தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது. திடீரென வந்த இச்செய்தியை, ஒலிபரப்பிய சூரியன் பண்பலை தொடர்ந்து அவரது படமான 'உள்ளம் கேட்குமே'வில் இருந்து "ஓ மனமே!" பாடலையும் ஒலிபரப்பியது. எனது செல்பேசியில் கடந்து வந்த காலங்களை, நண்பர்களூடன், குடும்பத்துடன் இருந்த தருணங்களைத் திரும்பப் பெற முடியாத நேரங்களில், கேட்பதற்காக வைத்திருக்கும் பாடல் 'ஓ! மனமே'.
எனக்குப் பிடித்த பாண்டஸி இயக்குநர்களில் முக்கியமானவர் ஜீவா. அவரது துல்லியமான ஒளிப்பதிவும், அவர் பயன்படுத்தும் வண்ணங்களும், காட்சிப்பட்த்துதலும் எனக்குப் பிடித்தவை. அவர் அறிமுகப்படுத்தும் கொழுக் மொழுக் நடிகர்கள் கூட!
அவரது 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட அனைத்து படங்களையும் ஒரு ரசிகனாக்க இருந்து ரசித்தவன் நான். எந்தவித சமூகக் கேடுகளுமற்ற பொழுது போக்குப் படங்கள் என்று அவரது படங்களை வரிசைப்படுத்தலாம். இன்னும், அவரது 12பி-யின் "சரியா? தவறா?" பாடலில் வரும் வைரமுத்துவின் பாடல்கள் எனக்கு பிடித்த பெண்ணுரிமை வரிகள்.
நீண்ட காலம் திரு. பி.சி. அவர்களிடம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றவர் ஜீவா.
தமிழ்த்திரையுலகின் இழப்பில் ஒரு திரை மாணவன் என்கிற முறையிலும், ஜீவா படங்களை ரசித்தவன் என்ற முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
அவர் நினைவாக....
Get Your Own Music Player at Music Plugin
கருத்துகள்
அவர் பெயரில் மட்டுமாவது ஜீவன் நிரந்தரமாக இருக்கட்டும்!
அவரின் ஆன்மா அமைதிபெறவும்,குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
http://radiospathy.blogspot.com/2007/06/blog-post_26.html
தமிழ்த் திரையுலகத்திற்கு மாபெரும் இழப்பு.
அஞ்சலி!
எம்.கே.குமார்