முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜீவா மரணம் - "ஓ! மனமே!"

தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு, தனிக்கவனம் பெற்று வந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா அவர்கள், தனது 'தாம்தூம்' படப் பிடிப்பின் முடிவில் ருஷ்யாவில் மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி வந்துள்ளது. திடீரென வந்த இச்செய்தியை, ஒலிபரப்பிய சூரியன் பண்பலை தொடர்ந்து அவரது படமான 'உள்ளம் கேட்குமே'வில் இருந்து "ஓ மனமே!" பாடலையும் ஒலிபரப்பியது. எனது செல்பேசியில் கடந்து வந்த காலங்களை, நண்பர்களூடன், குடும்பத்துடன் இருந்த தருணங்களைத் திரும்பப் பெற முடியாத நேரங்களில், கேட்பதற்காக வைத்திருக்கும் பாடல் 'ஓ! மனமே'.

எனக்குப் பிடித்த பாண்டஸி இயக்குநர்களில் முக்கியமானவர் ஜீவா. அவரது துல்லியமான ஒளிப்பதிவும், அவர் பயன்படுத்தும் வண்ணங்களும், காட்சிப்பட்த்துதலும் எனக்குப் பிடித்தவை. அவர் அறிமுகப்படுத்தும் கொழுக் மொழுக் நடிகர்கள் கூட!

அவரது 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட அனைத்து படங்களையும் ஒரு ரசிகனாக்க இருந்து ரசித்தவன் நான். எந்தவித சமூகக் கேடுகளுமற்ற பொழுது போக்குப் படங்கள் என்று அவரது படங்களை வரிசைப்படுத்தலாம். இன்னும், அவரது 12பி-யின் "சரியா? தவறா?" பாடலில் வரும் வைரமுத்துவின் பாடல்கள் எனக்கு பிடித்த பெண்ணுரிமை வரிகள்.
நீண்ட காலம் திரு. பி.சி. அவர்களிடம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றவர் ஜீவா.

தமிழ்த்திரையுலகின் இழப்பில் ஒரு திரை மாணவன் என்கிற முறையிலும், ஜீவா படங்களை ரசித்தவன் என்ற முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறேன்.

அவர் நினைவாக....


Get Your Own Music Player at Music Plugin

கருத்துகள்

♠ யெஸ்.பாலபாரதி ♠ இவ்வாறு கூறியுள்ளார்…
:(((((
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. அவரது ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஜாலிஜம்பர் இவ்வாறு கூறியுள்ளார்…
பாடல்களை காட்சிப்படுத்துவதில் மணிரத்னம்,சங்கர் போன்றோரையும் விஞ்சியவர் என்றே நான் கருதுகிறேன்.தமிழ்த் திரையுலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
அவர் இயக்கிய 12பி திரைப்படம் என்னை மிகவும் வியப்படையச் செய்த ஒன்று. அன்னாருக்கு என் அஞ்சலிகள்!
லக்கிலுக் இவ்வாறு கூறியுள்ளார்…
மனசே ஆரலை தோழரே!

அவர் பெயரில் மட்டுமாவது ஜீவன் நிரந்தரமாக இருக்கட்டும்!
முத்துகுமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
திரூ,ஜீஇவா அவர்களீன் க்குட்ம்பத்தாருக்கு ஆழ்ந்த இரன்ன்கலைத்ஹ் தெரிவித்து கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா அமைதியுறட்டும்
உங்கள் நண்பன்(சரா) இவ்வாறு கூறியுள்ளார்…
படித்ததும் அதிர்ந்தேன், எனக்கும் மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர், இளமையான இயக்குனர், நம்மை விட்டுப் போனது வருத்தமே!
அவரின் ஆன்மா அமைதிபெறவும்,குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
மருதநாயகம் இவ்வாறு கூறியுள்ளார்…
ஜீவாவின் குடும்பத்துக்கும், அவரின் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
கானா பிரபா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழந்த அனுதாபங்கள், என் பங்கிற்கும் ஒரு பதிவு போட்டிருக்கின்றேன், வீடியோ இணைப்புடன்

http://radiospathy.blogspot.com/2007/06/blog-post_26.html
செல்வேந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நாயகன், நாயகி, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, இசை, வரிகள், ஆடைகள் என அனைத்திலும் இளமை ததும்பும் படங்களை கொடுத்தவர் ஜீவா. அவரது மரணம் தமிழ் சினிமா ரசிகனுக்கு பேரிழப்பே...
ஆதிபகவன் இவ்வாறு கூறியுள்ளார்…
எனக்குப் பிடித்த இளம் டைரக்டர்களில் ஒருவர். நல்ல திறமையான ஓளிப்பதிவாளரும்கூட. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
துயரத்தில் பங்கு கொண்ட பாலகிஷ்ட அய்யர்:), ஜி.ரா, ஜாலிஜம்பர், லக்கிலுக், முத்துக்குமரன், உங்கள் நண்பன் (சரா), மருதநாயகம், செல்வேந்திரன், ஆதிபகவன், தனிப் பதிவிட்ட கானாபிரபா அனைவருக்கும் நன்றிகள்.
எம்.கே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் அதிர்ச்சியுற்றேன். சாதிக்கும் துடிப்பும் திறமையும் கொண்ட ஒருவர்! வருந்துகிறேன்.

தமிழ்த் திரையுலகத்திற்கு மாபெரும் இழப்பு.

அஞ்சலி!

எம்.கே.குமார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்!

இன்றொரு வரலாற்றுக் குறிப்புநாள். 'பெரியார்' படத்தில் பெரியாரின் மீது செருப்பு வீசப்படும் காட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். திரையரங்கில் பெரும் கைதட்டல்களை அள்ளிய காட்சிகளில் அதுவும் ஒன்று. திரைப்படத்திற்கான கால சமரசம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் உண்டு. உண்மையில் நடந்த நிகழ்வு இன்னும் சுவாரஸ்யமானது.
ஆண்டு-1944: கடலூர் மாவட்டம் உள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் 'தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு' நடைபெற்றது. கடும் மழையிலும் தந்தை பெரியார் எழுச்சியுரையாற்றுகிறார். கூட்டம் முடிந்து பெரியார், தொண்டர்கள் புடைசூழ கைவண்டி ரிக்சாவில் வைத்து திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பெரியாரும் தோழர்களும் கடிலம் நதி பாலத்தைக் கடக்கும்போது எங்கும் இருட்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது பெரியாரின் மீது பாப்பு வீசப்படுகிறது. தோழர்கள் பாம்பு, பாம்பு எனக் குரல்கொடுக்க, பின்னர் அது தண்ணீர் பாம்பு என்பதால் தொடர்ந்து பாலத்தைக் கடந்துவிட்டனர். சிறிது தூரம் சென்றபின், பெரியார் வண்டியைத் திருப்பச் சொல்லியிருக்கிறார். வந்த திசையில…