முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும்...எனதருமை தமிழீழச் சொந்தங்களே!
கொஞ்சம் தயக்கத்தோடும், நிறைய வருத்தத்தோடும் உங்களிடம் இதனைப் பேசத் துணிகிறோம். இதைப் பேசுகிற உரிமை எமக்கிருக்கிறதென்றும் கருதுகிறோம். இதனால் எம்மீது உங்களில் சிலருக்கும், எம்மில் சிலருக்கும் கூட வருத்தம் உண்டாகலாம். ஆயினும் யாரேனும் ஒருவர் இது குறித்துப் பேசியே ஆகவேண்டும்.

தமிழக அரசியலில் யார் யார் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி அருள்கூர்ந்து நீங்கள் கருத்து தெரிவிக்காதீர்கள். இனப்பாசத்தின் அடிப்படையில், எம் உறவுகள் என்ற அடிப்படையில், தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற ஆசையில் தமிழீழத்துக்கான எங்கள் ஆதரவு அமைகிறது. அதே வேளையில் எம் தமிழ்நாட்டின் நிலைக்கேற்ப, எங்களின் தேவைகளுக்கேற்ப, இங்குள்ள சூழல்களைப் பொறுத்து யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பது எங்கள் விருப்பம்.

அதை விடுத்து, உங்கள் விருப்பத்திற்கு செயல்படவில்லை என்பதற்காக கலைஞரைத் திட்டுவது, ஆசிரியர் வீரமணியைத் திட்டுவது, திருமாவை, சுப.வீ-யைத் திட்டுவது, தரக்குறைவாகப் பேசுவது என்று நீண்ட உங்கள் பட்டியல், இப்போது வைகோ வரை வந்திருக்கிறது. தெளிவாகச் சொல்கிறோம்... உங்களுக்காக நாங்கள் இயக்கம் தொடங்கவில்லை. எமது அடிமைச் சூழல்களுக்கு மத்தியில் தான் ஈழத்தமிழர்க்கான எங்கள் குரலும் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த 30 ஆண்டு காலத்தில் எமக்கான போராட்டங்களைவிட தமிழீழத்திற்கான போராட்டம் தான் தமிழ்நாட்டில் அதிகம்.

(2008-இல் Srilanka Guardian-இன் பார்வையில் ’தமிழ்நாட்டில் தமிழீழ அரசியல்’. Terror என்று அவன் தேசியத் தலைவரைக் குறிப்பிடுகிறான். மற்ற தலைவர்களை அதைக்கொண்டு வகைப்படுத்துகிறான். இதில் Terror என்ற வார்த்தையிலும், Victim of Terror, Forgetting terror- நபர்களிலும் நான் ஒத்துப் போகவில்லை.)

எப்படி சிங்களத்தின் கொடுமையை நாங்கள் நேரடியாக அனுபவித்ததில்லையோ (மீனவர் படுகொலை தவிர்த்து), அதே போல் இங்கிருக்கிற பார்ப்பனியக் கொடுவிஷத்தின் கொடுமைகளை நீங்கள் நேரடியாக அனுபவித்ததில்லை.

ஆனால் ஈழத் தமிழினத்தின் அழிவில் எந்த ஒரு தனி இயக்கத்துக்கும்(காங்கிரஸ்), தனிப்பட்ட மனிதருக்கும் இருக்கும் பங்கை விட ஆயிரம் மடங்கு வேகமாகவும், ஆழமாகவும் பார்ப்பனியத்தின் பணி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பார்ப்பனியமே இவர்களை இயக்குகிறது. இயக்கங்களைப் பிரிப்பதும், மக்களைத் திசை திருப்புவதும், பார்ப்பனியமே. அதன் பல்வேறு கரங்கள் தான் உளவுத்துறையும், ஊடகங்களும்.

இப்படி ஈழத் தமிழர்களையும் சேர்த்து, எம் மக்கள் புரிந்துகொள்ள விரும்பாத, கண்ணுக்குத் தெரியாமல் போரிடும் எதிரியுடன் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் எம்முடன் கரம் கோர்த்து போராட வேண்டிய நீங்கள், எமக்கெதிராக கட்சிகட்டி நிற்பது எவ்வகையில் சரியானது.

இதில் இன்னொரு பெரும் கொடுமையாக, ஆயிரம் ராஜபக்சேவுக்கு நிகரான மோடி என்னும் கொடுங்கோலனுக்கு அத்தனை பார்ப்பன ஊடகங்களும் ஆதரவுக் கரம் நீட்டிக் கொண்டிருக்க, அவனைப் போன்ற எண்ணற்ற வெறியர்களின் கூடாரமாகத் திகழும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், அதன் கிளைகளும் இந்த நாட்டையே விழுங்கத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு எதிராக நாங்கள் எப்படி வியூகம் வகுப்பது, அணி திரட்டுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆத்திரத்தால் அறிவிழந்த சிலர் மோடியைப் பாராட்டுவதையும், பா.ஜ.க-வைப் பாராட்டுவதையும், அதை ஈழத் தமிழர்களின் பேரால் செய்வதும் வெந்த புண்ணில் சூலாயுதத்தைப் பாய்ச்சுவதாகும்.

எம் தமிழ்நாட்டு மக்களின் விடியலுக்காக இயக்கம் நடத்துகிற நாங்கள், எம்மினம் என்கிற துடிப்பில் உங்களுக்குக் கரம் தர முன்வருகிறோம். அத்தகைய சூழலிலும் நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற தொனியில் எங்களுக்குக் கட்டளை விதிப்பதும், உணர்வோடு கரம் தருவோரை, தமிழக அரசியலில் அவர்களது நிலைப்பாடு குறித்து விமர்சனம் எழுப்பி தட்டி விடுவதும் அறிவார்ந்த செயல் ஆகுமா?

சகோதர யுத்தம் என்று தப்பித் தவறி யாராவது பேசினாலோ, ஈழத்தில் ஜாதிப் பிரச்சினை என்று தமிழகத் தமிழர்கள் யாராவது பேசிவிட்டாலோ கூட ”உங்களுக்கென்ன தெரியும், தமிழகத்தோடு எங்கள் சூழலை ஒப்பிடாதீர்கள்” என்று கொதித்துக் கொந்தளிக்கும் எம் ஈழச் சொந்தங்களே! எங்களின் அரசியல் நிலை உங்களுக்கென்ன தெரியும் என்று நாங்கள் கேட்கிறோம். (நாளை ஈழம் விடிந்தால் அங்கு ஜாதி ரீதியாக ஒடுக்கப்படும் குரல் எழுந்தாலும் நிச்சயம் நிலைமையைப் புரிந்துகொண்டு எங்கள் குரல் இருக்கும் என்பது ஒரு பக்கம்)

தனக்கான இடஒதுக்கீட்டு உரிமைக்குக் கூட சேர்ந்து போராடாத எம் தமிழ்நாட்டு இளைஞன் பெருமளவில் உணர்வோடு திரண்டது ஈழத் தமிழர் படுகொலைகளைக் கண்டித்துத் தான்! அப்படி ஒன்று சேர்ந்தவர்களும் உள்ளூர் அரசியல் நுழைந்தால் பிரிந்துவிடுவார்கள் என்ற கவலைதான் எங்களுக்கு!

ஈழப்பிரச்சினையைப் பயன்படுத்தி பலன் அனுபவிக்கத் துடிக்கும் கும்பலும் இங்கு இல்லாமல் இல்லை. கடந்த தேர்தலில் தமிழர்கள் அங்கு செத்துக் கொண்டிருந்த நேரத்திலும், எங்களுக்கு ஆதரவாய் ஓர் அறிக்கை விட்டால் ஒரே பிடுங்காகப் பிடுங்கிவிடுவோம் என்று வாக்கு சேகரிக்க உங்களைக் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்தது யார் என்று யோசியுங்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே ஈழப்பிரச்சினையை வைத்து அரசியல் லாபம் பார்க்கத் துடித்தவர்கள் தோல்வியுற்றார்கள்.

ஏற்கெனவே, சமூகப் பார்வை கொண்டவர்கள், அரசியலில், பொதுவாழ்வில் இருப்பவர்களில், பார்ப்பனர்கள், காங்கிரஸ்காரன், தேசிய அரசியல் பேசுபவன், பெரும்பான்மை பொதுவுடைமைத் தோழன், அ.தி.மு.க போன்றோர் ஈழப்பிரச்சினை பேசுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் எப்போதுமே எதிர் நிலைப்பாடு கொண்டவர்கள்.

மிச்சமிருக்கும் சமுதாய இயக்கங்களான திராவிடர் கழகம் உள்ளிட்டவை, அரசியல் இயக்கங்களான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க, வி.சி, இவற்றோடு, என்றைக்கும் தங்களுக்குள் ஒன்று சேர விரும்பாத கணக்கிலடங்கா தனிநபர் தமிழ்தேசியக் கட்சிகள் இவைதான் ஈழத் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவை. இதிலும் தி.மு.க - நேரடியாக புலிகளை ஆதரிக்காத இயக்கம்; ஆனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் (இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்; இன்று பெயரளவில்தான் என்று நீங்கள் சொல்லலாம்) குரல் கொடுக்கும் இயக்கம்.

’நாங்கள் போராடிய அளவுக்காவது 2008-க்கு முன் புலம்பெயர் தமிழர்கள் களம் கண்டிருக்கிறார்களா’ என்ற கேள்வியும் கூட, புலம்பெயர் தேசத்தில் அதற்கான வாய்ப்பில்லை என்பதை நாங்கள் உணர்ந்த காரணத்தால் எம்மிடமிருந்து எழவில்லை.

ஆனால், இவர்களையும் இழக்கும் விதத்தில் அண்மைக் காலமாக பலரது பேச்சு இருந்துகொண்டிருக்கிறது. இப்படி எரிச்சலைக் கிளப்பும் வகையில் பேசச் செய்து, தமிழகத்தில் ஈழத் தமிழர்க்கான மக்கள் இயக்கங்களின் குரலை ஒழித்துவிடலாம் என்பதும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சியாக இருக்கலாம். இதில் அருள்கூர்ந்து ஈழத் தமிழர்கள் சிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இப்போதைக்கு இது போதும், தேவைப்பட்டால் பிறகு விரிவாகப் பேசுவோம்.

ஏதோ சிலரின் அறிவற்ற பேச்சுக்காக, தமிழீழத்திற்கான ஆதரவுக் குரலையும், உணர்வையும் எங்களிடமிருந்து பிரித்துவிட முடியாது. ஏனெனில் உங்களுக்காகப் போராடுகிறோமே தவிர, உங்களைக் கேட்டுக் கொண்டு நாங்கள் போராடவரவில்லை.

நீங்கள் திட்டினாலோ, எங்களைத் துரோகி என்றாலோ நாங்கள் போராடாமல் இருக்கப் போவதுமில்லை. ஏனெனில், உங்களிடம் இருந்து எந்த பலனையும் எதிர்பார்க்காதவர்கள் நாங்கள். அதனால் தான் கேட்கிறோம், குறைந்தபட்சம் உங்கள் நலனை முன்னிட்டாவது, எமக்குள் இருக்கும் அரசியல் பிரிவினைகளுக்குள் நுழையாதீர்கள். பிறகு அதில் நசுங்கி ஒடுங்கப் போவது ஈழ ஆதரவு உணர்வுதான்!

கருத்துகள்

தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் நல்ல பதிவு..

ஈழத்தமிழராகிய நாமும் உங்களிடம் ஒன்றைத் தயை கூர்ந்து கேட்டுக்கொள்கிறோம். தயவு செய்து எம்மை விட்டு விடுங்கள். கிடைக்கிற கேப்பில் சூழலுக்குத் தகுந்தவாறு குரல் கொடுப்போம் என்றெல்லாம் வேண்டாம்.

இப்பொழுதெல்லாம் தொப்புள் கொடி உறவென்ற சொல்லைக் கேட்டாலே அருவருக்கிறது.

இந்தியா - தமிழ்நாடு என்பதெல்லாம் நமது அரசியல் போரில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதை நாங்கள் தெளிவாக உணர்ந்து கொண்டதால் தயவு செய்து நீங்களும் ஈழத்தமிழனுக்கு விடுதலை என கண்ணீர் வடிக்காதீர்கள். முடிந்தால் மீனவர்கள் உயிரைக் காக்க ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள்..

மீனவருக்காக நாங்கள் இயக்கம் கட்டவில்லை என்று சொல்லிவிடமாட்டீர்கள் தானே..

தமிழ்நாட்டிலிருந்து ஈழ ஆதரவு எதிர்ப்பு பேசுகிற எவரைப்பார்த்தாலும் வயிறு பற்றி எரிகிறது.

எங்கள் வார்த்தைகளில் தெரிவது நம்பி ஏமாந்து கெட்டவனின் விரக்தி.. இப்போ மெல்ல மெல்ல எல்லாம் புரிகிறது. தப்பு எங்க மேலதான்.

எப்போதாவது ஒருநாள் - சிங்கள இனத்தோடும் அதன் தலைவர்களோடும் நீதியான முறையில் மனதோடு ஒன்றிணைய முடியுமென்கிற நம்பிக்கை ஒரு ஓரத்தில் உண்டு. ஆனால் தமிழகம் இந்தியா அப்படிக் கிட்ட வரும் என இப்ப கனவு கூட வருவதில்லை. தப்பு எங்க மேலதான் விட்டுடுங்க..

வடிவேலு மாதிரி சொன்னால்.. (இப்ப அப்படிச் சொன்னால்தானே எடுபடுகிறது) இந்தக் கோட்டுக்கு அங்கால நானும் வரமாட்டேன்.. நீங்களும் வரக்கூடாது ஆமா..

இறுதியாக ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து தேசியத் தலைவர் என்றெல்லாம் சொல்லாதீர்கள். உங்கள் வாயால் கேட்கிற எங்களுக்கு காது கூசுகிறது
நிமல்-NiMaL இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விசயம் தான்.

அப்படியே நீங்களும் ஈழத்தமிழர் பிரச்சினை - தேசியத்தலைவர் வருகிறார் - தொப்புள் கொடி - தனி நாடு என்று பிதற்றிக் கொண்டு இருக்காமல் உங்கள் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுங்கள் அதுவே போதுமானது.

நன்றி.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது தமிழ் நாட்டுத் தமிழர்களும் அடிமைகளே என்பது. தமிழ்மக்களின் பேராதரவுடன் இருந்த எம் ஜி ஆ ரின் காலத்திலே தான் தலைவர் இந்தியாவில் தனி அறையிலே வைக்கப் பட்டுக் கட்டாயப் படுத்தப் பட்டார், கையெழுத்திட வைக்கப் பட்டார்.கொல்லவும் முயற்சிக்கப் பட்டார். என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கீழ் வரும் வரிகளின் ஆழத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழினத்தின் அழிவில் எந்த ஒரு தனி இயக்கத்துக்கும்(காங்கிரஸ்), தனிப்பட்ட மனிதருக்கும் இருக்கும் பங்கை விட ஆயிரம் மடங்கு வேகமாகவும், ஆழமாகவும் பார்ப்பனியத்தின் பணி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பார்ப்பனியமே இவர்களை இயக்குகிறது. இயக்கங்களைப் பிரிப்பதும், மக்களைத் திசை திருப்புவதும், பார்ப்பனியமே. அதன் பல்வேறு கரங்கள் தான் உளவுத்துறையும், ஊடகங்களும்.

இப்படி ஈழத் தமிழர்களையும் சேர்த்து, எம் மக்கள் புரிந்துகொள்ள விரும்பாத, கண்ணுக்குத் தெரியாமல் போரிடும் எதிரியுடன் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம்


இந்து ராம், நாராயணன் மற்றும், இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப் போராட்டம் ஆரிய( சிங்களவர்) திராவிடப் போராட்டம்.

ஒரு ஆரியனுக்கு உலகத்தில் எங்காவது கேடு நடந்தால் துடிக்கும் இந்தியா தமிழ் மீனவர்கள் ஆரியத்தினால் கொல்லப் படுவதைத் தடுக்காமல் கதை சொல்வது ஏன் ?

இதை நன்கு உணர்ந்து கொள்வது எதிர்காலத் திட்டங்களுக்கும், ஏமாறாமல் இருப்பதற்கும் முக்கியம். தமிழகத்துத் தமிழர்கள் உணர்ச்சிகளைக் கொட்டிய அளவிற்கு உதவிகளைக் கொட்ட முடியாத அடிமைகளாகப், புது டில்லியின் முழு ஆளுமையில் வாழ்வதுதான் உண்மை. இதைத் தலைவர் நன்கு புரிந்து கொண்டுதான் புலம்பெயர் தமிழர்கள் உலக அள்விலே போராட்டத்தைக் கெயெடுத்துச் செல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக்கினார்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
சகோதரரே உங்கள் பதிவிற்கு நன்றிகள். உங்கள் ஈழ ஆதரவுக்க நன்றிகள். ஏதோ ஒன்றிரண்டு தமிழ் உணர்வாளர்களின் உயிரில் நீங்கள் குளிர் காய்கின்றீர்கள் என்பதே உண்மை. நீஙகள் எழுதியிருப்பது போல புலம் பெயர் தமிழரின் பங்களிப்பை கொச்சைப்படுத்த வேண்டாம். அதற்கு நீங்கள் தகுதியானவர்களும் அல்ல. 60 வருடகால தமிழின அழிவில் திரு எம்.ஜீயார் அவர்களும் திருமதி இந்திரா அம்மையாரும் மட்டுமே உண்மையான கரிசனையைக் காட்டினார்கள். அதிலும் இந்திரா அம்மையார் அரசியலையும் கலந்தே எமக்கு ஆதரவளித்தார். அதற்குப் பின் வந்தவர்கள் அனைவரும் தமது அசிங்க அரசியலுக்காவே எமது அழிவையும் கண்ணீரையும் பயன்படுத்தினார்கள். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை. தமிழகத்து சகோதரர்களே உங்களிடம் அன்றும் இன்றும் கேட்பது ஓன்றே. எமது பிரச்சனைகளை எம்மால் தீர்த்துக் கொள்ள முடியும்.எமக்கு அப்படிப்பட்டதொரு தலைவன் கிட்டியிருக்கின்றான். அவன் இருகின்றான். அவன் வழியில் எம் துன்பங்களுக்கு விடிவு கிட்டும் என்பதனை இந்த நிமிடம் வரை உறுதியாக மிக மிக உறுதியாக நம்புகின்றோம். உங்கள் அரசியல் கோமாளிகளை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள். எமக்கு உங்கள் நாற்காலிக் கனவுகளுடனான முதலைக் கண்ணீர் ஆதரவு தேவையில்லை. தயவு செய்து தயவு செய்து மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். எமது அவலங்களை உங்கள் சுயநலன்களுக்காய் உபயோகிக்காதீர். இந்திய நாய்களோ அல்லது ஒன்று சேர்ந்த மற்றைய கொலைவெறி நாடுகளோ சிங்கள கொடூங்கோலனுக்கு உதவியிருக்காவிடின் எம் மண்ணை நாம் இழக்க வேண்டிய நிலை வந்திருக்காது. ஒரு அங்குல நிலம் கூட பறிபோயிருக்காது. ஒரு உண்ணத தலைவனின் வழிகாட்டலில் ஒரு முதற்தர உண்ணதமான தமிழ் சமூதாயம் உருவாகியிருக்கும்.எம் அழிவிற்கு மூலகாரணமானவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். இது உறுதி. நாம் இலவசங்களுக்கா எமது கோவணங்களை இழக்கத் தயாரான தமிழர்கள் அல்ல.
மா சிவகுமார் இவ்வாறு கூறியுள்ளார்…
கண்டிக்கத்தக்க பதிவு. தமிழ்நாட்டில் திமுக/அதிமுக பங்காளிச் சண்டையையும், பார்ப்பனீயத்துடன் போராடுவதையும் ஈழமக்கள் சந்தித்த/சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளையும் ஒப்பிடுவது தவறானது.

அதை தமிழீழ மக்களுக்கு நேரடியாக எழுதுவது சரியில்லை.

தேவையில்லாத பதிவு.

மா சிவகுமார்
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழத்திலிருந்தா வாக்குப்போட வருகின்றார்கள்? எதுக்கு நீங்களாகவே கற்பனைகளோடு பராசக்தி வசனம் பேசுகின்றீர்கள்? ஈழத்தமிழர்களா கருணாநிதியை எதிர்ப்பதற்கு முன்னே நிற்கின்றார்கள்? பாருங்கள் உங்கள் இப்பதிவினையே மற்றவர்களுக்கு அனுப்புகிறவர்கள் யாரென. ஈழத்தமிழருக்கு எதிரானவர்கள்தான். தமிழ்நாட்டிலே காங்கிரசும் கருணாநிதியும் ஈழத்தமிழருக்கு எதிராகச் செய்ததைக் கண்டு குமுறும் தமிழ்நாட்டுத்தமிழர்கள்தான் கருணாநிதி, காங்கிரசையும் அவர்களைத் தாங்கிப்பிடிப்பதால், உங்கள் தலைவர் வீரமணியையும் எதிர்த்துக்குமுறுகிறார்கள். எதற்கு அவர்களை எதிர்க்கத் தைரியமில்லாது செத்துக்கிடக்கும் ஈழத்தமிழரைச் சாடுகின்றீர்கள்?
காங்கிரசுக்கு வாக்களிக்கவேண்டுமென்கிறீர்களா? ஜெ அம்மையார் கொடுமையானவர் என்பதிலே எள்ளளவும் சந்தேகமில்லை. அவருக்கு கருணாநிதி மேல். ஆனால், கருணாநிதி ஈழத்தமிழர்மீது பாசம் கொண்டிருக்கின்றார் என்று படம் காட்டாதீர்கள்.

தமிழகத்தமிழர் தமக்கானவரைத் தேர்ந்தெடுக்க தம் வாழ்க்கைப்பிரச்சனைகளேயே முன்னுக்கு வைக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வதிலே முழுக்க உடன்பாடே!

காங்கிரசை ஆதரிப்பதுதான் சுயமரியாதை என்றால், வாழ்க
Don Ashok இவ்வாறு கூறியுள்ளார்…
பதிவு நன்று. ரொம்ப sensitiveஆன விஷயம். வழக்கம் போல் மக்கள் அறிவால் யோசிக்காமல் மனதால் யோசித்து பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். கண்டுகொள்ளவேண்டாம். தொடருங்கள்.
சோமி இவ்வாறு கூறியுள்ளார்…
எது எப்ப்டியிருந்தாலும் தமிழீழத்து முட்டள்களிடம் தமிழ் சினிமாவை காண்பித்துக் காசு பாத்துடலாம். முதல் பின்னூட்டமிட்டிருக்கும் தம்பிக்கு கூட வடிவேலு உதவியில்லாமல் வசனத்தை முடிக்கவில்லை. எஸ்பொ சொல்வது போல நாங்கள் ஈழத்தமிழர் அல்ல தமிழ் ஈழர் அதாவது ஈழத்தில் இருக்கும் தமிழரல்ல தமிழர்களான ஈழத்தவர்கள். தமிழ் நாட்டில் 7 கோடி மக்களுகிருக்கு பிரச்சனைகலை பார்க்க வேண்டியது அவர்கள் கட்டயம்( அதை எப்படிப் பாக்கிரார்கள் என்பது வேறு விடையம்.) ஈழத் தமிழன் வேணுமெண்டால் இந்த கேள்வியைக் கேட்கலாம். ஏண்டா இப்ம்புட்டு பேசிறீங்களே 1 லட்சத்துக்கும் மேலிருக்கும் ஈழத்து ஏதிலிகளை 25 வருசத்துக்கும் மேலா எப்ப்டி நடதுறீங்க. ராஜபக்சே முகாமில் இருந்து 2 வருசத்துக்குள்ள பாதிப் பேர விட்டுட்டானுகளே நீங்க அதை விட மேசமான வசதிகளைக் கோண்ட காமிபில் 25 வருசமாக அடைச்சு வச்சிருக்கீங்களென்னு....என்ன பண்ண நம்ம புலம்பெயர்ந்தவர்கள் சாய்பாபாவுக்கு குடுக்கிற காசில கொஞ்சத்தை இந்த ஏதிலிகளுக்கு கொடுகலமென்றிறதும் இருக்குத்தான். ஆனால் தமிழகதில் இருக்கும் அகதிகளின் நிலமை குறித்து பேசமுடியாதவர்களிடம் இன்னமும் ஈழத்தவர்களை குற்றவாளிகாய பார்க்கும் நிலையை பொதுவிலும் பொலிஸ் நிலையங்களிலும் மாத்த முடியாதவர்களிடம் எதற்க்கு எதிர் பார்க்கிறீர்கள்... மற்றயது இன்னொரு புறம் இன்றைக்கு இருக்கும் தமிழக் காரர்களை விடவும் ( போராளிகளைச் சொல்லவில்லை) தங்கள் வாழ்வை அர்பணித்த பலரை நான் தினமும் தமிழகதில் சந்திக்காமல் இல்லை. கொடும் போற் நடந்த போது உயிரை மாய்த்தவர்களை நமக்கு தெரியும் ஆனால் படிப்பை இடையில் நிறுத்தி வேலையை விட்டு விலகி ஈழதவர்களுக்காக போராடியவர்களிஅயும் தெரியும் இன்னமு அவர்கள் இயங்குகிறார்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஈழ புலி ஆதரவு தமிழர்களை பொறுத்த வரை பிரபாகரன் தான் எல்லா தமிழர்களுக்கும் தலைவராக இருக்க முடியும். அதை தமிழகத்து பதிவு எழுதுவோர் பலரும் ஏற்று கொண்டு பிரபாகரன் தான் தமிழர்களின் தலைவன் என்று எழுதுவதை கவனிக்கலாம். ஆகவே கலைஞர் எப்போதும் அவர்களுக்கு எதிரி தான். அடுத்தது புலிகளின் சாகச யுத்தம் தோல்வி என்ற யதார்த்தை புலி ஆதரவு தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால் கலைஞர் உட்பட தமிழக தலைவர்களை திட்டி தீர்க்கிறார்கள்.
நிமல்-NiMaL உடைய கருத்தே மிக சிறந்த ஆரோக்கியமான கருத்து.
//அப்படியே நீங்களும் ஈழத்தமிழர் பிரச்சினை - தேசியத்தலைவர் வருகிறார் - தொப்புள் கொடி - தனி நாடு என்று பிதற்றிக் கொண்டு இருக்காமல் உங்கள் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுங்கள் அதுவே போதுமானது.//
இதுவே தமிழகத்தில் உள்ள தமிழருக்கும் நல்லது. இலங்கையில் வாழும் தமிழருக்கும் நல்லது.
தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற உங்கள் ஆசைக்காக இலங்கையில் வாழும் தமிழனின் வாழ்வை தயவு செய்து நாசப்படுத்தாதீர்கள்.
அருள் இவ்வாறு கூறியுள்ளார்…
அதிர்ச்சித் தகவல்: கேரளாவுக்கு ஐ.நா.பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம்!

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_15.html
மணிமகன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நல்ல பதிவு.பொறுப்புணர்ச்சியோடு எழுதப்பட்டுள்ளது.அப்படியே வழி மொழிகிறேன்.
மணிமகன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக நல்ல பதிவு.பொறுப்புணர்ச்சியோடு எழுதப்பட்டுள்ளது.அப்படியே வழி மொழிகிறேன்.
அருள் இவ்வாறு கூறியுள்ளார்…
போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html
அருள் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களது கருத்தை நான் வரவேற்கிறேன். வழிமொழிகிறேன். இதையும் படியுங்கள்:

பதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_13.html
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஈழ புலி ஆதரவு தமிழர்களை பொறுத்த வரை பிரபாகரன் தான் எல்லா தமிழர்களுக்கும் தலைவராக இருக்க முடியும்.//

ஆமாம்..இன்னமும் எம்.ஜி.ஆர் இருக்கிறார் என்று நம்புவது போலவே இன்னமும் பிரபாகரன் இருக்கிறார் என்று கும்பல் நம்புகிறது. அது அவர்கள் உரிமை.


//அதை தமிழகத்து பதிவு எழுதுவோர் பலரும் ஏற்று கொண்டு பிரபாகரன் தான் தமிழர்களின் தலைவன் என்று எழுதுவதை கவனிக்கலாம். //

ஆமாம்.இவர்கள் அறிவுஜீவித்தனம் எதுவரை என்றால் ராணுவம் அப்பாவி மக்களை தாக்குவதை கண்டிப்பது வரை. ஏண்டா இத்தனாயிரம் மக்களை பணய கைதியாக வைத்திருந்து சாகடித்தாய் என்று பிரபாகரனை கேட்கமுடியாது.


//ஆகவே கலைஞர் எப்போதும் அவர்களுக்கு எதிரி தான். அடுத்தது புலிகளின் சாகச யுத்தம் தோல்வி என்ற யதார்த்தை புலி ஆதரவு தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.//


புத்தி ஏற்றுக்கொண்டாலும் மனசு ஏத்துக்காது. அறிவுஜீவியாக பேசினாலும் மனசு விசிலடிச்சான் குஞ்சு மனசுதான். வீரப்பன் என்றாலும் கைதட்டும்.பிரபாகரன் என்றாலும் கைதட்டும்.


// அதனால் கலைஞர் உட்பட தமிழக தலைவர்களை திட்டி தீர்க்கிறார்கள்.
நிமல்-NiMaL உடைய கருத்தே மிக சிறந்த ஆரோக்கியமான கருத்து.
அப்படியே நீங்களும் ஈழத்தமிழர் பிரச்சினை - தேசியத்தலைவர் வருகிறார் - தொப்புள் கொடி - தனி நாடு என்று பிதற்றிக் கொண்டு இருக்காமல் உங்கள் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுங்கள் அதுவே போதுமானது.//

புலிகள் வலிமையாக இருந்த காலக்கட்டத்தில் தமிழக தலைவர்கள் வேலையை பார்க்கட்டும்.ஈழத்தை நாங்கள் வாங்கிக்கொள்வோம் என்றெல்லாம் வீரவசனம் விட்டார்கள் இந்த புலம்பெயர் காகித புலிகள்.

//
இதுவே தமிழகத்தில் உள்ள தமிழருக்கும் நல்லது. இலங்கையில் வாழும் தமிழருக்கும் நல்லது.
தமிழனுக்கென ஒரு கொடி உலக அரங்கில் பறக்கட்டும் என்ற உங்கள் ஆசைக்காக இலங்கையில் வாழும் தமிழனின் வாழ்வை தயவு செய்து நாசப்படுத்தாதீர்கள்.//


நூற்றில் ஒரு வார்த்தை.இன்று இவர்கள் ( காகித தமிழ்நாட்டு புலிகள்) எடுத்த நிலைக்காக மிச்சம் இருக்கிற தமிழனை இலங்கையில் சாகடிக்காமல் விட மாட்டானுங்க.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
முண்டம் பிரின்சு,
வழக்கம் போல் சூரமணியின் விசுவாசமான நாய் போலவே குரைத்திருக்கிறாய்.வாழ்த்துக்கள்.
தமிழ்நேசன் இவ்வாறு கூறியுள்ளார்…
இதிலென்ன தயக்கம்... இதிலென்ன வருத்தம்? தமிழனுக்கு ஊற்றிக் கொடுத்து செம்மொழி மாநாடு போட்டவரும், சிங்களவனோடு தமிழனைக் கொள்ளையடித்த பணம் கொண்டு வியாபார ஒப்பந்தம் போட்ட கலைஞரும், பணத்துக்காக கழகத்துக்கு கழகம் தாவும் வீரமணியும், அந்தக் கும்பலோடு சேர்ந்து ராஜபக்சேவிடம் கை குலுக்கிய திருமாவும் என்ன சாதித்துவிட்டார்கள்... சொந்தத்துக்குச் சொத்து சேர்த்தது தவிர? ஈழத்தமிழரின் பேர் சொல்லி வசூல் செய்து சென்னை சங்கமம் நடத்தி மேலும் சம்பாதித்தார்கள் திமுகவினர். அதில் பங்குபெற நக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்து பாராட்டுவிழா நடத்தியவர்கள் பாமக, திருமா, வீரமணி மற்றும் பலர்.

இவர்கள் பேச்சை நம்பி ஈழத்தவன் நம்மவனாயிற்றே அவன் சாகிறானே என்று தீக்குளித்த முத்துக்குமாரும் இவர்கள் பேச்சை நம்பி மூவர் தூக்கை எதிர்த்துத் தீக்குளித்த செங்கொடியும் உயிரை விட்டது தான் கொடுமையிலும் கொடுமை. நாளைக்கே ராசீவ் கொலைக்காக உள்ளே இருக்கும் மூவரை கலைஞரோ வீரமணியோ திருமாவோ ஆதரிக்கவில்லை. கட்சி நடத்தி சமூக சேவை செய்யவே அவர்களுக்கு நேரம் பத்தலை என்று கூறுவார்கள். இவர்களை நம்பிய தமிழனுக்கு நன்றாக கோபாலபுரம் கிருஷ்ணன் கோவிலில் நாமக்கட்டி வாங்கி கிருஷ்ணா நதி நீரில் குழைத்து பட்டையாக நாமம் போடுவார்கள். நாமும் இவர்கள் தமிழினத் தலைவர்கள் என்று ஓட்டுப் போடுவோம். போங்கடா நீங்களும் உங்க இயக்கமும், இன உணர்வும், ஈர வெங்காயமும்.

இந்தக் கண்ணீர்த்துளி கருணாநிதியும், கைக்குட்டை வீரமணியும் தமிழனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது தான் நாம் கண்ட இனமானச் செம்மை. தூ....
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வன்மையாக கண்டிக்க தக்கது இந்த பதிவில் வெளிநாட்டில் வசிக்கும் பல லட்சம் சம்பாதிக்கும் இலங்கை தமிழர்கள் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை........................................
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
வன்மையாக கண்டிக்க தக்கது இந்த பதிவில் வெளிநாட்டில் வசிக்கும் பல லட்சம் சம்பாதிக்கும் இலங்கை தமிழர்கள் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை........................................

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…