பதிவர் சந்திப்பைத் தவறவிட்டதற்கு காரணம் சொல்வதன்று இந்தப் பதிவின் நோக்கம்! மாறாக என்னை நானே தேற்றிக்கொள்ளவே!
இதற்கு முன்பு நடந்த சந்திப்பு (மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா)ஒன்றுக்கு, ப்ளாக்கராக இல்லாத போதே, விஜய் டிவி-யின் நீயா? நானா? நிகழ்ச்சியில் பங்கேற்க விடுத்த அழைப்பையும் மறுத்து வந்து கலந்து கொண்டேன். அப்போதுதான் வரவணையான், பாலா ஆகியோர் அறிமுகம் எனக்கு!
ஏப்ரல் 22 - பதிவாளர் சந்திப்பு என்று அறிவிப்பு வந்த நாளிலிருந்து, என் தேர்வு நாளுக்கு பங்கம் வராமல் இருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தேன். அதனை பாலாண்ணனிடமும் சொல்லி உறுதிப் படுத்தியிருந்தேன்.
இதற்கென தனித் தயாரிப்புகளோடு வருவதெனத் தீர்மானித்திருந்தேன்.
ஏப்ரல்-20 அன்று தேர்வுகள் முடிந்து விட்டதென மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நேரத்தில், செயல்முறைத் தேர்வுகளையும், முடிக்க வேண்டிய குறும்படப் பணிகளையும் பட்டியலிட்டு, 23,24 உனக்கு கால்ஷீட் என்று கட்டிப்போட்டுவிட்டார். அதையும் தாண்டி இன்று வந்து தீர வேண்டுமென மதியம் கூட பாலாண்ணனிடம் பேசி தயார்செய்து கொண்டேன்.
காலையில் தொடங்கிய பணி ஈ......ழு.......ஈ......ழு..... என்று இழுத்து, நடந்து கொண்டிருக்க, மனதும் பணியில் இல்லாமல், முடிக்காமல் வரவும் முடியாமல்....
எனது நேரத்தை பிறிதொருவர் முடிவு செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது.
பதிவாளர் சந்திப்புக்காக சேகுவேரா பனியன் ஒன்று புதிதாய் எடுத்திருந்ததோடு, என் கல்லூரி செய்முறைத் தேர்வுக்கு படைக்க, தமிழ் வலைப்பூக்கள் பற்றிய அறிமுகம் தரும் வகையில் ஆவணப்படம் எடுப்பதற்காக நான் எழுதியிருந்த பிரதியையும் அனைவரிடமும் காட்டி மகிழவேண்டும் என்ற ஆசையெல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு வந்து என்னை வேறு சிந்தனையை நோக்கித் திரும்பாதவண்ணம் வைத்துக் கொண்டிருக்கின்றன. வழக்கமாக இப்படி ஏதாவது ஒரு மனச் சோர்வு என்றால் என்னைத் தேற்றும் என் தங்கையும் இப்போது பக்கத்தில் இல்லை. பாலாண்ணனுக்கு 6 மணிக்கு போன் போட்டு, 'இப்ப வரலாமா?' என்று கேட்டேன். எப்படியாவது இன்னுமொரு 1 மணிநேரம் நடக்கும் என்ற நப்பாசையில்!
ஆனால், 'நன்றி' என்ற முதல் வார்த்தையில் நான் நொறுங்கிப்போனேன்.
"முடிக்கப் போறோம். 3:30க்கு சரியா ஆரம்ப்பிச்சோம்; எவ்வளவு நேரந்தான் மொக்கை போடுறது. கிளம்பப்போறோம்" என்றார்.
கேமரா எடுத்து வருவதாக உறுதி அளித்திருந்தேன். நேரத்திற்கு இந்த முறை வந்துவிடு தம்பி என்று சொன்னபோதும் உறுதி சொல்லி இருந்தேன். ஆனால் "இந்த உறுதிகளைக் காக்க முடியவில்லையேடா உன்னால், உன்னை நம்பி ஏமாந்தேனே தம்பி?" என்று என்னை பார்த்து பாலாண்ணன் சொல்வது போலிருந்தது.
இதைவிட ஏமாற்றங்களையெல்லாம் எளிதில் தாங்கியிருக்கிறேன். ஆனால், சில சமயங்களில் குழந்தையாகிப் போகும்போது, சின்ன ஏமாற்றங்களையும், சொற்களையும் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. கடற்கரை சாகச நிகழ்ச்சியைக் கூட அலுவலகத் தொலைக்காட்சியில் காணப் பிடிக்காமல் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். அடுத்த முறைக்கான வாக்குறுதிகளெல்லாம் இப்போது இல்லை!
நான் எழுதிய ஆவணப்பட பிரதியின் சில பக்கங்கள்தான் நீங்கள் பார்ப்பது!
இப்போது நான் எப்படி இருக்கிறேன்? வேறென்ன இயலாமையின் வெளிப்பாடு கோபத்தோடுதான்!
கருத்துகள்
அன்புடன்,
மா சிவகுமார்
வகுப்புவாரி உரிமையை ஏற்காத காங்கிரசை ஒழிப்பதே என் முதல்வேலை என்றார் பெரியார்! பாலாண்ணே... தவறான தகவல் தந்த உங்களுக்காகவேனும், பா.க.ச.வை வளர்ப்பதே இனி என் முதல் வேலை!!!!!
தேற்றுதலுக்கு நன்றி.. சிவகுமார்!
ஆனாலும் அந்த சேகுவேரா டி.சர்டெல்லாம் கொஞ்சம் ஓவர்.
தமில் வால்க அப்படின்னு சொல்லிட்டு, 4 லார்ஜ் ஓல்ட் மாங்க் அடித்துவிட்டு, பெரியார் சிலை உடைப்பிற்காக பார்பனனைத்திட்டிக் கொண்டு ரோட்டில் உருளுவீங்களா....அதவிட்டு இந்த பொலம்பல் பொலம்புரீங்க.....
//ஆனாலும் அந்த சேகுவேரா டி.சர்டெல்லாம் கொஞ்சம் ஓவர். //
கொஞ்சமா? :)))
அப்படிச் செய்யிற ஆளுக இல்லைங்றதுனால்தான் எழுதுறோம். அப்புறம் அனானி... 'பார்பனனைத்திட்டிக் கொண்டு' மட்டும் இருக்குற ஆளுகளும் நாம இல்லை!
சரி, ஒரு நாலு பேரோட பூணூலை அறுத்து எறிஞ்சா போகுது...அவ்வளவுதானே....
விடியோவை வலை ஏத்த எண்ணி இருந்தேன். கவுத்துட்டு.. இப்படி பிலிங்பிலிங்கா எழுதுறியா..!
//பா.க.ச.வை வளர்ப்பதே இனி என் முதல் வேலை!!!!!//
:(
இனி என்ன வளர்க்க வேண்டி இருக்கு. அது தான் வள்:அர்ந்து நிக்குதே!
அது பாகசன்னு எழுதியிருந்தீங்களா.. அதான் சும்மா எட்டிப்பாத்தேன்.. :))
சென்ஷி