ஆர்குட் இணையதளம் அனைவரும் அறிந்ததே! ஆர்குட்டுனனான என் தொடர்புகள் உறவுகளை பிறிதொருநாள் விரிவாக எழுத எண்ணியிருக்கிறேன். அதற்கு முன் அவசியம் கருதி, ஆர்குட் தொடர்பான மற்றொரு செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.
ஆர்குட்-டில் கோவை தொடர்பான குழுமம் (community) ஒன்று இயங்குகிறது. (பல்வேறு குழுக்களில் இதுவும் ஒரு குழுமம்.)
இதன் நிறுவனராக ரோகித் என்பவர் இருக்கிறார். இந்தக் குழுமத்தில் கோவையைச் சேர்ந்த நண்பர் நாதாரி அவர்களும் உறுப்பினர்.
இந்தக் குழுமத்தின் நடவடிக்கைகளிலிருந்து திடீரென நண்பர் நாதாரி விலக்கி வைக்கப்ப்பட்டுள்ளார். காரணம் கேட்டதற்கு ரோகித் கொடுத்த பதிலில் கொப்பளிக்கிறது ஆணவமும், அவரது தமிழ் வெறுப்பும்!
என்ன காரணம் தெரியுமா? "தமிழில் எழுதியதால் தான் நீங்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளீர்கள்" என்ற திமிர்த்தனமான பதிலை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும், தமிழர்கள் வாழும் கோவை பற்றிய குழுமத்தில் தமிழில் எழுதுவது தடுக்கப்படுகிறது என்றால் தமிழர்களே தமிழின் நிலை என்ன? புதிதாக ஒரு குழுமத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்- என்ற வெண்டைக்காய் விளக்கங்கள் எல்லாம் கிடக்கட்டும். இணையத்தில் தமிழில் எழுதுகின்ற இந்த வாய்ப்பினைக் கண்டு பொறுக்காத செயல் என்று தான் இதைக் கருத வேண்டியுள்ளது.
இதோ பிரச்சினன தொடர்பாக நாதாரிக்கும், ரோகித்துக்கும் இடையே நடைபெற்ற ஸ்க்ராப் பரிமாற்றம்:
Naathaari: is there any specific reason for my ban
Rohith: might be because you used tamil
Naathaari: r u from usA
Rohith: no..why do you ask
Rohith: if you had a little sense you would not bug me like this ...why don you start a community called coimbatore in tamil and lets see how many peoplew join...I only ban people who advertise and break the rules of the community...Have a good one
Naathaari: ok i take it is a chalange see it
Rohith: get lost dude its not in my list of priorites
Naathaari: its in my list of priorites
Naathaari: নগত্ লাস্ত্ ইস্ ইন্ ম্য্ পর্রিরিত্য্
Naathaari: ਏਨਿਕੁ ਉਨ੍ਕਲ਼ੋਓਤੁ ਸਮ੍ਸਾਰਿਕ੍ਕਣ੍ਯਉਮ੍
Naathaari: then why r u in tamilnadu
Naathaari: ਏਨਿਕੁ ਉਨ੍ਕਲ਼ੋਓਤੁ ਸਮ੍ਸਾਰਿਕ੍ਕਣ੍ਯਉਮ੍
Naathaari: then why r u in tamilnadu
இதற்கு மேல் வேறொன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆர்குட் குறித்தும் கருத்த் சுதந்திரம் குறித்தும் பிரச்சினை எழுந்துள்ள இந்தக் காலத்தில் இதை கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகிறேன்.
ஆர்குட்டில் இருக்கும் நண்பர்கள் இது குறித்த தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு பணக்கார கிலப்புக்குள் வேட்டி கட்டியபடி சென்ற தமிழனை, இவ்வளவுக்கும் சிறப்பு விருந்தினரை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குள் அனுமதிக்காத நிகழ்வும், பின்னர் அவர் பேண்ட் அணிந்த பின்தான் உள்ளே அனுமதித்து பேச வைக்கிற அவலமும் அண்மையில் சென்னையில் நடந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரம் பற்றிய குழுமத்தில் தமிழில் பேசியவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார். இந்தியருக்கு எத்தியோப்பியாவில் அவமதிப்பு என்று துள்ளிக் குதிக்கும் தேசியங்கள் எல்லாம் இந்த விசயத்தில் என்ன சொல்லப் போகின்றன?
கருத்துகள்
அந்த வலைத்தளத்தையே தடை செய்வது பற்றி மத்திய அரசு யோசிப்பதாக செய்தி, விநாச காலே விபரீத புத்தி!
(நாமக்கல்லாரின் சின்ன வயசு படாம இந்த ப்ரொபைல் படம்)
Kvalaip padadheenga naadhaari..neenga oru kuzhumam aarambinga..kalakkip puduvom kalakki!
அதேபோல் கோவைக்கென்று நிறைய குழுமங்களும் இருக்கின்றன. அதில் கோவைக்காரர்கள் சேருவார்கள். ஆனால், இப்படி ஒரு கூட்டம் இருக்கிறது என்பதை அடையாளப்படுத்தவே இப்பதிவு!
ஏனுங்க நாமக்கல்லாரே உங்க சின்ன வயசுப் படமா இது.. அதைதான் வவ்வாலார் 'வயசு படாம'ன்னு கேட்டிருக்கார்.
அட சென்னையிலேயே இப்படி நடந்தா, கோயம்பத்தூரில நடக்கிறது பெரிய விசயம் இல்லையே?
எனக்கு ஒன்று மாத்திரம் தெரியுது. "தமிழ்நாடு" பெயரைக் கூட கொஞ்ச நாட்களில் மாற்றி விடுவார்கள் போல.
_______
CAPitalZ
ஒரு பார்வை
கொழுப்பு... வேறென்ன சொல்ல?
என் கண்டனத்தை ஆர்குட்டில் பதிவு செய்தாகிவிட்டது.
http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=7222740&tid=2538597818263468588&start=1
ரோஹித் என்ற அந்த நண்பர் தன் புகைப்படத்தை மறைத்துக்கொண்டதோடு, கண்டனம் தெரிவித்த பதிவுகளை அழித்துக்கொண்டும் இருக்கிறார்.
குழுமத்தின் பெயரை 'ஹலோ' என்று மாற்றிவிட்டு தான் அப்படியில்லை என்று அவர் எழுதியிருக்கும் 'டிஸ்கிளைமரும்' விளக்கமும்...இன்னமும் கொடுமையாக இருக்கிறது.
Come on ya... Rules pudikkalai'nna velila vaanga. Avangavangaley maathikkuvaanga andha rule'ai!!
சமா அவர்களே,
உங்களை எட்டு போட அழைத்திருக்கிறேன். எங்கே எட்டு போட்டுக் காட்டுங்க பார்ப்போம்!
அன்புடன்,
கருப்பு.