முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாதங்கள்: பெயர் வந்த விதங்கள்


செங்கோ
முன்னும் பின்னுமாக இரண்டு தலைகள் முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் அடர்ந்த தாடிகள். இவை விசித்திர உருவமாகத் தென்படுகிறது அல்லவா? இது ஒரு கடவுளின் உருவமாம். கிரேக்கக் கடவுள். இந்தக் கடவுள் இன்றைக்கு உயிருடன் இல்லை. இது மாஜி கடவுளாகிவிட்டது. இதன் பெயர் ஜனுஸ்.
ஆனால் இந்தக் கடவுளின் பெயரால் அமைந்த ஜனவரி மாதம் நம்மிடையே இருந்து வருகிறது. ஆனால் நாம் யாரும் மாதத்தைச் சொல்லும்போது கடவுளைப் பற்றி நினைப்பது கிடையாது. மற்ற நேரங்களில்கூடக் கடவுளை எதற்கு நினைக்க வேண்டும்?
மனிதர்கள் தவறு செய்கிறார்கள்; குற்றம் புரிகிறார்கள். இதை மதம் பாபம் என்கிறது. பாபம் செய்தவன் பரிகாரம் செய்ய வேண்டும் என்கிறது. பரிகாரம் செய்வதால் - செய்த குற்றம் இல்லை என்றாகிவிடுமா? ஆகிவிடாது. இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள்.
கோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில்! காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார்.
இந்தப் பலி பீடங்கள் பெப்ருவாலியா என அழைக்கப்பட்டன. அந்தப் பெயர்தான் இரண்டாம் மாதமான பெப்ருவரி.
ரோம் நகரை உருவாக்கியது ரோமுலுஸ் என்று ஒரு கதை. இவனின் தந்தை மார்ஸ் எனும் கிரேக்க சண்டைக் கடவுள். இந்தக் கடவுளின் பெயர்தான் மூன்றாம் மாதம் மார்ச்.
வசந்தகாலத்தில் செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்கும் லத்தீன் மொழியில் தொடங்குதல் எனும் பொருள் தரக்கூடிய பெரிர் எனும் சொல்லின் அடிப்படையில் தான் வசந்தகாலப் பூ பூக்கத் தொடங்கும் மாதமான ஏப்ரல் என்ற பெயரை வைத்தனர்.
வளமைக்குக் கடவுள் மேயா அல்லது மேயஸ்டா என்றார்கள். அய்ந்தாம் மாதம் வளம் பொங்கி இருக்க வேண்டும் என மேயா பெயரில் மே என அழைத்தார்கள்.
கிரேக்கத்தின் ஜூபிடர் கடவுளின் தங்கையும் மனைவியுமான ஜூனோ எனும் பெண் கடவுள். சகோதரியையே மணந்து கொள்ளும் பழக்கம் அப்போது இருந்தது. கிளியோபாட்ரா அப்படித்தான் மணந்தாள் என்கிறது வரலாறு. ராமனின் தங்கை சீதா என்றும் அவளையே ராமன் மணந்து கொண்டான் என்றும் சமண ராமாயணம் கூறுகிறது. ஜூனோவின் பெயரால்தான் ஆறாம் மாதம் ஜூன் என்று அழைக்கப்படுகிறது.
ஜூலியஸ் சீசரின் பெயரால் ஜூலை என்றும் சீசரின் தங்கையின் பேரன் அகஸ்டஸ் என்பாரின் பெயரால் எட்டாம் மாதமான ஆகஸ்ட் மாதமும் அழைக்கப்படுவது தெரிந்ததே. இந்த இரண்டு பேரும் கிரேக்கப் பேரரசின் புகழ் வாய்ந்த மன்னர்கள் ஆவார்கள்.
லத்தீன் மொழியில் செப்டம் என்றால் ஏழு அக்டோ என்றால் எட்டு. நவம் என்றால் ஒன்பது. டிசம் என்றால் பத்து. இவற்றின் அடிப்படையில் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் என்று பெயர்கள் வைக்கப்பட்டன.
ஒன்பது பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகிய மாதங்களுக்கு ஏழு எட்டு ஒன்பது பத்து எனப் பொருள் தரும் சொற்கள் எப்படிப் பொருத்தம்? சரியான கேள்விதான்.
ஆதியில் நிலாக் கணக்குப்படி ஆண்டுக்கு முந்நூறு நாள்கள் பத்து மாதங்கள். சூரியக் கணக்குப்படி 365 நாள்களாக ஆக்கப்பட்டு 12 மாதங்களாகப் பிரித்தபோது ஏழு எட்டு மாதங்களுக்குத் தம் அரசர்களின் பெயர்களை வைத்துப் பெருமை கொண்டாடிவிட்டனர் கிரேக்க மக்கள். மீதி மாதங்களின் பெயர்களை அப்படியே வைத்துக் கொண்டுவிட்டனர்.
இன்றைய காலண்டரை வடிவமைத்தவர் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்தலைவர்-போப் கிரிகோரி என்பவர்.

நன்றி: பெரியார் பிஞ்சு (ஏப்ரல் 2007)

கருத்துகள்

உண்மைத் தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி நண்பரே.. அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை எடுத்துக் கொடுத்துள்ளீர்கள். மீண்டும் நன்றி..
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி! உண்மைத் தமிழரே!
மாசிலா இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ப்ரின்ஸ். (உங்க பேரை சுறுக்கமா வைக்க கூடாதா? எழுதறதுக்கு கடினமா இருக்கே!)

எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியத ஆர்ப்பாட்டம் இல்லாம சொல்லி இருக்கீங்க.

பகிர்ந்தமைக்கு நன்றி.
DAVID இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான தெளிவான தகவல்கள். ஒவ்வொரு தமிழனும் மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். நான் ஒரு ஆசிரியர் என்பதால் இந்தத் தகவல்களை எடுத்துப் பயன்படுத்த தங்களின் மேலான அனுமதியை வேண்டுகின்றேன்.
இளங்குமரன்.
http://www.orkut.com/Profile.aspx?uid=646496240620658019
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி மாசிலா மற்றும் இளங்குமரன்! பகிர்ந்துகொண்டது மட்டும்தான் நான்... சொன்னது 'செங்கோ'- பெரியார் பிஞ்சு இதழில்!
http://www.viduthalai.com/periyarpinju/200704/04.htm

எழுத்துரு- அதிலேயே இருக்கும்!
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
மூன்று பெயர் இருக்கு தோழர் மாசிலா! எது பிடிக்குதோ கூப்பிட்டுக்குங்க!
G.Ragavan இவ்வாறு கூறியுள்ளார்…
ஆங்கில மாதங்கள் என்று தலைப்பு வைத்திருக்கலாம். நான் தமிழ் மாதப் பெயர்களுக்குத்தான் காரணம் சொல்லியிருக்கின்றீர்களோ என்று நினைத்தேன். தகவலுக்கு நன்றி.

// இருந்தாலும் பரிகாரம் செய்வது என்ற பெயரில் பலி கொடுத்தார்கள்.
கோழி ஆடு ஒட்டகம் என்று பலி கொடுத்து வந்தனர் பழங்காலத்தில்! காட்டுமிராண்டிகள் இன்றும்கூட பலி இடுகிறார்கள். இந்தியாவில் இந்து மதத்தினர் இன்றளவும் பலி இடுகிறார்கள். அதனால் தான் அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றார் தந்தை பெரியார். //

இது ஏற்றுக்கொள்ளும்படி தோணவில்லை. இந்துக்களில் திராவிடர்களே இந்தப் பலியிடுதலைச் செய்வது. இப்பொழுது பிராமணர்கள் பலியிடுவதில்லை. அதுவுமில்லாமல் ஜெயலலிதா பலியிடுதலைத் தடை செய்ய சட்டம் போட்டார். அப்படியானால் அவர் நவநாகரீகவாதியா! மைக்கேல் காபிரியேல் கதை தெரியுந்தானே. அங்கே கொழுத்த ஆட்டுக்குட்டியைப் பலியிட்டவன் காட்டுமிராண்டியா! என்னவோ போங்கள்.
Prince Ennares Periyar.S இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி திரு.ராகவன்! மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் பலியிடுதலை யார் செய்தால் என்ன.. எல்லோரும் ஒன்றுதான்.
vizhi இவ்வாறு கூறியுள்ளார்…
ஆதியில் நிலாக் கணக்குப்படி ஆண்டுக்கு முந்நூறு நாள்கள் பத்து மாதங்கள்.

please explain this in detail .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாட்டு கறி குழம்பு செய்வது எப்படி?

தேவையானவை:

பசு மாட்டு கறி ………………………1 /2 கிலோ
பெல்லாரி வெங்காயம்…………..4
பச்சை மிளகாய்……………………..4
தக்காளி……………………………….4
சிவப்பு மிளகாய்…………………….10
மல்லி …………………………………25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி…………………...…..கொஞ்சம்
மிளகு ………………………………....1 தேக்கரண்டி
சீரகம்……………………………..……1 தேக்கரண்டி
சோம்பு………………………….…..…1 /2 தேக்கரண்டி
கசகசா………………………….…..…1 தேக்கரண்டி
இஞ்சி…………………………….……1 இன்ச் நீளம்
பூண்டு…………………………………10 பல்
தேங்காய்…………………………… 1 /2 மூடி
ஏலம்……………………………………1
பட்டை…………………………………சிறு துண்டு
கிராம்பு…………………………………5
எண்ணெய்……………………………3 தேக்கரண்டி
கறிவேப்பிலை………………………1 கொத்து
உப்பு ……………………………………தேவையான அளவு

கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக…

ராசா வீடா? நவீன கோயபல்ஸ்களின் புளுகு அம்பலம்

”அய்யய்யோ... பாருங்கள்! இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் ஆ.ராசாவின் வீடு... எவ்வளவு மோசமானவர்கள் பாருங்கள்!” என்ற தொனியில் மின்னஞ்சல் ஒன்று அனைவர் முகவரிக்கும் ஓலமிட்டு வருகிறது. நீங்களும் கூட அதனைப் பார்த்திருக்கக் கூடும். இதோ அந்த மின்னஞ்சலின் நகல்.

------------------------------------------------------------Spectrum Raja'sHouse ....in Tamil Nadu
...Hold YOUR breath.

ராகு காலம் பார்த்தாரா வீரமணி?

இணைய தளத்தில் அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட சின்மயி விவகாரம் குறித்து புத்தகம் எழுதிய விமலாதித்த மாமல்லன் என்பவர், தனது வலைத்தளத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அதைச் சில அறிவிலிகளும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
//பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திருமணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இருவரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அளவளாவத் தொடங்கிவிட்டனர். பெண்பார்க்க வரும் நாளையும் முடிவுசெய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராவுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க.வீரமணி.//
யார் இந்தத் தகவலை திரு.விமலாதித்த மாமல்லன் அவர்களுக்குச் சொன்னவர்? அந்தப் பெரியவரேவா? இல்லை. அந்த சோ கால்ட் பெரியவரின் உறவினராம். அவர் என்ன வகை உறவினர்; எத்தனை விட்ட உறவினர் என்பதெல்லாம் தெரியவில்லை.
ச…