உங்கள் தந்தைக்கு, உங்கள் பாட்டனுக்கு ’நான் தமிழன்’ என்று உணர்த்தியது எது - திராவிட இயக்ககள் மேடையல்லவா? ’வந்தே மாதரம்’ என்று சொன்ன வாய்களை ’வாழ்க தமிழ்’ என்று சொல்ல வைத்தது யார்?

திராவிட இயக்கம் தானே தமிழுணர்வை, தமிழன் என்ற சிந்தனையை, இன்றும் பலர் சொல்வது போல் தமிழனின் பழம் பெருமையை தமிழருக்கு உணர்த்தியது யார்? ஊர்தோறும் மாநாடுகளை, வீதிதோறும் விளக்கக் கூட்டங்களை, கலை நிகழ்ச்சிகளை, நாடகத்தை, திரைப்படத்தை, நாளிதழ்களை,  ஏடுகளைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்தது யார்?

6. தமிழ்ச்செல்வி, தமிழ்ச் செல்வன், தமிழ்மொழி, அமுதத் தமிழ், செந்தமிழ்... இப்படி ஒரு மொழியின் பெயரையே தங்கள் பெயராகச் சூட்டிக் கொள்ளும் அளவுக்கு தமிழ் உணர்வை ஊட்டியது திராவிட இயக்கம் என்பதை மறுக்க முடியுமா? நாடெங்கும் நல்ல தமிழைப் பேசு மொழியாக்கியது யார்?

7. ”’வணக்கம் தோழரே’ என்று சொல்லாதீர்கள்; ’வணக்கம் தமிழரே!’ என்று சொல்லுங்கள்” என்று தோழமை உணர்வோடு சொல்வதைக் கூட மாற்றி சொல்லச் சொல்லும் சீமான்கள் யோசிக்கட்டும் - உங்களை முதலில் வணக்கம் என்று சொல்ல வைத்தது யார்? ’நமஸ்காரம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த சமூகத்தை, அப்படிச் சொல்லுவது தான் பெருமை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை, ’வணக்கம்’ என்று சொல்ல வைப்பதற்காக வீதியில் இறங்கி, காண்போரையெல்லாம் ‘வணக்கம் அண்ணே’, வணக்கம் தம்பி, வணக்கம் அய்யா, வணக்கம் வணக்கம் என்று தங்கள் மாலை நேரத்தை வணக்கத்திற்காகவே செலவிட்ட என்.ஆர்.சாமிகளும், இராம.சுப்பையாக்களும் இந்த திராவிட இயக்கம் கொடுத்த கொடைகள் அல்லவா?

8. ஸ்ரீ-யைத் ’திரு’வாக்கி, விவாகத்தை ‘திருமண’மாக்கி, அபேட்சகரை வேட்பாளராக்கி, அக்கிராசனரைத் தலைவராக்கி, காரியதரிசியை செயலாளராக்கி செயல்வடிவத்தில் தமிழைக் கொண்டு சேர்த்தது, தமிழன் என்ற உணர்வை விதைத்தது யார்?

எல்லாவற்றையும் விட முக்கியமாக, ஜாதியால் பிரிந்து கிடந்த தமிழனை ஒன்றாக்கி, தமிழன் என்ற உணர்வு பெற வைத்தது யார்? இன்று தமிழன் என்று சொல்லி சுளையாக கட்சி கட்ட நினைப்போரே! பெரியாரும் திராவிட இயக்கமும் இல்லாவிட்டால் ‘நாம் தமிழர்’ஆகவாவது இணைந்திருக்க முடியுமா?

சரி, திராவிடம் என்ற பெயரில் தமிழைத்தான் போற்றினீர்கள்; வளர்த்தீர்கள்; தமிழுக்காக, தமிழனுக்காகத் தான் போராடினீர்கள் என்றால், அதை ஏன் திராவிடன் என்ற பெயரில் செய்ய வேண்டும்.  ’தமிழன்’ என்றே செய்யலாமே என்று கேட்கக்கூடும். காரணம் இல்லாமல், பெரியாரோ, திராவிட இயக்கத்தவர்களான நாங்களோ திராவிடம் என்பதைப் பிடித்துக் கொண்டு தொங்கவில்லை. திராவிடம் என்பது தான் தமிழ். தமிழ் என்பது தான் திராவிடம்.

பார்ப்பனீயம் அன்றைக்கு ம.பொ.சி என்பவரைப் பயன்படுத்தி, தமிழ் என்ற பெயரைக் காட்டி பெரியாரை, திராவிட இயக்கத்தை அழிக்கப் பார்த்தது, பின்னர் குணா என்பவரை எழுத வைத்து முயன்று தோற்றது. பின்னர் ’தலித்துகளுக்கு விரோதமானவர் பெரியார்’ என்று தாழ்த்தப்பட்ட மக்களை திராவிட இயக்கத்துக்கு எதிராகத் திரட்ட முனைந்தது -  தோற்றது. இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையைச் சாக்காகக் கொண்டு திராவிட இயக்கத்தை தமிழருக்கு விரோதமாகக் கொண்டு சேர்க்க முனைகிறது. ஈழப்பிரச்சினையையே தமிழகம் முழுக்கக் கொண்டு சென்று உணர்வைத் தட்டி எழுப்பியது, இன்றும் அதற்காக வெகு மக்களைத் திரட்டுவது திராவிட இயக்கங்களும், பெரியாரின் தொண்டர்களும் தான் என்பதை இன்று தமிழியம் பேசும் பலர் வசதியாக மறந்தும், மறைத்தும் விடுகிறார்கள். இன்று மட்டுமல்ல; என்றுமே அவர்களது நோக்கம் பெரியாரை, திராவிடர் இயக்கத்தை ஒழிப்பது மட்டுமே! அது ஒன்று தானே பார்ப்பனியத்திற்குப் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

தமிழன் என்பதை சகித்துக் கொள்ள முடிந்த, ’நானும் தமிழன் தான்; நானும் தமிழ் தான் பேசுகிறேன்’ என்று ஒட்டிக் கொள்ள முடிந்த பார்ப்பனர்களால் ‘திராவிடன்’ என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே ’ஏன்?’ என்று யோசியுங்கள். ’அடுத்துக் கெடுக்கும் ஆரியம்’, ’அணைத்துக் கெடுக்கும் ஆரியம்’ பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பது பெரியாரையும், திராவிட அரசியலையும் தானே. அது ஒன்றே போதுமே எது நமக்குச் சரியான அடையாளம்? எது சரியான அரசியல்? என்று.

’அன்றைக்கு அது சரியாக இருந்தது; இன்று திராவிடம் தேவையில்லை’ என்று சொல்வோரே...! அன்று, நேற்று மட்டுமல்ல.... இன்று, நாளையும் கூட திராவிடம் தான் தமிழனுக்கான பாதுகாப்பு! பார்ப்பனியத்தைத் தவிர்த்துவிட்டு வேறு யாரையும் எதிரியாகக் காட்டினாலும், நீங்கள் தான் தமிழினத்திற்கு மாறாத துரோகத்தைச் செய்பவர்கள். எதிரி யாரென தெரியாத சமூகம் ஒருக்காலும் அடிமைத்தனத்திலிருந்து மீள முடியாது. உங்கள் திசை திருப்பல்கள் ஒருநாளும் தமிழனை உருப்படவிடாது.

’திராவிட இயக்கத்தை ஒழிப்போம்; திராவிட சிந்தனையைத் தகர்ப்போம்’ என்பதெல்லாம் பார்ப்பனியத்திற்கு மறைமுகமாக...  ஏன் நேரடியாகவே உதவும் விபீஷணக் குணமே ஒழிய வேறில்லை. அப்படி பேசுவோர் தான் தமிழினத்துக்குக் கேடானவர்கள்; தமிழினத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள்.

’தமிழன் என்ற அடையாளத்தை அழித்துவிட்டு திராவிடனாக வா’ என்று யாரும் அழைக்கவில்லை. ’திராவிடன் என்பதால் அடிமைப்பட்டு நில்’ என்று யாரும் சொல்லவில்லை. திராவிடன் என்றால் தான் பார்ப்பனியம் தன் வாலைச் சுருட்டிக்கொள்ளும். திராவிடன் என்றால் தான் பார்ப்பான் உள்ளே நுழைய முடியாது.

இன்னொன்றையும் சொல்கிறோம். ஈழத் தமிழர்களும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழீழம் அமைவதற்கு முதல் எதிரிகள் சிங்களவர்கள் என்பதை விட பார்ப்பனர்கள் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா எதிரி; காங்கிரஸ் எதிரி என்பதற்கெல்லாம் பார்ப்பனியமும், பார்ப்பனர்களுமே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். வீணில், இதில் திராவிட இயக்கத்தைக் கொண்டுவந்து எதிரியாக நிற்க வைக்க நினைப்பது தற்கொலைக்கு ஒப்பானது. தற்கொலைப் போராளி எதிரியை அழிக்க வேண்டுமே ஒழிய, போராளிகளின் கூடாரத்தை அல்ல.

எல்லாவற்றையும் தின்று செரித்துவிட்ட பார்ப்பனியம், பெரியாரிடமும், திராவிட இயக்கத்திடமும் மட்டும் மோதி, மோதித் தோற்கிறதே - ஏன்? என்று அதற்கான காரணத்தையும் யோசியுங்கள். அப்போது புரியும். திராவிடம் என்பது தமிழை, தமிழனை அழித்ததா? பாதுகாத்ததா? என்று!

குன்றின் மேல் நின்று பெருமையோடு கூவுவோம்.

திராவிடம் என்பது தமிழர்க்கு கேடல்ல.. 
கேடயம்...! கேடயம்...!  கேடயமே என்று!

கருத்துகள்

அ.முத்து பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
வெகு காத்திரமான இடுகை ... வலுவான வாதங்களுடன் ... உரக்கச் சொல்கிறேன் நான் ...திராவிடம் என்பது தமிழர்க்கு கேடல்ல.. கேடயம்...! கேடயம்...! கேடயமே என்று!...நன்றிகள் பல தோழர் உங்களுக்கு !
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பெரியாரின் திராவிட கருத்தியல் சாதி ஒழிப்பையும் - பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி ஒழித்து - இந்து மதத்தை விட்டு விலகி "திராவிடர்களாக" இணைந்து விடுதலை பெறுவதையும் - பெண் விடுதலையையும் - நாத்திகத்தையும் - மூட நம்பிக்கை ஒழிப்பையும் வற்புறுத்துவதால், தமிழ்த் தேசிய போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் சாதி வெறியர்களும் இந்து மத பித்தர்களும் பிற்போக்குவாதிகளும் பெரியாரின் திராவிடர் கருத்தியலை திரித்தும் - பழித்தும் -எழுதி மக்களை குழப்ப கிளம்பியிருக்கிறார்கள். வட மொழி நீக்கி தனித் தமிழை வாழ வைத்தது பெரியாரின் திராவிடர் கருத்தியலே. மணம் செய்து கொள்ளும் பெண்ணையே ஆபாசமாக இழிவுபடுத்தும் பார்ப்பன - வட மொழி சடங்குகள் நீக்கிய தமிழர் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தியது பெரியாரின் திராவிடர் கருத்தியலே. "நமஸ்காரம்" என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழர்களை "வணக்கம்" என்று சொல்ல வைத்தது பெரியாரின் திராவிடர் கருத்தியலே. பெயரின் பின்னால் சாதிப் பெயரை இணைப்பதை ஒழித்தது பெரியாரின் திராவிடர் கருத்தியலே. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வேலையிலும் - கல்வியிலும் வகுப்புவாரி உரிமையையும் - இட ஒதுக்கீட்டையும் வற்புறுத்தி செயல்படுத்தியது பெரியாரின் திராவிடர் கருத்தியலே. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்று வலியுறுத்தியதும் பெரியாரின் திராவிடர் கருத்தியலே; பெரியாரின் பெரும்பான்மையான கொள்கைகளை விட்டு விலகி- பெரியாரை விட்டு பிரிந்த தி.மு.க வையும் - ஒரு நடிகரால் தோற்றுவிக்கப்பட்டு இப்போது ஒரு பார்ப்பனப் பெண்ணால் தலைமையேற்று நடத்தப்படும் - பெரியாரின் கொள்கைகளோடு துளியும் சம்பந்தமில்லாத அண்ணா. தி. மு. கவையும் சேர்த்து - இந்தக் கட்சிகளை பெரியாரோடு இணைத்து பொத்தாம் பொதுவாக "திராவிட இயக்கம்" என்று கூறுவதே தவறு. பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, நாத்திகம், தனித் தமிழ் நாடு ஆகியவற்றை வலியுறுத்திய பெரியாரின் திராவிடர் - சுயமரியாதைக் கருத்தியலுக்கும் - தி.மு.க. மற்றும் அண்ணா. தி. மு.க கட்சிகளுக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை."திராவிடர்" என்ற சொல் பார்ப்பனர் அல்லாத தமிழரை குறிக்கும் சொல்லே என்பதையும், பெரியாரின் திராவிட நாடு கோரிக்கை என்பது தமிழ் நாட்டில் வாழும் பார்ப்பனர் அல்லாத அனைத்து பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - மதச் சிறுபான்மை மக்களை உள்ளடக்கிய தனித் தமிழ் நாடு கோரிக்கையே என்பதையும், பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையில் - கருநாடகமோ - கேரளமோ - ஆந்திராவோ இல்லை என்பதையும், தனித் தமிழ் நாட்டையே திராவிட நாடு என்று பெரியார் அழைத்தார் என்பதையும் தமிழ்த் தேசியம் பேசும் சாதி வெறியர்களும் இந்து மதப் பித்தர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.சாதி ஒழிப்பையும் இந்து மத ஒழிப்பையும் பொருளாக கொண்டிருப்பதால்தான் "திராவிடர்" என்ற சொல்லை சாதிப் பித்தும் இந்து மத பித்தும் பிடித்துள்ள தமிழ்த் தேசியர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்...

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owne...