முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் எழுதாதே!- ஆர்குட் கோவை குழுமத்தில் தடை!


ஆர்குட் இணையதளம் அனைவரும் அறிந்ததே! ஆர்குட்டுனனான என் தொடர்புகள் உறவுகளை பிறிதொருநாள் விரிவாக எழுத எண்ணியிருக்கிறேன். அதற்கு முன் அவசியம் கருதி, ஆர்குட் தொடர்பான மற்றொரு செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆர்குட்-டில் கோவை தொடர்பான குழுமம் (community) ஒன்று இயங்குகிறது. (பல்வேறு குழுக்களில் இதுவும் ஒரு குழுமம்.)
இதன் நிறுவனராக ரோகித் என்பவர் இருக்கிறார். இந்தக் குழுமத்தில் கோவையைச் சேர்ந்த நண்பர் நாதாரி அவர்களும் உறுப்பினர்.

இந்தக் குழுமத்தின் நடவடிக்கைகளிலிருந்து திடீரென நண்பர் நாதாரி விலக்கி வைக்கப்ப்பட்டுள்ளார். காரணம் கேட்டதற்கு ரோகித் கொடுத்த பதிலில் கொப்பளிக்கிறது ஆணவமும், அவரது தமிழ் வெறுப்பும்!

என்ன காரணம் தெரியுமா? "தமிழில் எழுதியதால் தான் நீங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற திமிர்த்தனமான பதிலை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும், தமிழர்கள் வாழும் கோவை பற்றிய குழுமத்தில் தமிழில் எழுதுவது தடுக்கப்படுகிறது என்றால் தமிழர்களே தமிழின் நிலை என்ன? புதிதாக ஒரு குழுமத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்- என்ற வெண்டைக்காய் விளக்கங்கள் எல்லாம் கிடக்கட்டும். இணையத்தில் தமிழில் எழுதுகின்ற இந்த வாய்ப்பினைக் கண்டு பொறுக்காத செயல் என்று தான் இதைக் கருத வேண்டியுள்ளது.

இதோ பிரச்சினன தொடர்பாக நாதாரிக்கும், ரோகித்துக்கும் இடையே நடைபெற்ற ஸ்க்ராப் பரிமாற்றம்:
Naathaari: is there any specific reason for my ban

Rohith: might be because you used tamil

Naathaari: r u from usA

Rohith: no..why do you ask

Rohith: if you had a little sense you would not bug me like this ...why don you start a community called coimbatore in tamil and lets see how many peoplew join...I only ban people who advertise and break the rules of the community...Have a good one

Naathaari: ok i take it is a chalange see it
Rohith: get lost dude its not in my list of priorites

Naathaari: its in my list of priorites

Naathaari: নগ৆ত্ লাস্ত্ ইস্ ইন্ ম্য্ প৆র্রি঒রিত্য্
Naathaari: ਏਨਿਕੁ ਉਨ੍ਕਲ਼ੋਓਤੁ ਸਮ੍ਸਾਰਿਕ੍ਕਣ੍ਯਉਮ੍
Naathaari: then why r u in tamilnadu


இதற்கு மேல் வேறொன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆர்குட் குறித்தும் கருத்த் சுதந்திரம் குறித்தும் பிரச்சினை எழுந்துள்ள இந்தக் காலத்தில் இதை கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகிறேன்.
ஆர்குட்டில் இருக்கும் நண்பர்கள் இது குறித்த தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு பணக்கார கிலப்புக்குள் வேட்டி கட்டியபடி சென்ற தமிழனை, இவ்வளவுக்கும் சிறப்பு விருந்தினரை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் அனுமதிக்காத நிகழ்வும், பின்னர் அவர் பேண்ட் அணிந்த பின்தான் உள்ளே அனுமதித்து பேச வைக்கிற அவலமும் அண்மையில் சென்னையில் நடந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் முக்கிய நகரம் பற்றிய குழுமத்தில் தமிழில் பேசியவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார். இந்தியருக்கு எத்தியோப்பியாவில் அவமதிப்பு என்று துள்ளிக் குதிக்கும் தேசியங்கள் எல்லாம் இந்த விசயத்தில் என்ன சொல்லப் போகின்றன?

கருத்துகள்

வவ்வால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஒரு கூட்டை(ஒர்குட்) எல்லாம் தமிழ் நாட்டுள்ள ஒருத்தனும் கண்டுக்கிரதே இல்லை அத பத்திலாம் பேசி விளம்பரம் தரனுமா?
அந்த வலைத்தளத்தையே தடை செய்வது பற்றி மத்திய அரசு யோசிப்பதாக செய்தி, விநாச காலே விபரீத புத்தி!
(நாமக்கல்லாரின் சின்ன வயசு படாம இந்த ப்ரொபைல் படம்)
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
இதெல்லாம் ஜகஜமாய்ப் போச்சுங்க இப்ப. என்ன பண்ணலாம். கோயமுத்தூர்க்காரங்கள்ளாம் இப்ப இருக்குற குழுமத்துல இருந்து விலகி புதுக்குழுமத்துல சேரலாம். குறைந்த பட்சம் வலைப்பூக்கள்ள இருக்குற கோவைக்காரர்களாவது செய்யலாம்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Stupid guy
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Parathesi Nai...Enna koluuppu..Oor manamthai vaangaranae!

Kvalaip padadheenga naadhaari..neenga oru kuzhumam aarambinga..kalakkip puduvom kalakki!
உங்கள் நண்பன்(சரா) இவ்வாறு கூறியுள்ளார்…
:(
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இதில் ஆர்க்குட்டைக் கண்டிக்க ஒன்றுமில்லை. ரோஹித்துக்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்ததோடு ஆர்க்குட்டில் தமிழிலும் உரையாடக்கூடிய இன்னொரு கோவை சார் குழுமத்தைத் தொடங்க வேண்டியது தான். இதுக்கெல்லாம் tension ஆகக் கூடாது.
Senthil இவ்வாறு கூறியுள்ளார்…
i am from coimbatore, i dont know how to use tamil fonts, so me, i will screw that asshole
Senthil இவ்வாறு கூறியுள்ளார்…
ccc
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
நண்பர்கள் நாமக்கல் சிபி, வவ்வால், ஜி.ராகவன், ரங்ஸ், உங்கள் நண்பன்(சரா), செந்தில்குமார் மற்றும் அனானி நண்பர்கள் அனைவரின் உணர்வுகளுக்கும் நன்றி!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆர்குட்டை தடை செய்யவேண்டுமென்பது என் கருத்தல்ல வவ்வால் அவர்களே! பேனா நண்பர்கள் போன்ற நல்வாய்ப்பாக அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல் கோவைக்கென்று நிறைய குழுமங்களும் இருக்கின்றன. அதில் கோவைக்காரர்கள் சேருவார்கள். ஆனால், இப்படி ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை அடையாளப்படுத்தவே இப்பதிவு!
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆர்கூட்டை கண்டிக்க சொல்லவில்லை... ஆர்குட்டில் அந்த குழுமத்தைக் கண்டிக்க சொன்னேன். ஆர்குட் எனக்கு வழங்கிய கொடை நிறைய..வே!
ஏனுங்க நாமக்கல்லாரே உங்க சின்ன வயசுப் படமா இது.. அதைதான் வவ்வாலார் 'வயசு படாம'ன்னு கேட்டிருக்கார்.
CAPitalZ இவ்வாறு கூறியுள்ளார்…
///ஒரு பணக்கார கிலப்புக்குள் வேட்டி கட்டியபடி சென்ற தமிழனை, இவ்வளவுக்கும் சிறப்பு விருந்தினரை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் அனுமதிக்காத நிகழ்வும், பின்னர் அவர் பேண்ட் அணிந்த பின்தான் உள்ளே அனுமதித்து பேச வைக்கிற அவலமும் அண்மையில் சென்னையில் நடந்திருக்கிறது.///

அட சென்னையிலேயே இப்படி நடந்தா, கோயம்பத்தூரில நடக்கிறது பெரிய விசயம் இல்லையே?

எனக்கு ஒன்று மாத்திரம் தெரியுது. "தமிழ்நாடு" பெயரைக் கூட கொஞ்ச நாட்களில் மாற்றி விடுவார்கள் போல.


_______
CAPitalZ
ஒரு பார்வை
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நிச்சயம் கண்டிக்கவேண்டிய ஒன்று
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
:(

கொழுப்பு... வேறென்ன சொல்ல?

என் கண்டனத்தை ஆர்குட்டில் பதிவு செய்தாகிவிட்டது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆப்போட ஆர்க்குட் வரைக்கும் போய் வரேன், ஓக்கே :)))
ILA (a) இளா இவ்வாறு கூறியுள்ளார்…
அடப் பாவிகளா? படிச்ச கொழுப்பும், பணமும்தானே இதுக்குக் காரணம். அப்புறம் எதுக்கு கோயம்புத்தூருன்னு பேரு. நியூயார்க்குன்னே மாத்திக்க வேண்டியதுதானே.
ILA (a) இளா இவ்வாறு கூறியுள்ளார்…
சிபி, அடிதடியில எல்லாம் இறங்கிட வேண்டாம்.
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
என் கண்டனத்தை ஆர்குட்டில் பதிவு செய்தாகிவிட்டது.
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
capitalZ, இளா, சிதம்பரம், செந்தழல் மற்றும் சீனு ஆகியோரின் உணர்வுகளுக்கு நன்றி!
உண்மைத்தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோவையில் இருந்து கொண்டு தமிழில் எழுதக் கூடாது என்று சொன்னால் அந்த முட்டாளை என்னவென்று திட்டுவது என்பது தெரியவில்லை. தமிழ் அந்த அளவிற்கு முக்கால்வாசி இளைஞர்களுக்கு அன்னியமாகிவிட்டது.. கல்வி அனைவருக்கும் சமச்சீராக இல்லை என்பதுதான் உண்மை. அந்த வலைத்தளத்தின் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு கூட தொடுத்துப் பார்த்துவிட்டார்கள். இது இணைய சுதந்திரம் என்று சொல்லிவிட்டார்கள். நாம் தமிழில் மட்டுமே எழுதுவோம் என்று ஒரு பிரிவை ஆரம்பித்து நமது போரைத் துவக்குவதுதான் ஒரே வழி..
ஸ்ரீ சரவணகுமார் இவ்வாறு கூறியுள்ளார்…
கடைசியில் ரோஹித் இறங்கி வந்ததைப் போல தெரிகிறது
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்....
PRINCENRSAMA இவ்வாறு கூறியுள்ளார்…
ஆர்குட்டில் தொடர்ந்து விவாதம் நடந்துவருகிறது...
http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=7222740&tid=2538597818263468588&start=1

ரோஹித் என்ற அந்த நண்பர் தன் புகைப்படத்தை மறைத்துக்கொண்டதோடு, கண்டனம் தெரிவித்த பதிவுகளை அழித்துக்கொண்டும் இருக்கிறார்.
குழுமத்தின் பெயரை 'ஹலோ' என்று மாற்றிவிட்டு தான் அப்படியில்லை என்று அவர் எழுதியிருக்கும் 'டிஸ்கிளைமரும்' விளக்கமும்...இன்னமும் கொடுமையாக இருக்கிறது.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
that guy spreading wrong informations to others....
Athi இவ்வாறு கூறியுள்ளார்…
Sama... Ithukku ethukku tension aaganum?? Thannoda property'kku enna rules vaikkanum'nnu ovvorutharukkum urimai irukku. "Outside food not allowed"nnu Sathyam Cinemas'la poduraan. Athu kooda thaan enakku pidikkalai'nnu koba pada mudiyumaa??
Come on ya... Rules pudikkalai'nna velila vaanga. Avangavangaley maathikkuvaanga andha rule'ai!!
கருப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
அந்த பரதேசியை செருப்பைக் கழட்டி அடிக்காமலா விட்டார்கள்? நானும் வந்து பார்க்கிறேன் அந்த ஆர்குட்டை!

சமா அவர்களே,

உங்களை எட்டு போட அழைத்திருக்கிறேன். எங்கே எட்டு போட்டுக் காட்டுங்க பார்ப்போம்!

அன்புடன்,
கருப்பு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்....

நான் வாய்விட்டு உரக்கப்பாடி மகிழ்ந்தது போல் நீங்களும் கேட்டு, பாடி மகிழ வேண்டாமா? இதோ புரட்சிக் கவிஞர் ஓங்கி ஒலித்த "சங்கே முழங்கு" பாடல் கலங்கரை விளக்கம் திரைப்படத்திலிருந்து.... KalangaraiVilakkam... சங்க நாதம் எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம் நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய் முழங்கு சங்கே! சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள் தீராதி தீரரென் றூதூது சங்கே! பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு! வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்! கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்! வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம்! எங்கள் வாழ்வும்...... -புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை: பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ பெல்லாரி வெங்காயம்…………..4 பச்சை மிளகாய்……………………..4 தக்காளி……………………………….4 சிவப்பு மிளகாய்…………………….10 மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம் மிளகு ………………………………....1 தேக்கரண்டி சீரகம்……………………………..……1 தேக்கரண்டி சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி கசகசா………………………….…..…1 தேக்கரண்டி இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம் பூண்டு…………………………………10 பல் தேங்காய்…………………………… 1 /2 மூடி ஏலம்……………………………………1 பட்டை…………………………………சிறு துண்டு கிராம்பு…………………………………5 எண்ணெய்……………………………3 தேக்கரண்டி கறிவேப்பிலை………………………1 கொத்து உப்பு ……………………………………தேவையான அளவு கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்

கிழிந்து தொங்கும் 'அந்துமணி' முகமூடி! (பார்ட் - 2)

”அய்யய்யோ... நான் சிப்ஸ் மட்டும் தான் திம்பேன்...” ”சேச்சே... நான் லெஹர் பெப்ஸி குடிக்கிறதோட சரி... உ.பா. பக்கம் போறதேயில்லை...” “பேட் பாய்ஸ்... இந்த நடுத்தெரு நாராயணனும், அவரும் இவரும் தான் குடிச்சுக்கிட்டே பேசினாங்க” என்று தன்னை யோக்கிய சிகாமணியாகக் காட்டிக் கொண்டே பொழப்பை ஓட்டிய அந்தக் கால நடுநிலை நாயகர், சமூக ஆர்வலர் தான் அந்துமணி @ ரமேஷ் @ ராமசுப்பு அய்யர்வாள். அவாள் ஏற்கெனவே கையப் புடிச்சு இழுத்த கேசில் மாட்டினவா... இப்போ சாலையில வண்டி ஓட்டிண்டே தண்ணியடிச்சு மாட்டினுட்டா... நியூசைப் படிச்சு வையுங்கோ... இவாளைத் தெரிஞ்சு வையுங்கோ... அண்ணன்  Saravanan Savadamuthu  பதிவிலிருந்து... // இன்றைய தினமலர் செய்தித்தாளில் அண்ணா சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளரான ஜாகீர் உசேன் என்பவர் வெளிநாட்டு கார்களை மடக்கி மாமூல் வசூலிப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவமோ வேறாக இருக்கிறதாம். அந்த உதவி ஆய்வாளர் பணியில் இருக்கும்போது 4 கோடி மதிப்புள்ள ஒரு வெளிநாட்டு காரை நிறுத்துகிறார். காரை ஓட்டி வரும் நபர் K. ராமசுப்பு ( News Bureau, Chief Editor & Owner - Dinam