முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன்

திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை.
தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?
தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!.
நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை?
மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா?
தண்ணீர் என்பதற்கு ஜலம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமிழன் ஏற்றுக்கொண்டதல்லவா இந்தத் தமிழ்ப்புத்தாண்டு?
உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாளே யாகும். உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.
உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!
உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!
உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!
உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!
அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!. அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.
ஒரு நாள் என்பது என்ன?
சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.
ஒருமாதம் என்பது என்ன?
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.
அதேபோல் ஆண்டு என்பது என்ன?
சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள

கால அளவு ஓர் ஆண்டு.
அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.
சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.
உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.
சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.
சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.
இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.
தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின்

இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.
ஏசு பிறப்பை வைத்து கணக்கீடு என்பது சரியன்று. காரணம் ஏசு பிறந்தது டிசம்பர் 25. மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்ற ஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.
ஆக இயற்கை நிகழ்வுகளின் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் காலக்-கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.
மாறாக பிரபவ தொடங்கி அட்சய வரையிலுள்ள 60 ஆண்டுகள் எந்த அடிப்படையில் உருவானவை? ஏதாவது அடிப்படை உண்டா? கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் 60 ஆண்டுகள் பிறந்தன என்ற நாற்றப் புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லையே!
அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டு-களில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க-வேண்டும்?
தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்! தமிழாய்ந்த தலைவர் கலைஞர் காலத்திலே இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கலைஞர் இதை நடைமுறைப்படுத்துவார் என்று தமிழர்கள் குறிப்பாக அயல்-நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்க்கப்-போவதில்லை. எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!
சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழி காட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள். கலைஞர் வார்த்தை-களில் சொல்ல வேண்டுமானால் கடல் கடந்த அந்தத் தமிழுணர்வு காலங்-கடந்தாவது நமக்கு வரவேண்டுமல்லவா?
சொந்த அப்பனுக்குப் பிறந்தேன் என்பது தானே ஒருவனுக்குப் பெருமையாக இருக்க முடியும்? அடுத்தவனுக்குப் பிறந்தால் அவமானம் அல்லவா?
தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?
உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்? இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!
1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.
அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா? அதை உறுதி செய்த பெருமையும் வழக்கம் போல் கலைஞரையே சேரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்-கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்-சக்கர முறையில் இருப்-பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு அறிவியல் தமிழ் மண் மரபு மாண்பு பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.
எனவே தமிழ் அறிஞர்கள் சான்-றோர்கள் புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்-தார்கள்.
இந்த முடிவை 18.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 193531=1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி-ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)
- வ. வேம்பையன்


நன்றி: உண்மை(ஜனவரி 16-30, 2007)

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Muttal thanamaga pesathey.....

Ithey kalaiger veetu TV (SUNTV)sollukirarkal ithu thamizhan puthandu nigazhchi....

Sutha muttala nee...u cannot even give thamizhil name for your blog...you are talking about Thamil puthandu...

My tamil fonts not working so I typed in thamiglish

Muthanannan Manickam
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
சரி.. இப்ப பிரச்சனை என் பெயரிலயா?
சன் தொலைக்காட்சி அறிவிப்புலயா?

சன் சொன்னதையெல்லாம் தமிழின அறிவிப்ப எடுத்துக்குற அளவு குழந்தைப் பிள்ளையா நீங்க?

முகமிலி Muthananna!
என் பெயரை மாற்றி பதிவிடுறது பெரிய விசமில்லை.. சொந்தப் பெயரில் பதிவிடுறேன்குறதும்,
என்ன பதிவிடுறேன்குறதும் தானே முக்கியம்.
நாடோடி இவ்வாறு கூறியுள்ளார்…
http://naagariika-naadoodi.blogspot.com/2007/04/blog-post_1739.html

உங்கள் கருத்துக்கு பதில் கூற முனைந்துள்ளேன் மேலே உள்ள சுட்டியில் பார்க்கவும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
யேசு டிசம்பர் 25 இல் பிறந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

யேசு பிறப்பதற்கு முன்பு தமிழன் புத்தாண்டு இல்லாமலா வாழ்ந்தான்?
தை 1ம் திக‌தி புத்தாண்டு கொண்டாட‌ என்ன‌ அறிவிய‌ல் ஆதார‌ம் உள்ள‌து?

சித்திரை என்ப‌து இலைதுளிர் கால‌த்தின் தொட‌க்க‌ம். இய‌ற்கையின் சுற்றுவ‌ட்ட‌த்தின் தொட‌க்க‌ம். சூரிய‌ன் ம‌த்திய‌ கோட்டைக் க‌ட‌க்கும் கால‌ம் சித்திரையே!

புள்ளிராஜா
Thamizhan இவ்வாறு கூறியுள்ளார்…
அறிவான விளக்கம் சொல்பவர்க்கு அநாமதேயங்கள் பட்டமளிப்பதுதான் வேடிக்கை.தமிழாண்டு என்று சொல்லப்படுவதில் தமிழிருக்கிறதா?
அந்த ஆண்டுகள் பிறந்த கதைதானேய்யா அசிங்கமும் முட்டாள் தனமும்.அதைச் சொன்னால் எங்கே எரிகிறது?
கட்டாயம் படித்த தமிழர்கள் சிந்தித்து பல தமிழறிஞர்கள் ஆராய்ந்து சொன்ன தை முதலே தமிழர் புத்தாண்டாய்க் கொண்டாட வேண்டும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Pain part is people started calling tamil new year as சர்வஜித்(Sarvajith).
துளசி கோபால் இவ்வாறு கூறியுள்ளார்…
ஜெஹோவா விட்னெஸ் ன்னு இருக்கும் குழுவைக்கேளுங்க. யேசு பிறந்தது
டிசம்பர் இல்லைன்னு சொல்றாங்க. பூமத்திய ரேகைக்கு மேலே டிசம்பர்
குளிர்காலம். அப்ப ஆடுகளுக்கு குட்டிபோடும் சீஸன் இல்லை. யேசு பிறந்தப்ப
ஆடு, மாடு குட்டிகள் போடும் சீஸனா இருந்ததாலே இந்த டிசம்பர் மாசக்கணக்கு
தவறுன்னு அவுங்க சொல்றதைக் கேட்டா ஞாயமாத்தான் இருக்கு.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆடு, மாடு குட்டிகள் போடும் சீஸனா இருந்ததாலே இந்த டிசம்பர் மாசக்கணக்கு
தவறுன்னு அவுங்க சொல்றதைக் கேட்டா ஞாயமாத்தான் இருக்கு. //

யேசு பிறப்புக்கும் இந்த ஆண்டுக் கணக்குக்கும் தொடர்பில்லை. ஜனவரி முதலான மாதக்கணக்கு அதுக்கு முன்பே உருவானது. ரோமானிய மன்னர்கள் பெயரால் வருவது.

யேசு பிறப்பை ஆண்டுக்கணக்கிலும் சரியாக பொருத்தவில்லை. மாதம் தேதியும் சரியாக பொருந்த வில்லை. கிட்டத்தட்ட 4 அல்லது 6 ஆண்டு வேறுபாடு உண்டு. அது போல தான் இந்த டிசம்பர் 25 கதையும் ஏதோ வசதிக்காக வைக்கப் பட்டதுதான்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆண்டுத் தொடக்கம் சித்திரையோ, தையோ, ஆனால் ஆண்டுப் பெயர்கள் தமிழ் இல்லை. அந்தக் கதையும் ஆபாசக் குப்பை. தமிழன் பண்பாடு இல்லை. இதை கொண்டாடுவது அவமானம்.
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
அனானித் தோழரே! ஆண்டுத் தொடக்கத்தை மட்டுமல்ல, ஆண்டுகளின் பெயரையும் நாம் ஏற்கப்போவதில்லை! மேலும், தைத் திங்களில் தொடங்கும் புத்தாண்டுக்கு, திருவள்ளுவர் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட தி.பி. என்ற தொடர் ஆண்டு முறை அல்லவா பின்பற்றப்படுகிறது!
vijay இவ்வாறு கூறியுள்ளார்…
இது முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தற்போதிய சான்றுகளின் வழி தமிழ் புத்தாண்டு தை திங்கள் தான் என்பது திண்ணம். இதைதான் 4 மலேசிய தலைமுறையினரான நாங்களும் பின்பற்றுகின்றோம். தமிழ் கடல், மறை மலை அடிகளின் முடிவு தமிழ் சங்கத்தை ஒத்த முடிவு. இனி வரும் காலங்களில் நிகழவிருக்கும் ஆராய்சியின் மூலமாக தமிழ் ஆண்டுகளின் பெயர்கள்(இருந்திருந்தால்) கிடைப்பின் மிக நன்று, இல்லையேல் தமிழ் அறிஞர்களின் வாக்குகிணங்க தை திங்க உத்தமம்.இது அடியேனின் தாழ்மையான கருத்து.
vijay இவ்வாறு கூறியுள்ளார்…
இது முற்றிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தற்போதிய சான்றுகளின் வழி தமிழ் புத்தாண்டு தை திங்கள் தான் என்பது திண்ணம். இதைதான் 4 மலேசிய தலைமுறையினரான நாங்களும் பின்பற்றுகின்றோம். தமிழ் கடல், மறை மலை அடிகளின் முடிவு தமிழ் சங்கத்தை ஒத்த முடிவு. இனி வரும் காலங்களில் நிகழவிருக்கும் ஆராய்சியின் மூலமாக தமிழ் ஆண்டுகளின் பெயர்கள்(இருந்திருந்தால்) கிடைப்பின் மிக நன்று, இல்லையேல் தமிழ் அறிஞர்களின் வாக்குகிணங்க தை திங்க உத்தமம்.இது அடியேனின் தாழ்மையான கருத்து.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…