தந்தை பெரியாரின் மிகவும் இன்றியமையாத படைப்புகளில் பெண்ணுரிமைக்கான விளக்கமாக அமையக்கூடிய சிறப்புடையது "பெண் ஏன் அடிமையானாள்?" என்னும் நூலாகும். அச்சில் பல பதிப்புகள் வெளிவந்து பல லட்சம் மக்களை சென்றடைந்திருக்கும் இந்த பெண்ணுரிமை ஆவணம் மின்னூலாக வெளிவந்தால் நன்று என்று பல தரப்பு நண்பர்களும் தோழியர்களும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நூலின் அச்சுக்கோர்ப்பு மின் வடிவம் கிடைக்காததால் அதனை மின்னூலாக்கும் பணி தடைப்பட்டுவந்தது.
தந்தை பெரியாரின் எழுத்துக்களை மின்னூலாக்கி இணையத்தில் வெளியிடுவதற்கான ஒப்புதல் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டதோடு, பெரும் ஊக்கமும் அளித்து அந்தப் பணி நடைபெற பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரியார் இணையங்கள் சார்பில் அப்பணி நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக 'விடுதலை' நாளிதழின் 72-ஆம் ஆண்டை முன்னிட்டு கடந்த 1-ஆம் தேதி periyar.org தளத்தில் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற இந்நூல் மின்னூலாக தரவேற்றப்பட்டுள்ளது.
இதன் உடனடித் தேவை கருதி முழு நூலையும் (80 பக்கங்கள்) ஸ்கேன் செய்து தந்த திரு.பிரபாகரன் நம் நன்றிக்குரியவர்.
பெரியார் இணையதளத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பப் பிரச்சனையால், அந்தப் பக்கம் தவிர அவர்களின் முழு அனுமதியோடு, என்னுடைய தளத்திலும் அதனை தரவேற்றியிருக்கிறேன். தற்காலிகச் சுட்டியாக அதனைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் தந்தை பெரியாரின் எழுத்துகள் மின்னூலாக உலகை வலம் வர இருக்கின்றன என்ற செய்தியையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
நண்பர்கள், பெண்ணிய சிந்தனையாளர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அனைவருக்கும் இந்நூல் சென்று சேருமாறு செய்ய வேண்டும். மின்னஞ்சல் மூலம் இவ்விணைப்புகளை அனுப்பிப் பயன்படுத்தவும்.
உங்கள் ஆலோசனைகள், தேவைகளை பெரியார்.அமை தளத்திற்குத் தெரிவியுங்கள்.
பெரியார்.அமை தளத்தில்...
என் கூகிள் பக்கத்தில் இங்கே...
கருத்துகள்
அன்புடன்,
விடாது கருப்பு.